பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

உடுக்கையில் இருந்து பிறந்ததா சமஸ்கிருதமும், தமிழும்?

'சிவனே'ன்னு இருக்க வேண்டுமா?

93 வயதைத் தொட்டும் போராட்ட குணத்தில் தளராத முத்தமிழ் அறிஞர் கலைஞர், சமஸ்கிருத திணிப்பில் மத்திய மனிதவளத்துறை அவ்வப் போது  எல்லை மீறும் போது கடிவாளம் போட்டு சவுக்கை எடுத்துச் சுழற்றும் அறிக்கையால் தமிழக பாஜகவினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் போலும்! கேரளப் பாசம் கொண்ட பொன்னார், நான் சமஸ்கிருதம் படிக்காமல் இருந்ததற்காக வருத்தப் படுகிறேன் என்று கூறுகிறார்.

இல. கணேசனோ சிவனின் உடுக்கையின் ஒரு புற ஓசையில் - சமஸ்கிருதமும், மறுபுறஓசையில், தமிழும் பிறந்தன. சிவனை ஏற்காதவர்கள் சிவனே என்று இருப்பது நல்லது என்று மதுரையில் பேசியிருக்கிறார்.

உடுக்கையில் இருந்து பிறந்ததா சமஸ்கிருதமும், தமிழும்?

சமஸ்கிருதம் குறித்த ஒரு பதிவு: சமஸ்கிருத மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப் பட்டது,  மகேஷ்வர் சூத்திரம் என்னும் நூலில் இந்த சமஸ்கிருதம் குறித்த பதிவு கிடைக்கிறது, இதை வைத்துத்தான் சமஸ்கிருதம் சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தது என்ற நம்பிக் கையை பார்ப்பனர்கள் மக்களிடையே பரப்பி வருகின்றனர்.
அப்படி என்ன அந்த நூலில் உள்ளது? உலகைப் படைத்த பிரம்மன், சரஸ்வதியிடம் ஓசை உருவாக்கும் படி கேட்டுக்கொண்டாராம், சரஸ்வதி ஓசையை மட்டும் படைத்தாராம், ஓசையை 'த்வனி' என்று சமஸ்கிருதத்தில் அழைப் பார்கள். இந்த 'த்வனி' எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி ஒலித்துக் கொண்டே இருந்ததாம், இதை அறிந்த சிவன், தனது தாண்டவத்தை ஆரம்பித் தாராம், அப்போது உடுக்கையின் ஒரு பகுதியில் இருந்து, ஓசை வடிவம் எடுத்து சமஸ்கிருதமாக பிறந்தது, மறுபக்கத்தில் இருந்து அதன் இலக்கணம் பிறந்தது, அதனை சரஸ்வதி எழுத்தில் எழுதிவைத்தாராம்.

உடனே ரிஷிகள் அந்த எழுத்தை ஞானத்தால் உணர்ந்து வேதங்களை இயற்றினார்களாம்,  சரஸ்வதி இந்த வேதங்கள் இயற்றிய மொழியை வகைப்படுத்த முடியாமல் திணறியபோது, சிவன், தான் படைத்த சமஸ்கிருதத்தை முறைப்படுத்தி அதாவது பிழை திருத்திக் கொடுத்தாராம், (ஃப்ரூப் ரீடரோ!)  இப் போது தான் ஒரு டுவிஸ்ட் வருகிறது, பிரம்மனிடம் சரஸ்வதி ஒரு சந்தேகம் கேட்கிறார், அதாவது சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்த மொழி புனிதமானது; ஆகவே இதை சூத்திரர் களும் படிக்க நேரிடுமே, அப்போது இம்மொழியின் தூய்மை குலைந்துவிடாதா என்று கேட்டார். கலைமகளின் இந்தச் சந்தேகத்தை சிவனிடம் எடுத்துக் கூற, மீண்டும் சிவன் தாண்டவமாட அவரது பாதங்களில் இருந்து ஓசைகள் உருவா யின; அதுவே சமஸ்கிருதம் அல்லாத பிற மொழி கள் ஆகும் (தமிழும் இதில் அடங்கும்)  இந்த மகேஷ்வர சூத்திரத்தில் எந்த ஒரு சந்தேகமென் றாலும் வாரணாசிப் பார்ப்பனர் களிடம் விளக்கம் கேட்டால் இதைவிட தெளி வாகக் கூறுவார்கள்.

பிரம்மனின் முகத்திலிருந்து பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் எழுதி வைத்தவர்கள், மொழிகள் மட்டும் ஒரே உடுக்கையில் பிறந்தவை என்று எழுதிவைப்பார்களா? இந்தக்கேள்வி சூத்திரர்களின் மனதில் எழவில்லையே ஏன்? 

தமிழர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இருப்பார்கள் என்ற நினைப்பில் இல. கணேசன் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு திரிகிறார். தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சமஸ்கிருத புராணங்களில் இருக்கும் பொய்களை தங்களது எழுத்துக்கள் மூலம் வெட்ட வெளிக்குக் கொண்டு வந்தனர்.

