பக்கங்கள்

திங்கள், 23 டிசம்பர், 2019

இந்தியா தமிழைப் பொது மொழியாகப் பெறவேண்டும்

காந்தியார் மாடர்ன் ரிவ்யூ’வில் எழுதியது

தமிழைப் படிக்கப் படிக்க அந்தப் பாஷையிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. அது தேர்த்தியானதும், அமிர்தம் போன்றதுமான பாஷை. நான் படிப்பதிலிருந்து எனக்குத் தெரிவது என்னவெனில் - தமிழர்களின் மத்தியில் பூர்வகாலத்திலும் இப்போதும் அநேக புத்திமான்களும் ஞானவான்களும் இருந்தி ருக்கிறார்கள். முடிவில் இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்பட வேண்டுமானால் சென்னை ராஜதானிக்கு வெளியில் உள்ள வர்களும் தமிழ்ப்பாஷையைத் தெரிந்து கொள்ள வேண்டும்!’’

“சுதேசமித்திரன்” மொழிபெயர்த்தது

‘செந்தமிழ்’ தொகுதி 8, பக்கம் 214

இன்று காந்தியாரின் நிலையை உணர்ந்தவர்கள் அவர் அடிக்கடி பல்டி அடிப்பதைப் பற்றி ஆச்சரியப்ப மாட்டார்கள்.

விடுதலை (30-11 -1939, பக்கம் 6)

 - ^விடுதலை ஞாயிறுமலர் 14 12 19

சங்கத்தமிழில் தமிழ், தமிழர், தமிழ்நாடு

தமிழ்நாடு பெயர் வைத்தபோது சிலர் இலக்கியத்தில் ‘தமிழ்நாடு’ உள்ளதா என்றனர். தமிழ், தமிழர், தமிழ்நாடு பல இடங்களில் பயின்று வந்துள்ளது.

‘தமிழ் கூறும் நல்லுலகம்‘

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்

தொல்காப்பியம் சிறப்பாயிரம்

“தமிழ் என் கிளவி” - தொல்காப்பியம் - 386

“தமிழ் நிலைபெற்ற தாங்களும் மரபு” - சிறுபாணாற்றுப்படை - 66

“தண்டமிழ் செறிந்து” - பதிற்றுப்பத்து 63.9

“தமிழ் வையை கண்ணம் டினல் - பரிபாடல் 6.60

“தண்டமிழ் ஆய்வு” - பரிபாடல் 9.25

“தெரிமாண் தமிழ் மும்மை” - பரிபாடல் திரட்டு - 4

“தண்டமிழ் வேலி தமிழ்நாடு” - பரிபாடல் திரட்டு - 9.1

“தாதின் அனையர் தண்டமிழ்க்குடி” - பரிபாடல் திரட்டு - 8

“தமிழ் கேம் மூவர்” - அகநானூறு 31.14

“தமிழ் அகப்படுத்த இமிழிசை முழவு” - அகநானூறு - 227

“தமிழ் மயங்கிய தலையாலங்கானம்“ - புறநானூறு 19.2

“தண்டமிழ்க் கிழவர்” - புறநானூறு 35.2

“நற்றமிழ் முழுதறிதல்” - புறநானூறு 50.10

“கண்டமிழ் பொது எனப் பொறான்” - புறநானூறு 51.5

“தமிழ் கெழுகூடல்” - புறநானூறு 58.13

“தண்டமிழ் வரைப்கம்“ - புறநானூறு 198.12

“இமிழ்கடல் வேலித் தமிழ்நாடு”

“தென்றமிழ் நன்னாடு - சிலப்பதிகாரம் காட்சிக்காதை

“அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்” - சிலப்பதிகாரம் கால்கோட் காதை

- விடுதலை ஞாயிறு மலர் 14 12 19

செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தமிழிப் பெயர்கள் - ஆண் மற்றும் பெண்

தமிழ் பெயர்கள் - இனியவை இருநூற்றி ஐம்பது

பெண் பெயர்கள்:
  1. அமிழ்தினி
  2. அமுதா
  3. அமுதினி
  4. அருள்மணி
  5. அருள்மதி
  6. அருண்மதி
  7. அருண்மொழி
  8. அன்பரசி
  9. இயலினி
  10. இயலிசை
  11. இன்பநிலா
  12. இனியா
  13. எழில்
  14. எழில்நிலா
  15. எழிலினி
  16. எழினி
  17. ஓவியா
  18. கண்மணி
  19. கணையாழி
  20. கயல்விழி
  21. கலையரசி
  22. கவின்மலர்
  23. கனிமொழி
  24. காவேரி
  25. காவியா
  26. குழலி
  27. குழலினி
  28. சந்தனா
  29. சமர்மதி
  30. சமர்விழி
  31. சாதனா
  32. சிந்தனா
  33. சிறுவாணி
  34. சீர்குழலி
  35. சீர்மதி
  36. சுடர்மணி
  37. சுடர்மதி
  38. சுடர்விழி
  39. செந்தமிழரசி
  40. செந்தாமரை
  41. செம்மலர்
  42. செல்வமணி
  43. செல்வமதி
  44. செல்வமலர்
  45. செல்வி
  46. தமிழ்நிலா
  47. தமிழரசி
  48. தமிழினி
  49. தாமரை
  50. தாமிரா
  51. தாரணி
  52. திகழ்கா
  53. திகழ்மிளிர்
  54. திகழினி
  55. திருநிலா
  56. திருமலர்
  57. துளசி
  58. தேன்கனி
  59. தேன்மதி
  60. தேன்மலர்
  61. தேன்மொழி
  62. நறுங்கா
  63. நன்னிலா
  64. நிகரிலா
  65. நித்திலா
  66. நிலாமதி
  67. நிறைமதி
  68. நீலமணி
  69. நீலவிழி
  70. நேர்நிலா
  71. பனிமலர்
  72. பனிமுகில்
  73. பிறைமதி
  74. புகழினி
  75. புதியா
  76. பூவிழி
  77. பூங்குழலி
  78. பொழிலினி
  79. பொன்மலர்
  80. பொன்னி
  81. பொன்னிலா
  82. மகிழ்
  83. மகிழரசி
  84. மணிமலர்
  85. மணிமேகலை
  86. மணிவிழி
  87. மதி
  88. மதிநிலா
  89. மதியரசி
  90. மயிலினி
  91. மருதா
  92. மல்லிகா
  93. மலர்
  94. மலர்நிலா
  95. மலர்மதி
  96. மறைமலர்
  97. மான்விழி
  98. மிருதுளா
  99. மின்மணி
  100. மின்மலர்
  101. மின்முகில்
  102. மின்விழி
  103. முகிலா
  104. முகிலரசி
  105. முகிலினி
  106. முத்தழகு
  107. முத்துமதி
  108. மென்கா
  109. மென்பனி
  110. மென்மதி
  111. மென்மலர்
  112. யாழ்நிலா
  113. யாழினி
  114. வடிவரசி
  115. வளர்மதி
  116. வான்மதி
  117. வான்முகில்
  118. வானரசி
  119. வானதி
  120. விண்ணரசி
  121. விண்மணி
  122. விண்மதி
  123. விண்மலர்
  124. வினைமதி
  125. வினையரசி
  126. வீரமதி
  127. வெண்ணிலா
  128. வெண்பனி
  129. வெண்மணி
  130. வெண்மதி
  131. வெம்பனி
  132. வேல்விழி
  133. வேலரசி
  134. வைகறை
  135. வைகை

