பக்கங்கள்

திங்கள், 8 ஜூன், 2015

ரோமானிய எழுத்துக்களுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு


திருப்புவனம், மே 23_ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் மத்திய தொல் பொருள் துறையினர் நீண்ட அகழ் வாராய்ச்சியை மேற்கொண் டுள்ளனர்.
மத்திய தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந் திரா, கருநாடகம்) தலை மையில் சென்னை பல் கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் உட் பட 30 பேர் கொண்ட குழு இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பண்டைய வணிக நகரமான 'மதுரை நகரம்' முற்றிலும் அழிந்து விட் டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப் படவில்லை. முதன் முறை யாக மத்திய அரசு தொல்லி யல்துறைக்கு ஓர் ஆண்டு ஆய்வு மேற்கொள்ள அனு மதி அளித்து பணிகள் நடந்து வருகின்றன.
தற்போதைய ஆய்வில் பண்டைய மதுரை நகரம் வணிக நகரமாக திகழ்ந்த தற்கான சான்று கிடைத் துள்ளது. ராமேஸ்வரத் தில் இருந்து மதுரைக்கு ஏராளமான வணிகர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயன் படுத்திய பொருட்கள், நாணயங்கள், குறியீடுகள், தங்குமிடம் உள்ளிட்ட வற்றை தேடும் பணி நடைபெறுகிறது.
மதுரை நகரை ஒட்டி வைகையாறு செல்லும் பாதையில் 12 கி.மீ., தூரத் திற்குள் இந்த அகழ்வா ராய்ச்சி பணி நடைபெறு கிறது.
ராமேஸ்வரம் துறை முகத்தில் இறங்கிய வணி கர்கள், வைகை ஆறு வழி யாக வந்து கரையோரத் தில் வணிகத்தில் ஈடுபட் டுள்ளதாக தெரிகிறது என்றும், இதனை மய்ய மாக வைத்தும் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுவதாக அதி காரிகள் தெரிவித்தனர்.
ரோமானிய குறியீடுகள்
தமிழகத்தில் 1963 முதல் 1973 வரை காவிரி பூம்பட்டினத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிக்கு பிறகு மதுரை நகரை ஒட்டி மிக நீண்ட கால அகழ்வா ராய்ச்சி பணி நடைபெறு கிறது. தற்போதைய அகழ் வாராய்ச்சி பணியில் ரோமானிய குறியீடுகளு டன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத் தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப் பட்டுள்ளன. பழங்காலத் தில் பயன்படுத்திய அகல மான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறை கள், தொட்டிகள் ஆகிய வற்றையும் தற்போது கண் டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே யுள்ள கீழடி பள்ளிச் சந்தை திடல் என்றழைக் கப்படும் இடத்தில் சோனை மகன் சந்திரன், அப்துல் ஜபார் மகன் திலிப்கான் என்பவரது இடங்களில் 5மீட்டர் ஆழம், 5மீட்டர் அகலம் கொண்ட குழி கள் வெட்டப்பட்டு அகழ் வராய்ச்சி பணி நடை பெறுகிறது.
தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர் நாத் ராமகிருஷ்ணன் கூறுகையில், தென் தமிழகத்தில் மதுரையை மய்யமாக கொண்டு பாண் டிய மன்னர்களின் ஆட்சி காலம் குறித்த முதல் அகழ்வராய்ச்சி இது. குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகை யாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண் மையா என ஆராய இந்த பணி நடைபெறுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப் பாக நடந்தது என்பதற் கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சி யில் கிடைத்துள்ளன.
ரோமானிய குறியீடுக ளுடன் கூடிய மண் பானை துண்டுகள், பாண் டிய மன்னர்கள் காலத்திய முத்து மாலைகள், அவர் கள் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் மண்பானைகளில் கருப்பு, சிவப்பு உள்ளிட்ட இரண்டு வர்ணங்கள் மட்டுமே உள்ளன. தண்ணீர் ஊற்ற பயன்படும் 'ஜக்' போன்ற அமைப்பின் வாய்ப்பகுதி கிடைத்துள்ளது. பெரிய அகலமான செங்கற்கள் கொண்ட வீட்டின் ஒரு பகுதி மட்டும் முழுமை யாக உள்ளது. பள்ளிச் சந்தை திடல் என்பது வணி கர்கள் திடல் என்பதால் இங்கு பணிகளை மேற் கொண்டுள்ளோம். மார்ச் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை அகழ்வ ராய்ச்சி பணி நடை பெறும். இதுவரை 19 இடங் களில் பணிகள் மேற் கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளோம், என்றார்.

-விடுதலை,23.5.15,பக்-4