பக்கங்கள்

வியாழன், 19 ஏப்ரல், 2018

ஆங்கிலம் அவசியம் ஏன்?

நேயன்

 

தனித் தமிழ் இயக்கம் நடத்திய தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தன் நூல்களுக்கான முன்னுரையை ஆங்கிலத்திலே எழுதினார். தனது நாட்குறிப்பையும் ஆங்கிலத்தில் எழுதினார். இவர் சமஸ்கிருதத்தை எதிர்த்தாரே தவிர ஆங்கிலத்தை எதிர்க்க வில்லை.

ஆங்கிலத்தின் அவசியம் கருதி இவர்கள் சொன்னதும் செய்ததும் குற்றமா? இவர்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரிகளா? இவர்களைக் குறை சொல்லாத குணாக்கள் பெரியாரையும் அண்ணாவையும் குற்றம் சாட்டுவது உள்நோக்க உந்துதலால் அல்லவா?

அன்றைய அறிஞர்களை விடுங்கள். இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்ப் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் பாட மொழியாகவும் இருக்க  வேண்டும். ஆங்கில அறிவு கட்டாயத் தேவை என்பதை ஏற்கின்றனர்.

தாய்மொழிக்கு அப்பால் இன்னொரு

மொழியைக் கற்றுக்கொள்வது, அறிவு

வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்

என்கிறது தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி.

இந்தியாவின் ஓர் அங்கமாக, ஒரு மாநிலமாக தமிழ்நாடு உள்ளவரை தொடர்பு மொழியாக ஆங்கிலம் கட்டாயம் தேவை. இல்லையென்றால் அந்த இடத்தை இந்திதானே நிரப்ப முயலும்? ஆங்கிலமா? இந்தியா? ஆங்கிலம் என்பதுதானே அறிவுடைமை. ஆங்கிலம் தொடர்பு மொழியானால் இந்தியாவிலும் பயன்படும் இதர நாடுகளிலும் பயன்படும்.

இன்றைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அயல்நாடுகளில் பணிபுரிந்து வருவாய் ஈட்டவும், வாழ்வில் வளம்பெறவும் ஆங்கிலம்தான் உதவுகிறது என்பதை சிந்தித்தால் பெரியாரின் உள்ளமும் உயர்வான நோக்கும் விளங்கும்!

தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு

முதல் நாள் (15.01.1949) நிகழ்வுகள்

இன்று (15.01.1949) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமை தாங்கினார். நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார் துவக்கவிழா உரையாற்றினார். தமிழ்ப்பெரியார் திரு.வி.க. தனது வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டில் கட்சி, கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும் உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர்.

காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும ஆரம்பித்து விட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பகுதியில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

9.45 மணிக்கு நகைச்சுவை அரசு தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும், பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையளித்து உபசரித்தார்கள்.

சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ.பி.எல்., எம்.ஓ.எல்., அவர்கள் மாநாட்டுப் பந்தலையடையவும், பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார்.

மாநாட்டுச் செயலாளர் தோழர் சி.டி.டி. அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, திரு. சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிறகு, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் துவக்கவிழா ஆற்றும் வகையில் கம்பீரமாக எழுந்து நின்று தமிழர்களின் தனிச்சிறப்பு விழாவான பொங்கல் விழாவிற்குப் பிறகு இம்மாநாடு கூட்டப்பட்டது சாலச் சிறப்பானது என்று எடுத்துக் கூறி, ஆரியக் கலாச்சாரத் திரட்டு என்று பலராலும் கருதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு வரும் வள்ளுவர் குறளை, பண்டைத்தமிழனின் சிறந்த பண்புகளை எடுத்துக் கூறும் நூல் என்பதை விளக்கிக் காட்டுவதே இம்மாநாட்டின் நோக்கமென்று எடுத்துக்கூறினார். அவர் மேலும் பேசுகையில், திருக்குறள் தொன்மைத் தமிழ் நூல் என்பதற்கு ஆதாரமாக தொன்மை நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இலக்கணப்படி வாழ்த்தியல் வகை நான்கும் முதல் நான்கு அதிகாரங்களாக அதாவது கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று நான்கு அதிகாரங்களாகப் பாடப் பெற்றிருக்கிறது. அதோடு தொல்காப்பிய இலக்கணப்படி அறம், பொருள், இன்பம் என்ற மூன்றைப்பற்றி மட்டுமே பாடப் பெற்றிருக்கிறது. மேலும், திருக்குறள் இன்று சங்க நூல்கள் என்று வழங்கப்பட்டுவரும் யாவற்றிலும் கையாளப் பட்டும் இருக்கிறது.

இப்படியான தமிழர் சால்பை விளக்கி எழுதப்பெற்ற இந்நூலை இடைக்காலத் தமிழ்ப் புலவர் ஏதும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர் போல் பாசாங்கு செய்து குறளை மனு முதலான வல்லுநர் வடமொழியில் கூறியிருப்பதைத் தமிழில் சாரமாகத் திரட்டித் தரும் நூல் என்று கூறி ஆரிய நூலாக்கி விட்டனர் என்று கூறி, இடைக்காலத் தமிழ்ப் புலவர்களின் போக்கை வெகுவாகக் கண்டித்தார். மேலும் பேசுகையில், திருக்குறளைப் பாராட்டுவது தமிழைப் பாராட்டுவதாகும், தமிழர் பண்பைப் பாராட்டுவதாகும், தமிழ் சால்பைப் பாராட்டுவதாகும் என்று கூறி தனக்கு இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருளிய பெரியாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கடன் என்ப நல்லவையெல்லாம் செய்தல் என்ற தமிழ்ப்பண்பை ஒட்டி நாடு வாழட்டும், மக்கள் வாழட்டும், நல்லதெல்லாம் வாழட்டும் என்று வாழ்த்துக் கூறி, எல்லோரும் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழன் பெருமையுணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொண்டு மாநாட்டைத் திறந்து வைத்தார்கள். பாரதியார் பேசிக் கொண்டிருக்கையிலேயே தமிழ் பெரியார் திரு.வி.க. அவர்களும், திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்களும் வந்து சேரவும், நாவலர் பாரதியார் அவர்கள், மாநாட்டில் கலந்து கொண்டு தமிழை கவுரவம் செய்யும் அளவுக்காவது உடல் நலம் இடம் கொடுத்ததற்காக மகிழ்வடைவதாகத் தமிழ்ப் பெரியாரிடம் தெரிவித்து, தமது வணக்கத்தைத் தெரிவித்தார்.

நாவலர் பாரதியாரின் திறப்பு விழா சொற்பொழிவைத் தொடர்ந்து வரவேற்புக் கமிட்டித் தலைவர் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் தம் வரவேற்புச் சொற்பொழிவைத் துவங்கினார்.