ஆண் பெயர்கள்:
  1. அகரன்
  2. அதியமான்
  3. அமர்
  4. அமுதன்
  5. அரசன்
  6. அரசு
  7. அருள்
  8. அருண்
  9. அருண்மணி
  10. அருண்மதி
  11. அன்பு
  12. அன்பரசு
  13. அன்பழகன்
  14. அன்புமணி
  15. இளங்கதிர்
  16. இளங்குமரன்
  17. இளங்கோ
  18. இளஞ்செழியன்
  19. இளம்பரிதி
  20. இளமதி
  21. இளவரசு
  22. இளவேனில்
  23. இறையன்பு
  24. இனியன்
  25. இன்பா
  26. உதியன்
  27. உதயா
  28. எல்லாளன்
  29. எழில்
  30. எழிலன்
  31. எழில்வேலன்
  32. கண்ணன்
  33. கதிர்
  34. கதிர்நிலவன்
  35. கதிரவன்
  36. கலைச்செல்வன்
  37. கலைவாணன்
  38. கலைவேலன்
  39. கவின்
  40. கவின்செல்வா
  41. கனல்
  42. கனல்வண்ணன்
  43. கனலரசன்
  44. கனல்கண்ணன்
  45. கார்முகில்
  46. குமணன்
  47. கோவன்
  48. சந்தனன்
  49. சந்தனவேலன்
  50. சமர்
  51. சமர்வேல்
  52. சமரன்
  53. சிலம்பரசன்
  54. சீர்மணி
  55. சீர்மதி
  56. சீர்மருதன்
  57. சீராளன்
  58. சுடர்
  59. சுடர்வேல்
  60. செங்கதிர்
  61. செந்தமிழ்
  62. செந்தில்
  63. செங்கோ
  64. செந்தாமரை
  65. செம்பரிதி
  66. செல்வம்
  67. செழியன்
  68. சேந்தன்
  69. சொற்கோ
  70. சோலை
  71. தங்கவேல்
  72. தமிழ்மணி
  73. தமிழன்பன்
  74. திருமாறன்
  75. திருமாவளவன்
  76. துரைமருகன்
  77. துரைவேலன்
  78. நக்கீரன்
  79. நகைமுகன்
  80. நந்தன்
  81. நவிலன்
  82. நன்மாறன்
  83. நாவரசு
  84. நிலவன்
  85. நித்திலன்
  86. நெடுமாறன்
  87. பரிதி
  88. பாரி
  89. புகழேந்தி
  90. பொற்கோ
  91. மகிழன்
  92. மகிழ்நன்
  93. மணிமாறன்
  94. மணியரசன்
  95. மணிவண்ணன்
  96. மணிமுகில்
  97. மதி
  98. மதியரசன்
  99. மதிமாறன்
  100. மதிவாணன்
  101. மருது
  102. மருதன்
  103. மருதையன்
  104. மலரவன்
  105. மாறன்
  106. முகில்
  107. முகிலன்
  108. முத்துக்குமரன்
  109. முருகவேல்
  110. முருகன்
  111. வடிவேல்
  112. வினவு
  113. வினை
  114. வெற்றி
  115. வெற்றிவேல்

தமிழர்கள் சூட்டியுள்ள ஆண்பால் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

  • அகரமுதல்வன்
  • அக்கராயன்
  • அகவழகன்
  • அகத்தியன்
  • அகமகிழன்
  • அகமுகிலன்
  • அகிழவன்
  • அகில்
  • அகிலன்
  • அமுதன்
  • அமிர்தன்
  • அழகப்பன்
  • அழகன்
  • அதிரன்
  • அருள்
  • அருண்
  • அருளழகன்
  • அருள்நம்பி
  • அரும்பொறையன்
  • அறவணன்
  • அறவாணன்
  • அறநெறியன்
  • அற்புதராசன்
  • அற்புதன்
  • அறிவன்
  • அறிவாற்றன்
  • அறிவு
  • அறிவழகன்
  • அறிவுநம்பி
  • அய்யாகண்ணு
  • அய்யன்சாமி
  • அனழேந்தி
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அன்பு
  • அன்புமணி
  • அன்பரசன்
  • அன்புக்கரசன்
  • அன்புச்செல்வன்
  • அன்பழகன்
  • அன்பினியன்
  • அன்பானந்தன்
  • அடைக்கலநாதன்
  • அதிர்துடியன்
  • அமலன்
  • அம்பலவன்
  • அம்பலவாணன்
  • அம்பலக்கூத்தன்.

  • ஆசை
  • ஆசைத்தம்பி
  • ஆசைநம்பி
  • ஆழியன்
  • ஆழிக்குமரன்
  • ஆற்றலறிவன்
  • ஆய்வகன்
  • ஆய்வகத்திறனன்
  • ஆற்றலரசு
  • ஆறுமுகம்
  • ஆளவந்தான்
  • ஆனந்தக்கூத்தன்
  • ஆனந்தன்
  • ஆனந்தத்தாண்டவன்
  • ஆனைமுகன்
  • ஆண்டான்
  • ஆராவமுதன்

  • இனியவன்
  • இசைக்கோ
  • இசைச்செல்வன்
  • இசையரசன்
  • இசையவன்
  • இசைச்சுடரன்
  • இசைச்சுடர்வாணன்
  • இயல்பரசன்
  • இயல்பிணன்
  • இயல்பிணனன்
  • இயலிசையன்
  • இராவணன்
  • இரும்பன்
  • இரும்பொறையன்
  • இலக்கியன்
  • இலங்காபுரியன்
  • இலங்கைவேந்தன்
  • இலந்தையர்
  • இளங்கோ
  • இளங்கிள்ளி
  • இளங்கிள்ளிவளவன்
  • இளங்கோவன்
  • இளவரசன்
  • இளவளவன்
  • இளம்பரிதி
  • இனியவன்
  • இன்பன்
  • இனியன்
  • இமையன்
  • இமையவன்

  • ஈழவன்
  • ஈழச்செம்பகன்
  • ஈழச்செல்வன்
  • ஈழக்குமரன்
  • ஈழவாகையன்
  • ஈழத்தமிழ்நெஞ்சன்
  • ஈழத்தாயகன்
  • ஈழவேந்தன்
  • ஈழவேந்தர்
  • ஈழவேங்கையன்
  • ஈழப்புயலோன்
  • ஈழநாதன்

  • உறுதிமொழியன்
  • உத்தமன்
  • உத்தம சோழன்

  • எல்லாளன்
  • எழில்வேந்தன்
  • எழிலன்
  • எழில்குமரன்
  • எழில்வாணன்

  • ஏழிசை வல்லவன்
  • ஏகாம்பரம்

  • ஐயாக்கண்ணு

  • ஒற்றன்
  • ஒற்றறிவன்

  • ஓர்மவாணன்
  • ஓர்மத்தமிழன்
  • ஓர்மத்தமிழ்நெஞ்சன்
  • ஓர்மக்குரலோன்
  • ஓவியன்
  • ஓவியா

