பக்கங்கள்

வியாழன், 2 மார்ச், 2017

இரா .பி .சேதுப் பிள்ளையின் 120ம் ஆண்டு பிறந்த நாள்.

வரலாற்றில் இன்று
(மார்ச் மாதம் 2)
சொல்லின் செல்வர்
      தமிழறிஞர்
இரா .பி .சேதுப் பிள்ளையின் 120ம் ஆண்டு
பிறந்த நாள்.
-- சு.குமார தேவன் --
* இராசவல்லிபுரம் பிறவிப் பெருமான் பிள்ளை சேதுப்பிள்ளை என்பது இவரது முழுப் பெயர்.
* சிறந்த தமிழறிஞர் வழக்கறிஞர் மேடைப் பேச்சாளர் தர்க்கவியலாளர் இலக்கியவாதி எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.
* தமிழிலக்கியத்தின் சிறப்புக்களான எதுகை மோனை உவமை நயச் சுவையினை எளிமைப்படுத்தி எல்லோரும் புரியும் வண்ணம் உரை நடை யாக்கி பின்பு தன் மேடைப் பேச்சில் அருவியாய்ப் பொழிவார்.
* தமிழ்ச் சொற்களை இரா .பி .சே. பயன்படுத்தும்
அழகை வியந்த தமிழுலகம் "சொல்லின் செல்வர் " என்று போற்றியது. அதன் பின் அவரது அயரா உழைப்பு அடங்கியுள்ளது.
* "தீ பரவட்டும் " என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா சட்டக் கல்லூரியில், இராமாயணம் மகாபாரதம்
பெரிய புராணம் போன்ற நூல்களை எரிக்க வேண்டும் என்று வாதிட்டு உரை நிகழ்த்திய போது சேதுப்பிள்ளை எதிர்த்து வாதிட்டார். பின்பு பாதியில்
இரயிலுக்கு நேரமாச்சு என்று பாதியில் சென்று விட்டார்.
* திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போது அர்த்தமில்லாத பெயர்களை நீக்கி தூய தமிழ்ப் பெயர்களை சூட்டினார். இதன் மூலம் வழக்கிழந்த சமஸ்கிருதப் பெயர்கள் நெல்லைத் தெருக்களை விட்டு அகன்றன.
* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் அருந்தமிழ்த் தொண்டாற்றிய கா.சு.பிள்ளை இவரது தமிழறிவு கண்டு வியந்து
விரிவுரையாளராக்கினார்.
விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரின் கீழ் பணியாற்றினார். தமிழின் மேல் கொண்ட
தணியாத ஆர்வத்தினால்
வருமானம் கொழித்த வக்கீல் தொழிலை விட்டு தமிழ்த் தொண்டாற்றினார்.
* பின்பு சென்னைப் பல்கலையில் 25 ஆண்டுகள் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தார். முதுபெருந்தமிழறிஞர்
எஸ்.வையாபுரிப் பிள்ளையின் அத்தனை முயற்சிகளுக்கும் உதவி புரிந்தார்.சென்னைப் பல்கலை வெளியிட்ட
பேரகராதி (Dictionary) உருவாகக் காரணமாக இருந்த வையாபுரியார் முயற்சிக்கு உற்ற துணை புரிந்தார். அவரது பணி ஓய்வுக்குப் பின் தமிழ்த் துறைத் தலைவரானார்.
* தான் பயின்ற பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் பல கல்லூரிகளில் பாடம் எடுப்பார்.
* தமிழின் இனிமையை ஆங்கிலத்தின் மூலம் அருமையாக இவர் விளக்குவதைக் கேட்க
பலர் காத்திருப்பார்கள்.
* திராவிடப் பொது மொழிகள், திராவிடப் பொதுச் சொற்கள் ஆகிய இவரது அரிய ஆராய்ச்சி நூல்கள் சென்னைப் பல்கலையால் வெளியிடப் பட்டன.
* 20க்கும் மேற்பட்ட பல்வேறு நூல்கள் சேதுப்பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டன. தமிழ் இன்பமானது என்பதை இவரது எழுத்துக்களால் உணரலாம்.
வாழ்க இரா .பி .சே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக