பக்கங்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஒட்டன்சத்திரம் அருகே கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

ஒட்டன்சத்திரம், ஆக.31_ ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட் டம், ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை யில் உள்ள பச்சை மலை அடிவாரத்தில், தொல் லியல் ஆய்வாளர் நாரா யணமூர்த்தி தலைமையி லான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப் போது, அங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள், பானைகள், ஓடுகள் என மொத்தம் 64 கற்காலக் கருவிகள் அகழ்வாராய்ச் சியில் கிடைத்துள்ளன.
இது குறித்து, தொல்லி யல் ஆய்வாளர் நாராய ணமூர்த்தி தெரிவித்ததாவது:
பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில், அதா வது சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 6 கற்காலக் கருவிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இவை, கற்கால மனிதர் கள் பயன்படுத்திய வேட்டை ஆயுதங்களா கும்.
மேலும், புதிய கற் காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த 58 கருவிகளும் கண்டெடுக் கப்பட்டுள்ளன. அவற் றில், 26 செவ்வக வடிவக் கருவிகளும், 19 சதுர வடி வக் கருவிகளும், 10 நீள் செவ்வக வடிவக் கருவி களும் அடங்கும். புதிய கற்காலத்தின் தொடக்க மான, சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு விதமான அளவு களில் வேட்டையாடும் கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
அதில், சதுர, செவ்வக வடிவிலான கரு விகளை எடைக் கற்களா கப் பயன்படுத்தி இருக்க லாம் என்றும், மூலிகை களை அரைக்க விசிறி போன்ற கருவிகளும், தேய்ப்புக் கல்லும் பயன் படுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது.  புதிய கற் காலத்தின் தொடக்கமும், தமிழின் முதல் சங்க கால மும் ஏறத்தாழ சமகால கட்டத்தைக் கொண்டி ருப்பதால், முதல் சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இந்தக் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கலாம்.
ஆராய்ச்சி யில், மூன்றாம் சங்க காலத்தைச் சேர்ந்த பானை, ஓடுகள், ஆட்டுக் கற்கள் உடைந்த நிலை யில் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பாறையில் 12 கற் குழிகள் (உரல்கள்) காணப் படுகின்றன.
இவை, சங்க கால மக்கள் தினை, கேழ்வரகு, சாமை போன்ற உணவு தானியங்களை குத்தவும், அரைக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.  இதுபோன்ற கற்குழிகளை உருவாக்கிப் பயன்படுத்தும் வழக்கம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந் துள்ளது.
எனவே, இங்கு கிடைத் துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், பச்சை மலையில் மனிதனின் நடமாட்டமும், வாழ்க்கை முறையும் பழைய கற்காலத் திலிருந்தே, அதாவது சுமார் 60 ஆயிரம் ஆண் டுகளுக்கு முன்பே இருந் துள்ளது என்பது உறு தியாகிறது என்றார்.
-விடுதலை,31.8.15