  • கலைஞன்
  • கலையவன்
  • கலையரசன்
  • கலைவாணன்
  • கலைவண்ணன்
  • கண்ணிமையன்
  • கணனிப்பித்தன்
  • கணனிப்பிரியன்
  • கணனியன்
  • கணிமொழியன்
  • கணியுகவதன்
  • கணியன்
  • கனியன்
  • கனிமொழியன்
  • கதிரவன்
  • கதிர்
  • கதிர்காமர்
  • கதிர்காமன்
  • கதிர்காமக்கந்தன்
  • கதிர்வேல்
  • கதிர்வேலன்
  • கந்தன்
  • கபிலன்
  • கவின்
  • கவினயன்
  • கமலன்
  • கரிகாலன்
  • கற்பூரமதியன்
  • கனகராயன்
  • கனகநாதன்
  • களங்கண்டான்
  • கரிகால் வளவன்
  • கவிநேயன்
  • கரிகாலதேவன்

கா

  • காந்தன்
  • கார்த்திகேயன்
  • கார்த்திகையன்
  • கார்முகிலன்
  • கார்த்திகைச்சுடரன்
  • கார்வண்ணன்
  • காரொளி வண்ணன்
  • கார்வேந்தன்

கீ

  • கீரிமலையவன்
  • கீர்த்தனன்

கோ

  • கோ
  • கோவை அமுதன்
  • கோவிலான்
  • கோபன்
  • கோமகன்

கு

  • குகன்
  • குமரன்
  • குற்றாளன்
  • குருசாமி
  • குலோத்துங்கன்
  • குப்புசாமி

  • சங்கருவி
  • சங்கிசை
  • சங்கிசைஞன்
  • சங்கிலியன்
  • சங்கூரன்
  • சங்கொலி
  • சங்கொலியன்
  • சந்தனக்கடல்
  • சந்தனக்கண்ணன்
  • சந்தனக்கண்ணு
  • சந்தனக்கதிர்
  • சந்தனக்கலை
  • சந்தனக்கனி
  • சந்தனக்காடன்
  • சந்தனக்கிழான்
  • சந்தனக்கிள்ளி
  • சந்தனக்கிளி
  • சந்தனக்குமரன்
  • சந்தனக்குரிசில்
  • சந்தனக்குளத்தன்
  • சந்தனக்குன்றன்
  • சந்தனக்கூத்தன்
  • சந்தனக்கோ
  • சந்தனக்கோதை
  • சந்தனக்கோமான்
  • சந்தனக்கோவன்
  • சந்தனக்கோன்
  • சந்தனச்சாரல்
  • சந்தனச்சீரன்
  • சந்தனச்சுடர்
  • சந்தனச் சுடரோன்
  • சந்தனச்சுனை
  • சந்தனச்சுனையான்
  • சந்தனச்செம்மல்
  • சந்தனச்செல்வன்
  • சந்தனச்செழியன்
  • சந்தனச்சென்னி
  • சந்தனச்சேந்தன்
  • சந்தனச்சேய்
  • சந்தனச்சேரன்
  • சந்தனச்சோலை
  • சந்தனச்சோழன்
  • சந்தனத்தகை
  • சந்தனத்தகையன்
  • சந்தனத்தம்பி
  • சந்தனத்தமிழ்
  • சந்தனத்தமிழன்
  • சந்தனத்தலைவன்
  • சந்தனத்தாரான்
  • சந்தனத்தாரோன்
  • சந்தனத்திண்ணன்
  • சந்தனத்திருவன்
  • சந்தனத்திறத்தன்
  • சந்தனத்திறல்
  • சந்தனத்தென்றல்
  • சந்தனத்தென்னன்
  • சந்தனத்தேவன்
  • சந்தனநம்பி
  • சந்தனநல்லன்
  • சந்தனநல்லோன்
  • சந்தனநன்னன்
  • சந்தனநாகன்
  • சந்தனநாடன்
  • சந்தனநிலவன்
  • சந்தனநெஞ்சன்
  • சந்தனநெடியோன்
  • சந்தனநெறியன்
  • சந்தனநேயன்
  • சந்தனநேரியன்
  • சந்தனப்பகலோன்
  • சந்தனப்பரிதி
  • சந்தனப்பா
  • சந்தனப்பாண்டியன்
  • சந்தனப்பாவலன்
  • சந்தனப்பிறை
  • சந்தனப்புகழ்
  • சந்தனப்புகழன்
  • சந்தனப்புகழோன்
  • சந்தனப்புலவன்
  • சந்தனப்பூவன்
  • சந்தனப்பெரியன்
  • சந்தனப்பொருநன்
  • சந்தனப்பொருப்பன்
  • சந்தனப்பொழில்
  • சந்தனப்பொழிலன்
  • சந்தனப்பொறை
  • சந்தனப்பொறையன்
  • சந்தனப்பொன்னன்
  • சந்தனமகன்
  • சந்தனமணி
  • சந்தனமதி
  • சந்தனமருகன்
  • சந்தனமருதன்
  • சந்தனமல்லன்
  • சந்தனமலை
  • சந்தனமலையன்
  • சந்தனமலையோன்
  • சந்தனமழவன்
  • சந்தனமள்ளன்
  • சந்தனமறவன்
  • சந்தனமன்னன்
  • சந்தனமாண்பன்
  • சந்தனமார்பன்
  • சந்தனமாறன்
  • சந்தனமானன்
  • சந்தனமுத்தன்
  • சந்தனமுத்து
  • சந்தனமுதல்வன்
  • சந்தனமுரசு
  • சந்தனமுருகன்
  • சந்தனமுருகு
  • சந்தனமுறுவல்
  • சந்தனமுறையோன்
  • சந்தனமுனைவன்
  • சந்தனமெய்யன்
  • சந்தனமேழி
  • சந்தனமைந்தன்
  • சந்தனமொழி
  • சந்தனயாழோன்
  • சந்தனவடிவேல்
  • சந்தனவண்ணல்
  • சந்தனவண்ணன்
  • சந்தனவமுதன்
  • சந்தனவமுது
  • சந்தனவரசன்
  • சந்தனவரசு
  • சந்தனவழகன்
  • சந்தனவழகு
  • சந்தனவழுதி
  • சந்தனவள்ளல்
  • சந்தனவளத்தன்
  • சந்தனவளவன்
  • சந்தனவாணன்
  • சந்தனவாழி
  • சந்தனவிழியன்
  • சந்தனவீரன்
  • சந்தனவுருவன்
  • சந்தனவூரன்
  • சந்தனவூரோன்
  • சந்தனவெழிலன்
  • சந்தனவெழிலோன்
  • சந்தனவெழினி
  • சந்தனவெற்பன்
  • சந்தனவேங்கை
  • சந்தனவேந்தன்
  • சந்தனவேல்
  • சந்தனவேலன்
  • சந்தனவேலோன்
  • சந்தனன்
  • சந்தனவேல்
  • சற்குணன்
  • சமநெறி
  • சமரன்
  • சமர்களன்
  • சமர்மறவன்
  • சமராய்வன்
  • சமர்திறமறவன்

சி

  • சிரிப்பழகன்
  • சிங்காரன்
  • சிலம்பன்
  • சிலம்பொலியன்
  • சிலம்பரசன்
  • சிங்காரவேலன்
  • சிந்தனைச்செல்வன்
  • சிந்தனைச்சிற்பி
  • சிலம்புச்செல்வன்
  • சிந்தனையாளன்
  • சிம்புத்தேவன்

