பக்கங்கள்

கனடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 மே, 2021

டோரண்டோவில் தமிழ் இருக்கை உறுதியானது


 கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டோரண்டோ,மே2- உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத் துடன் அமெரிக்காவில் தொடங்கப்பட் டது, தமிழ் இருக்கை அமைப்பு (Tamil Chair Inc) ஹார்வர்டு பல்கலைக்கழகத் தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதை தன் முதல் இலக்காகக் கைகொண்டது இந்த அமைப்பு. அதற்கு, 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (40 கோடி ரூபாய்) ஆதார நிதியாகப் பல்கலைக் கழகத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியம். 

தமிழ் இருக்கை அமைப்பின் முதன்மை இயக்குநர்களான மருத் துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்த ரேசன் சம்பந்தம் ஆகிய இருவரும் தலா அரை மில்லியன் டாலர்களைத் தொடக்க நன்கொடையாக வழங்கி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தனர்.

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய தேவையான எஞ்சிய ஆதார நிதியை, திரட்ட உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்  இலக்கை எட்டிடக் கரம் கொடுத்தன. வெற்றிகர மாகத் தற்போது ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையப் பெற்று, அதை வழி நடத்திச் செல்லும் தலைமைப் பேரா சிரியரைத் தேர்ந்தெ டுக்கும் பணியைப் பல் கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. பேராசியர் தேர் தெடுக்கப்பட்டுப் பணியில் அமர்த்தப்பட் டதும் அவருடைய தலைமையில் தமிழ் இருக்கை ஹார் வர்டில் தன்னுடைய செயல்படுகளைத் தொடங்கும்.

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, 5 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதற்குத் தேவைப் படும் 3 மில்லியன் டாலர்கள் (17.1 கோடி ரூபாய்) நிதியைத் திரட்டித் தற்போது தன்னுடைய இரண்டாம் இலக்கிலும் வெற்றியடைந்துவிட்டது கனடியத் தமிழ்ச் சமூகம். இந்த முயற்சி யானது, தமிழ் இருக்கை அமைப்பும், கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து  எடுத்த கூட்டுச் செயல் திட்டமாகும்.

இந்த முயற்சிக்கு கனடா, இலங்கை மட்டுமல்லாது, உலகத்தின் பல பாகங்களில் வசிக்கும் தமிழர்களிட மிருந்து நன்கொடைகள் வியப்பூட்டும் வகையில் வந்து குவிந்தன. 4000 உலகத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், கிராமச் சங்கங்களும், பள்ளிகளில் கல்லூரிகளில் இணைந்து பயின்ற பழைய மாணவ மாணவியரும், முதி யோரும் சிறுவர் சிறுமியரும் கூட ஆர் வத்தோடு பங்குபெற்று டோரண்டோ தமிழ் இருக் கையின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்.

தற்போது, தமிழக அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாய், திமுக வழங்கிய 10 லட்சம் ரூபாய், தந்தை செல்வநாயகம் அறக்கட்டளை வழங்கிய 1.4 கோடி ரூபாய் ஆகியன டோரண்டோ தமிழ் இருக்கை அமைக்கத் தேவைப்படும் ஆதார நிதி இலக்கை எட்ட வேண்டிய இறுதிக்கட்டத்தில் இணைந்து கொள்ள, 17.1 கோடி ரூபாயைத் துரித மாக திரட்ட உதவின. தமிழர்களுக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்து  தை மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என கனடா அரசே அறிவித்து கொண்டாடி வரு கிறது. கனடா நாட்டினுடைய உயரிய பல்கலைக்கழகமான டோரண் டோவில் தமிழுக்கு இருக்கை அமைய விருப்பது கனடா நாட்டின் நாடாளு மன்றத்தில் சமீபத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

கனடா நாட்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை: ஒப்பந்தம் கையெழுத்தானது



சென்னை, ஜூலை 1- அமெரிக்கா வில் உள்ள ஹார்வர்டு பல்க லைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான வெற்றியை தொடர்ந்து, கனடா நாட்டில் உள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழர்கள் முயற்சி மேற் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்கா ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவை சேர்ந்த முனைவர் மு.ஆறுமுகம் கூறியதாவது:-

டொரண்டோ பல்கலைக் கழகம் கனடா நாட்டில் முதல் இடத்தையும், உலக தரவரிசை யில் 10-ஆவது இடத்தையும் பெற்று சிறந்து விளங்குகிறது. கனடாவில் 5 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இதில் டொரண்டோ நகரில் மட்டும் 3 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை போன்று டொரண்டோ பல்கலைக்கழகத் திலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்று கனடா தமி ழர் பேரவையினர் முயற்சி மேற்கொண்டனர். அவர்களு டைய முயற்சிக்கு அமெரிக்கா ஹார்வர்டு தமிழ் இருக்கை குழு பக்கபலமாக இருந்து வந் தது.

எங்களுடைய நீண்டநாள் முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் அந்த பல்கலைக்கழ கத்தை சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டி முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. இதற் கான விழா டொரண்டோ பல் கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது. விழாவுக்கு கனடா தமிழர் பேரவை பொறுப்பாளர் கள் அப்பாதுரை முத்துலிங்கம், சிவன் இளங்கோ, டாக்டர் வ. ரகுராமன், துரைராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

அமெரிக்கா ஹார்வர்டு பல் கலைக்கழக இருக்கை குழுவை சேர்ந்த டாக்டர்கள் ஜானகி ராமன், சம்பந்தம், புரவலர் பால்பாண்டியன், முனைவர் பாலா சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, தமிழ் இருக் கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

நான் (ஆறுமுகம்) நன் கொடையும், தமிழக கலை, இலக்கிய பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனி டம் இருந்து வாழ்த்து செய்தி யும் பெற்று அனுப்பினேன்.

டொரண்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 20 லட்சம் கனடா டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10 கோடியே 34 லட்சத்து 97 ஆயிரம்) தேவைப்படுகிறது. விழாவில் தமிழ் ஆர்வலர் களிடம் இருந்து 6 லட்சம் கனடா டாலர் (ரூ.3 கோடியே 10 லட்சத்து 49 ஆயிரம்) நன் கொடையாக பெறப்பட்டது. ஹார்வர்டு தமிழ் இருக்கை குழு 50 ஆயிரம் கனடா டாலர் நன்கொடையாக அளிக்க உள்ளது.

எனவே ஓராண்டுக்குள் டொரண்டோ பல்கலைக்கழகத் தில் தமிழ் இருக்கை அமைக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு, 1.7.18