பக்கங்கள்

திங்கள், 29 மே, 2023

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின்கீழ் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க செயல்பாடு

  

சென்னை,மே 4 - தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மொழி என்பது மக்களின் முதல் அடையாளம். சொற்களே மொழிக்கு அடிப்படை. சொல் வளமே மொழி வளமாகும். சொற்களின் எண்ணிக்கை பெருக்கமே மொழியை வாழ வழி வகுக்கும். இத்தகைய சிறப்புமிக்க செம் மொழியான தமிழ் மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் பாது காத்து, வேர்ச்சொற்களுடன் கூடிய ‘சொற்பிறப்பியல் அகராதி’ உருவாக்கிட 1974ல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை முதல் இயக்குநராக கொண்டு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை அப்போதைய முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞர் துவக்கினார். தற் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, அகரமுதலி திட்ட இயக்ககமானது அகராதிப் பணிகளோடு, காலத்திற் கேற்ற புதிய கலைச் சொற்களை உருவாக்கி வழங்குவது மற்றும் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்கான ஆக்கப் பணிகளையும் செயல்படுத்தி வருகிறது.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் நடைமுறை தமிழ் அகரமுதலி, மாணவர் இலக்கிய தமிழ் அகரமுதலி, அயற்சொல் அகராதி, மயங்கொலிச் சொல்லகராதி, ஒரு பொருட் பன்மொழி அகராதி, போன்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஆட்சிச் சொல்லகராதி திருந்திய பதிப்பு, துறை வாரியான ஆட்சிச் சொல்லகராதி குறுநூல், தமிழ் மரபுத் தொடர் அகராதி ஆகியவை நூல் ஆக்க பணியில் உள்ளன.

மருத்துவக் கலைச்சொல் அகராதி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து துறைசார் வல்லுநர்களை கொண்ட குழுக்கள் அமைத்து, ஆண்டுக்கொரு துறையை தேர்வு செய்து கலைச்சொல் அகராதிகளை உருவாக்கி வெளியிட வுள்ளது. இதன்படி நடப்பாண்டில் முதற்கட்டமாக மருத்துவக் கலைச் சொல் அகராதி உருவாக்கப்பணி நடக் கிறது. இதற்காக 2023 மார்ச் வரை 27,018 சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ள மருத்துவக் கலைச்சொல் அகராதி, வரும் காலத்தில் மருத்துவ மாணவர்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில துணை நிற்கும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழிகளிலும் தமிழ்மொழியை இலகுவாகக் கற்கும் வகையில் அந்தந்த மொழிகளில் புலமை வாய்ந்த வல்லு நர்கள் மூலம் பாடத்திட்டங்கள் உரு வாக்கப்பட்டு பாடநூல், பன் மொழி அகராதி உருவாக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மேலும், பன்மொழி அகராதியை உள்ளடக்கி தமிழ் கற்கும் வகையில் திறன்மிகு குறுஞ்செயலி உருவாக்கப்பட்டு இந்தாண்டிற் குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

கலைச் சொல் தொகுப்பு

தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், தமிழார்வலர்கள் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் மூலம் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் கலைச்சொற்களைத் தாமே உள்ளீடு செய்யும் வகையில், ‘கலைச்சொல் தொகுப்பி’ உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது. அரசு துறைகளின் புதிய கலைச்சொற்களைத் தொகுத்து ஆட்சிச்சொல் குறு நூலாகத் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ஆண்டுதோறும் வெளியிடப்படவுள்ளது.