சீ

  • சீலன்
  • சீறியக்குணத்தான்

சு

  • சுடரவன்
  • சுடரொளி
  • சுடரொளியன்
  • சுடரொளிநாதன்
  • சுவையவன்

சூ

  • சூரியபாலன்

செ

  • செங்குட்டுவன்
  • செங்கோடன்
  • செந்தமிழன்
  • செந்தனல்
  • செந்தாமரையன்
  • செந்தில்
  • செந்தில் அருண்
  • செந்தில்நாதன்
  • செந்தில்வேலவன்
  • செந்தில்குமரன்
  • செந்தூரன்
  • செயலவன்
  • செல்லத்துறை
  • செல்லப்பன்
  • செல்லப்பா

சே

  • சேயோன்
  • சேரன்
  • சேந்தன்
  • சேந்தன் அமுதன்
  • சேர்வராயன்
  • சோமசுந்தரம்

  • தங்கத்துறை
  • தங்கத்துறைவாணன்
  • தங்கவடிவன்
  • தங்கவேலன்
  • தங்கவடிவேல்
  • தங்கவடிவேலவன்
  • தங்கன்
  • தன்ராஜ்
  • தணலன்
  • தணிகைவேல்
  • தமிழ்க்குமரன்
  • தமிழ்க்குரிசில்
  • தமிழ்க்கேசவன்
  • தமிழ்ச்சுவையவன்
  • தமிழ்ச்சுவையோன்
  • தமிழ்மறவன்
  • தமிழ்மாறன்
  • தமிழ்ச்சாமரன்
  • தமிழ்செல்வன்
  • தமிழ்நம்பி
  • தமிழேந்தி
  • தமிழ்நெஞ்சன்
  • தமிழ்நெஞ்சம்
  • தமிழோவியன்
  • தமிழ்மொழியினன்
  • தமிழ்த்தேசியன்
  • தமிழ்வளவன்
  • தமிழ்வாணன்
  • தமிழ்விழியன்
  • தமிழ்த்தாயகன்
  • தமிழரசன்
  • தமிழழகன்
  • தமிழறிவன்
  • தமிழன்பன்
  • தமிழீழவன்
  • தமிழீழவளன்
  • தமிழோவியன்
  • தரணி
*தமிழினியன்

தா

  • தாமரைவிழியன்
  • தாமரைச்செல்வன்
  • தாமரைக்கண்ணன்

தி

  • திகழ்முகிலன்
  • திகழ்வாணன்
  • திகழொளியன்
  • திகிழன்
  • திகிழறிவன்
  • திருமாவளவன்
  • திருச்செல்வன்
  • திருநிறைச்செல்வன்
  • திருகோணமலையன்
  • திருக்கைலாசன்
  • திருமால்

து

  • துகிலன்

தூ

  • தூயவன்
  • தூயமதியன்
  • தூயறிவன்
  • தூயோன்

தெ

  • தென்னவன்

தொ

  • தொல்காப்பியன்
  • தொல்நோக்கன்

  • நக்கீரன்
  • நற்கீரன்
  • நல்லுழவன்
  • நந்தியன்
  • நந்திவர்மன்
  • நந்தியவர்மன்
  • நலங்கிள்ளி
  • நற்குணன்
  • நற்குணத்தான்
  • நற்சீலன்
  • நம்பி
  • நன்னன்
  • நன்மாறன்
  • நடனன்
  • நல்லதம்பி
  • நயனன்

நா

  • நாகன்
  • நாகராயன்
  • நாலடியார்
  • நாவினியன்
  • நாகையன்

நி

  • நித்தியன்
  • நித்தியவாணன்
  • நித்திலன்
  • நினைவழகன்
  • நித்தியானந்தன்

நு

  • நுற்பவினைஞன்
  • நுண்மதியன்
  • நுண்மதியோன்

நெ

  • நெடுங்கிள்ளி
  • நெடுஞ்செல்வன்
  • நெடுஞ்செழியன்
  • நெடுமாறன்
  • நெடுமால்
  • நெடுமாலவன்

  • பகலவன்
  • பரிதி
  • பரிதிநாதன்
  • பவித்திரன்
  • பகுத்தறிவு
  • பத்மசீலன்
  • பத்மஸ்ரீ

பா

  • பாவலன்
  • பாண்டியன்
  • பாரி
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • பார்த்தசாரதி
  • பார்த்தன்

பு

  • புதினன்
  • புதுமைப்பித்தன்
  • புலன்கொண்டான்
  • புகழேந்தி
  • புகழ்வாணன்

பூ

  • பூபாலன்
  • பூவண்ணன்
  • பூவரசன்
  • பூவேந்தன்
  • பூந்தமிழன்

பே

  • பேகன்
  • பேநன்
  • பேராளன்
  • பேனன்
  • பேரரறிவன்
  • பேரரறிவாளன்

போ

  • போகன்
  • போகசிவன்
  • போகர் நாதன்
  • போதாந்தன்
  • போதிவேந்தன்

பொ

  • பொதிகைமாறன்

  • மகிழன்
  • மதிவளன்
  • மதிவாணன்
  • மதிநுற்பன்
  • மதியழகன்
  • மலர்வாணன்
  • மலரவன்
  • மலர்விழியன்
  • மலைமாறன்
  • மணிமாறன்
  • மணவாளன்
  • மாயோன்
  • மணிவண்ணன்
  • மருதவாணன்

மா

  • மாந்தன்
  • மாந்தநேயன்
  • மாறன்
  • மாமணியன்
  • மாமலையன்
  • மாரப்பன்

மு

  • முகில்
  • முகிலன்
  • முகில்வதனன்
  • முகில்வாணன்
  • முருகன்
  • முத்து
  • முத்துக்குமரன்
  • முத்துச்சிற்பி
  • முல்லையன்
  • முல்லைச்சமரன்
  • முத்தையன்
  • முக்காவியன்
  • முத்தப்பன்

மூ

  • மூலகநாதன்
  • மூலகவதன்
  • மூலகன்
  • மூவிசைச்செல்வன்
  • மூவேந்தன்

மொ

  • மொழியினன்
  • மொழிவழகன்
  • மொழிவளவன்
  • மொழிவாணன்
  • மொழிப்பற்றன்

மௌ

  • மௌளி
  • மௌனி

யா

  • யாழ்வேந்தன்
  • யாழினியன்
  • யாழ்வாணன்
  • யாழ்பாடியார்
  • யாழ்ப்பாணன்
  • யாழ்குமரன்

  • வடமலைவாணன்
  • வடிவழகன்
  • வடிவேலவன்
  • வடிவேலன்
  • வண்ணமதியன்
  • வணிகநாதன்
  • வணிகவாசன்
  • வரவணையான்
  • வல்லவராயன்
  • வள்ளுவன்
  • வளவன்
  • வன்னியன்

வி

  • விழியன்
  • விண்ணவன்
  • வில்லவன்
  • வினைத்திறன்
  • வினைத்திறமிகுந்தன்

வீ

  • வீரசிங்கன்
  • வீரவர்மன்
  • வீரக்குலத்தோன்
  • வீரகேசவன்
  • வீரமறவன்

வெ

  • வெண்மதியன்
  • வெற்றி
  • வெற்றிக்குமரன்
  • வெற்றிச்செல்வன்
  • வெற்றியரசன்
  • வெற்றிவளவன்

வே

  • வேங்கையன்
  • வேலன்
  • வேலவன்
  • வேல்விழியன்
  • வேலுப்பிள்ளை

வை

  • வைகரைக்குமரன்
  • வையகநாதன்
  • வைரவன்
  • வைரமணியன்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

சமஸ்கிருதத்துக்கு தமிழ் மொழி அளித்துள்ள கொடை

சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான மசோதா மீது விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆதாரங்களோடு நாடாளுமன்றத்தில் பேச்சு. 

 நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது ரவிக்குமார் பின்வருமாறு தெரிவித்தார்: 

மாண்புமிகு மக்களவை மாற்றுத் தலைவர் அவர்களே! 

சமஸ்கிருதத்துக்கென மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவதற்கான இந்த மசோதா மீது பேச வாய்ப்பளித்ததற்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இங்கே பேசிய பல உறுப்பினர்கள் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான தொன்மை தொடர்பான தகவல்களைக் கூறினார்கள். தமிழ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுகிற மொழியாக இப்போது இருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருந்தது பின்னாளில்தான் தென்னிந்தியாவிலே மட்டும் பேசப்படுகிற மொழியாக மாற்றப் பட்டது என்பதை மொழியியல் வல்லுநர்களுடைய கூற்றுகளை ஆதாரமாகக்கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.

 பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து வெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட சித்திர குறியீடுகள் இதுவரை எந்த மொழி என்று அடையாளம் காணப்படாமல் இருந்தன. அஸ்கோ பர்போலா என்ற மொழியியல் அறிஞர் சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடைய முன்னோடி என்று கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காகத் தமிழக அரசின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

 சமஸ்கிருதத்துக்குப் பல கொடைகளைத் தமிழ்  அளித்திருக்கிறது. எழினி என்ற தமிழ்ச் சொல்தான் சமஸ்கிருதத்தில் யவனிகா என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தமிழறிஞர் சீனி.வேங்கடசாமி அவர்கள் பல கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு நிரூபித்து இருக்கின்றார்.  அது மட்டுமல்ல நமது தேசிய பறவையாக இருக்கின்ற மயில் என்பதைக் குறிக்க  நாம் மயூரா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அது தமிழிலிருந்து கடன்பெற்ற சொல்தான். நீர், அனல், ஆடு, கான், களம், தாமரை, தண்டு, பல்லி, புன்னை, மயில், மல்லிகை, மை, மகள், மாலை, மீன் என்னும் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்தில் நீர, அனல, எட, கானன, கல, தாமரஸ, தண்ட, பல்லீ, புன்னாக, மயூர, மல்லிகா, மஷி, மஹிளா, மாலா, மீனா எனப் பயன்படுத்தப்படுகின்றன. 
இந்த நேரத்திலே ஏற்கனவே இங்கே சுட்டிக்காட்டியபடி எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

சமஸ்கிருதத்திற்கென்று ஏற்கனவே 16 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன; 112 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் உயர் ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது;  10,000 கல்லூரிகளில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது;  அரசு ஆதரவோடு 8000 சமஸ்கிருத பாடசாலைகள் இந்த நாட்டிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே சமஸ்கிருதம் நசிவு அடைந்துவிடவில்லை. ஆனால், அதற்காக மூன்று பல்கலைக்கழகங்களை உடனடியாக மத்திய அரசு உருவாக்குகின்ற இந்த நேரத்திலே தமிழுக்கென்று ஒரு மத்திய பல்கலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமர்கிறேன். நன்றி, வணக்கம்!” 

ரவிக்குமார் பேசியதைக் கேட்ட மக்களவை மாற்றுத் தலைவர் திரு பத்ருஹரி மஹதாப், ஒரிய மொழியில் ஏராளமான தமிழ்ச்சொற்கள் கலந்திருப்பதை சுட்டிக்காட்டி ரவிக்குமாரின் கருத்துகளை ஆமோதித்தார்.
-  கட்செவி மூலம்

புதன், 11 டிசம்பர், 2019

2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர்கள் சிங்கப்பூரில் புத்தகம் வெளியீடு

சிங்கப்பூர், டிச. 10- மனித குலம் எங்கே, எவ்வாறு தோன்றியது? எவ்வாறு நாக ரீகம் வளர்ந்தது? என்ற கேள்விகள் பல ரிடமும் உள்ளன. உலகில் பழமையானது கிரேக்க நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற தகவல் கள் நாம் அறிந்ததே. இவை அனைத்தும் கி.மு (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) கால கட்டங்களில் தோன்றியவை என அறிவியலாளர்களும் தொல்பொருள் ஆராய்ச் சியாளர்களும் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல், அந்த காலகட்டத்தில் அதாவது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தழைத்தோங்கியது நம் தமிழர் நாகரீகம் என்கின்றனர் சில ஆராச்சியாளர்கள். குமரிக் கண்டம் என்ற கண்டம் இருந்த தாகவும் நில அதிர்வுகள், கண்ட நகர்வு கள் போன்ற புவியியல் காரணங்கள் காரணமாக அக்கண்டம் அழிந்து விட் டதாகவும் தகவல்கள் வெளியாகி வரு கின்றன.

ஜாதிகளும், மதங்களும் இல்லாமல் தமிழர் என்ற மரபு மட்டுமே செழித் தோங்கி இருந்ததை சமீபத்திய கீழடி அகழாய்வு நமக்கு உணர்த்தியதை மறந் திருக்க மாட்டோம்.

இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு நாடுகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகம் வாழ்ந்து வருகிறது என சிங்கப்பூர் அமைச்சர் வெளியிட்டுள்ள தமிழர் மரபு குறித்த புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது

சிங்கப்பூரில் உள்ள இந்திய பாரம் பரிய நிலையத்தில் ‘தற்காலிகம் முதல் நிரந்தர குடியேறிகள் வரை - சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய தமிழர்கள்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை சிங்கப் பூர் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.

இது தென்கிழக்கு ஆசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரியம் குறித்து குறைவாக அறியப்பட்ட அம்சங்களை பற்றியும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப் பகுதியுடன் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை பற்றியும் விளக்குகிறது.

சிங்கப்பூரின் முக்கிய பாரம்பரிய பொருளான சிங்கப்பூர் கல்லில் உள்ள கல்வெட்டுகள் 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று சில வல்லுநர்கள் கூறியுள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூர் கல்லின் சில பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளில் "கேச ரிவா" என்ற சொற்றொடர் அடையாளம் காணப்பட்டது.

இது "பராகேசரிவர்மன்" என்ற வார்த் தையின் ஒரு பகுதியாக இருக்கலாம் - இது சோழ வம்சத்தின் பல மன்னர்கள், தென்னிந்தியாவின் தமிழ் வம்சம் மற் றும் வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்யும் வம்சங்களில் ஒன்றாகும், என புத்தகத்தின் பங்களிப்பாளரான ஆராய்ச்சியாளர் இயன் சின்க்ளேர் தெரிவித்தார்.

‘சிங்கப்பூரில் உள்ள தமிழ் சமூகம் தெளிவாக அடையாளம் காணக்கூடி யது, ஆனால் எளிதில் தீர்மானிக்க முடி யாதது, அவ்வாறு செய்வதற்கான எந்த வொரு முயற்சியும் சொற்பொருள் முதல் அரசியல் வரையிலான சவால் களால் நிறைந்துள்ளது. சிங்கப்பூரின் அடையாளத்தை வடிவமைப்பதில் ஆரம்பகால தமிழ் முன்னோடிகளின் முயற்சிகள் மிக முக்கியமானவை.

