தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

  • முகப்பு
தமிழர் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜனவரி, 2024

தை முதல் நாள் – தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து – தந்தை பெரியார்




விடுதலை நாளேடு,
Published January 14, 2024

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றது மான செய்கை தான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற் கென்ன செய்வது? என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டி கையைத் தமிழர் பண்டிகையாகக் கொண் டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக் கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடை யில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாண வர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும், பொங்கல் பண்டிகைகளைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

450 பொங்கல் வாழ்த்து

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு கூற வேண்டு மானால், இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத் திரம் 450-க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)
இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத் தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்களை சேர்ந்தவர்களாகும். இந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண் டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண் டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளி யையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத் தக்கதாகும்.
தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண் டாடி இருப்பது பற்றியும், அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக் கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மை யாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றி யறிவித்துக் கொள்ளக் கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன் வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந் ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது – பொங்கல் பண்டிகை யினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலை பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர் களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்ன வென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக் குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை, கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சி களும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்கு வீர்கள் என்ற நம்பிக்கை கொள் ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து

இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் கால மும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ் வாண்டுத் தொடக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரி யர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு – தமிழர்களுக்கு இழிவும் ஏற்படுவதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின் றனவோ அதேபோல்தான் ஆரியர்களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வருவ தானவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவை கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்மநூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.
இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர் களையும் அறிவற்ற தமிழ் மடையர்களை யும் பல தந்திரங்களால் மானம், அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவை சார்பாகத் தமிழ் மக்கள் எல் லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படி செய்து விட்டார்கள்.
இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாத வனுக்கு ஜட்ஜூ பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலிய வைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கி யனாக இழி தன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல் மகனாக, மகானாக, சிறந்த அறிவாளியாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுபவன் – கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை வந்து விட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்மைப் பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை – தமிழர் சமுதாயத்தை இழிவி லிருந்தும் பிறவி அடிமைத் தன்மையிலிருந்தும், முன் னேற்றத் தடையிலிருந்தும் என்ன விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவது, அதற்காக தொண்டாற்றி மடிவது என் வாழ் நாளினு டையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமா யணம், கீதை, பாரதம் ஆகியவை களைத் தமிழர்களு டைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய, முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங் கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை, முதலியவை களுக்குப் பதிலாக ஒருநெறி, கலை, வழி காட்டுவதற்கு என்று குறளைக் காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.

குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழமாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லா விட்டால் மனிதன் வாழலாம்; ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால் ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக, கடை மனிதனாக ஆக்கப்பட்டு விட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப் படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள் ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை – கடைத் தன்மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு வருவ தற்குக் குறளைத் தூண்டுகோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.

எனது பொங்கல் பரிசு!

நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? என்பதை மனிதன் மானமுள்ள, அறி வுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்கா விட்டாலும் தமிழன் – திராவிடன் சிந்திக்கட்டும் என்பது தான் எனது வேண்டுகோளும், ஆசையு மாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப் பட்ட எல்லா சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.
ஆகவே இந்த ஆண்டு – பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரி யோர்களால் கொடுத்து வரப்பட்டதேயாகும். அது போல் தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவை போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை – கீதை, இராமாயணம், பாரதம் ஆகிய வைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை – குறள் ஒன்றையே கொடுக் கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங் கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக் கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக் கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு தட்சிணை யாகக் கொடுக்கிறேன்.

பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சிணையை, காணிக்கையை தமிழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால் குறைந்த அளவு என்பால் அருளும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்ட வேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள்கூர்ந்து – கருணைகூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும் நூல் களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.
உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப் பனப் பத்திரிகையை வாங்காதவன் – ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும். தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும் தான். அதாவது,

1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி பொங்கல் விழாக் கொண் டாடுவது.
2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலி யவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.
3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமி ழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.
பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதா வது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.
பொங்குக பொங்கல்!
பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!

(‘விடுதலை’ 19.01.1949)

தமிழர் விழா

கிறித்தவர்கள் காலத்தைக் காட்ட கிருத்துவ ஆண்டு (கி.பி) இருக்கிறது. முஸ்லிம்கள் காலத் தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இது போல தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டு களுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல் லோரும் கொண்டாட வேண்டும்.

– தந்தை பெரியார்
(‘விடுதலை’ 30-1-1959)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:29 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழர் திருநாள், பொங்கல்

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

தமிழர் திருநாள்



   January 13, 2022 • Viduthalai

தமிழர்களிடையே கொண்டாடப்பட்டுவரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவா கவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொரு ளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண)க் கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற் றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவார மாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும் பலர்.