மேலும், தமிழ் அகராதியியலின் தந்தை எனப்போற்றப்படும் வீரமா முனிவரை போற்றும்விதமாக அவரது பிறந்த நாளான நவ. 8ஆம் தேதி, தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி ஆண்டு தோறும் தமிழ் தொண்டாற்றிய 43 பேரை தேர்வு செய்து, விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகிறது. ‘சொல் வயல்’ மாத மின்னிதழ் கடந்த ஏப்ரல் வரை 35 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொற்குவை வலைத் தளம்: தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற் களுக்கு நிகரான ஆங்கிலச் சொற் களோடு பொருள் விளக்கம் அளித்து, அச்சொற்களுக்கான வேர்ச்சொல் விளக்கத்தையும் சொற்குவை (sorkuvai.com)  என்ற வலைத்தளத்தில் பதிவேற் றம் செய்யப்படுகிறது. இன்றைய அறிவுப்புலத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களை திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணையதளம் மூலமாக பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்று திரட்டி, அவற்றுள், வந்தசொல்லே திரும்பவும் வராத வகையில் தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வது இந்த அகரமுதலி இயக்ககத்தின் சொற்குவைத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

வலைத்தளத்தில் பதிவேற்றம்

தமிழ் கலைக்கழகத்தில் 132 கூட் டங்கள் நடத்தியும், மருத்துவம், ஊடகத்துறை, கணினி, தொல்லியல், கல்வெட்டியியல், அருங்காட்சியகம், நெசவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, வேளாண் துறை போன்ற துறை சார்ந்த வல்லுநர்களி டமும், மாணவர்களிடமும் கலந்தாய் விலும், இணையவழி பயிலரங்கில் சேகரித்தும் சொற்குவை வலைத்தளத் தில் பல ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

சொற்குவை துவங்கப்பட்டு 2021 ஜூலை 31 வரை சொற்குவை வலை தளத்தில் 3,88,776 சொற்களே பதி வேற்றம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் 2023, ஏப். 13 வரை 10,10,008 கலைச்சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அர சின் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மொழி வரிசை பட்டியலில் தமிழ் மொழி முன்னேறும் 

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் கோ.விசயராகவன் கூறும்போது, ‘‘சொற்குவையின் கலைச்சொல் எண் ணிக்கை இதுவரை 10,10,008 ஆக உள்ள நிலையில், இனி வரும் காலங்களில் மேலும் இது உயரும். இச்சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், மொழியியல் ஆய்வாளர் களும் பயன்படுத்துவதன் மூலமும் அய்க்கிய நாடுகளின், அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் முதல் வரிசையில் தமிழ்மொழி முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும். பொன்விழா காணவுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத் தின் தமிழ்ப்பணிகள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

வட்டார வழக்கு அகராதி  விரைவில் வெளியீடு

 வட்டார வழக்கு சொற்கள் தான் தமிழ்மொழியின் துவக்க நிலையை கண்டறிவதற்கும், மூலச் சொற்களை உணர்ந்து புதுச் சொல்லாக்கம் உரு வாக்குவதற்கும் உதவியாக அமைகிறது. அத்தகைய வட்டார வழக்கு சொற் களை பாதுகாக்கும் வகையில் ‘வட்டார வழக்கு சொற்பொருள் அகராதி’ உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை ஆகிய 6 மண்டலங் களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத் திற்கும் தனித்தனி ஒருங்கிணைப் பாளர்கள் குழு அமைத்து, 2023 மார்ச் 19ஆம் தேதி வரை 18,784 சொற்கள் திரட்டப் பெற்றுள்ளது. இவ்வகராதி விரைவில் வெளியிடப்படவுள்ளது.


செவ்வாய், 23 மே, 2023

தமிழ் இனி கட்டாயம்

  

சென்னை,மே23- 'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி களிலும், தமிழ் கட்டாயம்' என, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜமுருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை: தமிழ்நாடு பள்ளிகளில், 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 2015-2016ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. அதற்கு அடுத்த, 2016-2017ஆம் கல்வி ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும், அடுத்த கல்வி ஆண்டில் மூன்றாம் வகுப்புக்கும் என, ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது. கடந்த 2022 - 2023ஆம் கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. அடுத்த மாதம் துவங்க உள்ள, 2023 - 2024ஆம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 - 2025ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ., - அய்.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 - 2025ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும். இந்த மாணவர்கள், பொதுத் தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியதும் கட்டாயம். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை, விரைவில் வடிவமைக்கப்படும். எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணி அமர்த்தி, மாணவர் களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும். தமிழ் கட்டாய பாட முறை குறித்த அறிவிப்பை, தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 7 மே, 2023