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின் றனர்.
ஜவ்வாது மலையில், மேல்பட்டு அடுத்த பெரு முட்டம் என்ற சிறிய கிராமத்தில் நூற்றுக்கணக்கான கல் திட்டை கள் சிதைக்கப்பட்டு வருவதாக திருவண்ணாமலை மாவட்டம் செங் கத்தில் வசிக்கும் தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவிக்கிறார்.
அவர் மேலும் கூறும்போது, ஜவ் வாது மலையில் பண்டைய மனிதர் களின் தொன்மையான வாழ்க்கை முறை பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. பெருமுட்டம் மலை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட கல் திட்டைகள் உள் ளது தெரிய வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இதுபோன்ற கல் திட்டைகளை பண்டைய மனிதர்கள் உருவாக்கி உள்ளனர். அதன் காலம், கி.மு.1,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
அந்த கிராமத்தில் உள்ள பாண் டவர் குட்டை என்ற இடத்தில் 40-க் கும் மேற்பட்ட கல்திட்டைகளும், மலை யடிவாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கல் திட்டைகளும், ஜொனை மடுவு என்ற பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கல்திட் டைகளும் காணப்படுகின்றன. அவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. 6 அடி நீளமும், 4 அடி அகலமும் உள்ள பெரிய கல் திட்டைகள் மற்றும் 2 அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள சிறிய கல் திட்டைகள் உள்ளன. அதனை குள்ளர் குகைகள் என்று மக்கள் அழைக்கின்றனர்.
பூமிக்கு மேலே உள்ள பாறையின் மீது பல கல்திட்டைகளும், பூமிக்கு கீழே பலகை கற்களை கொண்டு கல்லறை வடிவிலும் கல்திட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. கல்லறையை சுற்றி உருண்டை கற்களை அடுக்கி கல் திட் டைகளை உருவாக்கி உள்ளனர். பாறைகளுக்கு தீயிட்டு இயற்கையான முறையில் பாறைகளை பிரித்துள்ளனர்.
கல்திட்டைகள் அதிகம் உள்ள பகுதியில் வாழ்ந்த குள்ள மனிதர்கள், அவற்றை அழித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும், பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, இந்த பகுதியில் தங்கி சென்றதாக மலைவாழ் மக்கள் நம்புகின்றனர். அதனாலேயே பாண்டவர் குட்டை என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.
ஜொனைமடுவு என்ற இடத்தில் கற்கருவிகளை உருவாக்க பாறையில் கல்லை கொண்டு, பண்டைய மனிதர்கள் தேய்த்ததால் ஏற்பட்ட பள்ளங்களை காணலாம். வரலாற்று சிறப்புமிக்க கல் திட்டைகளில் உள்ள கற்களை, வீடு கட்டும் பணிக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய பணியின்போதும் இவை அழிக்கப்படுகின்றன. இதை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்றார்.
விடுதலை ஞ.ம.16.8.15

.

சனி, 15 ஆகஸ்ட், 2015

தமிழை விரும்பும் சீனப் பெண்

தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.
நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கு என்று புன்னகைக்கிறார் நிலானி.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத் தமிழ் டிப்ளமோ படிப்பு படித்து வருகிறார். நிலானியின் பேச்சில் தமிழ் மொழி மீது அவருக்கு இருக்கும் தீராத காதல் வெளிப்படுகிறது.
தமிழ் மொழி அருமையானது. அதன் உச்சரிப்பில் உள்ள இன்பம் உலகில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் மொழிக்கு எந்நாளும் ஆங்கிலம் மாற்றாகாது. ஆங்கிலத்தை முன் வைத்துத் தமிழை அலட்சியப்படுத்துவதால் ஓரினம் அழிவதோடு, உன்னதமான பண்பாடும் கலாச்சாரமும் அழிந்துவிடும் - தமிழை நாம் போற்றி வளர்க்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார் நிலானி.
நிலானிக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் ஹூ லீ யுவான். சீனா தகவல் தொடர்பாளர் பல்கலைக் கழகத்தில்  தமிழ் இனத் தொடர்பியல் பட்டப் படிப்புக்கு சேரும் வரை அவருக்குத் தமிழ் தெரியாது. அங்கு சுந்தரம் என்ற பேராசிரியர்தான் தமிழ் கற்க சீனர்களுக்கு காலங்காலமாக வழிகாட்டியாக இருந்துவருகிறார்.
அவரிடம்தான் நிலானியும் தமிழ் பயின்றார். சுந்தரம் ஆசிரியரும் சீனர்தான். அவர் தமிழ் படித்து, சீனர்களிலேயே பல தமிழ் மாணவர்களை உருவாக்கி வருகிறார். நான் தமிழ் இனத் தொடர்பியல் மற்றும் செய்தி மொழிபெயர்ப்புப் பாடங்களை எடுத்து பல்கலையில் நான்காண்டுகள் படித்து பட்டம் பெற்றேன்.
என் பெற் றோருக்குத் தமிழ் தெரியாது. நான் தமிழ் படிக்கப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் என் தமிழ் ஈடுபாட்டை அதிகரித்தன.
படிப்பு முடிந்ததும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் எனக்கு அறிவிப்பாளர் பணி கிடைத்தது. அதில் விநாடி-வினா, சீன சமையல் குறிப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவேன். முக்கியமாக அங்கே நிகழ்ச்சி அறிவிப்பாளர் பணிதான் என்னுடையது என்று பூரிக்கிறார் நிலானி.
-விடுதலை,11.8.15