                                                                (தொடரும்)

- உண்மை இதழ், 16-31.3.18

புதன், 18 ஏப்ரல், 2018

தமிழர் திருநாள் - தந்தை பெரியார்


திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர் களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டின் தமிழன் கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாசாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாசாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழனுக்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.

எனவே, இன்று தமிழன் கலாசாரம், பண்பு, வரலாறு அற்ற ஒருஅடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் நடக்கும் கலாசாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமற் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா மிக முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல் கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல் அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகள் ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி முதலியனவும் விடுமுறை இல்லாத பண்டிகைகள். பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம், தைப்பூசம் இந்தப்படியான இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தமிழன் பண்பிற்கு தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்ற விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

தமிழனின் இழிவுக்கு மறக்க முடியாத, முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்கு காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.

கிருஸ்துவர்கள், காலத்தைக் காட்ட இருப்பது கிருஸ்து ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் காலத்தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல் தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

இப்படியேதான் மற்றும் தமிழனுக்கு  ‘கடவுள்’, சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்?

ஏதாவது ஒன்று வேண்டுமே, அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதை தமிழன் விழாவாகக் கொண்டா டலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன் மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் (பிணீக்ஷீஸ்மீst திமீstவீஸ்ணீறீ) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானே யொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இதை (இந்தப் பொங்கல் பண்டிகையை) தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும். இதுதான் பொங்கலுக்கு எனது சேதி என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

(“கலை’’ பொங்கல் மலர், 14.1.1959)

 - உண்மை இதழ், 16.31.1.18


செவ்வாய், 17 ஏப்ரல், 2018

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்!

பெரியார் பேருரை



பெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவு களைக் கேட்க வேண்டுமென்றும், அனைவரும் அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தமக்குப் பிடிக்காதது பேசப்பட்டாலும் எதையும் பொறுமையோடு கேட்டும், பிறகு சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு ஏற்படும் முடிவுபடி நடந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

நண்பகல் 12 மணி சுமாருக்கு முடிவுற்ற பெரியார் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்பு திருச்சி வழக்கறிஞர் தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் முன்மொழிய முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல்காதர் அவர்களும், தோழர் டி.கே.நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து பின்மொழிய நீண்ட கைத்தட்டலுக்கிடையே பன்மொழிப் புலவர் தி.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தம் தலைமையுரையில் வள்ளுவர் புலவர் உலகத்திலே இதுகாறும் வாழ்ந்தது போதும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும்! கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும். மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு பண்டைய தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும்.  அமெரிக்க பேரறிஞர் வெண்டல் வில்கி அவர்கள் விரும்பிய ஒரே உலகம் நம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும் என்று குறிப்பிட்டார்.

அனுபவ உண்மைகள் நிறைந்த குறள்

மேலும், திருக்குறளின் பலவான பெருமைகளை விளக்கிக் கூறுமுகத்தான் தலைவர் அவர்கள் திருக்குறள் எந்த மதச்சார்பும் அற்ற நூல் எனவேதான் எல்லோரும் எல்லாக் காலத்திலுமே தமக்கேற்புடைத்து, தமக்கும் திருக்குறள் ஏற்புடைத்து என்றுப் போற்றிப் பாராட்டி வந்திருக்கின்றனர். திருக்குறள் பெரும் பெரும் அனுபவ உண்மைகளைக் கொண்டிருப்பதால் தான் முடிஅரசு காலத்தில் எழுதப்பட்ட நூலாயிருந்தும்கூட இன்றைய ‘குடிஅரசு’ காலத்திலும், அது நம்மால் போற்றப்பட்டு வருகிறது. அழகிய அறப்பாக்களுடனும், அறிவு சான்ற பொருட்பாக்களுடனும் குறள் மிளிர்வதோடு, இலக்கியச் சுவை மிக்க இன்பப் பாக்களும் குறளை வெகுவாக அழகு செய்கின்றன. மேலும், சமுதாயத் தொண்டு செய்வதற்கு இனியதோர் தூண்டுகோலாகவும் திருக்குறள் அமைக்கப் பெற்றிருக்கிறது என்று கூறியதோடு, வானளாவிப் பறக்க வான ஊர்தி கண்ட மனிதனால், கடலின் ஆழத்திலெல்லாம் ஊடுருவிச் செல்லும் கப்பலைக் கண்டுபிடித்த மனிதனால், அனைத்தையும் அழிக்கவல்ல அணுக்குண்டையும் கண்டுபிடித்த மனிதனால் எதைத்தான் சாதிக்க முடியாது. எனவே, ஆற்றலுண்டு உங்கள் யாவருக்கும். அவ்வாற்றலைத் துணைகொண்டு வள்ளுவர் தந்த தமிழ் நூலாகிய திருக்குறளை மக்களுக்கெல்லாம் எடுத்து ஓதுங்கள். மனிதத் தன்மையில் அனைவருக்கும் பற்றுதல் ஏற்படப் பாடுபடுங்கள். எதிர்காலமேனும் இன்ப வாழ்வாக, அன்பு வாழ்வாக இருக்க அனைவரும் பாடுபடுங்கள் என்றும் குறிப்பிட்டார். சரியாக 1.15 மணிக்கு தலைமையுரை முடியவும் மாநாடு நண்பகல் உணவுக்காக கலைந்து மறுபடி 3.30 மணிக்கு கூடியது.

பிற்பகல் நிகழ்ச்சி

தலைவர் வர சற்று காலதாமதம் ஆனதால் தோழர் எஸ்.முத்தைய முதலியார் அவர்களை தற்காலிக தலைவராகக் கொண்டு மாநாடு மறுபடியும் 3.30 மணிக்கு இனிது துவக்கமாகியது.

திருக்குறள் முனுசாமி சுவைமிக்கப் பேச்சு! தலைவரின் முன்னுரைக்கு பிறகு தோழர் திருக்குறள் முனுசாமி அவர்கள் திருக்குறளை நன்கு படித்து தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்று நகைச்சுவைத் ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்கள். அச்சொற்பொழிவில் திரு வள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு காட்டியும் கையாண்டிருக்கிறார் என்றும், எனவே ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டுமென்றும், குறளில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான அர்த்தம் குறளிலேயே ஏதாயினும் ஓர் இடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறதென்றும் பல உதாரணங்களோடு விளக்கிக் கூறினார்.

தலைவருள் தலைவர்

சுமார் 4.15 மணிக்கு திரு.தி.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதும், பெரும் புலவர் திரு. டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் அறப்பாலில் கூறப்பட்டுள்ள பாக்களில் பலவற்றை ஓதி, வள்ளுவர் பெருமை தெற்றென விளங்கும்படி அவற்றில் புதைந்து கிடக்கும் பா நயத்தையும், பொருட் செறிவையும் எடுத்துக்கூறி வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும் என்பதை நன்கு விளக்கிக் காட்டியும், தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவர் தமிழ்க்கலையுள்ள ஓர் ஒப்பற்ற கலையாக திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளமையை வாழ்த்திப் பாராட்டி கூறி, அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும். அதன்படி நடத்தலும் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள்.