மொழி உரிமை: தனது இருப்பிற்காக இன்றும் போராடும் திராவிட மொழிக் குடும்பத்தின் துளு

 

 s2


வட கேரளா மற்றும் தென் கருநாடகாவில் பேசப்பட்டு வரும் துளுவ மொழிக்கு அலுவல் மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்தியத் துளுவ மொழியின் வரலாறு

கருநாடகாவின் இரண்டு கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பியிலும்கேரளத்தின் காசர்கோடு பகுதியிலும் பேசப்பட்டு வரும் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழி தான் துளுவம். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 18,48, 427 நபர்கள் இம்மொழி பேசி வருகின்றனர். 2000 ஆண்டுகள் பழமை கொண்டதிராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்ராபர்ட் கால்ட்வெல்A Comparative Grammar of the Dravidian- என்ற தன்னுடைய புத்தகத்தில் திராவிட மொழிக்குடும்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த மொழிகளில் ஒன்றாக துளுவை குறிப்பிட்டுள்ளார்.

துளு மொழி பேசும்  மக்களின் உணமையான கோரிக்கை

கருநாடகா மற்றும் கேரளாவில் இருக்கும் துளு மொழி பேசும் மக்கள் இம்மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதோடு இந்திய அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையின் கீழ் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்அஸ்ஸாமிபெங்காலிகுஜராத்திஇந்திகன்னடாகஷ்மீரிகொங்கனிமலையாளம்மணிப்பூரிமராத்திநேபாளிஒரியாபஞ்சாபிசமஸ்கிருதம்சிந்திதமிழ் , தெலுங்குஉருதுபோடோசந்தாலிமைதிலி மற்றும் டோக்ரி ஆகிய 22 மொழிகள் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன

இந்தக்கோரிக்கையை ஆதரித்து  தக்ஷின கன்னடா எம்.பி.  நளின் குமார் கத்தீல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், “அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் துளுவை இணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனசில நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது உள்ளதுஇந்த ஆட்சி நிறைவடைவதற்குள் துளுவை அலுவல் மொழியாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

தக்ஷின கன்னடாவின் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோட்ட சிறீ நிவாஸ் பூஜாரி, “துளு ஒரு மொழி மட்டும் அல்லவரலாற்றுடன் கூடிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அம்மொழி கொண்டுள்ளது” என்று கூறினார்.

துளு எங்களின் தாய்மொழிஅனைவரும் துளுவை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வேதவ்யாஸ் காமத் கூறினார்.

அரசியல்வாதிகளைத் தவிர கன்னட நடிகர்கள்துளுவை தாய்மொழியாக கொண்ட ரக்ஷித் ஷெட்டிப்ருத்வி அம்பார் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

துளுவ மொழியின் தற்போதைய நிலை

கருநாடகாவின் துளு சாகித்ய அகாதெமி தலைவர் தயானந்த கி.கத்தல்சர்துளு மொழி பேசும் மக்கள் மேல் கூறிய பகுதிகளில் கேரளா மற்றும் கருநாடகாவில் வாழ்ந்து வருகின்றனர்இப்பகுதிகளை துளுநாடு என்று அழைக்கின்றோம்துளு தற்போது அலுவல் மொழி அல்ல.

ஆனால் துளுவை அட்டவணை 8இன் கீழ் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுதுளு 8ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டால்சாகித்ய அகாதெமியின் அங்கீகாரம் துளு மொழிக்கு கிடைக்கும் என்று கூறினார்.

கல்வியில் துளு

கருநாடக அரசு துளுவை சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தது.