இன்று அந்த உண்மையை மறைத்து பொய் யுரைகளைப் பரப்பி வருகிறார்கள். மத்தியில் காவி வெறியர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்ததும், மக்கள் இவர்கள் கூறும் பொய்யை எல்லாம் நம்பி விடுவார்கள் என்று நினைத்து இப்படிஎல்லாம் பொய்களை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். இல. கணேசன், இப்படியெல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டு அவமானப்படுவதைவிட 'சிவனே'ன்னு இருந்திருக்கலாம்.

சரி அப்படி சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தது தமிழ் என்றால் அது எந்த ஊர்த் தமிழாக இருக்கும்? திருநெல்வேலி தமிழா? மதுரைத் தமிழா? கோவைத் தமிழா? அல்லது சிங்கார சென்னைத் தமிழா? அதையும் சேர்த்துச் சொல் லுங்கள். இல கணேசனாரே!

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துக் கலைஞர், சவுக்கை எடுக்கச் சொன்னதை வைத்து, சிவனை ஏற்காதவர்கள் சிவனேன்னு இருக்க வேண்டியது தானே என்று கேலி பேசுகிறார்.
இதன் பொருள் என்ன? சிவனேன்னு இருக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன? சுத்த வெத்து வேட்டு சிவன் என்று ஒப்புக் கொண்டு விட்டாரே!
கொசுறு: மொழிஞானம் சிறிதாவது உள்ளவர் கள்கூட, ஒரு கடவுளின் உடுக்கில் இருந்து மொழி பிறந்தது என்று சொல்லுவார்களா?
சிவனால் உண்டாக்கப்பட்ட சமஸ்கிருதம் ஏன் செத்தமொழி ஆயிற்றாம்?

- கருஞ்சட்டை 
-விடுதலை,19.6.16

புதிய ரூபாய் நோட்டில் தேவநாகரி (இந்தி எண்கள்) ஏன்?


(1)  புதிதாக இந்திய அரசு வெளி யிட்டுள்ள 2000 ரூபாய் கரன்சி நோட்டில், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக ஹிந்தி எண்களை நுழைத்து இருக் கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும்.

Official language of the Union.
(1) The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals.
(2)Notwithstanding anything in clause (1), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union for which it was being used immediately before such commencement: Provided that the President may, during the said period, by order-306 authorise the use of the Hindi language in addition to the English language and of the Devanagari form of numerals in addition to the international form of Indian numerals for any of the official purposes of the Union.
(3) Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of-
(a) the English language, or
(b) the Devanagari form of numerals, for such purposes as may be specified in the law.
ஹிந்தி (தேவநாகரி) எண்களை எதற் காகப் புதிதாக சேர்த்து இருக்கிறார்கள்? பிரிட்டிஷ் காலனிய அரசில் எல்லா மாநில எழுத்துக்களின் எண்களும் இருந் தது. விடுதலை பெற்ற இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் நீக்கப்பட்டது. அந்நிலை தொடரவேண்டும்.  1910 ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகளைப் பார்த் தால் எல்லா மாநில லிபிகளின் எண்களும் உள்ளன. இப்பொழுது மாத்திரம், ஏன் இந்தி எண்களை மாத்திரம் நுழைக்கிறார்கள்?
(1)  மேலும், “ஸ்வச் பாரத் அபிமான்” என்று தூய்மை இந்தியா திட்டம் பற்றிய செய்தியும் ஹிந்தி மொழியிலே மட்டும் தரப்பட்டுள்ளது. இதற்கான் ஆங்கில வாசகமும் தரப்பட வேண்டும்.
(2)  சமஸ்கிருதத்தில் 500 (அ) 2000 ரூபாய் எழுதப்பட்டுள்ளது. இதற்கும் ஹிந்தி எழுத்தே பயன்பட்டுள்ளது. ஆனால், சமஸ்கிருதம் அந்தந்த மாநில எழுத்துக் களில் தான் 1500 ஆண்டுகளாகப் படிக் கப்பட்டு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஹிந்தி எழுத்தைப் பயன்படுத்துவது சரி யல்ல.  இப்போதைய கணினி, செல்பேசி தொழில்நுட்பங்களில் எல்லா மாநில எழுத் துக்களும் ஒன்றுக் கொன்று சமம் தான். ஹிந்தி மடலை தெலுங்கிலோ, கன்னடத் திலோ மாற்றிப் படிப்பது மிக எளிது.
(3)  அய்ரோப்பியர்களும், அமெரிக் கர்களும் இந்தோ-அய்ரோப்பிய மொழி களை ஆராய சம்ஸ்கிருதமும் பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். அதற்கு மீக்குறிகள் (ஞிவீணீநீக்ஷீவீtவீநீs) இட்ட ரோமன் எழுத்தைப் பயன்படுத்துகின்றனர். இது மிஷிளி 15919 என்ற அய்.எஸ்.ஓ ஸ்டாண் டர்ட் ஆகும்.
அம்முறை கணினிகளில், இணை யத்தில் யூனிகோட் குறியேற்றத்தில் பர வலாகப் பயன்படுகிறது. இந்தியாவில் ஏராளமான குடும்பங்களில் குழந்தை களை ஆங்கிலக் கல்வியின் அவசி யத்தை உணர்ந்து படிக்கவைக்கிறார்கள்.  மிஷிளி 15919 முறையில் ரயில்கள், மத்திய அரசாங்க அலுவலக பெயர்ப் பல கைகள், விண்ணப்பப் படிவங்கள்.  போன்றவற்றில் ஹிந்தி வாசகத்துக்கு அடுத்து, மிஷிளி 15919 முறையிலும் அவ் வாசகங்கள் எழுதப்படல் வேண்டும். மிஷிளி 15919 முறை இந்திய மாநில எழுத் துகளுக்குத் துணையாக எழுதப்பட்டால், பிரதேச லிபிகள் அறியாதாருக்கு மிக உதவியாக இருக்கும்.
-நா. கணேசன்,
ஹூஸ்டன், டெக்சாஸ்
-விடுதலை ஞா.ம.,19.11.16

தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன.