இப்படி அனைத்து தமிழறிஞர்களும் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்டு  தமிழ் உயர, திருக்குறள் பரவ பாடுபட்டவர் பெரியார்.

வள்ளுவரும் பெரியாரும்

விருதுநகர் செந்தில்குமாரர் நாடார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.சி.இலக்குவனார் அவர்கள் இதனை இதனால் இவன் முடிக்குமென்று அதனை அதனால் அவன் கண் விடல் என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி, அதற்கு சிறப்பை உண்டாக்கித் தர இப்பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறதென்றும், இயற்கைகூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்கு பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக்கூறி, ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்கு தகுதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடைத்தல்ல என்றும், கம்பனையும், வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும் பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும் என்றும் உதாரணங்களோடு விளக்கிக்காட்டினார். மேலும் பேசுகையில், அவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும், உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல் என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்ஸிஸத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்ஸிய கொள்கைகளை விளக்க ஒரு லெனின் தோன்றியது போல் வள்ளுவருடைய கருத்துக்களுக்கு விரிவுரை வழங்க நமது பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும் அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போதுகூட வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதியிருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச்சார்பு அற்ற சர்க்காராக நிலவ வேண்டுமானால் திருக்குறளை அதற்கு ஏற்ற வழிகாட்டி என்று கூறி பழந்தமிழனான வள்ளுவர், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.

தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு

இரண்டாம் நாள் (16.01.1949) நிகழ்வுகள்

சென்னை, ஜன.16 இன்று காலை 9.30 மணிக்கே திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்கள்.
                (தொடரும்...)
- உண்மை இதழ், 1-15.4.18

வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம்!

(இது ஓர் ஆய்வுத் தொகுப்பு கட்டுரை)



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

அரசியல் அடிமைத்தளை,

பொருளாதார அடிமைத்தளை,

சமூக பண்பாட்டு அடிமைத்தளை

- ஆகிய முப்பெரும் விலங்குகள் பூட்டப்பட்டுள்ள நமது திராவிடர் சமு தாயத்திற்கு, மானமும் அறிவும் ஊட்டியவர் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

அரசியல் விலங்குகள்

பொருளாதார விலங்குகள்

- என்பவை கண்ணுக்குத் தெரிந்த கொடுமைகள்!

சமூகப் பண்பாட்டு விலங்குகள் என் பவை மூளையில் மாட்டப்பெற்ற, கண்ணுக் குத் தெரியாத கயமைகள்!!

மாபெரும் நாகரிகம், கலை, மொழி, பண்பாடு, இலக்கியம், பெரு வணிகம், திரை கடல் ஓடியும் திரவியம் தேடி, நானிலம் தாண்டி, கடலில் நாவாய் ஓட்டி வெளி நாட்டு வாணிபத்தில் விளைந்த அறுவடை வருவாய்களை துய்த்து மகிழ்ந்த ஓர் இனம்.
இடைக்காலத்தில் புகுந்த ஓர் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது. மூன்றடி மண் கேட்ட பிச்சைக்காரர்கள், தலையில் கை வைத்து முடி பறித்த சூழ்ச்சிக்காரர்கள் ஆனார்கள்

அவைதான் இன்று வேத இதிகாசங் களாக, புராணங்களாக இன்னும் திராவிட மக்களின் மண்டைக்குள் குடைந்து கொண் டிருக்கும் மூளைச் சாயப்பதிவுகள் ஆகக் காட்சியளிக்கின்றன!

விழா என்றால் ஓர் இனம் வீழாது எழுந்து நின்று மகிழ்ச்சி கொண்டு அதில் வீறு கொண்டு வரலாறு படைப்பது என்பது தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது நம் நாட்டில்.

 

வாழ்ந்த இனம் வீ



ழ்ந்தது!
இல்லை இல்லை வீழ்த்தப்பட்டது!
வீரத்தால் - விவேகத்தால் அல்ல
சூழ்ச்சியால், தந்திரத்தால்...!

எனவேதான் இதனை வெகு சுருக்கமாக - அழகாக ஆரியம் பற்றி அறிஞர் அண்ணா எழுதுகையில்,

‘ஆரியம் விதைக்காது விளையும் கழனி!” என்று குறிப்பிட்டார்! எப்படி என்பது மேலோட்டமாக சிந்தித்தால் விளங்காது!

யாரோ விதைக்கிறான் - உழுகின்றான் - அதன் விளைச்சலை - தலைவாழை இலை, பச்சரிசி, பருப்பு - நெய் போட்டு சந்தியாவந் தனம், ஜபதபம் முடித்து இன்றும் சாப்பிட்டு வருகிறது ஓர் இனம்; அந்தப் பயிரை, பருப்பை, நெய்யை உற்பத்தி செய்யக் கண்காணித்து உழைத்த இனத்திற்கு நெய் என்பதோ, விருந்து என்பதோ அரிதினும் அரிது! கிடைத்தாலும் உண்ணக் கூடாது என்கிறது மனுதர்மம்! (இன்றுகூட மோடி யின் சொந்த மாநிலத்தில் திருமண விருந் தில் நெய் போட்டுச் சாப்பிட்ட தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். (2017ஆம் ஆண்டு இது நடக்கிறது என்பதை மறவாதீர்).

“பிராமணன் மேல் (உயர்) வருணத்தார்தான் ஆனதாலும், பிர்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகியிருக்கின்ற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான் என்பதுதான், மனுதர்மம்” (மனுதர்மம் அத்தியாயம் ஒன்று, சுலோகம் 100).

இந்த மனுதர்மம் தான் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஹிந்துத்து வாவாதிகளின் நிலைப்பாடு!

இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு அர சியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குரிய தளம், அடிமைகளின் மீளாப் போதை! எனவே சரியான பாதை எது வென்று அறியாத வாதை!

