பக்கங்கள்

சனி, 22 ஜூலை, 2017

இந்தி இந்தியாவின் தேசியமொழி அல்ல-உயர்நீதி மன்றம்

நன்றி:- தட்ஸ்தமிழ் இணையதளம்

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.

சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில்,

உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்களில் உணவின் விலை, அதில் அடங்கியுள்ள பொருட்கள், தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிடும்போது கண்டிப்பாக இந்தியிலும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

காரணம், இந்தி நமது தேசிய மொழியாகும். நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியில்தான் புரிந்து கொள்கிறார்கள். எனவே இந்தி மொழியில் இவை இடம் பெறாமல் போவதால், அவர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் விவரம் தெரியாமல் போய் விடுகிறது என்றார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஜே.முகாபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தனர். 

மேலும் மனுதாரரின் வக்கீலைப் பார்த்து, இந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்று அங்கீகரித்து எங்காவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு எதிர் மறை பதிலை அளித்தார் வக்கீல்.

தொடர்ந்து நீதிபதி முகோபாத்யாயா பேசுகையில், இந்தி என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று மட்டுமே. அது தேசிய மொழி அல்ல. இதுவரை இந்தியை தேசிய மொழியாக அறிவித்து எந்த உத்தரவையும் யாரும் பிறப்பிக்கவி்லை.

நமது அரசியலமைப்புச் சட்டமும் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக கூறவில்லை.

எனவே இந்தி அல்லது தேவநாகரி மொழிகளில் பொருட்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை பயன்படுத்துவது அவரவர் உரிமை என்று தீர்ப்பளித்தனர்.

11.8.2010

மைல்கற்களில்(கர்நாடகா) இந்தி மொழி அழிப்பு

நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்கள் மை பூசி அழிப்பு



மண்டியாவில், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்களை கன்னட அமைப்பினர் மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 05, 2017, 03:14 AM

மண்டியா,

மண்டியாவில், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்களை கன்னட அமைப்பினர் மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தி மொழி திணிப்பு

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் இந்தி மொழி அல்லாத மொழி வாரிய மாநிலங்களிலும் இந்தி மொழியை திணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் ஒரு படியாக நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் மைல்கல்லில் இந்தி மொழியில் மட்டுமே ஊரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா–பீதர், கனகாபூர்–மைசூரு, பெங்களூரு–மைசூரு ஆகிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் மட்டும் எழுதப்பட்டன.

கன்னட அமைப்பினர் போராட்டம்

இதற்கு கன்னட அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்த ஊர்களின் பெயர்களை மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘இது கன்னட நாடு. கன்னட மொழி பழமையான மொழி. கன்னட மொழியைத்தான் அனைவரும் பேச வேண்டும், கன்னடத்தைத்தான் அனைவரும் படிக்க வேண்டும். கன்னட மொழிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்’’ என்று கூறினார்.

-தினத்தந்தி,5.5.17

வியாழன், 20 ஜூலை, 2017

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகும் மொழிப்போர் இந்தி பேசாத மாநிலங்கள் இணைகின்றன

பெங்களூரு, ஜூலை 16 மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசு அமைந்த மூன்று ஆண்டுகளில் அவ்வாட்சியின் சாதனை(?) களில் ஒன்றாக இந்தி திணிப்பு உள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் செயலை செய்துவருகிறது.
அண்மைக்காலமாக மத்திய அரசின் அலு வலகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வேத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தி பேசாத  மாநிலங்களில், அம்மாநில மக்கள்மீது கட்டாயப்படுத்தி இந்தியைத் திணிக்கும் செயல்களை அதிதீவிரமாக மத்திய பாஜக அரசு செய்துவருகிறது.

அவ்வப்போது தமிழகம் உள்ளிட்ட மாநி லங்களில் கடும் எதிர்ப்பு ஏற்படுகின்றபோது, பின்வாங்குவதும், பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்தித் திணிப்பை செயல்படுத் துவதுமாக மத்திய பாஜக அரசு செய்து வரு கிறது. கருநாடக மாநிலத்திலிருந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராளிகளின் பிரதிநிதிகள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராட்டிரம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றிணைந்து நாடுமுழுவதும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

கருநாடக சுவபிமானா வேதிகே 

கருநாடக வளர்ச்சி நிறுவனத்தின் மேனாள் தலைவரும், கருநாடக சுவபிமானா வேதிகே அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமாகிய சந்திரசேகர பாடீல் கூறும்போது, “இந்தி  பேசாத மாநிலங்கள் தங்களின் கலாச்சார அடையாளங்களைக் காத்திட ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட் டில் உருவாகியுள்ள சமூக அரசியல் நிலை களே இந்த ஒருங்கிணைப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த முறை கருநாடகாவி லிருந்து அதற்கான குரல் வெடித்துக் கிளம்பி யுள்ளது’’ என்றார். 
நாடுமுழுவதுமிருந்து பல்வேறு அமைப் புகள், அரசியல் கட்சிகள் முதற்கட்டமாக பெங்களூருவில் நேற்று (15.7.2017) நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில்  பங்கேற்றன.