பதினாறு தானங்கள்பழங்காலத்தில் மக்களைத் தொழில் வகையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்திருந்த பாகு பாட்டை மாற்றி நிறவேறுபாடு, பிறப்பு அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வர்ணங் களாக்கினார்கள்.
அப்பிரிவுகளுக்குத் தனித்தனியே தொழிலும், ஆசாரமும் கற்பித்து அவை முறையே ஒன்றினுக்கு ஒன்று தாழ்ந்தவை எனவுமாக்கி, இவ்வேறுபாடு இறைவன் படைப்பென நம்பச் செய்து, இச்சாதிக் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டனர் பிராமணர்கள்.
இந்தக் குமுகாய அமைப்பில் தமிழர்கள் நிரந்தரமாய்த் தாழ்த்தப்பட்டார்கள். எத் தகைய கல்விச் சிறப்புப் பெற்றிருந்தாலும், குணக்குன்றானாலும், பட்டம் பதவி வகிக் கினும் சூத்திரர் மற்ற வர்ணத்தாருக்கு குற்றேவல் செய்யப் பிறந்தவர்களே.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று வாழ்ந்து வந்த மக்களைப் பல குலங் களாக்கி, பாழ்செய்யும் உட்பகையைப் புகுத்தி அவர்களைச் சின்னாபின்னப் படுத்தித் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்டினர். இவ்வாறு ஏமாளி மக்கள் மீது ஏற்றங்கண்ட பிராமணர் கல்வித்துறையை தமக்கே உரியதாக்கிக் கொண்டு ஏனைய ரோடு கலந்து வாழாது தனித்தெருவில் வாழ்ந்து, இறப்பவருக்குத் தனிச்சுடலையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பிராமணரல்லாதாரை அசுரர் எனக் குறிப்பிட்டனர். கொல்லேறடக்கல் முதலிய மறவினை செய்து மணத்தலை அசுர மணமாக்கினர். பாட்டியல் இலக்கணத்தில் பிராமணரைப் பாட வெண்பா, வேளா ளரைப் பாட வஞ்சிப்பா எனவும் வகுத்தனர். பாட்டெழுதும் ஓலை நறுக்கின் அளவு பிராமணருக்கு 24 விரல், வேளாளர்க்கு அதில் பாதியென வரையறுத்திருந்தனர்.
எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுப்பப்பட்டன. பிராமணரை வணங்குமாறு காரிகிழார் வேண்டினார். தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன.
சமஸ்கிருத நூல் ஆதிக்கம், ப: 21


-விடுதலை ஞா.ம.,3.12.16

சமஸ்கிருதம்
இந்நாட்டில் பார்ப்பனியம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் எதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனியங்களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம் பெற்று வந்திருக்கின்றன.
உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும் அதற்கெனவே பல ஏற் பாடும் செலவும், மெனக்கேடும் பார்ப்பனியத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன. சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருத பாடசாலை மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செலவிலேயே நடைபெற்று வருகின்றன.
இது இந்த நாட்டு மக்களின் சுயமரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும். இதைத் தட்டிப்பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சு விடவும் ஆள்கள் இல்லை.
போதாக்குறைக்கு இன்று இந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்நாட்டு மக்களக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதை யில்லையென்பதற்கும் ஒரு உதாரணமாகும்.
- குடி அரசு 14.6.1931, தொகுதி 12, ப: 327

-விடுதலை,3,12,16

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்: திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929
-விடுதலை,17.5.14

புதன், 18 ஜனவரி, 2017

சூரியன் நகர்வை கணிக்கும் 6,000 ஆண்டு பழைமையான கல் சவுக்கை

சூரியன் நகர்வை கணிக்கும் 6,000 ஆண்டு பழைமையான கல் சவுக்கை
பழநி அருகே கண்டுபிடிப்புபழநி, ஜன. 18- திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாப்பம்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது கொத்தன்கரடு. இங்கு இரண்டு மலைகளுக்கு இடையில் சுமார் 8 டன் எடை கொண்ட மூன்று கற்கள் அடுக்கி வைக்கப் பட்டது போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது. தகவலறிந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த கற்குவியல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய னின் நகர்வை கணிக்க ஏற்படுத்தப்பட்ட சவுக்கை. இடது பக்கத்தில் மூன்று பாறைகளும், வலப்பக்கத்தில் மூன்று பாறைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. மேற்பகுதியில் கற்களால் பலகைக்கோடு ஒன்றும், துவாரமும் அமைக்கப் பட்டுள்ளது. தை ஒன்றாம் தேதி முதல் ஒரு வாரத்திற்குள் சூரியன் மறையும் போது இந்த துவாரத்தின் வழியே ஒளி வெளிவரும். ஆடி ஒன்று முதல் ஒருவாரத்திற்கு சூரியன் உதயமாகும் வேளையில், ஒளிக்கதிர்கள் இந்த துவாரம் வழியே வரும்.