நம் நாட்டில் இந்திய மக்கள் தொகை யில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் சிங்கப்பூரர்கள், ஒரு துடிப்பான மற்றும் மாறுபட்ட சமூகத்தினர். அவர் கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடி வமைப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றனர்’, என அமைச்சர் ஈஸ் வரன் கூறினார்.

-  விடுதலை நாளேடு,10.12.19


தற்காலிகம் முதல் நிரந்தர குடியேறிகள் வரை - சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய தமிழர்கள் புத்தகம்

புத்தகம் வெளியீட்டு விழாவில் எடுத்த படம்


கிறிஸ்தவக் கல்லூரியில் இந்தி பற்றிச் சொற்போர்

அண்ணாதுரை முழக்கம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை கருத்து

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவர் தமிழ்ப் பேரவையின் ஆதரவில் ஒரு சொற்போர்க் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குச் சென்னையின் பல பாகங்களிலிருக் கும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர். மாணவர்களும் மிகுதியாக வந்திருந்தனர்.

அவைத் தலைவர் தோழர் என்.இராமச்சந்திரன் (மாண வர் 4ஆம் வகுப்பு) தலைமை வகித்தார். கல்லூரியாசிரியர் தோழர் ஆலாலசுந்தரம் செட்டியார் அவர்கள், கண்காணிப் பாளர், ஒட்டிப் பேசுபவர், வெட்டிப் பேசுபவர் ஆகியவர் களைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

தோழர் வித்துவான் டி.பி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை கண் காணிப்பாளராக இருந்து சொற்போரைக் கவனித்து வந்தார்.

வித்வான் இராசமணிக்கம்

"இந்தி பொதுமொழியாவதற்கு எவ்வாற்றானும் பொருத் தமுடையதல்ல'' என்ற தீர்மானத்தைக்கொண்டு வந்து வித் வான் எம்.இராசமாணிக்கம் பிள்ளை பி.ஒ.எல். பேசியதாவது:-

பண்டும் இன்றும் உலகத்தில் பல வல்லரசுகள், பொது மொழியில்லாமலேயே அமைதியாக ஆட்சி நடைபெற்றன. முக்கால் இந்தியாவைக்கட்டி ஆண்ட அசோகன் காலத்தி லும் நாட்டில் பொது மொழி ஒன்று இருந்ததாகத் தெரிய வில்லை. அன்று நாட்டில் ஒற்றுமை நிறைந்திருந்து. ஆத லின் பொதுமொழி இல்லாது நாடு தீமையடையாது. பொது மொழியால் நன்மையுண்டா? அதனால் ஒற்றுமையுண்டாகு மெனக் கூறுகின்றனர். ஒரே மொழி பேசும் தென்கலை, வடகலை வைணவர் சண்டை சொல்ல முடியவில்லை. ஆதலின் மொழியால் ஒற்றுமை உண்டாகுமெனக் கூறுவது தவறு. வடநாட்டில் வேலை கிடைக்குமென்பதும் தவறு. மாகாணப்பற்று பெருகிவரும் இக்காலத்து அந்தந்த மாகாணத்தாருக்கே முதல் உரிமை கிடைக்கும். அன்று நாம் வடநாட்டில் வேலையை எதிர்பார்க்க முடியுமா? மேலும் நமது நாகரிகம், பழக்க வழக்கம் ஆகியவைகட்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழியை 3 ஆண்டுகள் படிப்பதால் என்ன நன்மை உண்டாகும். நினைவில் தான் இருக்குமா?

இந்தி மொழி வரலாறு.

நிற்க, இந்தியின் பிறப்பு வளர்ப்பைக் கவனிப்போம். இந்தி தனக்கென ஒரு எழுத்தில்லாதது. அது 22 கோடி மக் களால் பேசப்படுகிறதென சில அரசியல்வாதிகள் கூறுகின் றனர். இந்தி, மேற்கு இந்தி, கிழக்கு இந்தி, பிகாரி என மூன்று பெரும் பிரிவு உடையது. மற்றும் 11 உட்பிரிவுகள் கொண்டது. ஒரு பிரிவார் பேசும் இந்தி மற்றொரு பிரிவாருக்குப் புரியாது. (இச் சமயத்து ஒரு இந்தியா படத்தைக் கொண்டு இதை விளக்கினார்) இத்தகைய மொழி எங்கனம் பொது மொழி யாகும்? உருது என்றால் பாசறை. மொகலாயர் காலத்து உருது பாரசீகம் கலந்த ஒரு மொழியாகச் சில ராணுவ வீரர்களால் பேசப்பட்டது. பின்னர் லல்லுஜிபாய் என்பவர் இதிலுள்ள உருதுச் சொற்களை நீக்கிவிட்டுச் சரிக்குச்சரி சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து செப்பம் செய்தார். அது தான். மைதிலி. இதைத் தான் நமது நாட்டில் கட்டாய பாட மாக்கியிருக்கின்றனர். இம்மைதிலி பேசுவோர் 1 கோடிக்கு அதிகம் இரார். அறிஞர் ராமானந்தசாட்டர்ஜி போன்றவர்கள் இந்தி பொது மொழியாகாது எனக் கூறுகின்றனர். இந்தி இலக்கண, இலக்கியமில்லாதது. 11 மாகாணத்திலும் கட்டாய பாடமாக்கினால் அந்தந்த மாகாணத்தின் பழக்க வழக்கங் களுக்கேற்ற மொழிமாறி ஒலிமாறி இன்றைய 11 பிரிவான இந்தி 110 பிரிவு ஆக மாறும். எனவே இந்தி எவ்வாற்றேனும் பொது மொழியாதற்கு ஏற்றதல்ல.

சி.என்.அண்ணதுரை

இத்தீர்மானத்தை ஒட்டி, தோழர் சி.என்.அண்ணாதுரை பேசியதாவது:-

எனக்கு முன் பேசிய பண்டிதர் இந்தி பொது மொழியா வதற்கு ஏற்றதல்ல என்பதற்குப் பல காரணங்களைக் காட்டி நன்கு விளக்கினார். நானோ இதை வெட்டிப்பேச இருக்கும் தோழர் - செங்கல்வராயரோ இதைப் பற்றி இம்மாணவர் மன்றத்தில் பேச லாயக்குடையவர்களல்ல. அரசியல் துறை யில் இதைப் பற்றிப் பேச எங்களுக்கு வேறு மன்றங்களிருக் கின்றன. இதற்கு ஆராய்ச்சி வேண்டியதில்லை. ஏன்? நாங்கள் சும்மா இல்லை. ஆராய்ச்சித்துறையில் 'சென்ட்ரலிய சேஷன்' என்ற முறை உண்டு. ஒரு பொருளைப்பற்றிப் பொதுவாக்குவது' பிரித்துப் பார்ப்பது' என்ற இருமுறையில் ஆராயலாம். ஒரு காலத்தில் பொது மொழி வேண்டப்பட்டது. மதம் முதலிய யாவற்றிலும் பொது அதாவது சென்ட்ரலிய சேஷன்' - பொதுவாக்குவது வேண்டப்பட்டது. ஆனால் இன்று மொழி, மதம் முதலியவற்றில் பிரித்துப் பார்க்கும்' முறை ஏற்பட்டு விட்டது. இது 'சென்ட்ரலிய சேஷனை விரும்பும் காலம். பகுத்தறிவுக்கு மதிப்புத்தரும் காலம். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு'' என்றார் வள்ளுவர். சொல்லு பவர் யாராயிருந்தாலும் கேட்பவர் யாராயிருந்தாலும் உண்மையை அலசிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே யார், யார் எனப்போட்டார் வள்ளுவர். இந்தியாவுக்குப் பொது மொழி வேண்டுமென்பதற்கு முன் இந்தியா ஒரு நாடா? என்பதை ஆராய வேண்டும். பெரிய இமயமலையை உடையது; சிறந்த ஆறுகளை உடையது; பல வளங்கள் நிறைந்தது என்று கூறலாம். இந்தியா ஒரு கண்டம். ஒரு நாடல்ல. இதை எந்த தேசீயவாதியும், தங்கள் தேசியத் திரையால் மறைக்க முடியாது.

