வியாழன், 24 அக்டோபர், 2019
‘திராவிடம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லா?
புதன், 23 அக்டோபர், 2019
தமிழ் இலக்கியங்கள்
வெள்ளி, 18 அக்டோபர், 2019
"வே" என்பதின் சிறப்பு...
⚜ *"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
⚜ *கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.
⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.
⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.
⚜ *ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.
⚜ *வாழ்க தமிழ்!
- கட் செவி வழியாக வந்தது
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
பழமையான பாடல் ஒன்று...
இன்று
உலகம் முழுவதும்
தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது,
கணியன் பூங்குன்றனார் எழுதிய,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
இதன் முதல் வரி மட்டுமே, புகழ்பெற்ற வரியாக பலரால் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும், வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....
முழுப் பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்காக !
*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*
– கணியன் பூங்குன்றனார்
பாடலின் வரிகளும், பொருளும்:
*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."
எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......
*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....
*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*
துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...
*"சாதல் புதுமை யில்லை*.."
பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......
*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*
இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......
*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."
இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...
*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."
இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...
*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*
எழுதியவர் ஊர் -
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுக்கா
*மகிபாலன்பட்டி* கிராமத்தில்....
அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
வரவேற்கிறது....!
- மு.ந. மதியழகன் பகிர்தல் வழியாக அனுப்பியது
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
பழமையான பாடல் ஒன்று...
இன்று
உலகம் முழுவதும்
தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது,
கணியன் பூங்குன்றனார் எழுதிய,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
இதன் முதல் வரி மட்டுமே, புகழ்பெற்ற வரியாக பலரால் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும், வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....
முழுப் பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்காக !
*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*
– கணியன் பூங்குன்றனார்
பாடலின் வரிகளும், பொருளும்:
*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."
எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......
*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....
*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*
துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...
*"சாதல் புதுமை யில்லை*.."
பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......
*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*
இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......
*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."
இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...
*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."
இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...
*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*
எழுதியவர் ஊர் -
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுக்கா
*மகிபாலன்பட்டி* கிராமத்தில்....
அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
வரவேற்கிறது....!
- மு.ந. மதியழகன் பகிர்தல் வழியாக அனுப்பியது
திங்கள், 14 அக்டோபர், 2019
சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழியின் சிறப்பு
இனிச் சமஸ்கிருத மொழியின் கண்ணே பால் வகுப்புக் சொன்னோக்கத்தாலேற்பட்டுளதே யன்றிப் பொருணோக்கத்தாலேற்பட்டிலது. உதாரணமாக, கையெனப் பொருள்படும் ‘கரம்‘ என்ற சொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே ‘தாரம்‘ என்பது ஆண்பால்.
களத்திரம் என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஆராற்றனமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொருணோக்கத்தாலேற்பட்டுளவேயன்றிச் சொன் னோக்கத்தாலேற்படவேயில்லை.
இது தமிழ்மொழியின் சிறப்புகளுள் ஒன்று. வட நூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோடியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடை யனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிகளெல்லாம் பொருணோக்கப் பால் வகுப்பு சிறப்புடையன. இவ்வுண்மையொன்றே தமிழ்மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்கச் சான்று பகரும்“
வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் பி.ஏ.,
நூல், தமிழ்மொழியின் வரலாறு
பக்கம் -333
- விடுதலை ஞாயிறு மலர், 28.9.19
வெள்ளி, 11 அக்டோபர், 2019
ஹரியான மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழியாக 44 ஆண்டுகள் இருந்த வரலாறு தெரியுமா?
1966-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா பிரிந்தது. ஹரியானாவில் பஞ்சாபிகளும் அதிகமாக வசித்தனர். இவர்களின் தாய் மொழி பஞ்சாபி.
சண்டிகர் நகரம் சண்டிகர் நகரம்
பங்காளிகள் பிரிந்தால் சச்சரவுகள்தானே ஏற்படும். தண்ணீர் பங்கீட்டிலிருந்து பல பிரச்னைகளுக்காக இரு மாநிலங்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டன. இப்போது வரைக்கும் இரு மாநிலங்களுக்கும் சண்டிகர் நகரம்தான் பொதுவான தலைநகராக உள்ளது. ஹரியானா தனக்கென்று தனியாகத் தனி தலைநகரை உருவாக்கிக் கொள்ளவில்லை.
ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் இந்தி பேசுபவர்கள். இதனால், அலுவல மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பஞ்சாபி பேசும் மக்கள், தங்கள் மொழியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்த போதுதான் பிரச்னை எழுந்தது. பஞ்சாபியை அலுவல் மொழியாக்கினால், இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக, இருக்கும் என அப்போதைய ஹரியானா முதல்வர் பன்சி லால் கருதினார். இதனால், பஞ்சாபிக்கு முக்கியத்துவம் கொடுக்க பன்சி லால் விரும்பவில்லை. உடனடியாக, அவரின் நினைவுக்கு வந்தது உலகின் மூத்த மொழியான தமிழ்தான். தயக்கமே இல்லாமல் ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாகத் தமிழை அறிவித்தார் பன்சிலால்.
அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. `ஹரியானாவில் தமிழை அலுவல் மொழியாக்கினால், வட இந்திய மாநிலம் ஒன்றில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கிறது. நாமும் இந்தியை எதிர்க்கக் கூடாது எனத் தமிழர்கள் கருதுவார்கள்' என்றும் பன்சி லால் நினைத்தார். இதுவும் ஹரியானாவில் தமிழ் அலுவல் மொழியாக ஒரு காரணமாக இருந்தது. ஹரியானாவில் பன்சி லாலுக்குப் பிறகு பல முதல்வர்கள் மாறினாலும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஹரியானாவில் தமிழ் இரண்டாவது அலுவல் மொழியாக இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு ஹரியானா முதல்வராகப் பதவியேற்ற பூபிந்தர் சிங் ஹூடா, தமிழை நீக்கிவிட்டு, பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்கினார்.
இந்தி மொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது பார்த்தீர்களா?
- பகிரி வழியாக வந்தது
சீனாவில் தமிழ் கல்வெட்டு
சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 கல் வடக்கே *சூவன்சவ்* என்னும் துறைமுக நகர் உள்ளது.
பண்டை காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கியது!
பண்டைய காலத்தில் தமிழ் வணிகர்கள் ஏராளமானோர் இந்த துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிக கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன்
மேற்கு கரையோரமாக
உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு,
வியட்நாம் சென்று அங்கிருந்து
*சீன நாட்டை* அடைந்துள்ளன!
சீனாவில் தமிழ் வணிகர்கள் காண்டன் நகரில் மட்டுமின்றி மேலும் சில இடங்களிலும் குடியேற்றங்களை அமைத்திருந்தனர்.
பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்ப்பெற்ற வணிகக் குழாமான
*திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்* எனும் குழுவினர், சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான *செங்கீஸ்கானின் பேரன்களில் ஒருவன் குப்லாய்கான்!*
இவன் கி.பி.1260இல் சீனா சக்கரவர்த்தியாக பொறுப்பேற்றான் !
இவனது ஆட்சியின் கீழ் சீனா இருந்த போது,
பெய்சிங்க் என்னும் புதிய நகரை உருவாக்கி அதனை தனது பேரரசின் தலைநகராக்கினான்! புகழ்ப்பெற்ற *யுவான் அரச மரபை* இவனே தொடங்கினான்.
*தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில்,*
அப்போதிருந்த
*பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியன் சீனா மன்னனுடன் நல்லுறவைப் பேணினான்.!*
*பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர்.!*
*இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது!*
*இந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு சான்றாக*
* சீன நாட்டில் குவன் சவ் துறைமுக நகரில் பழமைவாய்ந்த. சிவ ஆலயம் ஒன்றில்
*தமிழ் கல்வெட்டு* *ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது*.
*பண்டைய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டில்* கடைசி வரிகள்
*சீன எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளன*.
தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ் கல்வெட்டாக இது கருதப்படுகிறது.
---------------*
நன்றி;
தமிழர் தகவல் தளத்தில்
படித்ததில் பிடித்தது
https://m.facebook.com/story.php?story_fbid=726446251153103&id=100013632037906
MGR TV ஹமீது
@
MGR TV NEWS
இந்தியன் ஜர்னலிஸ்டு சர்வீஸ் IJS அகடாமி
99410 86586