மாநில கல்வித்துறையின் படி, 2020ஆம் ஆண்டு மொத்தமாக தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த 956 பள்ளி மாணவர்கள் தங்களின் மூன்றாவது மொழியாக துளுவை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினார்கள்துளு அறிமுகம் செய்யப்பட்ட போது

2014-2015 ஆண்டுகளில் 18 மாணவர்கள் துளுவை தங்களின் மூன்றாவது விருப்ப மொழியாக தேர்வு செய்தனர்.

s3

கடந்த ஆண்டு ஜெய் துளுநாட் என்ற அமைப்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில் துளு மொழியை இணைக்க வேண்டும் என்று இணையங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டதுEducation In Tulu என்ற ஹேஷ்டேக்கில் தங்களின் கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.

துளு நாடு - தனி மாநில கோரிக்கை

29 பிரிவுமக்கள் பிரதிநிதி சட்டம் 1951இன் கீழ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற துளுவேரே பக்ஷா என்ற அரசியல் கட்சிதுளு மொழி பேசும் மக்களின் அரசியல் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க துவங்கியுள்ளது.

துளுவேரே பக்ஷா கட்சியின் மத்திய குழு தலைவர் ஷைலேஷ் ஆர்.ஜேஇந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போதுமொழி அடிப்படையில் நாடு மறுசீரமைக்கப்பட்டபோது துளுநாடு கேரளா மற்றும் கருநாடக மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டதுதமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் பேசும் மக்களுக்கு தனி மாநிலங்கள் இருக்கின்ற போது துளுநாடு ஏன் தனி மாநிலமாக இருக்க கூடாதுஎன்ற கேள்வியை வைத்தார்.

இந்தக் குடகை ஆங்கிலேயர்கள் கூர்க் என்று அழைத்துவந்தனர்இந்தக்குடகுபகுதியில் தான் காவிரி நீர் உறுபத்தியாகும் தலைக்காவிரி உள்ளது,

இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோதுதமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவானது.

பின்னர் 1957இல் குடகு மக்கள் தங்களை யூனியன் பகுதியாக இந்தியா இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர்ஆனால் நேருயூனியனாக உங்களை இணைக்க முடியாதுவேண்டுமெனில் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.

நேருவின் ஆலோசனைப்படி குடகு மக்கள்தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர்ஆனால் தமிழக அரசியலாளர்கள்அதனை நிராகரித்துவிட்டார்கள்அப்போது தந்தை பெரியார் ஒருவர்தான்குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். ‘விடுதலை’ பத்திரிகையில் எழுதினார்பேரணி நடத்தினார்இருந்தும் அவரின் குரலை அலட்சியம் செய்ததின் விளைவைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

தமிழகம் குடகை நிராகரித்தைப் போன்றேகருநாடகமும் முதலில் நிராகரிக்கவே செய்ததுஆனால் ‘மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா’ எனும் அறியப்பட்ட பொறியியல் விஞ்ஞானியின் கருத்தினால்கருநாடகம் குடகை ஏற்றுக்கொண்டதுகருநாடகம் ஒரு அறிவியல் அறிஞரின் குரலுக்கு செவி சாய்த்ததிலும்தமிழகம் சமூகவியல் அறிஞரான பெரியாரின் குரலை அலட்சியம் செய்ததிலும் இருக்கிறது காவிரி மீது பறிபோன நமது உரிமை

 குடகு மக்களுக்கும் தமிழருக்கும் மிக நெருங்கிய கலாச்சார மொழி தொடர்பு உண்டுஆகையால் தான் அவர்கள் எங்களின் தாய்மொழி மாநிலமான தமிழகத்தோடு இணைகிறோம் என்றனர்.

 ஆனால் அவர்கள் கருநாடகத்தோடு இணைந்ததால அவர்களின் மொழி உரிமையும் பறிபோய் எழுத்து சிதைந்து துளு பேசும் குடும்பத்தின் இளையதலைமுறைகள் கன்னடம் மட்டுமே கற்கும் அவலம் ஏற்பட்டதுதற்போது அவர்கள் தங்களின் மொழி உரிமையை மீட்க மீண்டும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.