பண்டிகைகள் என்பவைகளில் குறிப் பிடப்படும் அசுரர்கள் என்பவர்களை கோர மாக, குரங்குகளாக சித்தரிக்கப்பட்டவர்கள் பற்றி நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது ஆய்வு நூலான “வால்மீகி இராமாயண சம்பாஷணை” (1931) என்ற நூலின் ஆராய்சசி முன்னுரையில் எழுதியுள்ள ஒரு முக்கிய பகுதி இதோ:

“நம் நாட்டில் தங்களை பிறவியிலேயே மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிறு கூட்டத்தினராகிய ஆரியர், தங்களை அப்படி மேன்மக்கள் என்று சொல்லிக்கொள்ளவும், மற்றவர்களும் அவர்களை அப்படி நினைக்கவும் ஆதாரங் களாக இக்கதைகளையே பெரிதும் பயன்படுத்திக் கொள்ளுவதால் இப்படிப் பட்ட இவ்வாரியர்களின் பூர்வீக யோக்கி யதை என்ன? அவர்களில் மேன்மக்கள் என்பவர்களாகிய அரச குடும்பத்தினர் என்பவர்களது ஒழுக்கம், நாணயம், நடத்தை, எண்ணம் எப்படிப்பட்டவை? இவ்வாரியர்களில் தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், தேவேந்திரர்கள் என்பவர் களின் தன்மை யாவை? என்பனவற்றை நம் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும்,

மற்றும் இவ்வாரியர்கள் திராவிட நாட்டில் புகுந்த காலையில் இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களோடு போர்புரிந்து திராவிட மக்களைக் கொடு மைப்படுத்தி இழிவு படுத்திய சில சரித்திர உண்மைகளைத் தங்கள் ஆத்திரம் தீரும் படியான அளவுக்குக் கற்பனை செய்து காட்டி சித்தரித்திருப்பதே இராமாயணமாக மிளிருகிறது என்று ஆராய்ச்சி வல்லோர் கண்டுபிடித்துக் கூறியிருப்பதையும், இரா மனாதியோர் ஆரியர் என்றும் இராவண னாதியோரான இராக்ஷதர், அரக்கர், அசுரர் என்பவர்களும் அனுமான், வாலி, சுக்ரீ வனாதியோரான குரங்குகள் என்பவர் களும் திராவிடர்கள் என்றும் ஆராய்ச்சி வல்லோர்கள் கூறியிருப்பதையும், இன் றைய ஆராய்ச்சி நூல்களும் இதை வலி யுறுத்துவதையும் மக்கள் உணரவேண்டு மென்பதுமாகும்.



அன்றியும், இவ்விராமாயணக்கதையில் ஆரியர்களை எவ்வளவுதூரம் உயர்த்தி யும், ஆரியர் அல்லாத மற்றவர்களை எவ் வளவு தூரம் தாழ்த்தியும், இழித்தும் அக் கதையில் காணப்படும் உண்மைக்கு விரோ தமாகக் கூட மக்களுக்குள் பரப்பப்பட்டிருக் கிறது என்பதையும், அதற்கேற்ப தமிழ் மக்கள் எவ்வளவு முட்டாள்தனத்தோடும் தன்மானமற்ற தன்மையோடும் இவ்விரா மாயணக் கதையில் வரும் ஆரியப் பாத் திரங்களையும், திராவிட இனத்துரோகப் பாத்திரங்களையும் கடவுள்களாகவும், ஆழ்வார்களாகவும் வைத்துப் பூஜை, உற்சவம் முதலியவை செய்துவழிபட்டு வருகிறார்கள் என்பதையும் தமிழ் மக் களுக்கு எடுத்துக் காட்டவுமாகும்.

மேலேகாட்டிய இக்காரணங்கள் எல்லாவற்றையும் விட வேறு ஒரு தலை யாய காரணம் என்னவெனில், தமிழர்களில் பெரும்பாலோரும் அதிலும் படித்த கூட் டத்தினர் என்பவர்களில் பலரும் இராமா யணம் என்றால் கம்ப இராமாயணத்தையே கருதுவதும், அதையே படிப்பிப்பதும், அதி லுள்ளவற்றையே நம்புவதும், தமிழ்ப் புலவர்களில் பலர் தங்களைப் பண்டிதர் என்று காட்டிக்கொள்வதற்கும், தங்கள் வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும் கம்ப இராமாயணப் பிரசங்கத்தையே கையாளு வதுமாய் இருப்பதால் வால்மீகி இராமாய ணத்தின் உண்மையும் தன்மையும் இன்னது என்றும், கம்ப இராமாயணத்தின் புரட்டும், கயமையும் இன்னது என்றும் மக்கள் தெள் ளத்தெளியக் கண்டு கம்ப இராமாயணப் புலவர்களின் தன்மானமற்ற தன்மையை மக்கள் உணரும்படி செய்யவேண்டும் என்பதுமாகும்.

கடைசியாய் குறிப்பிட்ட காரணத்துக்கு ஆக என்று தனியே கம்ப இராமாயணத் தையும், வால்மீகி இராமாயணத்தையும் ஆராய்ச்சி செய்து "குடி அரசு”ப் பதிப்ப கத்தாரால் “வால்மீகியின் வாய்மையும் கம்பரின் கயமையும்” என்று ஒரு தனி ஆராய்ச்சி நூல் பதிப்பிக்கப்படுகிறபடியால் அதைப்பற்றி இதில் விவரிக்காமல் குறிப்பு மாத்திரம் காட்டப்படுகிறது. எனவே இன் னோரன்ன பல காரணங்களுக்கு ஆக இந்த “வால்மீகி இராமாயண சம் பாஷணை” என்னும் புத்தகம் வெளியிடப் படுவதாகும்.

இப்படி வெளியிடப்படும் மேலே குறிப் பிட்ட ஆராய்ச்சி நூல்களாகிய இராமாயண ஆராய்ச்சி, இராமாயண சம்பாஷணை, இச் சம்பாஷணையின் முகவுரை, வால்மீகியின் வாய்மையும், கம்பரின் கயமையும் என்று சொல்லப்படுபவையான புத்தகங்களில் காணப்படும் விஷயங்களில் அவைகளை விருப்புவெறுப்பின்றி வாசிக்கும் நடுநிலை நண்பர்களுக்கு ஏதாவது விஷயம் அவர் கள் இதுவரை கேட்டிராத புதுமையாகவோ, நம்பமுடியாததாகவோ, கற்பனையாகவோ காணப்படுமானால், அவர்கள் தயவு செய்து 1877-ஆம் வருஷத்தில் வடமொழி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்த திரு.அனந்தாச்சாரியாருடையவும் மற்றும் நேற்றுவரை மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளர்களாகிய திருவாளர்கள் பண்டித நடேச சாஸ்திரியார், சி.ஆர். சீனிவாசய்யங்கார், நரசிம்மாச்சாரியார், கோவிந்தராஜர் அண்ணங்காச்சாரியார் முதலிய பார்ப்பனர்களுடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், வங்காள ஆராய்ச்சி நிபுணரும் வடமொழிப் பண்டிதருமாகிய பண்டிதர் மன்மதநாத் தத்தரும், ஆங்கில ஆராய்ச்சி நிபுணர் வில்சன் துரைமகனாரும் மொழி பெயர்த்த ஆங்கில மொழி பெயர்ப்புகளையும் மற்றும் பல உண்மை மொழி பெயர்ப்புகளையும் கூர்ந்து பார்த்து உண்மை கண்டு தெளிவார்களாக!”

இவர்கள் மட்டுமா?

தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள் 1936இல் எழுதி பதிப்பித்த ஆராய்ச்சி நூலான,

‘முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர்’ என்ற நூலில், வெளிநாட்டு ஆய்வறிஞர் கள் கால்டுவெல், மாக்ஸ் முல்லர், ராப்சன், கில்பர்ட் சிலேட்டர் ஆகியோர் கூறிய ஆய்வுக் கருத்துகளை தனது நூலின் பீடிகையாகக் கொண்டு எழுதியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டப்படுதல் பொருத்த மாகும்.

‘தமிழ் மக்களின் 
பண்டை நாகரிகம்’

இங்ஙனமாக நந்தமிழ் மக்களின் முன் னோர்கள் ஏனைப் பண்டை நாகரிக மக்கள் எல்லாரையும்விட அறிவு முயற்சிலுந், தொழின் முயற்சியிலுந் தலைசிறந்து விளங்கினபான்மை, அவர் தம்மில் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்த மேன் மக்கள் இயற்றிய பழைய நூல்களாலுஞ் செய்யுட்களாலும் நன்கு தெளியப்படு தலுடன், அவர்தம் வரலாறுகளை நடுநின் றாராய்ந்து நூல்கள் எழுதிய ஆங்கில ஆசிரியரின் உரைகளாலும், நடுவின்றி யாராய்ந்து நூல்கள் வரைந்த நம் இந்திய ஆசிரியர்கள் உரைகளாலுங்கூடத் தெற் றெனப் புலனாகின்றன. கால்ட்வெல் (Caldwell) ஆசிரியர் இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே செய்த அரிய பெரிய சொல்லாராய்ச்சி சொற்பொருளா ராய்ச்சியின் முடிவாகப், “பண்டைத் திரா விடர்கள் எந்த வகையிலும் நாகரிக மில்லாக் கீழ்மக்களாகக் காணப்படவில்லை. கானக வாழ்க்கையிலிருந்த மக்களின் நிலை எத்தகையதாயிருப்பினுந், திராவிடர்கள் என்னும் பெயர்க்கு உண்மையில் உரியோர், தம்மிடையே பார்ப்பனர்கள் வந்து சேர் தற்கு முன்னமே, எவ்வளவு குறைந்தபடி யாய்ப் பார்த்தாலும் நாகரிகத்திற்கு மூல மானவையெல்லாம் பெற்றிருந்தனரென்ப தில் அய்யுறுதல் ஏலாது என்று வலியுறுத்திக் கூறினார். இவ்வாசிரியர் பழையு ஈபுரு மொழி விவிலியநூலிற் புகுந்த “தோகை”, “அகில்” முதலான தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்ட, அவற்றைக் கண்டு தமிழின் பழைமையுணர்ந்து வியந்த வடமொழிப் பேராசிரியரான மாக்ஸ்முல்லர் (Max Muller) “இச்சொல்லாராய்ச்சி உண்மை யாகுமானால், ஆரியக் குடியினர் இவ்விந் திய நாட்டுட் புகுமுன்னரே, தமிழ்மொழிகள் வழங்கிய பழைமையினோன உறுதிப்படுத் துதற்கு அது சிறந்ததொரு கருவியாகும்” என்று உண்மையுரை புகன்றார். இன்னும், இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தில் வடமொழிப்புலமை நடாத்தும் ராப்சன் (Rapson) 
என்னும் ஆசிரியர், பண்டை ஆரியமக்கள் இவ்விந்தியநாட்டிற் குடி புகுந்து பரவிய வரலாற்றினை ஆராய்ந்து ரைக்கின்றுழி,  “இப்பரவுதலானது, சமஸ் கிருதமும் அதிற்றோன்றிய மொழிகளும் எவ்விடத்தும் பரவிய அடையாளத்தைக் காட்டுகின்றது. ஆனாலும், தென்னிந்தியா விலேதான் அவர் அங்ஙனம் பரவுதல் தடுப்புண்டது; ஏனென்றால், தென்னாட் டிலே ஆரிய நாகரிகத்தினும் பழையவாகிய திராவிட நாகரிகமுந் திராவிட மொழிகளும் இன்றுகாறும் நிலைபெற்றுத் தலைசிறந்து தோன்றுகின்றன” என்றும், “எவ்வாற்றானுந் திராவிட நாகரிகமானது, ஆரியர் வருதற்கு முன்னரே இந்திய நாட்டில் முதன்மை யுற்றிருந்தது. திராவிட மக்களிற் பலர் தமக்கு உரியவல்லா ஆரியமொழிகளையும் பிறமொழிகளையும் இப்போது பேசுகின் றனர்” என்றும், “திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தினையும் ஆரிய மதத்தினையும் பெரிதும் தம்வழிப்படுத்தி உருவாக்கினர்” என்றும் மெய்யுரை பகர்ந்தார். இன்னும், சில்லாண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக்கழகத்திற் பொருணூல் ஆசிரிய ராய் அமர்ந்து, நம் இந்து மக்களின் வர லாறுகளையெல்லாம் நேரே பலமுகத்தான் ஆராய்ந்து உண்மை கண்டு ஓர் அரிய நூல் ஆங்கிலத்தில் எழுதிய ஸ்லேட்டர் (Slater) என்பார் ஆரிய திராவிட நாகரி கத்தைப் பற்றிக் கூற வந்துழி, “ஆரியர்கள், உழவுத் தொழிலை முற்றுமே அறியாத வர்கள் அல்லராயினும், அவர்கள் இடம் விட்டுப் பெயர்ந்து செல்லும் இடையர் வாழ்க்கையிலேயே முதன்மையாய் இருந்த வர்களென்பது அய்யமின்றி எல்லாரும் ஒப்புக்கொண்டதாகும்; ஆனால், திராவிடர் களோ நாம் அறிந்தமட்டில் ஆரியர் களினும் மிக்குயர்ந்த நாகரிக நிலையில் இருந்தவர் ஆவர்” என்று முடிபு சொல்லி, அதற்கு அகச்சான்றாக ஆரிய மொழியி லுள்ள இருக்குவேதத்திற் பண்டை ஆரியர், தமிழ்மக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும், உரைகளாகிய,



“இந்திரன் திவோதாசன் பொருட்டாகச் சம்பரனுடைய 
நூறு கோட்டைகளையுங் தகர்த்தெறிந் தான்’’

“இடியேற்றினைச் சுழற்றுவோனான இந்திரனே! நீ புரு குத்ஸன் பக்கத்தினின்று போரியற்றுங்கால் ஏழு நகரங்களை அழித் தொழித்தனை! சுதாசனுக்காக அங்கனு டைய செல்வத்தைக் தொலைத்தனை”

“ஆரியமகனுக்கு உதவியாய் நீ பிப்ருவின் நகரங்களை உடைத்தெறிந் தனை! தஸ்யுக்களுடன் செய்த சண்டையில் ரிஜிஸ்வானைப் பாதுகாத்தனை!”