இந்நிலைகளுக்கு மாற்றாகவும், தமிழ் மக்களி டையே தமிழிய உணர்வும் இனநல உணர்வும் கிளர்ந் தெழுதற்கு வாய்ப்பாகவும், பொங்கலை வாழ்வியல் சிறப்பு விழாவாகக் கொண்டாடுவதோடு, இயக்க நிலைப் படுத்தியும் நாடெங்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெருமக்கள் சிலர் மனங் கொண் டனர்.

பேரா. கா. நமச்சிவாயனார் ஏறத்தாழக் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் 'பொங்கல் தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்னும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழுணர்வுடைய அரசியல் கட்சித் தலைவர்கள் முதலானோரைக் கண்டு அளவளாவி யதன் விளைவாகப் பொங்கல் தமிழர் திருநாளாக மலர்ந்தது. நாடெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பாகத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடைபெறலாயின.

தமிழர் திருநாள் தொடர்பாக மலேயாவில் உள்ள பெரியவர் புலவர் கா.ப. சாமி அவர்கள் கூறியுள்ளது அறியத் தக்கது. அது வருமாறு:

“1937 இல் திருச்சியில் அனைத்துத் தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு, பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அதில் கா. சுப்பிரமணி யனார், மதுரைத் தமிழவேள் பி.டி. இராசன், திரு.வி.க., மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால், அங்கு - இருந்த சூழ்நிலையில், அம் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், 'பொங்கல், சமய விழாவா, சமயமற்ற விழாவா என்று கடுமையான தருக்கம் நடைபெற்றது.

இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் 'இது (பொங்கல்) சமயச் சார்பு இல் லாத விழா. எந்தச் சமயத்துக்காரன், எந்தச் 'சாத்திரக் காரன்' இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்த இலக் கணம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம், எந்த 'இதிகாசம்', இருக்கிறது? எனவே, எந்தப் புராணமும்' இல்லாத போது, தமிழில் புறநானூற்றில் பிட்டங்கொற் றனின் வரலாற்றில் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனா ரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும்? நண்பர் ஈ.வெ.ரா. இதை ஏற்றுக்கொண்டா லும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி! என்றார்.

"இல்லை; நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று பெரியார் தெளிவாக மறுமொழி உரைத்தார். பெரியார் தாம் இம்மாநாட்டை நடத்தினார்.

'பொங்கல் மதச்சார்பற்ற, முதன்மையான, பொன் னான விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று பெரியார் சொன்னதும் அனைவரும் கையொலி எழுப்பினர். திரு.வி.க. எழுந்து, 'அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள், பொங்கலைச் சமயச் சார்பற்ற ஒரு தனிப்பெருந் தமிழர் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்குத் தமிழுலகமே பாராட்டக் காத்திருக் கிறது' என்று குறிப்பிட்டார். அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாகப் பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர். இச்செய்தி பலருக்குத் தெரியாது. நான் அம் மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப் பொழுது அகவை 19.

அம் மாநாடு சிறப்பாக இந்தியை எதிர்ப்பதற்கு கூட்டப்பட்டதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்தவர் பி.டி. இராசன். வழிமொழிந்தவர் திரு.வி.க.”

தமிழர் திருநாள் கொண்டாடத் தொடங்கிய பின் வகை வகையான பொங்கல் வாழ்த்துகள் எழிலார்ந்த தோற்றத்தொடும், இனிய தமிழிலும் ஏற்றமிகு கருத்துகளொடும் மக்களிடையே பரவின. ஆரியப் பார்ப்பனர்கள் நடத்திய இதழ்கள் தீபாவளி மலர் வெளியிட்டு வந்ததைப் போல், தமிழுணர்வார்ந்த ஏடுகள் பொலிவான தோற்றத்தொடு பொங்கல் மலர் வெளியிடலாயின.