தை ஒன்று முதல் 6 மாதம் சூரியன் வடக்கு நோக்கி நகரும். இது உத்தராயணம் எனப்படும். ஆடி ஒன்று முதல் 6 மாதம் தெற்கு நோக்கி நகரும். இது தட்சிணாயணம் எனப் படும். இந்த வடக்கு, தெற்கு நகர்வை கணிக்கும் வானியல் அறிவியல் அப்போதே இருந்துள்ளது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை இந்த அமைப்பின் மூலமே கண்டறிந்து விவசாயம் செய்துள்ளனர். இவ்வளவு அதிக எடையுடைய கற்களை, சிறிய தேங்காய் அளவிலான கல் இன்றளவும் தாங்கிப்பிடித்துள்ளது வியப்பின் உச்சமாக உள்ளது.

பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற வெளிநாடு களிலும் சூரிய நகர்வை கணிக்கும் கல் அமைப்பு உள்ளது. ஆனால் அவை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே உள்ளன. ஆனால் இங்குள்ள அமைப்பு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற அரிய குறியீடு, நினைவுச்சின்னங்களை அழியா மல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

-விடுதலை,18.1.17

புதன், 11 ஜனவரி, 2017

5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு
செஞ்சி , மே 8-  விழுப் புரம் மாவட்டம், செஞ்சி அருகே அன்னியூரை அடுத்த சிறுவாலை கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

உலகெங்கிலும் வரலாற் றுக்கு முந்தைய கால மனிதர் களின் ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும், வாழ்விடங் களையும், வாழ்வியலையும் சித்திரிக்கும் இம்மாதிரியான ஓவியங்கள் தமிழகம் எங்கி லும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங் களில் கிடைத்த ஓவியங்கள் தனி சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு. 3,000 முதல் கி.மு 7,000 வரை என அறிஞர்கள் கருதுகின்றனர். அவற்றைப் போன்ற ஓவியத் தொகுதி ஒன்று விழுப்புரம் மாவட்டம், அன்னியூரை அடுத்த சிறுவாலையில் தற் போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

சிறுவாலை கிராமத்துக் குக் கிழக்கே, கல் குவாரி களால் உடைக்கப்பட்டு எஞ்சியுள்ள குன்றுகளில் ஒன்றில் இதனை அதியன் என்பவர் கண்டறிந்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சென்னைப் பல் கலைக் கழக ஆய்வாளர்கள் ஜெ.ராதா கிருஷ்ணன், செல்வன், ஆர்வலர்கள் செந்தில்பாலா, ரவி உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஓவியம் குறித்து ஆய்வாளர் ஜெ.ராதாகிருஷ் ணன் கூறியதாவது: 5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஓவியம் 1.5 மீட்டர் நீளமும், 50 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது. பொதுவாக இம்மாதிரியான ஓவியங்கள் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும்.

இது காவி நிறத்தில் சற்றே தெளி வற்ற நிலையில் உள்ளது. இது ஒரு இனக்குழு தலைவி, வேட்டையாடிய பிறகு தன் வீரர்களுடன் வேட்டை யாடிய உணவை தமது இருப்பிடத்துக்கு இரண்டு வண்டிகளில் எடுத்துச் செல் வதுபோல அமைந்துள்ளது. இது ஓர் நிகழ்வை உணர்த் துவதாகவோ, வேட்டையாடு தலை உணர்த்துவதாகவோ கூட இருக்கலாம்.

இதில் இதுவரை கிடைத்துள்ள தொல்பழங்கால ஓவியங் களை விட இரண்டு சக்கரங் களையும் வண்டியையும் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடிகிறது. இது புதிய கற்கால, பெருங்கற்கால வேட் டை சமூக மக்களின் நாகரிக வளர்ச்சியைச் காட்டும் முக் கிய ஆதாரம் என்றார்.

மற்றொரு ஆய்வாளரான செல்வன் கூறுகையில், இங்கே கிடைத்துள்ள பிற தடயங்களையும் கொண்டு பார்க்கும்போது இங்கே கற்கால மனிதர்கள் முதல் பல்வேறு சமூகங்கள் இங் குள்ள குகை, குன்றுகளில் வாழ்ந்து வந்தமையை அறிய முடிகிறது. மேலும், இப் பகுதியில் தேடினால் இன் னும் நிறைய வரலாற்று தட யங்கள் கிடைக்கலாம்.

இந்த கல்குவாரிகளால் பல அரிய தொல் சின்னங்கள் அழிந்து போயிருக்கின்றன. இது அதில் தப்பி பிழைத்தது நல்வாய்ப்பானது. அரசு இந்த தொல் சின்னங்கள் மீது அக்கறை கொண்டு, இவற் றைக் காப்பாற்ற முன் வர வேண்டும். பொதுமக்களுக் கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இவற்றைக் காப்பாற்ற முடியும் என்றார்.
-விடுதலை,8.5.14

இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி தமிழ்!