இரத்தக்கறை படிந்த நாள் ஆகஸ்டு பதினொன்றுதிருவிதாங்கூர் தமிழர் போராட்டம் இன்னொரு நாட்டிலிருந்த தமிழ்ப் பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். இந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் தென் னெல்லைக் காவலன் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி.
திருவிதாங்கூர் தமிழர்கள், சமூகநீதி, பெண்ணுரிமை, மண்காப்பு, ஆலய நுழைவு, வாக்குரிமை, மொழிக்காப்பு ஆகியவற்றிற்காக சுமார் 300 ஆண்டு கள் போராடி வந்தனர். 1921 லிருந்து 1956 வரை நேசமணி வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இந்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் 1948 பிப்ரவரி 8 இல் தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இரு போராளிகளும் திருவிதாங்கூர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழர்களை மிகவும் துன்புறுத்தியது திருவிதாங்கூர் அரசு. தமிழ்த்தலைவர்களை கையில் விலங்குபோட்டு அழைத்து சென்றனர். 650க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டனர். குப்புசாமி என்ற இளை ஞரை அடித்து செவிப்பறையைக் கிழித்து விட்டனர். சுப்பையா என்ப வரை விலங்குபோட்டு கடைவீதியிலே நடக்கச் செய்தனர். 434 தமிழர்களையும் 20 தமிழ்ப் பெண்களையும் ஒரே சிறை யில் அடைத்தனர். எங்கும் கதறலும் கண்ணீருமாக இருந்தது. அவர்களின் அபயக்குரல் கேட்ட தலைவர் நேசமணி ஜனாப்ரசாக் (எம்.பி), முன் னாள் அமைச்சர் மாண்புமிகு சிதம்பர நாதன் ஆகியோர் தேவிகுளம் சென் றனர். 4.7.1954 அன்று அவர்கள் மூணாற்றில் வைத்து பி.சி.அலெக் சாண்டரால் கைது செய்யப்பட்டனர். பீர்மேடு, தேவிகுளம் பற்றி நேசமணியின் உரை
நீங்கள் தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களுக்குச் சென்று அங்கே வளர்க்கப்பட்டிருக்கின்ற தேயிலைச் செடிகளையெல்லாம் கேட்டுப் பாருங் கள். அவைகளையெல்லாம் தங்களது பிஞ்சுக்கரங்களால் தமிழர்கள் எவ்வாறு நட்டனர் எனவும், தங்களது நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி எவ்வாறு அவைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினர் என்றும், தங்களது எலும்பையும், குருதி யையும் காணிக்கையாக்கி அவை களுக்கு எவ்வாறு உரமிட்டனர் என்பனவற்றையெல்லாம் உங்களுக்கு அவைகள் கூறும். தவிரவும் அப் பிரதேசங்கள் அனைத்தும் தமிழர் களுக்குச் சொந்தமான நாடு என்பதை யும் உங்களுக்கு அவைகள் எடுத்தி யம்பும் என்று கூறுகிறார்.
தந்தை பெரியாரின் பங்கு
மார்சல் நேசமணி கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தபோது, திரு விதாங்கூர், தமிழ்நாடு காங்கிரசைத் தங்கள் இயக்கத்துடன் இணைக்க தமிழகத்திலுள்ள பல தலைவர்கள் ஆசைப்பட்டனர். திருவிதாங்கூர், தமிழ் நாடு காங்கிரசை உடைத்தெறிய மலை யாள அரசு ஆசைப்பட்டது. இவற்றுக் கெல்லாம் அப்பாற்பட்டு செயல்பட்ட வர்தான் பெரியார். ஆகையால்தான் நேசமணியும், தியாகிகளும் பெரியார் என்றவுடன் மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளனர். தன் கரத்தால் நேசமணி மாலை சூட்டியது பெரியாருக்கு மட்டுமே.