மேற்கூறியவாறு பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்குத் தமிழர் திருநாள் கூட்டங்கள் எழுச்சியுற நடத்தப்பட்டன. தூயதமிழ்க் காவலர் கு.மு. அண்ணல்தங்கோ அவர்கள் தமிழர் திருநாளை ஆண்டுதோறும் பத்துநாள் விழாவாகப் பல்லாண்டுக் காலம் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் மறுமொழி

பொங்கற் பெருநாளைத் தமிழர் திருநாளாக அறிவித்து அதனைத் தமிழ்நல, இனநல இயக்கங் களும் பிறவும் எழுச்சியுறக் கொண்டாடத் தொடங்கிய அளவில் அது தமிழ்மக்கள் வாழும் அயல்நாடுகளிலும் பரவலாயிற்று. ஆயினும் மலேயா-சிங்கப்பூர் நாடு களில் தமிழர் திருநாளைப் பரப்புவதில் பெரிதும் முனைந்து நின்றவர்களுட் சிலரே அதில் சற்று முரண் படுவார் ஆயினர். தமிழர்களில் கடவுள் நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்டவர்களின் பொங்கல் கொண் டாட்டத்தில் சமயக் கடைப்பிடிகள் சில ஒட்டி நிற்ற லைச் சுட்டிக்காட்டி, பொங்கல் விழா இந்துமதப் பண்டிகை யென்றும், அது தமிழர் திருநாளாகாது என்றும், தமிழர் திருநாளைப் பொங்கலொடு சார்த்தக் கூடாது என்றும், பொங்கற் பெருநாள் வேறு; தமிழர் திருநாள் வேறு என்றும் குறுக்குச்சால் ஓட்டத் தொடங்கினர்.

மலேயா-சிங்கப்பூரில் பொங்கல் நன்னாளே தமிழர் திருநாள் என்பாரும், அது இந்துமத விழாவே; தமிழர் திருநாள் அன்று என்பாருமாய்த் தமிழர்கள் முரண்பட்டு நின்ற நிலையில், அங்குச் சுற்றுச் செலவு மேற்கொண்டிருந்த தன்மானத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களிடம் இதுபற்றி அவர்தம் கருத்தை அன்பர்கள் உசாவினர். அப்போது பெரியார் அவர்கள் கூறிய மறுமொழி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது! அதுவருமாறு:

'பொங்கல் தமிழர் விழாதான். அது இந்துமத விழா ஆகாது. இந்துமத விழாவாக இருந்தால், மற்ற மற்ற இந்துமத விழாக்களைப் போல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுமா இல்லையா? அப்படிக் கொண் டாடப்படுவது இல்லையே, அது ஏன்? பொங்கல் தமிழ்நாட்டில் மட்டுந்தானே, அதிலும் தமிழர்களால் மட்டுந்தானே கொண்டாடப்படுகிறது! பார்ப்பனர்கள் அதைக் கொண்டாடுகிறார்களா? இல்லையே! இந்து மத விழாவாக இருந்தால் அதைப் பார்ப்பான் கொண் டாடாமல் இருப்பானா? அவன்தானே, அதைக் கொண்டாடுவதில் முந்திக்கொண்டு நிற்பான்! பார்ப் பான் அதைக் கொண்டாடவில்லை; கண்டுகொள் ளாமல் இருக்கிறான் என்றால் என்ன பொருள்? அது தமிழர் திருநாள் என்பது தானே! இதில் என்ன அய்யப்பாடு?'

- புலவர் இறைக்குருவனார்,

‘தமிழ்த் தேசியத் திருநாள்' நூலிலிருந்து...


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:05 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழர் திருநாள்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தமிழர் திருநாள்

- தந்தை பெரியார் -
திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்க ளுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்ப தாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டின் தமிழனின் கலாச் சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்பு கள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.
எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒருஅடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத் திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடக்கும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல் லாம் தமிழனை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்க ளுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவ ளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவை களை அனுபவிக்க முடிகின்றது. இவைகள் ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகை கள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி முதலியனவும் விடுமுறை இல்லாத பண்டிகைகள் - பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம், தைப்பூசம் இந்தப்படி யான இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தமிழன் பண்பிற்கு தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்ற விழா அல்லது பண்டிகை என்பதாக எதையா வது சொல்ல முடிகிறதா?
தமிழனின் இழிவுக்கு மறக்க முடியாத, முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஓர் எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்கு காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.
கிருஸ்துவர்கள், காலத்தைக் காட்ட இருப்பது கிருஸ்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் காலத் தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல் தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும் இப்படித்தான் தமிழனுக்கு  கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிக மிகக் கஷ்ட மாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே, அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதை தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன் - மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் (Harvest Festival) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
- விடுதலை, 30.1.1959
- விடுதலை ஞாயிறு மலர்,12.1.19
இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:09 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழர் திருநாள், பெரியார்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திருவள்ளுவர்

