பக்கங்கள்

வியாழன், 23 மார்ச், 2017

விராலிமலை அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, மற்றும் சிலை கண்டுபிடிப்பு

தென்னலூர், மார்ச் 23 விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் பழங்கால சிலைகள், மற்றும் கல்வெட் டுகள் தென்படுவதாக திருச்சி ஈ.வெ.ரா. கலைக்கல்லூரி மாணவர் சரவணன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி, கல்வெட்டு ஆய் வாளர் ராஜேந்திரன், பட்டயப் படிப்பு மாணவி சந்தியா உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவினர், புதுகை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மலைக் குடிபட்டிக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்னலூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பகுதி யில் கி.பி. 10-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த சோழ அரசர் முத லாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த 4 கல்வெட் டுகளும், சிவன், பார்வதி, தட் சணாமூர்த்தி, பைரவர், சண்டி கேஸ்வரர், ஆவுடையார் கல் சிற்பங்களும், சிறிய நந்தி சிலைகள் மூன்று, பெரிய நந்தி போன்ற தோற்றம் கொண்ட ஒரு சிலையும் கண்டுபிடிக்கப் பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி கூறியதாவது:

தென்னலூர் மாரியம்மன் கோவில் அருகே முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட் டுள்ள மடைக்கல் (மண்டபம்) முற்றிலும் சிதைவுற்ற நிலை யில் உள்ளது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அவற்றின் இடி பாடுகள் அனைத்தும் ஊரின் கண்மாய் கரைப் பகுதியில் சிதைவுற்றும், சில கல் சிலை கள் நல்ல நிலையிலும் காணப் படுகிறது. கண்மாய் கரையில் காணப்படும் நந்தி, கொடும் பாளூர் நந்திக்கு அடுத்தப் படியான பெரிய நந்தி ஆகும். இந்த கண்மாயின் உட்பகுதி களை அகழ்வாய்வுக்கு உட் படுத்தினால், மேலும் புதை யுண்ட சிலைகள், கல்வெட் டுகள் கண்டுபிடிக்க வாய்ப்பாக இருக்கும் என்றார்.

-விடுதலை,23.3.17

ஞாயிறு, 19 மார்ச், 2017

திண்டுக்கல் அருகே 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு


திண்டுக்கல், பிப்.27 திண்டுக்கல் அருகே ஓவா மலையில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய பாண் டியர் கால எண்ணெய் செக்கு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர் வட்டம், சித்தரேவு ஊரின் வடமேற்கு அய்ந்து கி.மீ.,தொலைவில் ஓவா மலை உள்ளது. இதில் போடி சி.பி.ஏ.,கல்லுரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், ஆய்வு மய்ய ஆய்வாளர்கள் உதயகுமார், பாண்டீஸ்வரன் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மலை குறித்து மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மய்ய பேராசிரியர் சாந்த லிங்கம் கூறுகையில்:  ஓவா மலையில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 9-10ஆம் நுற் றாண்டை சேர்ந்த எண்ணெய் செக்கு உரலில் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இக் கல்வெட்டில் வட்டெ ழுத்து தமிழ்மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிக்கப் பட்டுள்ளன. இதனை வெண்பி நாட்டின் குறண்டி என்னும் ஊரைச்சேர்ந்த சோமன் அருளன் என்பவர் உருவாக்கியதாக வெட்டப்பட்டுள்ளது. குறண்டி என்பது மதுரை - அருப்புக் கோட்டை சாலையில் ஆவியூ ருக்கு அருகே இருக்கும் குறண்டி எனும் ஊராகும். இங்கு வர லாற்று சிறப்பு மிக்க பராந்க பர்வதம் எனும் மலையில் சிறீ வல்லம் பெரும் பள்ளி, திருக் காட்டாம் பள்ளி என்ற பெயர் களில் 9-10ஆம் நுற்றாண்டு சம ணப்பள்ளி செயல்பட்டுள்ளது.
பாண்டியர் காலத்தில் மாரா யன் என்பது அரசு நிர்வாகத்தில் உயர்அதிகாரிகளுக்கு வழங்கப் படும் பட்டமாகும். அந்த வகையில் இந்த கல்வெட்டில் 'மாராயன்' என்ற அதிகாரிக்கு இச்செக்கு உரல் மூலமாக எண் ணெயை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்திற்கு உட்படு வார்கள், என கல்வெட்டு மூலம் எச்சரிக்கை விடப்பட்ட தற்கான எழுத்துக்கள் பொறிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,500 ஆண்டுகளுக்கு முன் இம்மலைப்பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந் துள்ளதையும், அரசு அதிகாரி களுக்கு கொடைகள் வழங்கப் பட்டதையும் அறிய முடிகின் றன. மேலும் பாதுகாப்பு இல் லாத நிலையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங் காட்சியத்தில் வைத்து பாது காக்க வேண்டும், என்றார்.
-விடுதலை,27.2.17

வியாழன், 2 மார்ச், 2017

இரா .பி .சேதுப் பிள்ளையின் 120ம் ஆண்டு பிறந்த நாள்.

