தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

  • முகப்பு

செவ்வாய், 17 மே, 2022

தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள்



  May 17, 2022 • Viduthalai

 சிவகங்கை, மே 17- கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் இடைவெளியின்றி முது மக்கள் தாழிகள் நெருக்கமாக கிடைத்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் பிப்ரவரி 13ஆம் தேதியும், அகரம், கொந்தகையில் மார்ச் 30ஆம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின. தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொந்தகை தளத்தில் 7ஆம் கட்ட அகழாய்வின் போது, 9 குழிகள் தோண்டப்பட்டு, 30 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 7ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த தாழிகள் இடைவெளியுடன் இருந்ததால் முழுமையாகவும், சேதமடையாமலும் இருந்தன.

தாழிகளினுள் உள்ள சுடுமண் பாத்திரங்களும் உருகுலையாமல் கிடைத்தன. 8ஆம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற இடைவெளியில்லை. நெருக்கமாகவும், தாழிகள் அனைத்தும் சேத மடைந்தும் உள்ளன. இதனால் 2 கட்ட அகழாய் விலும் கிடைத்த தாழிகளுக்குள் காலஇடைவெளி அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் இடைவெளி இன்றி தாழிகள் புதைக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது தாழிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிட்டு பதிவு செய்து வருகின்றனர். அதன்பின் தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. 

சிவகங்கை அருகே பிஜப்பூர் சுல்தான்கள் காலத்திய நாணயங்கள்

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் முனிக்கோவில் பகுதியில் வித்தி யாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்தன. இவை செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் முன்னும் பின்னுமாக அடையாளங்கள் இருந்தன. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு நாணயங்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இவற்றை ஆய்வு செய்ததில் இவை பிஜப்பூர் சுல்தான்கள் காலத்தவை என்பதை உறுதி செய்ய முடிந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராட்டிரப் பகுதியையும் 1490லிருந்து 1686 வரை ஆண்டவர்கள் பிஜப்பூர் சுல்தான்கள். 1490இல் பாமினி  சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியரசாக செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இங்கு கிடைத்த நாணயங்கள் செம்பால் ஆனதோடு அதிக எடை உள்ளதாக உள்ளன. ஒரு நாணயத்தில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பட்டுள்ளது. மற்ற எழுத்துக்கள் பாரசீகத்தில் எழு தப்பட்டுள்ளன.

இவை இப்பகுதி ஆளுகையில் இருந்த மன்னர் களின் நிர்வாகத்திற்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ வந்திருக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் நாணயங்கள் இழுத்து வரப்படு வதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடைபெற்று வந்து உள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான நாணயங்கள் கிடைப்பது அரிது.இவ்வாறு தெரிவித்தனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தந்தத்தாலான அணிகலன்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கண்டறியப் பட்டுள்ளது. 

வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  முன்னதாக, அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு கண்டறியப்பட்டன.  இந்நிலையில், ஞாயிறன்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன.  யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் 5 சென்டி மீட்டர் நீளமும், 0.8 சென்டிமீட்டர் விட்டமும், 61 கிராம் எடையும் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டிமீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளன.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 6:06 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி, முதுமக்கள் தாழிகள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திருவள்ளுவர்

திருவள்ளுவர்
குமரிக் கடலில்133 அடிஉயர சிலை

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2023 (9)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (18)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ▼  மே (1)
      • தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள் கொந்...
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (8)
  • ►  2021 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2020 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (85)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (131)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (16)
  • ►  2017 (74)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (61)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (14)
  • ►  2015 (48)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (1)
    • ►  அக்டோபர் (1)