நாம் நினைவிற்கொள்ள வேண் டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல், தமிழ் என்னும் மூலச் சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம் பெற்றபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது. திராவிடா என்னும் சொல் ஓரின மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப் பட்டு வந்தது என்பதே ஆகும்.

உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி யாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத் திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால் இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்ப தாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை.

தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதிற்கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன் படுத்தும் படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள லாம். திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தி யாவின் நாகர்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திரா விடர்கள் என்று கூறிக்கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்;

அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்து வதைக் கை விட்டுவிட்டதன் காரண மாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிகமிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப் படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

- அம்பேத்கர் தொகுப்பு - 14 (பக்கம் 94-95

சமஸ்கிருத (வார)த்தை நாம் ஏன் எதிர்க்கின்றோம்?
- க.திருநாவுக்கரசு

மத்திய அரசு சமீபத்தில் இந்தியைத் திணித்தார்கள். தமிழக மெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ஏதோ சமாதானம் சொன்னார்கள். இப்போது சமஸ்கிருத வாரம் கொண் டாடும் படி மத்திய அரசுப் பள்ளிக் கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்தக் கொண்டாட் டத்தை ஆகஸ்ட் 7 முதல் 13-ஆம் தேதி வரை கொண்டாட வேண்டு மாம்! அந்த சுற்றறிக்கையின் தொடக் கமே எல்லா மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று எழுதப்பட்டு இருக்கிறது.

சுஷ்மா சுவராஜூம், உமா பாரதியும் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளட்டும். அதன் மூலம் அவர்கள் கட்சிக் காரர்களும், அவர்களும் இறும்பூது எய்தட்டும். நமக்கு கவலையில்லை.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் போலோ என்பவர் நாடாளு மன்ற சபாநாயகரான சுமித்திரா மகாஜனை சமஸ்கிருத மயமான இந்தியில், நீங்கள் உங்கள் இருக்கை யில் அமர்ந்து இருக்கிறபோது கடவுளைப் போல இருக்கிறீர்கள் என்று கூறினார்.

இப்படிப் பாராட் டியபோது எல்லா உறுப்பினர்களும் நிலை குத்தி நின்று விட்டனர். அவர் பாராட்டிய அந்த மூன்று வரிகளில் சமஸ்கிருதம், இந்தி, உருது அடங்கி இருந்தது என்று இந்து தெரிவிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய போலே காங்கிரசுக்குச் சென்றார். அதன் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். பீகார் சட்ட மன்றத்தில் எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். சமஸ்கிருதத் தில் பேச முயல்கிறார். முழு பா.ஜ.க. வாக பயிற்சி எடுக்கிறார். இதிலும் நமக்குக் கவலையில்லை. சமஸ் கிருதத்தில் பேசுகிறார்கள்;

பாராட்டு கிறார்கள் என்று சொல்கிற போதெல் லாம் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. லியோ டால்ஸ்டாய் தம் முடைய போரும், அமைதியும் நாவலில் ஓர் இடத்தில் இரஷிய நாட்டுச் சீமான்கள் தன்னுடைய தாய்மொழியில் பேசிக்கொள்ளாமல் பிரெஞ்சு மொழியில் பேசிக் கொள் கிறார்கள் என்று குறிப்பிடுவார். பிரெஞ்சு மொழி உயிருள்ள மொழி; அய்ரோப்பாவின் காதல் மொழி என்று சொல்லப்படுவது;

ஆனால், இங்கே இருக்கிற மதவாத சீமான்கள் சமஸ் கிருதத்தில் முயற்சி செய்கிறார் களே இது ஏன்? சமஸ்கிருத அறிவிப்புக்கு நாம் எதிர்க்குரல் கொடுத்தவுடன் இந்துவில் நாள்தோறும் துடிதுடிக்கும் கடிதங்கள் வெளிவருகின்றனவே, அது ஏன்?

அதற்கு முன்பாக அந்த மத்திய அரசின் சுற்றறிக்கை சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய் என்கிறதே இது சரியா? என்பதை முதலில் பார்ப்போம்.

1) தென்னிந்தியாவில் அப்போது வாழ்ந்த திராவிடர்கள் உயர்ந்த நாகரிகத்திற்கு உரியவர்கள். அக் காலங்களில் ஒரு வேளை அவர்கள் வடக்கிலும் இருந்திருக்கலாம். அவர்களின் மொழிகள் ஆரிய சமஸ் கிருதத்தின் குழந்தைகள் அல்ல, (வழி வந்தவை அல்ல) அவை மிகப் பழம் பெரும் இலக்கியங்களை உடையவை.

.. It is clear that the Dravidans had a rich civilization then in Southern India, and perhaps also in Northern India/ Their languages which are not the daughters of the Aryan Sanskrit, are very old and have fine literatures.

- நேருவின் உலகச் சரித்திரம்.

2) நாம் நினைவிற்கொள்ள வேண் டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல், தமிழ் என்னும் மூலச் சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம் பெற்றபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது. திராவிடா என்னும் சொல் ஓரின மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப் பட்டு வந்தது என்பதே ஆகும்.

உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி யாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத் திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால் இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்ப தாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை.

தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதிற்கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன் படுத்தும் படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள லாம். திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தி யாவின் நாகர்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திரா விடர்கள் என்று கூறிக்கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்;

அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்து வதைக் கை விட்டுவிட்டதன் காரண மாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிகமிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப் படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

- அம்பேத்கர் தொகுப்பு - 14 (பக்கம் 94-95)

பண்டித நேரு அவர்களும் மேதை அம் பேத்கர் அவர்களும் கூறியவை களிலிருந்து தமிழும் அவற்றிலிருந்து திரிந்தவையான மொழிகளும் சமஸ் கிருதத்தின் வழி வந்தவை அல்ல. இம்மொழிகளுக்குச் சமஸ்கிருதம் தாய் இல்லை. எனவே மத்திய அரசின் பள்ளிக்கல்வி வாரிய சுற்றறிக்கை வரலாற்றுப் பதிவுகளுக்கு எதிராக இருக் கிறது என்பதை மேலே காட்டிய இருபெரு மக்களின் கூற்றுகளிலிருந்து உறுதியாகிறது.

மேற்குறிப்பிட்ட அம்பேத்கரின ஆய்விலிருந்து பல செய்திகள் கிடைக்கின்றன. சமஸ்கிருத வீச்சு மக்கள் பேசும் மொழியை அழித்து விட்டு இருக்கிறது. எனவே நாகர்கள் தம் தாய் மொழியான தமிழை இழந்து விட்டனர். இந்தியா முழுமையும் இருந்த தமிழ் காணாமல் போய் விட்டது. தமிழர்களுக்கு ஆரியர்கள் சூட்டிய பெயர் திராவிடர். அப்போது தமிழ் பேசப்பட்ட தாலேயே திராவிடர் பெற்ற பெயர் நிலைத்து விட்டது. திராவிடர்கள் அந்நாட்களிலேயே சமஸ்கிருதத்தை அனுமதித்து இருந் தால் தென் இந்தியாவில் - தமிழகத்தில் தமிழ் காணாமல் போய் இருக்கும் என்பவற்றை அம்பேத்கர் நமக்குச் சொல்கிறார்.

ஆகவே நாம் இந்தியை எதிர்க் கிறோம். சமஸ்கிருதத்தை எதிர்க் கிறோம். திராவிடர் இயக்கத் தந்தை டாக்டர் சி.நடேசனார் சென்னை இராஜதானியின் சட்டமன்றத்தில் சமஸ்திருதத்தை கடுமையாக விமர் சனம் செய்து பேசினார்.

பனகல் அரசர் சென்னை இராஜதானியின் முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்புக்கு சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் எனும் தகுதியை ரத்து செய்தார். பெரியார் 1923 ஆம் ஆண்டு காங்கிரசில் இருக்கிற போதே திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியை எதிர்த்தார். இவை எல்லாம் ஏன் நிகழ்ந்தன? எதற்காக நமது தலைவர்கள் அப்போதும் எதிர்த் தார்கள், இப்போதும் எதிர்க்கிறார்கள்? அதற்குக் காரணம் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

அறிஞர் டி.டி.கோசாம்பி கூறுவார், சமஸ்கிருத மொழி உயர்ந்த மொழி தான்! அதன் பலவீனமே வேதங்கள் சமஸ்கிருதத் தில் இருப்பதுதான் என்று! இதன் பொருள் என்ன? வேதம் என்று வந்தவுடன் இந்து மத வாழ் வியல் நெறி - வர்ணாசிரமம் வந்து விடுகிறது.

ஆகவே அதன் ஆதிக் கத்தை அனுமதிக்க மறுக்கிறோம். அன்னிபெசன்ட், காங்கிரஸ் தலை வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் மாநாடு சமஸ்கிருதப்பாடலோடு - வேத முழக்கத்தோடு தொடங்கப்பட் டது. அன்று முதலே இந்திய அரசி யலில் சமஸ் கிருத எதிர்ப்பு தொடங்கி விட்டது. அதனால்தான் நமது தலை வர்களில் ஒருவரான டி.எம்.நாயர் அன்னிபெசன்டை அய்ரிஷ் பிராமணி என்று கூறினார்.

தமிழ்நாட்டில் சமஸ்கிருத எதிர்ப்பு என்பது சங்க காலத்திலிருந்து இருக் கிறது. இது ஆரிய - திராவிடப் போராட்டமே! 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத - தமிழ்ப் போராட்டம் நடந்து இருக்கிறது. நீதிக்கட்சி தோன்றிய பிறகு அங்கே மாறுதல் ஏற்பட்டது.

இன்னும் சொல்வதானால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சிவகாமி அய்யர் துணை வேந்தராக (1916 - 1918) இருந்தபோதும், 1940-களில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வி.எஸ்.சீனிவாச சாஸ் திரியும், சர்.சி.பி.இராமசாமி அய்யரும் இருந்தபோதும்  சமஸ்கிருதத்திற்கு ஆக்கந் தேடினர்.

முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் (1937 - 1940) மும்முரமாக இருந்த நேரத்தில் எஸ்.சத்தியமூர்த்தி சமஸ் கிருதத்தின் பெருமையைப் பேசிய தோடு கொஞ்சம் முயற்சி செய்தால், சமஸ்கிருதத்தை நமக்கு அனுகூல மான வகையில் இந்தியாவினுடைய பொது மொழியாக்கிவிட முடியும் என்றார். அப்போது நாவலர் சோம சுந்தர பாரதியார், இந்தி மொழியைப் பேசும் சமஸ்கிருதம் என்று சொன் னார். அதில் எல்லாச் செய்திகளும் உள்ளடக்கமாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட நிலைகள் எல்லாம் உருவாகும் எனக்கருதி காந்தியும் நேருவும் இந்துஸ்தானியை பொது மொழியாக்க வேண்டும் என்று விரும்பினர். காந்தி இறுதி வரையில் அம்முடிவில் இருந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. இடைக்கால அரசின் (1946 - 52) போதே சமஸ் கிருதத்திற்கும் இந்திக்கும் மத்திய அரசு துணையாய் இருந்தது அப் போதும் நாம் எதிர்த்தோம். இப்போதும் நாம் எதிர்க்கிறோம்.

சமஸ்கிருத சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு அதை தேவ நாகரியில் - அதாவது சமஸ்கிரத எழுத்துக்களில் - வரி வடிவத்தில் எழுதினால் அது இந்தி மொழி யாகும். ஆகவே தான் நாவலர் சோமசுந்தர பாரதியார் இந்தியைப் பேசும் சமஸ்கிருதம் என்கிறார்.

இந்துஸ்தானியில் பாரசீக அராபிய சொற்கள் அதிகம் இருக்கும். அதனை பாரசீக வரிவத்தில் - எழுத்துகளில் எழுதி னால் அது உருது. அதில் இந்தி சொற்கள் அதிகம் இருப்பதால் அது இஸ்லாமியர்களின் மொழியாகிவிடும் என்பதற்காகவே இந்துஸ்தானியை புறக்கணித்தார்கள். ஆக இந்தியும் இந்துஸ்தானியும் நமக்கு அந்றிய மொழிகளே.

நாம் மதச்சார்பின்மையாளர்கள். இந்தி ஆட்சி மொழி அந்தஸ்தில் இருக்கிறது. மக்கள் விரும்புகிற காலம் வரை இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து நீடிப்பதற்காக சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பள்ளிகளின் வழி சமஸ்கிருதத்தைக் கொண்டாடும்படி செய்வானேன்? இப்படித் தான் 1937-இல் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய இந்தியைத் திணித்தனர், எதிர்த்தோம். இப்போது சமஸ்கிருதத்தை அறிமுகப் படுத்தி, விழாக் கொண்டாடித் திணிக்க முயலுகிறார்கள். இந்தியைக் கற்பதற்கு சமஸ்கிருதம் துணை இருப்ப தோடு அது இந்து மதத்தின் மொழியாகவும் விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மொழி பல மத, மொழி உள்ள நாட்டில் எப்படி அனைத்து மக்களாலும் கொண் டாடப்பட முடியும்

சமஸ்கிருதம் என்பது பார்ப்பனீ யத்தின் அடையாளமாகும். அதனால் தான் சமஸ் கிருதத்தை மறைமுகமாகத் திணித்து - மத்திய அரசு பார்ப்பனீ யத்தை வளர்க்கப் பார்க்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து இருந்து வருகிற இந்தத் திட்டம் தொடர்ந்து படமெடுப்பதும் அடங்கி விடுவதுமாக இருக்கிறது. பார்ப் பனீயம் என்பது குறித்து அறிஞர் தாமஸ் மாத்யூவினுடைய மேற் கோளை அம்பேத்கர் பயன்படுத்தி இருப்பதை கீழே தருகிறோம்.

பார்ப்பனீயம் என்பதற்கு நான் கொள் ளும் பொருள் பார்ப்பனர்கள் ஒரு சமூகம் என்ற வகையில் கொண்டு இருக்கும் அதிகாரம், சிறப்பு சலுகைகள், நலன்கள் என்பன அல்ல. நான் அந்தப் பொருளில் இச் சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. பார்ப்பனீயம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத் துவம், சகோதரத்துவம் என்ற உணர் வின் மறுப்பு என்பதாகும்.

இந்தப் பொருளில் நாம் பார்த் தோமானால் பார்ப்பனீயம் என்பது எல்லா வகுப்புகளிலும் கட்டுக் கடங்காமல் இருக்கிறது. பார்ப்பனர்கள் தான் அதன் மூலகர்த்தாக்கள் என்ற போதிலும் அவர்களோடு மட்டும் அது இருப்பதில்லை. பார்ப்பனீயத்தின் விளைவுகள் என்பது கலந்துண்ணல், கலப்புத் திருமணம் போன்ற சமூக உரி மைகளை மறுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது குடியுரிமை களையும் மக்களுக்கு மறுத்தது. பொருளாதார வாழ்க்கையையும்கூட பாதிக்கும் அளவுக்குப் பார்ப்பனீயம் அனைத்து வல்லமை பொருந்தியதாக இருக்கிறது