வரலாற்றில் இன்று
(மார்ச் மாதம் 2)
சொல்லின் செல்வர்
      தமிழறிஞர்
இரா .பி .சேதுப் பிள்ளையின் 120ம் ஆண்டு
பிறந்த நாள்.
-- சு.குமார தேவன் --
* இராசவல்லிபுரம் பிறவிப் பெருமான் பிள்ளை சேதுப்பிள்ளை என்பது இவரது முழுப் பெயர்.
* சிறந்த தமிழறிஞர் வழக்கறிஞர் மேடைப் பேச்சாளர் தர்க்கவியலாளர் இலக்கியவாதி எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.
* தமிழிலக்கியத்தின் சிறப்புக்களான எதுகை மோனை உவமை நயச் சுவையினை எளிமைப்படுத்தி எல்லோரும் புரியும் வண்ணம் உரை நடை யாக்கி பின்பு தன் மேடைப் பேச்சில் அருவியாய்ப் பொழிவார்.
* தமிழ்ச் சொற்களை இரா .பி .சே. பயன்படுத்தும்
அழகை வியந்த தமிழுலகம் "சொல்லின் செல்வர் " என்று போற்றியது. அதன் பின் அவரது அயரா உழைப்பு அடங்கியுள்ளது.
* "தீ பரவட்டும் " என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா சட்டக் கல்லூரியில், இராமாயணம் மகாபாரதம்
பெரிய புராணம் போன்ற நூல்களை எரிக்க வேண்டும் என்று வாதிட்டு உரை நிகழ்த்திய போது சேதுப்பிள்ளை எதிர்த்து வாதிட்டார். பின்பு பாதியில்
இரயிலுக்கு நேரமாச்சு என்று பாதியில் சென்று விட்டார்.
* திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போது அர்த்தமில்லாத பெயர்களை நீக்கி தூய தமிழ்ப் பெயர்களை சூட்டினார். இதன் மூலம் வழக்கிழந்த சமஸ்கிருதப் பெயர்கள் நெல்லைத் தெருக்களை விட்டு அகன்றன.
* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் அருந்தமிழ்த் தொண்டாற்றிய கா.சு.பிள்ளை இவரது தமிழறிவு கண்டு வியந்து
விரிவுரையாளராக்கினார்.
விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரின் கீழ் பணியாற்றினார். தமிழின் மேல் கொண்ட
தணியாத ஆர்வத்தினால்
வருமானம் கொழித்த வக்கீல் தொழிலை விட்டு தமிழ்த் தொண்டாற்றினார்.
* பின்பு சென்னைப் பல்கலையில் 25 ஆண்டுகள் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தார். முதுபெருந்தமிழறிஞர்
எஸ்.வையாபுரிப் பிள்ளையின் அத்தனை முயற்சிகளுக்கும் உதவி புரிந்தார்.சென்னைப் பல்கலை வெளியிட்ட
பேரகராதி (Dictionary) உருவாகக் காரணமாக இருந்த வையாபுரியார் முயற்சிக்கு உற்ற துணை புரிந்தார். அவரது பணி ஓய்வுக்குப் பின் தமிழ்த் துறைத் தலைவரானார்.
* தான் பயின்ற பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் பல கல்லூரிகளில் பாடம் எடுப்பார்.
* தமிழின் இனிமையை ஆங்கிலத்தின் மூலம் அருமையாக இவர் விளக்குவதைக் கேட்க
பலர் காத்திருப்பார்கள்.
* திராவிடப் பொது மொழிகள், திராவிடப் பொதுச் சொற்கள் ஆகிய இவரது அரிய ஆராய்ச்சி நூல்கள் சென்னைப் பல்கலையால் வெளியிடப் பட்டன.
* 20க்கும் மேற்பட்ட பல்வேறு நூல்கள் சேதுப்பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டன. தமிழ் இன்பமானது என்பதை இவரது எழுத்துக்களால் உணரலாம்.
வாழ்க இரா .பி .சே.