“நீ சுஷ்ணனது செல்வத்தை ஆண்மை யுடன் துடைத்து விட்டனை; அவனுடைய கோட்டைகளையுந் தகர்த்து விட்டனை” என்பவைகளையும் எடுத்துக்காட்டிக்,

“கோட்டைகளும் நகரங்களுஞ் செல்வச் செழுமையும் நாகரிக மேம்பாட் டினைக் குறித்தற்குப் போதுமானவை களாகும். மேலுந், திராவிட அசுரர்கள் செல் வவளமும், மந்திர ஆற்றலும், விழுமிய கட் டிடங்கள் அமைக்குந்திறமும், இறந்தவரை எழுப்பும் வன்மையும் பெற்றிருந்தனரென ஸமஸ்கிருத நூல்கள் நுவலுதலை ஒல்ட்ஹாம் என்பவரும் எடுத்துரைத்தனர்” என்றும் மொழிந்தனர்.

மேற்காட்டிய மேனாட்டாசிரியர் நால்வரும் ஆரியர் திராவிடர்களின் வர லாறுகளை அகச்சான்று புறச்சான்றுகளால் ஆழ்ந்தாராய்ந்து, திராவிட நாகரிகமே ஆரிய நாகரிகத்தினுஞ் சிறந்ததும் முற் பட்டதும் ஆகும் என நடுநின்று முடித்துக் கூறினமை நினைவிற் பதிக்கற்பாற்று.

இனி, நம் இந்திய ஆசிரியரில் தமிழர் ஆரியர் நாகரிகவாலாற்றினை ஆராய்ந் தார் சிலர், தமிழரது நாகரிகம் பழமையா னதுஞ் சிறந்ததும் மேனாட்டவர் நாகரிகத் திற்குத் தாயகமாவதுமாமெனக் கிளந்தன ரேனும், முடித்துக்கூறுங்கால் அது தானும் ஆரியநாகரிகத்தினின்றே பிறந்ததென நடுவின்றியுங் கூறினார். அச்சிலருள், இருக்குவேதத்தை ஆராய்ந்து இரண்டு விரிந்த நூல்கள் ஆக்கிய வங்காள அறிஞரான “அபிநாஸ் சந்திரதாஸ்” என்பார் பின்வருமாறு கூறுகின்றார்!

“சாலடி நாட்டில் தெல்லோகம் என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளி னின்றும் பிரித்தெடுக்கப்பட்ட தலைகளின் அமைப்பும், தென்னாட்டிலுள்ள தமிழர் களின் முக அமைப்பும் வியக்கத்தக்கபடி யாய்ப் பெரிதும் ஒத்திருத்தலாலுஞ், சுமே ரியர் வழங்கியமொழி திராவிட மொழி களைப் போலவே பகுபதவுறுப்புகள் வாய்ந் திருத்தலாலுஞ் சோழர்களைப் போலவே சாலடியர்களும் உழவுதொழிலிற் சிறந்த வர்களாயுங், கால்வாய்கள் அமைப்ப வராயும் இருந்தமையாலுஞ், சோழர்களைப் போலவே அவர்கள் கடல்மேற் செல்ப வர்கள் வணிகர்களாயும் விளங்கினம் பாலுஞ் சோழர்கள் தாமும் மரக்கலக் கலையையும், வாணிக முறையையும் கற்றே கடன்மேற்செலவிலும் ஏனைய எல்லாத் துறைகளிலும் அவர்களையொப்ப நடந் தமையாலும், ஆசியாப்பெருந்தேயத்தின் மேற்கிலும் தெற்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் தென்னிந்திய கடற்கரை மருங்குள்ள நாடுகளுக்கும் பாரசிகக்குடிக் கடலோரமாயுள்ள நாடுகளுக்கும் இடையே தான் பண்டை நாள் வாணிகம் நடைபெற்று வந்தமையாலும், ஆசியாவின் தென்பகுதி யிலாதல் ஆப்பிரிக்காவின் கீழ்பகுதியிலா தல் இந்தியர்களைப்போற் சென்ற பாரசிகக் குடாக்கடற்கரை மருகிற் குடியேறிய அத்துணை உயர்ந்த நாகரிகமுடையவர் கள் பிறர் இல்லாமையாலுஞ் சுமேரியர் என்பார் ஆரிய திராவிடக் கலவையிற் தோன்றியவர்களே யென்பது மறுக்க முடியாத உண்மையாம். இன்னும், பாபிலோனியர் அசிரியர் என்பாரின் உலகியல் நாகரிகமேயன்றிச் சமயக்கோட் பாடும், ஆரிய நாகரிக சமயக்கோட்பாட் டையுந் திராவிடநாகரிக சமய கோட் பாட்டையும் பின்பற்றியவைகள்யாகும்” என்பது.

இம்மேற்கோளுரையில், திராவிட நாகரிகமே, மிகப் பழைய காலத்தில் நாகரி கத்தாற் சிறந்து விளங்கிய மேனாட்டவர் நாகரிகத்திற்கெல்லாம் அடிப்படையாய் நிற்கும் உண்மையை - மறைத்தல் ஏலாமையின் அதன் விண்டுசொல்லிய நம் ‘அபிநாஸ் சந்திரதாஸர்’ அவ்வளவில மையாது, தாம் ஏற்ற சொல்ல விழைந்த ஆரிய நாகரிகத்தினேயுந் திராவிட நாகரி கத்துடன் கொணர்ந்து ஒட்டவைக்கும் விரகினையுங் காண்மின்கள்!

அதுமட்டுமோ! சுமேரியர்முதலான மேட்டு நாகரிக மக்கள் அனைவர்க்கும் நாகரிகவாழ்க்கையினைக் கற்பித்தவர்கள் ஆரியர்க்குப் பன்னெடுங்காலம் முன்னே நாகரிகத்திற் சிறந்தோங்கிய தமிழர்களே யெனப் பல வலியசான்றுகளான் நிலை நாட்டிய ஹால் என்னும் ஆங்கில ஆசிரி யரையும், இராகொசின் ஏன்னும் அய் ரோப்பிய ஆசிரியரையும் மறுப்பான் புகுந்து, அதற்குத்தக்க வலிய சான்றுகள் காட்டமாட்டாது ஆரியரது நாகரிகமே திராவிடரது கலைப் பயிற்சிமேல் அழியாத தனது இலச்சினையைப் பொறித்தது. அதுவே திராவிட மக்களை, முதன்மை யாய்ச் சோழபாண்டியர்களை மேலு யர்த்தியது. பின்னர்ச் சோழபாண்டியர்கள் சீர்திருத்தப்பட்ட தமது நாகரிக வாழ்க் கையினைப் பாபிலோனிய நாட்டுக்கும் எகிப்து நாட்டுக்கும் கொண்டு போயினார்” என்று தாம் பிடித்த பிடியை விடாமற் கிளந்தார்.

