பக்கங்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

https://thanmaanam.mooligaimannan.com/2018/08/blog-post.html?m=1

https://thanmaanam.mooligaimannan.com/2018/04/blog-post_18.html?m=1

https://thanmaanam.mooligaimannan.com/2018/03/blog-post_12.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/10/blog-post_19.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2019/05/blog-post_30.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/03/blog-post_9.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/03/blog-post_28.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/04/11.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/03/blog-post_19.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/01/blog-post_85.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/03/blog-post_35.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2015/12/blog-post_37.html?m=1

https://tamizmalar.mooligaimannan.com/2018/02/blog-post_13.html?m=1

புதன், 29 ஏப்ரல், 2020

தேசம் தமிழ் சொல்லா?

தமிழில் திகையம் - தேயம் ஆனது . தேயம் - பிற மொழிகளில் தேசம் / தேஷ் எனத் திரிந்தது . 

√தேயம் - என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம் , மக்கள் கூட்டம் . 
√தேயம் - முதலில் எல்லையைக் குறித்து , பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது . 
√தேயம் - ஒரு திசையிலுள்ள நாடு . 

யகரம் சகரமாகத் திரிவது இயல்பானது . 

*கைலாயம் > கைலாசம் > கைலாஷ் . * ஆகாயம் > ஆகாசம் > ஆகாஷ் . 
* முயல் > முசல் . 
* மயிர் > மசிர் . 
* நேயம் > நேசம் . 
* குயவன் > குசவன் . 
* தோயை > தோசை . 
* பாயனம் > பாசனம் . 
* உயர்த்தி > உசத்தி . 
* மயக்கம் > மசக்கை . 

சரி . . . இப்போது தேயம் என்ற சொல் தமிழில் எவ்வழியில் வந்தது எனப் பார்ப்போமா ? 

திகு / திகை - என்பது இதன் மூலம் . 

திக்கு > திகை - என்றால் முடிவு , எல்லை , பக்கம் என்று பொருள்படும் . ( கார்த்திகை = கார்காலத்தின் முடிவு என்று பொருள் ) . 

* திகைதல் = முடிதல் , தீர்தல் . 
( " அதன் விலை இன்னும் திகையவில்லை " என்பது வழக்கு ) . 
* திகைத்தல் = முடித்தல் . 
* திகை - திசை எனத் திரிந்தது . 
( ககர சகரப் போலி ) . 
* திகை - திசை = முடிவு , எல்லை , பக்கம் . திக்கு . 
* திசை = தேசம் , பக்கம் , இடம் . 
* திகதி - தேதி என மாறியது போல் . . திகையம் > தேயம் ஆவதும் தமிழில் இயல்பானதே . ! 

( * பகுதி > பாதி 
* மிகுதி > மீதி 
* திகதி > தேதி 
* தொகுப்பு > தோப்பு 
* முகிழ்த்தி > மூர்த்தி . 
* அகப்பை > ஆப்பை . 
* அகத்துக்காரி > ஆத்துக்காரி ) .
கியூரா செயலி

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

தமிழ்ப் புத்தாண்டா?

சார்வாரி-பொருள் பலாத்கார எழுச்சியாம்,,! 
2018 - விளம்பி.. தமிழ்ப் புத்தாண்டு என்றால்..
*தெலுங்கில் எப்படி விளம்பி இருக்கு?
*கன்னடத்தில் எப்படி விளம்பி இருக்கு?
*ஹிந்தியில் எப்படி விளம்பி இருக்கு?
*இதன் மூலக் களவாணி, Sanskrit-இல் ஏன்  விளம்பி/ विलंबी இருக்கு?
இது विलंबी = தமிழா?
இதுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள் வேற ஒரு கேடா?
அடுத்த புத்தாண்டு
கொண்டாடப் போகும் 12 ராசி அன்பர்களே..
இதோ, புத்தாண்டின் Sanskrit பொருள்!
சார்வரி / शार्वरी = "பலாத்கார எழுச்சி"
பயப்படாதீங்க!:)
அடுத்த வருசம் நல்ல பேரு அமையும்!
பிலவ / प्लव = "கீழ் ஓட்டை"
காமுகர்கள் எழுதிய சாஸ்திரங்களை..
புனிதம் எ. பூஜித்துக் கொண்டே இருங்கள்
வருஷப் பிறப்பு!
60 ஹிந்து (Sanskrit) வருஷங்களில்..
பிராமண வருஷங்கள்= 15
க்ஷத்ரிய வருஷங்கள்= 15
வைஸ்ய வருஷங்கள்= 15
சூத்திர வருஷங்கள்= 15
இவற்றில், சூத்திர வருஷங்களுக்கு, இழி பெயர்களே!
*விகாரி= அசிங்கமான
*சார்வரி= பலாத்கார எழுச்சி
*பிலவ= கீழ் ஓட்டை
*குரோதி= வன்மம் பிடித்தவள்
சார்வரி/ शार्वरी = தமிழ்ப் புத்தாண்டு எனில்..
*எப்படிச் சிங்களத்தில் அதே பெயர்?
*எப்படித் தெலுங்கில் அதே பெயர்?
*எப்படி ராஜஸ்தானத்தில் அதே பெயர்?
இந்த ஒரு கேள்வியைக் கேளுங்கோ!
பிறகு தெரியும்..
சார்வரி= தமிழ்ப் புத்தாண்டா? சம்ஸ்கிருதப் புத்தாண்டா? என்று!
சம்ஸ்கிருதம் தெரியுமா?
இல்லையேல், வாய்மூடி இருங்கள்!
விகாரி/ विकारि = அசிங்கம்
'எழில் மாறல்' -ன்னு தூய தமிழில் எழுதினா
அழகு போயிருச்சி-ன்னு தான்யா பொருள்! 
அசிங்கம் இல்லைன்னு ஆயிருமா?
சார்வரி/ शार्वरी = வீறி எழல்
என்னா எழல்? எது வீறி எழல்?
பலாத்கார எழுச்சி இல்லைன்னு ஆயிருமா??

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு

- சு.ஒளிச்செங்கோ

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்

வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

- உண்மை இதழ், 16-31.12.14