திருவள்ளுவர்
குமரிக் கடலில்133 அடிஉயர சிலை

இந்த வலைப்பதிவில் தேடு

கருத்து களம்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (21)
    • ▼  அக்டோபர் (17)
      • உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகளில் சிந்த...
      • எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் வணிகரின் பெயர் ந...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?,உண்மை இதழ், ...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? உண்மை இதழ், ...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? - உண்மை இதழ்,...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?, உண்மை இதழ், ...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?,உண்மை இதழ், ...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? உண்மை இதழ், 1...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -உண்மை இதழ் ம...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? - உண்மை இதழ்,...
      • வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? - உண்மை ...
      • வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? உண்மை இதழ...
      • வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?- உண்மை இத...
      • வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? -உண்மை இத...
      • வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? -உண்மை இத...
      • வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? -உண்மை இத...
      • வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வமா? -30.11.2016, உண...
    • ►  ஜூலை (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2025 (9)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (50)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (17)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2022 (18)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (8)
  • ►  2021 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2020 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (85)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (131)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (16)
  • ►  2017 (74)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (61)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (14)
  • ►  2015 (48)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (1)
    • ►  அக்டோபர் (1)

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 10-ஆம் நூற்றாண்டு
  • அ. ச. ஞானசம்பந்தன்
  • அகத்தியம்
  • அகத்தியர்
  • அகரமுதலி
  • அச்சு
  • அண்ணா
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அயல்நாடு
  • அரசு ஆணை
  • அரசுடமை
  • அரபி
  • அரபு
  • அரபு மொழி
  • அரியானா
  • அரேபியா
  • அவமதிப்பு
  • அளவைகள்
  • அறிவிப்பு
  • அறிவியல்
  • அறைகலன்
  • ஆ.ராசா
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆட்சிமொழி
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திரேலியா
  • இசை
  • இடம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மொழிகள்
  • இந்து மதம்
  • இராபர்ட் கால்டுவெல்
  • இரும்பின் தொன்மை
  • இரும்பு உருக்காலை
  • இரும்புக்காலம்
  • இலக்கணம்
  • இலக்கிய நூல்கள்
  • இலக்கியம்
  • இலக்குவனார்
  • இலங்கை
  • இழிமொழி
  • இழிவு
  • இறப்பு
  • இனம்
  • ஈகிகள்
  • உ.வே.சா.
  • உச்சர நீதிமன்ற தீர்ப்பு தமிழில்
  • உருக்கு இரும்பு
  • உருது
  • உலகம் முழுவதும் தமிழ்
  • உவேசா
  • ஊர்தி பயணம்
  • எகிப்து பிரமிடு
  • எகிப்து பிரமிடு கல்லறை
  • எண்கள்
  • எலும்புக்கூடு
  • எழுத்து
  • எழுத்து சீர்திருத்தம்
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்பது
  • ஓகம்
  • ஓமன்
  • கட்டாயம்
  • கடவுள்
  • கடவுள் வாழ்த்து
  • கடை
  • கண்ணகி
  • கம்போடியா
  • கருநாடகம்
  • கருப்பு
  • கல்திட்டை
  • கல்லூரி
  • கல்வெட்டு
  • கலவை மொழி
  • கலைஞர்
  • கவரி மான்
  • களவு
  • கனடா
  • கால்டுவெல்
  • கி வீரமணி
  • கி.வீரமணி
  • கிணறு
  • கிழமை
  • கீழடி
  • குடமுழுக்கு
  • குமரி அனந்தன்
  • கோபுரம்
  • கோயில்
  • சங்க இலக்கியம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கராச்சாரி
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சர்.ஏ. டி. பன்னீர்செல்வம்
  • சனாதனம்
  • சாதி
  • சிகை கொற்றன்
  • சிங்கப்பூர்
  • சிந்து சமவெளி
  • சிந்துவெளி
  • சிலப்பதிகாரம்
  • சிறப்பு
  • சீர்திருத்தம்
  • சீனா
  • செங்காந்தள்
  • செந்தமிழ்
  • செந்தமிழ் எழுத்துகள்
  • செந்தமிழ் சொற்பிறப்பியல்
  • செந்தமிழ்.புரட்சிக்கவிஞர்
  • செம்மொழி
  • சொல் சிறப்பு
  • சொற்கள்
  • சொற்போர்
  • டி.ஆர்.பாலு
  • தந்தை பெரியார்
  • தமிழ்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் ஆண்டு
  • தமிழ் இருக்கை
  • தமிழ் எண்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் காந்தி
  • தமிழ் சுவடி
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் பயிற்சி
  • தமிழ் பாடம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பெருமை
  • தமிழ் மரபு
  • தமிழ் மைல் கல்
  • தமிழ் மொழி
  • தமிழ் வணிகரின் பெயர்
  • தமிழ்த் தாத்தா
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு நாள்
  • தமிழ்ப் பற்று
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் பெயர்கள்
  • தமிழக பரப்பு
  • தமிழர்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் மதம்
  • தமிழர் விழா
  • தமிழர்கள்
  • தமிழி
  • தமிழிசை
  • தமிழில் கையொப்பம்
  • தமிழில் பெயர்
  • தமிழின் பிள்ளைகள்
  • தமிழினம்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழ்நாடு
  • தாய்லாந்து
  • திங்கள்
  • திராவிட மொழி
  • திராவிடம்
  • திராவிடம்-தமிழ்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் பண்பாட்டு திருவிழா
  • திரு
  • திருக்குறள்
  • திருக்குறள் மாநாடு
  • திருத்தம்
  • திருப்புகழ்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் விருது
  • திருவிக
  • திருவில்லிபுத்தூர்
  • தினமலர்
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துப்பாக்கி சூடு
  • துளு
  • தேசம்
  • தேவநேய பாவாணர்
  • தேவநேயப்பாவாண்ர்
  • தை
  • தை மாதம்
  • தைப்பொங்கல்
  • தொண்டு
  • தொல்காப்பியம்
  • தொன்மை
  • தொன்மை மொழி
  • தோற்றம்
  • நில அளவை
  • நினைவு சின்னம்
  • நீச பாசை
  • நீதிக்கட்சி
  • நீர்நிலைகள்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூல்கள்
  • நோபல் பரிசு
  • பண்பாடு
  • பதிப்பித்தவர்
  • பதிப்பு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரிதிமாற் கலைஞர்
  • பல்கலைக்கழகம்
  • பழந்தமிழ்
  • பழந்தமிழர் முறை
  • பாகுபாடு
  • பார்ப்பன பனியா
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பாரதி
  • பாவாணர்
  • பானை ஓடு
  • பிராகிருதம்
  • புத்தகம்
  • புத்தாண்டு
  • புரட்சி கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறநானூறு
  • பூங்கா
  • பெயர் பலகை
  • பெயர்ப்பலகை
  • பெரியார்
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேரணி
  • பொங்கல்
  • பொள்ளாச்சி
  • ம்னிதன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறைமலை அடிகள்
  • மனுதர்மம்
  • மாட்டிறைச்சி
  • மாநாடு
  • மின்சாரம்
  • முதல் நூல்
  • முதன்மை
  • முதன்மை மொழி
  • முதன்மொழி
  • முதுமக்கள் தாழிகள்
  • மும்மூர்த்திகள்
  • முருகன்
  • மூல மொழி
  • மே.வங்கம்
  • மைசூரு ஆய்வகம்
  • மைல்கல்
  • மொழி
  • மொழி புள்ளிவிவரம்
  • மொழி வெறுப்பு
  • மொழி-பெரியார்
  • மொழிகள் அழிவு
  • மொழிப்பயிற்சி
  • யாதும் ஊரே
  • யோகா
  • ராபர்ட் கால்டுவெல்
  • ராவணன்
  • வ .உ. சி
  • வ உ சி
  • வ.உ.சி.
  • வடமொழி
  • வடமொழிகள்
  • வணிகம்
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வளர்ச்சி
  • வன்மம்
  • விருது
  • வேதம்
  • ஜாதி
  • ஜி.யு.போப்
  • ஜெயமோகன்
  • ஹிந்தித் திணிப்பு