எனவே “அசுரர்” என்றால் சோமபானம் சுராபானம் என்னும் மது அருந்தாதவர் களைக் குறிக்கும் ‘சுரருக்கு’ எதிர்மறை! அழிக்கப்பட்டவர்கள் என்று ஸ்தல புராணங்களில், திருவிழா, பண்டிகை கதைகளில் கூறப்படுபவர்கள் அத்தனைப் பேரும் அசுரர்களே! நம்மை சூழ்ச்சியால் வென்ற, வன்முறையால் வென்ற கதைகளும் பண்டிகைகளும்தான்!

இவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டாமா? கேரளத்தில் மாபலியை மீடெடுத்து விட்டார்கள். நாம் நரகாசுரன் பரம்பரை என்று கூறி மீட்டெடுப்போம்!!

வேர்களை அறிந்து விழுதுகள் எழுச்சி கொள்ளட்டும்!



இராமாயணம் - அசுரர்கள், அரக்கர்கள் போன்று வர்ணிக்கப்பட்டது ஆரிய திராவிடர் மோசடியின் ஒரு வகை வடிவம் தான் என்பதை முந்தைய மேல்நாட்டு அறிஞர்கள் - ஆய்வாளர்கள் கூறிய கருத்துக்களை - எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
தந்தை பெரியாரின் தொலைநோக்குடன் கூறிய இராமாயண - மகாபாரத, கீதை, மற்றும் புராண எதிர்ப்பு, சமஸ்கிருத வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பு பற்றிய கருத்து களை, சமஸ்கிருதம் படித்து முழுதாய்ந்த பேராசிரியர்கள் - அமெரிக்க பல்கலைக்கழ கங்களான ஹார்வட், கொலம்பியா பல்கலைக் கழகக்கழகங்களில் உள்ளவர்கள், யாருக் காகவும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாது அறிவு நாணயத்தோடு கருத்துகளை - ஆய்வுகளை எடுத்து வைக்கிறார்கள்.

அவர்கள் வின்டி டோனேகர் (Wendy Doniger) என்ற பேராசிரியை கருத்துகள் 2001இல் சமஸ்கிருதப் பேராசிரியரான ஆய் வாளர் ஷெல்டன் போலக் (Shelon Pollock) Death of Sanskrit மற்றும் Ramayana போன்றவற்றை சமஸ்கிருத ஆராய்ச்சி செய்து கண்டறிந்து கூறிடும் கருத்துகள் கண்டு, அவாளது வைதீகபுரியில் அணுகுண்டுகள் விழுந்தது போன்ற உணர்வு! இவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே - அய்.அய்.டி. ஆரியக் குஞ்சுகள் மூலம் தொடர் யுத்தமாக நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் சு.சுவாமி போன்ற மல்ஹோத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் இப்போது இந்தப் பணியில் சில ஆண்டு களாகவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவரது ‘உடையும் இந்தியா’ என்ற நூலை நாம் நார்நாராய் சில ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தது போன்ற விமர்சனங்களை எழுதி நூலாகவே வெளியிட்டோம். சென்ற வாரம் 6.10.2017 ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதத்தில்’ “மொழிப்போர் - ஆனால் இது வேறு மாதிரி”. பண்பாட்டை குறி வைக்கும் பன்னாட்டு சூழ்ச்சி என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை அப்படியே வெளியிடுகி றோம்.

மொழிப்போர்  ஆனால் இது வேறு மாதிரி 
பண்பாட்டை குறிவைக்கும் பன்னாட்டு சூழ்ச்சி

“சமஸ்கிருதத்தை ஆழமாக கற்று ஆராய்தல் என்ற பெயரில் அதை பாரத பண் பாட்டிலிருந்து பிரித்து, செத்த மொழியாக்கி எகிப்திய மம்மிகளைப் போல அழகான பிணமாக அருங்காட்சியகத்தில் வைக்கும் முயற்சி அறிவுலகில் நடந்து வருகிறது.”

இந்த வேலையில் முன்னணியில் நிற்ப வர்கள் அமெரிக்க அறிஞர்களும் சோவியத் ரஷ்யாவின் சரிவுக்கு பின்பு ஆதரவற்று அனாதைகளான அமெரிக்க ஆதரவில் அவர்களது அடிவருடிகளாக உள்ள இந்திய கம்யூனிஸ்டுகளும் ஆவர்.

விளைவு, சமஸ்கிருதம் இந்திய பாரம் பரியத்தின், ஆன்மீக வழக்கங்களில், உலக வாழ்வியல் கண்ணோட்டத்தின் மையச் சரடாக இருந்த நிலைமாறி, அது அழகிய மொழி, ஆனால் அது பாரத பண்பாட்டின் மய்யச்சரடாக இருக்கும் நிலை தேவை யற்றது என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது. அது சடங்களின் மொழி. இதில் ஆன்மீகம் ஏதுமில்லை. மாறாக, பெண்கள், தலித்துகள், முஸ்லிம்களுக்கு இம்மொழி விலக்கப் பட்டுள்ளது. அதனால் இது ஆதிக்க மொழி என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது.

தலித்துகள் உட்பட அனைவரும் சமஸ் கிருதம் கற்க வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்தையும் அதை நடை முறைப்படுத்த முனையும் சமஸ்கிருத பாரதி யின் செயல்களையும் வெறுத்தொதுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களின் முக்கிய தலைவராக இன்று இருப்பவர் டாக்டர் ஷெல்டன் போலாக் என்ற அமெரிக்கர். இவர் கிரேக்க இலக் கியத்தில் பட்டமும் சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டமும் ஹார்வார்டு பல்கலைக் கழகத்திலும் பெற்றவர்.

இவர் 1984ல் ராமாயணத்தை உள்நோக் கத்துடன் அர்த்தம் கற்பித்து விளக்கி நூல் எழுதினார். அதில், “அரசர்கள் சாதாரணமான வர்கள் இல்லை. அவர்கள் தெய்வத்திற்கு இணையானவர்கள். தெய்வீக சக்தி கொண்டவர்கள். “அரசர் கள், பிராமணர்களைக் கொண்டு யாக, யக்ஞங்களை நடத்தி அந்த தெய்வீக சக்திகளைப் பெற்றனர். மக்களை ஆள்வதற்காக பிராமணர்களை கொண்டு சட்டதிட்டங்களை எழுதி அதன்படி அரசாண்டனர்.

அரசர்களின் முக்கியமான கடமை பிராமணர்களை காப்பது. அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அவர்கள் மூலம் தனக்கு தெய்வீக சக்திகள் பெறுவது. தெய்வீக சக்தி பெற்றதால், தான் செய்யும் கொடுமையாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவது. தன்னை எதிர்ப்போரை அரக்கர்களாக, ராட்சதர்களாக சித்தரிப்பது. அவர்களை கொன்று அழிப்பது. அந்த அழிப்பை தீமையின் அழிவாக அதர்மதத் தின் அழிவாக சித்தரித்து நூல்களை எழுது வது. அந்த கருத்தை மக்களிடம் பரப்பு வது அரசர்களின் செயலாக இருந்தது.