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • அச்சு
  • அண்ணா
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அயல்நாடு
  • அரசு ஆணை
  • அரசுடமை
  • அரபு
  • அரபு மொழி
  • அரியானா
  • அவமதிப்பு
  • அளவைகள்
  • அறிவியல்
  • அறைகலன்
  • ஆ.ராசா
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆட்சிமொழி
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திரேலியா
  • இசை
  • இடம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய மொழிகள்
  • இரும்பு உருக்காலை
  • இரும்புக்காலம்
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குவனார்
  • இலங்கை
  • இறப்பு
  • இனம்
  • ஈகிகள்
  • உ.வே.சா.
  • உச்சர நீதிமன்ற தீர்ப்பு தமிழில்
  • உலகம் முழுவதும் தமிழ்
  • உவேசா
  • ஊர்தி பயணம்
  • எண்கள்
  • எலும்புக்கூடு
  • எழுத்து
  • எழுத்து சீர்திருத்தம்
  • ஒற்றைப்பத்தி
  • ஓகம்
  • ஓமன்
  • கடவுள்
  • கண்ணகி
  • கம்போடியா
  • கருநாடகம்
  • கருப்பு
  • கல்திட்டை
  • கல்லூரி
  • கல்வெட்டு
  • கலைஞர்
  • கவரி மான்
  • களவு
  • கனடா
  • கால்டுவெல்
  • கி வீரமணி
  • கி.வீரமணி
  • கிணறு
  • கிழமை
  • கீழடி
  • குடமுழுக்கு
  • குமரி அனந்தன்
  • கோபுரம்
  • கோயில்
  • சங்க இலக்கியம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கராச்சாரி
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சர்.ஏ. டி. பன்னீர்செல்வம்
  • சாதி
  • சிங்கப்பூர்
  • சிந்துவெளி
  • சிலப்பதிகாரம்
  • சிறப்பு
  • சீர்திருத்தம்
  • சீனா
  • செங்காந்தள்
  • செம்மொழி
  • சொல் சிறப்பு
  • சொற்போர்
  • டி.ஆர்.பாலு
  • தமிழ்
  • தமிழ் ஆண்டு
  • தமிழ் இருக்கை
  • தமிழ் எண்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் காந்தி
  • தமிழ் சுவடி
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் பயிற்சி
  • தமிழ் பாடம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பெருமை
  • தமிழ் மரபு
  • தமிழ் மைல் கல்
  • தமிழ் மொழி
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு நாள்
  • தமிழ்ப் பற்று
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் பெயர்கள்
  • தமிழர்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழர்கள்
  • தமிழில் கையொப்பம்
  • தமிழினம்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழ்நாடு
  • திங்கள்
  • திராவிட மொழி
  • திராவிடம்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திரு
  • திருக்குறள்
  • திருக்குறள் மாநாடு
  • திருத்தம்
  • திருப்புகழ்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் விருது
  • திருவிக
  • திருவில்லிபுத்தூர்
  • தினமலர்
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • தேசம்
  • தேவநேய பாவாணர்
  • தை
  • தை மாதம்
  • தொல்காப்பியம்
  • தொன்மை
  • தொன்மை மொழி
  • தோற்றம்
  • நினைவு சின்னம்
  • நீச பாசை
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூல்கள்
  • பண்பாடு
  • பதிப்பு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரிதிமாற் கலைஞர்
  • பல்கலைக்கழகம்
  • பாகுபாடு
  • பார்ப்பன பனியா
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பாரதி
  • பாவாணர்
  • பானை ஓடு
  • புத்தகம்
  • புத்தாண்டு
  • புறநானூறு
  • பூங்கா
  • பெயர் பலகை
  • பெயர்ப்பலகை
  • பெரியார்
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேரணி
  • பொங்கல்
  • ம்னிதன்
  • மலேசியா
  • மறைமலை அடிகள்
  • மனுதர்மம்
  • மாட்டிறைச்சி
  • மாநாடு
  • மின்சாரம்
  • முதன்மை
  • முதன்மை மொழி
  • முதன்மொழி
  • முதுமக்கள் தாழிகள்
  • முருகன்
  • மூல மொழி
  • மே.வங்கம்
  • மைசூரு ஆய்வகம்
  • மைல்கல்
  • மொழி
  • மொழி புள்ளிவிவரம்
  • மொழி வெறுப்பு
  • மொழி-பெரியார்
  • மொழிப்பயிற்சி
  • யாதும் ஊரே
  • யோகா
  • ராபர்ட் கால்டுவெல்
  • ராவணன்
  • வ .உ. சி
  • வ உ சி
  • வ.உ.சி.
  • வடமொழி
  • வரலாறு
  • வளர்ச்சி
  • வன்மம்
  • விருது
  • வேதம்
  • ஜாதி
  • ஜெயமோகன்

பிரபலமான இடுகைகள்

  • தமிழ்ப் பதிப்பின் தலைமகன்
    ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் மு...
  • வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்கள்
         November 19, 2021  • Viduthalai முதலமைச்சர்   மு . க . ஸ்டாலின்   வெளியிட்டார் சென்னை , நவ .19-  கப்பலோட்டிய   தமிழர்   வ . உ . சி . யி...
  • தமிழ் மரபு மாதம்
        January 22, 2022  • Viduthalai  ஆஸ்திரேலிய அரசு கடந்த ஆண்டு தமிழர் புத்தாண்டாம் தை முதல்நாளை தமிழ் மரபு மாதம் என்று அறிவித்தது, இதனை பெர...
  • தமிழின் தனித்தன்மை
    தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும் பகுதி II - தமிழின் தனித்தன்மை தவிர்க்க இயலாத தத்துவம் மாற்றம் என்பது மாறாத உல...
  • தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும்
    தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும் ஆதாரங்கள் இதோ : தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் அற்ப பேர்வழிகளுக்கான பதில்  ===========...
  • வடமொழி என்ற சமஸ்கிருதம் என்றும் பேசப்படாத மொழி - திணிக்க வேண்டாம்
    ஆரிய பிராமணர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி னாலும் அம்மாநில மொழிகளையே தாய்மொழியாக வீட்டிலும் வெளியிலும் பேசியும், எழுதியும் வருகின்றனர். ...
  • கடல் கடந்த தமிழ்
    புலவர் செ. இராசு எம். ஏ., பி.எச்.டி சங்க இலக்கியங்களில் மேலை, கீழை நாடுகள் தொடர்பான சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. “யவனர் தந்த வினைமாண் நன்கல...
  • ‘பெரியாரிடம்’ கண்ட ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்: - சிந்தனைக் களம்
    ப.திருமாவேலன், ஊடகவியலாளர் 1.            தமிழர் இனப்பெருமை 2.            தமிழ்நாட்டுப் பெருமை 3.            தமிழர் கடந்தகாலப் பெருமை 4.     ...
  • தொல்காப்பியத்தில் சாதி
    - ஊரன் அடிகள் தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் சிறப்பு. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொ...
  • செங்காந்த மலர்
    காந்தள் , செங்காந்தள் , வெண்காந்தள் மலர் : ஓர் அலசல் .                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.