பிரபலமான இடுகைகள்

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
    பழமையான பாடல் ஒன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது, கணியன் பூங்குன்றனார் எழுதிய, "யாதும் ஊரே யாவரு...
  • தமிழ்ப் பதிப்பின் தலைமகன்
    ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் மு...
  • திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?
    'துக்ளக்கின்' கோணல் பார்வை.... கி.தளபதிராஜ் மயிலாடுதுறை நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட...
  • திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
    இதழியல் தமிழ் "திராவிட இயக்கத்தின் போராட்டத்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை; எழுதுகோல் தான் அவர்...
  • தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும்
    தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும் ஆதாரங்கள் இதோ : தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் அற்ப பேர்வழிகளுக்கான பதில்  ===========...
  • தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள்
    தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள்  உங்கள் பார்வை அ அகல்விழி , அருள்மொழித்தேவி , அழகுதெய்வாணை , அகநகை , அருளரசி , அழகுநங்கை , அகமுடைநங்கை , அ...
  • ‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை
    ‘‘யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங்...
  • செங்காந்த மலர்
    காந்தள் , செங்காந்தள் , வெண்காந்தள் மலர் : ஓர் அலசல் .                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ...
  • வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் எது சரி!
    ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.   இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்...
  • தொல்காப்பியத்தில் சாதி
    - ஊரன் அடிகள் தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் சிறப்பு. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.