தென்னெல்லைக் காவலன் நேச மணியையும் உடன் சென்றவர்களை யும் விடுதலை செய்ய திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அடக்க முடியாத அரசு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவர்களை விடுதலை செய்தது. நேசமணி விடுதலை தினத்தையும், நாட்டு விடுதலை தினத்தையும் இணைந்து கொண்டாட திருவிதாங்கூர் தமிழ்மக்கள் திட்டம் போட்டனர். எங்கும் ஊர்வலமும் கூட்டமும் நடை பெற்றன. இதனால் விளவங்கோட்டில் துப்பாக்கிச் சூடுநடந்தது. இந்த துப் பாக்கிச் சூட்டில் இறந்த தமிழ் தியாகிகள் தினம்தான் 1954 ஆகஸ்ட் 11.
இப்போராட்டத்தில் தன் இன்னுயிரை தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் ஈந்த தியாகிகள்:
ஏ.அருளப்பன் நாடார் - புதுக்கடை, எம்.முத்துசாமி நாடார் - கிள்ளியூர், எம்.குமரன் நாடார் - தோட்டவாரம், எம்.செல்லப்பா பிள்ளை - புதுக்கடை, ஏ.பீர்முகமது - தேங்காய்ப்பட்டணம், சி.பப்புப் பணிக்கர் - தொடுவெட்டி, எஸ்.இராமையன் நாடார் - நட்டாலம், ஏ.பொன்னப்பன் நாடார் - தோட்ட விளை, எம்.பாலையன் நாடார் - தோட்டவிளை, மணலி
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன் நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். ஒருவர் வண்டி யேற்றிக் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மடிச்சல் சங்கு நாடார் கொலை செய்யப்பட்டு கிணற் றில் போடப்பட்டார். கருவுற்ற பெண் ஒருத்தியும் கொல்லப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாகச் சான்றுகள் உள்ளன.
இந்தத் தியாகிகளைத் தமிழ் உலகம் கண்டுகொள்ளவே இல்லை. அவர் களுக்கு சிலை வைக்கவோ, பாராட்டு நடத்தவோ இல்லை. அதைவிட வேத னையான ஒன்று திருவிதாங்கூர் தமிழர்களே இந்தத் தியாகிகளை மறந்து விட்டார்கள். தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்வோம். மதிப்போம், இறந்து போன தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து வாழ வைக்கும் படி வேண்டுகிறோம்.
அன்றைய அரசர்கள் வட்டார மொழிகளுக்கு இடம் கொடுத்த கார ணத்தால் பல கிளைமொழிகள் தோன் றின. ஆகையால் தமிழக அரசு, வட்டார மொழிகளுக்கு சிறிதும் இடம் கொடுக் காமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறோம். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி களைப் பாராட்டி தமிழக அரசு நினைவு நாள் கடைப்பிடித்து வருகிறது. அவர் களது தியாகத்தை நினைவுகூரும் தமிழக அரசைப் பாராட்டுகிறோம். இதைப்போன்று தமிழ் மண் ணுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தென்னெல்லைக் காவலன் குமரித் தந்தை மார்ஷல் நேசமணி தலை மையில் நடந்த போராட்டத்தில் தம் இன்னுயிரைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுத்த தியாகிகளை இணைத்தோ அல்லது அவர்கள் பலியான ஆகஸ்ட் 11 அய் நினைவு நாளாக கடைப்பிடிக்க தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆணை பிறப்பிக்க கேட்டுக்கொள் கிறோம்.
- டாக்டர் ஆ.மலர்ரெத்னா
(நாகர்கோவில்)
-விடுதலை,12.8.15