பக்கங்கள்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தன்

#பேராசிரியர் 
#அரசன்குடி
#சரவணமுதலியார்
#ஞானசம்பந்தன் 
(அ.ச.ஞானசம்பந்தன்)
நினைவுநாள் ஆகஸ்ட் , 27 (2002)
                    ☆☆☆☆☆

>அ. ச. ஞானசம்பந்தன் 
(நவம்பர் 10, 1916 – ஆகஸ்ட் 27, 2002) 
பெருந்தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 
சுருக்கமாக #அசஞா என்றும் அழைக்கப் பட்டார்.

>அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. #சரவண_முதலியார் மற்றும் #சிவகாமி 
அடிமையார் ஆவர். 

>அ.மு.சரவண முதலியார் சைவசமய பக்திக் காவியமான திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதிய தமிழ் அறிஞர். 

>அ.ச.ஞா.இலால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் இடைநிலை வகுப்புக்கு (இண்டெர்மீடியட்டு) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தைத் தேர்வு செய்து படித்தார்.

>அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த #சோமசுந்தர_பாரதியார் அவரது தமிழ் அறிவையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வ. ச. சீனிவாச சாத்திரி , #திருவிக, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. 

>தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார்

>அ. ச. ஞானசம்பந்தனாரின் முதல் புத்தகமான #இராவணன்_மாட்சியும்_வீழ்ச்சியும் என்ற புத்தகம் 1945ல் வெளியானது. இப்புத்தகமும், கம்பன் கலை (1950) மற்றும் தம்பியர் இருவர் (1961) ஆகிய புத்தகங்களும் அவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த செறிந்த அறிவுக்குச் சான்றாக அமைந்தன. 

>பச்சையப்பாக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின் 1956 – 1961 வரை அகில இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராக வேலை பார்த்தார். 1959ல் தமிழ்ப் பதிப்பகங்களின் பணியகத்தின் செயலாளரானார். 1969 – 1972 வரை தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்தார். 

>1970ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியில் சேர்ந்து பின் 1973ல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். 

>பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் தாகூர் ஓய்வுப் (Tagore emeritus professor) பேராசிரியாராகப் பணியாற்றினார். அவர் தனது கடைசி காலத்தைச் சென்னையில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் கழித்தார். அவர் ஒரு சைவ சமய அறிஞராகவும் பாடநூல் தயாரிப்பாளர் மற்றும் தமிழ் விரிவுரையாளராகவும் வாழ்ந்தவர். 

>இவர் எழுதிய நூல்கள் 35 ஆராய்ச்சிப் புத்தகங்கள், 3 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஏராளமான பாடப் புத்தகங்களும் கட்டுரைகளும் ஆகும். 1985ல் கம்பன்: புதிய பார்வை என்ற அவரது இலக்கிய விமர்சன நூல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

>இவர் பெற்ற விருதுகள்
சாகித்திய அகாதமி விருது - 1985
சங்கப்பலகை குறள் பீடம் விருது - 
தமிழக அரசு விருது - 2001

>இவர் எழுதிய நூல்கள்
அ.ச.ஞா.பதில்கள்
அகமும் புறமும்
அரசியர் மூவர்
அருளாளர்கள்
அனைத்துலக மனிதனை நோக்கி 
(தாகூர் கட்டுரைகள்
இராமன் பன்முக நோக்கில்
#இராவணன்_மாட்சியும்_வீழ்ச்சியும் - 1945
இலக்கியக்கலை - 1964
இளங்கோ அடிகள் சமயம் எது?
இன்றும் இனியும்
இன்னமுதம்
கம்பன் எடுத்த முத்துக்கள்
கம்பன் கலை - 1961
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
கம்பன் புதிய பார்வை - 1985
குறள் கண்ட வாழ்வு
சேக்கிழார் தந்த செல்வம்
தத்துவமும் பக்தியும் - 1974
தம்பியர் இருவர் - 1961
தமிழ் நாடக வரலாறும், சங்கரதாச 
சுவாமிகளும்
#திருவிக
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-1
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-2
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-3
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-4
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-5
தேசிய இலக்கியம்
தொட்டனைத்தூறும் மணற்கேணி
தொரோ (Thoreau) வாழ்க்கை வரலாறு
நான் கண்ட பெரியவர்கள்
பதினெண் புராணங்கள்
#பாரதியும்_பாரதிதாசனும்
புதிய கோணம்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-1
பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-2
மகளிர் வளர்த்த தமிழ்
மந்திரங்கள் என்றால் என்ன?
கிழக்கும் மேற்கும் - 1971
மாணிக்கவாசகர் - 1974
#முற்றுறாச்_சிந்தனைகள் 
ஆகியவை.

முற்றுறாச்சிந்தனைகளைப்
பதிவு செய்த #பெருந்தமிழ்_அறிஞர்
#அசஞா தமது 86 ஆம் அகவையில் 27.8.2002இல்
தம்சிந்தனைகளை நிறைவு செய்துகொண்டார் !

#என்ன ......?. இவருக்கு ஒன்றிய அரசின்
பத்ம விருதுகள் எவையும் வழங்கப்பட
வில்லையா என்றா வினவுகிறீர்கள் ?

#பத்மவிருதுகள் இவரால் பெருமைப்படும்
#தகுதியற்றுப்போனவை. எனவே அவை
இவரை வந்து அடையவில்லை.

  தொகுத்தெழுதல் : ⚖️ #துலாக்கோல்/27.8.2023⚖️
- துலாக்கோல் சோம. நடராஜன் முகநூல் பக்கம்