நிற்க, இந்தியாவுக்கு பொது மொழியில்லாததால் ஏற் பட்ட குறை என்ன? ஆங்கில ஆட்சியால் அடிமையானோம் எனப்பேச்சிற்காக சொல்லழகிற்காகக் கூறலாமே ஒழிய ஆதாரமென்ன? தேர்தலுக்கு முன், இந்திய மக்கள் வறுமை யால் வாடுகின்றனர்; வரிச்சுமை தாளமுடியவில்லை; பாரத தேவியின் அடிமை விலங்கை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டதே ஒழிய இவைகள் இந்நாட்டு இன்னலுக்குக் காரணங்களாகக் காட்டப்பட்டனவே ஒழிய, பொது மொழி வேண்டுமென்றோ, பொதுமொழியின்மையால் இத்துன்பங் கள் வந்தன என்றோ எந்த மேடையிலும் யாராலும் கூறப் படவில்லை.

இந்தியா ஒருகண்டமாயிருந்ததால், முன்பு ஆண்ட மொகலாயரோ, மவுரியரோ, அசோகனோ, மூவேந்தர்களோ இந்நாட்டிற்குப் பொது மொழி வேண்டுமென்று கூறவில்லை. அது இல்லாமையால் நாட்டிற்குத் தீமையுண்டாகுமெனவும் நினைக்கவில்லை.

ஒற்றுமைக்குப் பொது மொழி தேவையா?

இந்தியாவுக்கு எதிர்காலத்தில் வரப்போவது (யூனிட்டரி கவர்மெண்ட்) ஒற்றுமையாட்சியல்ல ; கூட்டாட்சி (பெடரல் கவர்ன் மெண்ட்) தான். இந்தியா ஒரு மிக்க வேண்டுமென நினைத்தால் கூட்டாக மட்டுமல்லாது கலந்து வாழ வேண்டு மென விரும்பினால் ஒற்றுமையாட்சி தான் வேண்டும்.. அதில்லாது பல நாடுகளையும் சேர்த்து ஆளுவது தான் கூட்டாட்சி. பொதுமொழி வேண்டுமென்றால், பொது மதம் வேண்டாமா? பொது உணவு வேண்டாமா? நமது தலை களாவது ஒரே விதமாக இருக்க வேண்டாமா? நடை, உடை, பாவனைகளில் ஒற்றுமை பொதுமுறை வேண்டாமா? மொழியால் ஒற்றுமை உண்டாகுமெனக் கூறுகின்றனர். ஒரே மொழி பேசும் இந்து முஸ்லீம்கள் சண்டையில்லாதிருக் கின்றனரா? நாட்டில் சைவ, வைணவச் சண்டைகள் ஓய்ந்த பாடில்லையே. இன்னும் பொருளாதாரச் சண்டை ஒரு பக்கம். கேவலம் தேர்தல் சண்டை கூட நிற்கவில்லையே. தொல்காப்பியத்தைத் தந்த - உலகப் பொதுமறையாம் திருக் குறளைப் பயந்த - சங்கமிருந்து ஆராய்ந்த பேசற்கினிய இலக்கண இலக்கியங்கள் நிறைந்த பண்டைத் தமிழால் ஒற்றுமையில்லை தமிழரிடை என்றால், பாலாஜி ஹரிராம்' மொழியிலா ஒற்றுமை ஏற்பட்டு விடும்? இத்தகைய சண்டை கள் ஓயவில்லை . ஓயவும் போவதில்லை. ஒற்றுமைக்குப் பொது மொழியும் தேவை இல்லை அதற்கு இந்தியும் ஏற்றதல்ல.

வடநாட்டில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் அதிகமிருப் பதால், அவர்கள் இங்கு வந்து நம்முடன் பேசிவிடுகிறார்கள். நம்மில் ஆங்கிலம் அதிகம் பேசத் தெரியாததால் வடநாட்டில் சென்று அவர்களுடன் பேச இந்தி படித்துக்கொள்வது அவசியம்'' எனச் சமீபத்தில் விளம்பர மந்திரி - கனம் ராம நாதன் கூறுகிறார். இது எப்படியிருக்கிறது. 100க்கு 92 பேர் தாய் மொழியில் கூடப் படிக்காத காலத்துக் கட்டாயபாட மேன்?

அண்மையில் வங்காள சாஹித்ய மண்டலத்தில், இந்தி பொதுமொழியாவதற்கு லாயக்கற்றது; வங்காளம் தான் பொது மொழி ஆகவேண்டும் என்று அவர்கள் கூறி விட் டனர். இன்றைய காங்கிரஸ் தலைவர் வங்காளி; எனவே இந்தி பொது மொழியாக முடியாதென நாங்கள் நம்புகிறோம். கோடி முஸ்லிம்கட்குத் தாய் மொழியாக உள்ள உருதுவை விட நல்ல மொழி வேறு எது என்கிறார் ஜனாப் ஜின்னா.

இந்தி 600 ஆண்டுகட்கு முன் தோன்றியது. இலக்கண இலக்கியமில்லா ஒரு உருப்படா மொழி, ஆண்டு தோறும் மாநாடு கூட்டி இலக்கியங்கள் சேர்க்கிறோம். சேர்த்த பின் தான் இந்தி மக்கள் மனதைக் கவரும் என்கிறார் காந்தியார். இந்தி வந்தால் தமிழ் கெடும் என்று நினைத்துத்தான் கட்டாய இந்தி கூடாதென்கிறோம். தமிழில் இப்பொழுதே பாதிக்கு மேல் வடசொற்கள் கலந்து விட்டன. பிள்ளையைப் பள்ளிக்கூடம் அனுப்ப நினைக்கும் பெற்றோர்கள் அட்சராப் பியாசப் பத்திரிகை' என அழைப்புகள் அனுப்பும் நிலையில் இன்று தமிழ் இருக்கிறது. பொது மொழிக் கொள்கை 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அழிந்துபட்டது. எனவே சிறந்த இலக்கண இலக்கியங்களை உடைய உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் வழங்கும் நாட்டில், தனது சொந்த நாட்டிலேயே ஒற்றுமையை உண்டாக்கமுடியாத ஒருசிறு மொழி - ஏன்? இன்னும் சற்று வெளிப்படையாகச் சொன்னால் அந்தலம்பாடி மொழி புகுத்தப்பட வேண்டா மென்றே நாங்கள் கூறுகிறோம்.