ஆகஸ்ட்டில் மாபெரும் பேரணி

பாடீல் மேலும் கூறும்போது, “எழுத்தாளர் கள், கலைஞர்கள், அறிஞர்பெருமக்கள் ஆகியோருடன், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். கருநாடக மாநில மதசார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமார சாமி, கருநாடக காங்கிரசு கமிட்டியின் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட கருநாடக மாநிலத்தின் தலைவர்களும் இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு தங்களின் ஆதர வினைத் தெரிவித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்தில் நேஷனல் கல்லூரியிலிருந்து மாபெரும் பேரணியை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது’’ என்றார்.

எழுத்தாளர் விவேக் ஷான்பாக்

கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் கூறும்போது, “நாம் பன்முகத்தன்மையுடன் இருக்கின்ற நிலையில் எந்த ஒரு மொழியையும் திணிப்பதை எதிர்ப்போம். ஆகவே, இந்தி பேசும் மாநிலத்திலிருந்தும் நம்முடைய போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால், வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்த நாட்டில், கூட்டாட்சிக் கட்டமைப்பை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதே உண்மையில் பிரச்சினையாகியுள்ளது’’ என்றார்.

கருநாடக ரக்ஷன வேதிகே அமைப்பானது எல்லையோர மாநிலங்களான தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் பங்கீட்டிலும், மகாராட்டிர மாநிலத்துடன் எல்லைப் பிரச்சினையிலும் மோதல் போக்கில் இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது பொதுப்பிரச்சினையாக உள்ள இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு இணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளது. ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் டி.ஏ.நாராயண கவுடா பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்துக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மகா ராட்டிர மாநிலத்தில் மகாராட்டிர நவநிர் மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இணையத்தில் பரப்புரை

பெங்களூருவில் இணைய வழி பரப்புரை Ôநம்ம மெட்ரோ இந்திக்கு எதிர்ப்புÕ எனும் தலைப்பில் கடந்த மாதம் தொடங்கப்பட் டுள்ளது. கெம்பேகவுடா மற்றும்  சிக்பேடே மெட்ரோ ரயில்வே நிலையங்களில் 1.7.2017 அன்று பெயர்ப்பலகைகளில் இந்தி அழிக்கப் பட்ட படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதே போல்,  மும்பையிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. 

சன்னீரப்பா

கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் தொடர்பாளர் சன்னீரப்பா கூறியதாவது: 

“இந்தி பேசாத மாநிலங்களின்மீது எந்த வகையிலாவது இந்தியைக் கட்டாயப்படுத்தித் திணித்திட வேண்டும் என்கிற நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. எதிர்காலத் திலும், இந்தி பேசாத மாநிலங்களின் மொழி களை நாங்கள் காத்துக்கொள்ள விரும்பு கிறோம். அதனால், இந்தி பேசாத மாநிலங் களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மொழிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பாக திராவிட மொழிகள் மற்றும் பஞ்சாபி மொழி, வங்க மொழி உள்ளிட்ட மொழி களைக் காத்துக்கொள்ள தலைவர்களை ஒன்றி ணைக்கிறோம்.

இந்தித்திணிப்பை ஆதரிக்கும் பாஜக அமைச்சர்கள்

பாஜகவைச் சேர்ந்த தலைவர்களான வெங்கய்யா நாயுடு இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்தியை தேசிய மொழி என்று பேசுகிறார். கருநாடக பாஜகவைச்சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆனந்த குமார், சதானந்தா கவுடா ஆகியோர்  இந்தி எதிர்ப்புப் பரப்புரையை ஆதரிக்காமல் எதிர்க்கிறார்கள்.

மத்திய அரசுக்கு நாங்கள் வரி செலுத் துகிறோம். ஆனால், சில திட்டங்களில்தான் மத்திய அரசு நிதியை ஒதுக்குகிறது. மாநிலங்க  ளிடையே மத்திய அரசு பாகுபாடுகளைக் காட்டக் கூடாது. கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட எங்கள் மொழிகளை காப்பதுடன் எங்களின் அடையாளங்களையும் காத்திட, இந்தி பேசுவோரின் ஆதிக்கம் உள்ள அரசியல் கூட்டணிகளை விலக்கிவிட்டு, தேசிய ஜன நாயக கூட்டணி, அய்க்கிய முற்போக்கு கூட் டணி ஆகியவற்றுக்கு இணையான அணியைக் கட்டமைக்கப் போகிறோம். இந்தியை எங்கள் மீது திணிக்காத அரசுகளை உருவாக்குவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த கூட்டணி அடுத்த 2020ஆம் ஆண்டில் அரசியல் சக்தியாக வளரும்’’ என்றார். அண்மைக் காலமாக கருநாடக மாநிலத் தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார் ஊற்றி அழிக்கும் போராட் டம் நடைபெற்றது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மம்தா பானர்ஜி, மு.கஸ்டாலின் ஆதரவு