இத்தகைய வல்லமை பொருந்திய பார்ப்பனீயத்தின் பின்னே இருப் பதுதான் சமஸ்கிருதம். இதனை எப்படி பொது மக்கள் ஏற்பர்? இதனை ஏன் சமஸ்கிருத வாரம் என்று கொண் டாட வேண்டும்? அரசியல் அமைப் பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழி களுள் சமஸ்கிருதம், உருது, இந்தி ஆகியவற்றிற்குத் தாயகங்கள் இல்லை. இருபது இலட்சம் மக்களே பேசி வந்த சிந்தி மொழியை அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்யவில்லை. 1967இல் தான் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்திய பெரு முதலாளிகள் பெரும் பகுதியினர் சிந்திகள் என்பதால் இது சாத்தியமா யிற்று. சமஸ்கிருதம் தேசிய மொழி என்ற அந்தஸ்தை அடைந்ததற்கு ஒரே காரணம்- அது இந்து மத மொழி என்பதுதான்! மதச் சார்பின்மை பேணும் நாட்டில் மத அடையாள முள்ள ஒரு மொழிக்கு சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது எப்படிச் சரியாகும்?

தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபி, பாரசீகம், ஈப்ரு ஆகிய எட்டு மொழிகளை உயர் தனிச் செம்மொழி என்று மொழி இயல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். தமிழ், சமஸ்கிருதத்திற்கு இடையே நடை பெற்று வரும் போராட்டம் மற்ற உயர் தனிச் செம்மொழிகளுக்கிடையே இல்லையே, அதுஏன்? - என்பதை மிக ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் - சமஸ்கிருதப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் மட்டும் அன்று. தமிழ் சமஸ்கிருதப் போராட்டம் என்பது இன, சமய, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய போராட்டமாகும். மற்ற உயர் தனிச் செம்மொழிகளுக்குச் சமயம் சார்ந்த சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் தொடர் போராட்டம் என்று அவற்றிற்கு இடையே இல்லை. அவை ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன. இணைந்து உருமாறியும் விட்டன. ஆனாலும் தமிழும் அதன் பண்பாடும், கலாச்சாரமும் தனித் தன்மை உடையனவாக இருக்கின்றன.

ஆகவே தொடர் போராட்டம் நீண்ட காலமாக இங்கே நடந்து வருகிறது. நம் தாய்மொழியின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். ஆகவே சமஸ்கிருதத் தையும், இந்தி யையும் என்றும் எதிர்ப்போம். இல்லையென்றால் அம்பேத்கர் கூறிய நிலைதான் நமக்கும் ஏற்படும்.

ஆனாலும் மத்திய அரசு இப்போது ஒரு சுற்றறிக்கையை விட்டு சச்சரவை வேண்டு மென்றே உண்டாக்குவது சரியில்லை. இது சூத்திர மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று மேட்டுக்குடியினர் உரசிப் பார்க் கிறார்களோ என்று எண்ணும்படியாக இருக்கிறது. சூத்திரர்கள் எப்போதும் போர்க் குணத்தோடு இருப்பார்கள். மத்திய மேட்டுக்குடி ஆட்சி தேவை யில்லாத சிக்கல்களை, பொருத்தம் இல்லாதவற்றை அறிவிப்பதன் மூலம் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டு வது நாட்டுக்கு எந்தப் பலனையும் தந்து விடாது.

இந்தியாவில் 1500 மொழிகளுக்கு மேல் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அவற்றில் 22 மொழிகள் தேசிய மொழி களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் மக்களால் பேசப்படாத மொழியான சமஸ்கிருதமும் ஒன்று. தேசிய மொழிகள் அனைத்தையும் பரந்துபட்ட இந்த நாட்டில் சம நிலை யில் வைத்து எண்ண வேண்டும்.

மக்களால் பேசப்படாத மொழியான சமஸ்கிருதத்திற்கு ஒரு வார நிகழ்வாக மத்திய அரசு கொண்டாட்டத்தை அறி விக்கிறது. அதற்கு இணையான மொழி யாக இருக்கிற தமிழ் மொழிக்கும் தமிழ் வாரம் என்று மத்திய அரசு கொண்டாட முன்வருமா? வராது.

சமஸ்கிருதம் வேதமொழி; இந்தி யாவின் ஆட்சி மொழியாக இருக்கிற இந்தியில் உள்ள சொற்கள் எல்லாம் சமஸ்கிருதச் சொற்கள். சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தின் மூலம் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேசியம் என்கிற கலாச்சாரத்தை பா.ஜ.க.  அரசு உருவாக்கப் பார்க்கிறது.

காங்கிரஸ், பா.ஜ.க. இவ்விரு கட்சிகளும் மொழிக்கொள்கையில் ஒரே குரல்தான் ஓங்கி முழங்கு வார்கள். நாமோ ஆட்சிக்கோ, மதத் திற்கோ, மொழி ஆதிக்கத்தின் அடிப் படையில் அடிமைகளாக மாட்டோம். ஆகவே சமஸ்கிருதத்தையும், இந்தி யையும் என்றும் எதிர்ப்போம்; எங் களின் தனித் தன்மையை இழக்க மாட்டோம்.
-விடுதலை,27.7.14