வெட்டிப் பேச்சு

தோழர் டி.செங்கல்வராயன் இத்தீர்மானத்தை வெட்டிப் பேசுகையில் கூறியதாவது:- நான் மகாத்மா காந்தியின் அஹிம்சா தர்மத்தைத் தலைமேல் தாங்கு பவனாதலால், நான் வெட்டிப்பேச விரும்பவில்லை; விளக்கிப் பேசுகிறேன். ஒட்டிப் பேசியவர்கள் கூறியவை ஒவ்வொன்றிற்கும் பதில் கூறக்காலமில்லை. சரித்திரத்தில் பொது மொழி இயக்கம் இல்லை என்றார். உலக சரித்திரத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இன்றைய நிலையில் நமது நாட்டிற்குப் பொது மொழி ஒன்று வேண்டுமா? அதனால் பயன், நன்மை என்ன? என்பனதாம் நாம் பார்க்க வேண்டியவைகள். இந்தி பொது மொழியாவதால் 80-பங்கு நன்மை என்றால் 20 பங்கு தீமையிருக்கலாம். அதற்காகப் பொது மொழி வேண்டா மென்பது தர்மமல்ல.. ஒரு மொழி பேசுபவரிடம் சண்டையில்லையா? என்றார்கள். அது மதத்தால் மதம் பிடித்துச் செய்கிறார்களே ஒழிய மொழியாலல்ல. இந்தி படித்தால் வடநாட்டில் உத்தியோகம் வரும் என்று யாரும் கூறவில்லை. வடநாட்டில் உத்தியோகம் வந்தால் இந்தி படித்திருந்தால் நன்மை தானே என்று தான் கூறுகின்றோம். அன்னியரிடம் அடிமையாயிருக்கும் வரை நமக்கு எங்கு வேலை கிடைக் கப் போகின்றது, இந்தி 11 பிரிவாகவோ 110 பிரிவாகவோ இருக்கலாம். தமிழும் ஜில்லாவிற்கு - ஜில்லா சிறிது பேச்சில் மாறவில்லையா? ஒரு கொடியின் கீழ் ஒற்றுமையாட்சிக்குப் பொது மொழி வேண்டுவதில்லை. கூட்டாட்சியில் (பெட்ரல்) தான் பொது மொழி வேண்டும். இந்தியா அடிமைநாடு - ஒவ்வொரு நாட்டானும் தனது நாட்டுப் பெயரால் தன்னுடைய மொழியை அழைக்கின்றான் இந்தியன் என்ன கூறுவான். கூட்டாட்சி பெடரேஷன் வரும்பொழுது எல் லோரும் ஒரு மொழியில் பேசினால் தானே நல்லது அதை விட்டு கூவம் நதிக்கு அப்பால் வேண்டாம் என்பது தவறு இந்தியில் இலக்கண இலக்கியமில்லை என்றார்கள். அதனால் தான் அது பொது மொழியாக வேண்டும் என்று கூறுகின்றோம். நாம் பரிபூரண விடுதலையடையப் போகின் றோம். அன்று பொதுமொழி வேண்டும். ஒருவர் பொது மொழி வேண்டுமேன்று கூறுகையில், இன்னொருவர் வேண்டாமென்றால் நம்மில் ஒற்றுமை எப்படி வரும்? நாம் ஆங்கிலத்தை மறக்கவேண்டும். நானும் மறந்து வருகின் றேன். மொழியின் விஸ்தீரணம், ஜனத்தொகை, சுலபம் ஆகிய மூன்றையும் கவனித்தால் இந்தி தான் பொதுமொழி யாக லாயக்குடையது. இந்தி சுலபமானது தமிழைப் போல் 216 எழுத்தில்லை. நன்னூல் போன்ற இலக்கணங்கள் கிடையாது. தமிழை எல் லோரும் சுலபமாகக் கற்க முடியாது. 'ழ' கரத்தை யாராலும் உச்சரிக்க முடியாது. இந்தியை உபாத் தியாயர் உதவியில்லாது கற்றுக்கொள்ளலாம். அவ்வளவு சுலபமானது. சைகாலேஜ் முறைப்படி இந்தியா என்றால் இந்தி என்றிருக்க வேண்டும்."

- தொடரும்

- விடுதலை: 11.2.1939

- விடுதலை: 9.12.19

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு: அரபி மொழி பெயர்ப்பில் திருக்குறள் வெளியீடு

குவைத், டிச.1 உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் திருக்குறள் மாநாடு 29.11.2019 அன்று குவைத் ரிக்காயி நெய்வேலி ராசாராம் சீனியம்மாள் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு நூலகக் காப்பாளர் ச.செல்லபெருமாள் தலைமை வகித்தார்.
தமிழ்நாடான், முத்துகுமார் முன்னி லையில் நடைபெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகளில்ஜென்சி ராபர்ட் கிழவனல்ல எங்கள் கிழக்கு திசை பாடலுக்கு பரதம் ஆடினார். ராஜ்குமார் குழுவினரின் டிக் டாக் நிகழ்ச்சி நடைபெற்றது. குவைத் இசுலா மிய தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் குறளை தமிழிலும் அரபி மொழி பெயர்ப் பையும் அழகாக சொல்லி மகிழ்ந்தனர்.
பானு இக்பால், ஜெசிமா சிராஜூதீன், கம்பளிபஷீர்(காயிதேமில்லத் பேரவை) புதுக்கோட்டை பஷீர்( பன்னாட்டு திமுக) ஆ.அறிவழகன் (விசிக)  மணிவாச கன் (மதிமுக) வாழ்த்துரை வழங்கினர்.  இரா.சித்தார்த்தன் (பெரியார்நூலகம்) முனைவர் அ.ஜாஹிர்உசேன் (சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்) கவிஞர்.கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத் தலைவர்) சிறப்புரையாற்றினர்.
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறள் அரபி மொழி பெயர்ப்பை வெளியிட, குவைத் தொழில் அதிபர் ஹமூத் அல் ஹபீப்முனாவர் அவர்கள்  பெற்றுக் கொண்டார். பல்வேறு தமிழ் அமைப்பினர் பெருந்திரளாய் கலந்துகொண்டனர் பெருமளவில் பெண்கள் கலந்து கொண் டது சிறப்பாய் அமைந்தது.
விழாக்குழுவினர் அமானுல்லாஹ் அன்பரசன், சத்திரமனை அசன்முகம்மது ஆலஞ்சியார் இனிக்கும் தமிழ்  ரபீக் ராஜா சித்தார்த்தனுக்கு சிறப்பு செய்தனர். ‘‘திராவிட வேள்''  விருது சித்தார்த்தனுக்கும், ‘‘குறளொளி சுடர்'' விருது முனைவர் அ.ஜாஹிர் உசேன் அவர்களுக்கும், ‘‘திராவிட சுடரொளி'' விருது கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கும், பெரியார் பிஞ்சு தஞ்சை தீன.சித்தார்த்துக்கு ‘‘திராவிட தளிர்'' என்ற பட்டமும் வழங்கி மகிழ்ந்தது பெரி யார் நூலகம்.  விழாவை நெறியாளர் தொகுத்து வழங்கினார். வெற்றியூர் அன் பரசன் (விசிக) தொகுத்து வழங்கினார்.
விடுதலை நாளேடு, 1.12.19