கருநாடக மாநிலத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பரப்புரை செய்துவருபவரான அருண் ஜாவகல் கூறும்போது, “திராவிட முன்னேற்றக் கழகம், தெலுங்கு தேசக்கட்சி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இம்முயற்சிக்கு பெரிதும் ஆதரவை அளிக் கின்றன. மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இம்முயற் சியை வரவேற்றுள்ளனர். அதேபோல் இந்தி யைத் திணிப்பதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளோம். இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி மொழித் திணிப்பையே எதிர்க்கிறோம். பெரும்பாலான அனைத்து கட்சிகளும் தங் களின் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.

ஆர்.எஸ்.பாரதி

கருநாடகாவில் நடந்துவருவதை கவனித் துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆதரிக் கின்றோம். எங்கள் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவுசெய்து உரிய பிரநிதிகளை அனுப்புவார் என்று மாநிலங்களவை உறுப் பினர், திமுக அமைப்புச்செயலாளர் வழக் குரைஞர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

மெட்ரோ ரயில்வே துறையில் இந்தி அலுவலக மொழியாம் 

அதனையடுத்து சில நாள்களுக்கு முன்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் பெங்களூருவுக்கு வருகைதந்தனர். அப்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் லிமிடெட் நிறுவ னத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் மெட்ரோ ரயில் பெயர்ப்பலகைகளில் இந்தி மொழியே அலுவலக மொழியாக இருக்கும் என்பதுதான் கொள்கை என்று  இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன்படியே இந்தியில் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

இதனையடுத்தே, கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் சார்பில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற் கின்ற கருத்தரங்கு ஏற்பாடுகள்மூலமாக, இந்தித்திணிப்பை எதிர்த்து இந்தி பேசாத மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை அவ்வமைப்பினர் செய்துவருகிறார்கள்.

கருநாடக மாநில தலைமைச்செயலாளர் கூறும்போது, “கடந்த ஆண்டிலேயே மெட்ரோ ரயில்வேத்துறையின் Ôஇந்தி அலுவலக மொழிÕ என்கிற கொள்கையை எதிர்த்தோம். மெட்ரோ ரயில்வே துறை என்பது முற்றிலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் அல்ல, மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசைவிட அதிக அளவில் மாநில அரசின் பங்குத்தொகை உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், மத்திய அமைச்சகம் அதைப் புறக்கணித்துவிட்டது’’ என்றார்.

வேறுபாடுகளைக் கொண்டுள்ள நாட்டில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறிக் கொண்டு கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்க்கின்ற மோடியின் மத்திய அரசுக்கு இந்தி பேசாத மாநிலங்களின் ஒருங்கிணைப்பு பாடம் புகட்டும் என்பது உறுதி.

-விடுதலை,16.7.17

புதன், 12 ஜூலை, 2017

செம்மொழி தகுதிபெற்ற மொழிகள்.

இந்திய அரசிடம் செம்மொழி
தகுதிபெற்ற மொழிகள்.

1. தமிழ் 2004
2. சமசுகிருதம் 2005
3. தெலுங்கு 2008
4. கன்னடம் 2008
5. மலையாளம் 2013
6. ஒடியா 2014

ஞாயிறு, 2 ஜூலை, 2017

கோயிலில் தமிழில்லை! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


ழு
தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.
பெரியார்:
சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்
தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்
பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?
தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!
பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?
தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?
பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?
தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!
பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?
தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?
பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.
தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!
பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!
குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!
இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.
பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளறும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.
திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.
காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!
தகவல்: சங்கை வேலவன்
-விடுதலை,5.12.14

இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் - சித்தராமையா உறுதி



பெங்களூரு,
ஜூலை 2 எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என்று நாடாளு மன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரி வித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இந்தியை கட்டாயமாகத் திணிக்கிறது என்று இந்தி பேசாத மாநி லங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்தி மொழி தொடர்பாக வெங்கையா நாயுடு எழுப்பிய சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இந்தி தான் நமது தாய்மொழி. அதுதான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் கண்டனத்திற்குள்ளானது.
இந்தித் திணிப்புக்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்து போராடும் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட் டிற்கு எதிர்ப்பு வலுத்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் சித்த ராமையா பேசுகையில், "இந்தித் திணிப்பை கர்நாடக மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் இந்தி பயன் படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றும் மத்திய அரசின் திட்டம் கிடையாது. மெட்ரோ திட்டத்திற்கு பெரும் பங்கு தொகை மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப் பட்டுள்ளது என்றார்.
மேலும், அவர் கூறுகையில், "இந்தி வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப் படுகிறது. அதற்காக இந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது. இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி. இந்தியை நாட்டு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்து கண்டிக்கத்தக்கது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
-விடுதலை,2.7.17