அப்படி எழுதப்பட்டதுதான் வால்மீகி ராமாயணம். அதில் சமூக அடக்குமுறை யும் ஜாதி ஒடுக்குமுறையும் தெளிவாக உள்ளது. அரசர்களான தசரதனும் ராமனும் சுய சிந்தனையற்று, பிராமணர்களின் கூற்றை அப்படியே, இது நம்விதி என்று கருதி, ஏற்றுச் செயல்பட்டனர். சுயச்சிந் தனை கொண்ட இராவணனை அழித்தார்” என்று அந்த நூலில் விளக்கியுள்ளார்.

“வி.எச்.பி. பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற தீய சக்திகள் ராமாயணத்தை கையில் எடுத்துக் கொண்டு ரதயாத்திரை நடத்தி பாபர்மசூதியை தகர்த்தனர். அன்று ராவணன் இன்று முஸ்லிம்கள். எனவே இந்தியாவில் மதசார்பின்மை இல்லை. சமுக அமைதி யில்லை. உலகில் இன்று அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள, மேற்கத்திய நாடுகளில் நிலவும் சமத்துவம் இந்தியாவில் இல்லை. இதற்கெல் லாம் காரணம் ராமாயணம்” என்று அவர் எழுதியும் பேசியும் வந்தார். (வருகிறார்). இது போதாது முதல்வராக இருந்த மோடியை அமெரிக்காவுக்குள் அனும திக்க கூடாது என்று புகார் மனுவில் கையெழுத்திட்டு, தன் நாட்டு (அமெரிக்க) அரசை நிர்பந்தம் செய்தார். சோனியா காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பத்மசிறீ விருது கொடுத்தது. அவருக்கு உதவியாகவும் முன்னோடி யாகவும் இருந்த லாயிட், குஸன் ரூடால்ப் ஆகியோருக்கு பத்ம்பூஷன் விருது இவற்றை வழங்கியதன் மூலம் பாரத பாரம்பரியத்தை இழிவுபடுத்தி மகிழ்ந்தது சோனியா காங்கிரஸ் அரசு.

இனி அரசு ஆதரவு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. அல்லது ஏற்படும் என்று தெரிந்தது முன்னாள் கம்யூனிஸ்டும், இந்நாள் இந்திய பெருமுதலாளிகளில் ஒருவருமான இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் (மூர்த்தி கிளாசிகல் லைப்ரரி ஆப் இந்தியா  என்ற அமைப்பு) ஆதர வுடன் தங்கள் பணியை தொடங்குகின்றனர். இந்நிலையில் இவர்களின் கபடச் சிந்த னையில் உதித்தது ஒரு சூழ்ச்சி. அதாவது பாரம்பரிய மடங்களை குறிப்பாக சமஸ் கிருத ஆதரவு மடங்களான சங்கர மடங் களின் நிதி உதவி, அங்கீகாரம் இவற்றை தங்கள் செயல்களுக்குப் பெறுவது என்பதே அந்த சூழ்ச்சி திட்டம்.

சிருங்கேரி மடத்தின் சார்பில் அமெரிக் காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழ கத்தில் (டாக்டர் ஷெல்டன் போலாக் பணி புரியும் இடம்) ஒரு இருக்கையை ஏற்படுத்தியது. அதன்மூலம் சமஸ்கிருத மொழி ஆய்வு, ஹிந்து மதநூல்களை ஆராய்ந்து வெளியிடுவது என்பது அந்த திட்டம். சிருங்கேரி மடத்தின் அதிகார பூர்வமான அமைப்பாக, கிளையாக இதை அறிவிக்க செய்வது நோக்கம்.

அதாவது, இந்தியர்களின் நிதியுதவியுடன் பாரம்பரிய ஹிந்து மடங்களின் அங்கீகா ரத்துடன் இந்திய பண்பாட்டை பாரம்பரி யத்தை அழிப்பது என்பதே அவர்களின் சூழ்ச்சி. அதற்கு அமெரிக்கா வாழ் சிருங்கேரி மடத்தின் ஆதரவாளர்களும் “நம்நாட்டு மொழியான சமஸ்கிருதம் நமக்கு தெரிய வில்லை. மாறாக அமெரிக்கர்கள் நன்கு கற்றுள்ளனரே” என்று தாழ்வுணர்ச்சியும் குற்றவுணர்ச்சியும் கொண்ட இந்தியர்களும் இந்த சூழ்ச்சிக்கு இரையாயினர்.

நல்லவேளையாக ராஜீவ் மல்கோத்ரா, ரமா சங்கர், டாக்டர் சுப்ரமணிய சாமி போன்ற விஷயம் தெரிந்தவர்களின் முயற்சியால் மேற்கண்ட சூழ்ச்சி தடைபட்டுள்ளது.

இந்திய தேசியம் என்ற கருத்திற்கும், பாரத பண்பாட்டிற்கும் எதிரான சக்திகள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தீவிரமாக செயல்படுகின்றன. சிலபல உள்நாட்டிலும் தீவிரமாக செயல்படுகின்றன. சிலபல இந்தியர்கள் அறியாமையால் எதிரிகளுக்கு ஆதரவாக இங்கு வாள் வீசிக் கொண் டிருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதா வது இந்தியர்கள் விழித்துக் கொள்வார்களா?

(‘விஜயபாரதம்’, 6.10.2017)

இதிலிருந்து பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ். கொதிநிலை எத்தகையது, பண்பாட்டுப் புரட்டுகளை வெளியாக்கும் விருப்பு வெறுப்பற்ற வெளி நாட்டு ஆய்வறிஞர்கள் மீது பாய்ந்து பிராண்டிப் பல்லுடைகிறார்கள் என்பது புரியும்.

எனவே இதை அப்படியே தந்துள் ளோம். படித்தாலே அவர்கள் நெருப்பில் நிற்பவர் ஆடுவது போல ஏன் ஆடுகின் றார்கள் என்பது புரியும்.

ஒரு ஆய்வுத் துறையினர் சுதந்தரமாக அவர்களது ஆய்வினை அதுவும் பல் கலைக் கழகத் தனி இருக்கையில் செய்வது கூடாதாம்!

தந்தை பெரியார் 1920 முதலே (காங் கிரசிலிருந்த காலம் முதலே) இராமாய ணத்தை ஏன் எதிர்த்தார் என்ற தொலை நோக்கினையும் - அவரது மண்டை சுரப்பை உலகு “தொழுகிறது” - பின்பற்று கிறது என்பதும் புரிகிறதல்லவா?

இந்த ஆய்வுக் கட்டுரைக்கு ஆதாரங்கள்

1. தந்தை பெரியார் - “வால்மீகி ராமாயண சம்பாஷணை”

2. மறைமலை அடிகளார் - “முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர்கள்”

3. Death of Sanskrit - Shelldon Pollock

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17