பக்கங்கள்

தமிழ் கல்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் கல்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜூலை, 2025

கருநாடகத்தில் 10-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்புத்தில் 10-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு



 பெங்களூரு, ஜூலை 4 கருநாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், எணகும்பா எனும் கிராமத்தில் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் நடுகல் கல்வெட்டு கண்டெடுக் கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சிக்கள்ளி அரசுப் பள்ளி ஆசிரியா் ஜான் பீட்டா், யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள் குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் இந்தக் கிராமத்தில் அண்மையில் களஆய்வு செய்து இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆவணப்படுத்தினா்.

இதுகுறித்து யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்களும் கல்வெட்டு ஆராய்ச்சியாளா்களுமான குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் நேற்று (3.7.2025) கூறியதாவது:

கருநாடகத்தில் முதலாம் ராஜராஜன் காலத்திலிருந்து ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் 1,537 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்ட சூழலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது மேலும் ஒரு தமிழ் கல்வெட்டு கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எணகும்பா நடுகல் கல்வெட்டு 116 செ.மீ. உயரம், 83 செ.மீ. நீளம் கொண்டுள்ளது. 20 வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு 10 -ஆம் நூற்றாண்டு எழுத்து அமைவுடன் உள்ளது. பேறகைப்பாடி கொல்லன் முனிவர கண்டாசாரி என்பவரின் மகன் எருமை கும்பத்து வேல்பாடி எனுமிடத்தில் நடைபெற்ற ‘நிரை கவா்தல்’ பூசலில் உயிரிழந்த செய்தி இதில் பதிவாகியுள்ளது.

‘நிரை கவா்தல்’ எனும் சொல் மாடுபிடிச் சண்டையைக் குறிக்கும் நோக்கில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இந்நடுகல் சிற்பம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது.

தமிழ் கல்வெட்டு இருக்கும் இடத்திலிருந்து 410 மீ. தொலைவில் கிராமத்துக்கு மேற்கே மேலும் மூன்று நடுகற்களில் கன்னட மொழி கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் கல்வெட்டில் உள்ளதுபோலவே கன்னட கல்வெட்டிலும் எருமைக் கும்பம் என்றே அவ்வூா் வழங்கப்பட்டது தெரியவருகிறது. கன்னட மொழி நடுகல் கல்வெட்டுகளும் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை என்பதை இந்திய தொல்லியல் துறையின் மைசூரு பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.

தமிழ் நடுகல் கல்வெட்டு கிடைத்த இடத்துக்குத் தெற்கே 180 மீ. தொலைவில் தோட்டத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய கோயில் கல்வெட்டில் நிலங்கள் கொடை வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது. இக்கல் வெட்டிலும் எருமை கும்பம் என்று இவ்வூா் வழங்கப்படுகிறது.

எணகும்பா சுற்றுவட்டாரப் பகுதியில் கிடைத்த இரண்டு தமிழ், மூன்று கன்னட கல்வெட்டுகள் மூலம் அக்கால கட்டங்களில் தமிழ் மற்றும் கன்னட மொழிகள் பயன்படுத்துவோா் ஒரே பகுதியில் வாழ்ந்தது தெரியவருகிறது. அவா்கள் அவரவா் மொழிகளில் ஊா் பெயரை எருமைக் கும்பம் என பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பெயா் மருவி எணகும்பா என்றாகி உள்ளது என்றனா்.

- விடுதலை நாளேடு, 4.7.25

வியாழன், 9 மார்ச், 2023

மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு

 மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு

சென்னை,நவ.23- கருநாடகாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் கல் வெட்டுகளில் சோழர் காலத்தைச் சார்ந்தவை அதிகம் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதுவரை வெளியிடப்படாத 15,000 கல்வெட்டு படிகளின் தகவல் களை உடனே வெளியிடவும் தொல் லியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ப வரால் இந்திய தொல்லியல் ஆய்வகம்(Archaeological Surveyof India)1861ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோயில்கள், மலைகள், குகைகள் உள்ளிட்டஇடங்களில் இருக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு ‘படி எடுத்தல்’ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகின்றன. முதலில் பெங்களூ ருவில் இருந்த இந்திய தொல்லியல் ஆய்வகம் 1862இல் சென்னைக்கு மாற்றப்பட்டது.

கல்வெட்டு படிகளை குளிர்ச்சியான இடத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதால், அந்த ஆய்வகம் 1903இல் ஊட்டிக்கும், பின்னர், நிர்வாக கார ணங்களுக்காக 1966இல் மைசூருவுக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆய்வகத்தில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் கல்வெட்டுகளின் படிகள் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இங்கு தமிழ் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றமும் அவ்வாறே உத்தர விட, மைசூரு ஆய்வகத்தில் இருந்து முதல்கட்டமாக 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சமீ பத்திய கணக்கெடுப்பின்படி, மைசூரு ஆய்வகத்தில் 70 ஆயிரம் கல்வெட்டு படிகள் உள்ளன. அதில் தமிழ் கல்வெட்டு படிகள் சுமார் 24 ஆயிரம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அதில் 13 ஆயிரம் படிகளை சென்னைக்கு அனுப்பியுள்ளனர். அவை அனைத்தும் பார்கோடு முறையில் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டு, ஒவ்வொரு கல்வெட்டு தொடர்பான தகவல்களும் அதில் தெளிவாக குறிப்பிடப் பட் டுள்ளன. தற்போது வந்திருப்பதில் சோழர், பாண்டியர், பல்லவர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள், குறு நில மன்னர்களில் வானாதிராயர்கள், முத்தரையர், சம்புவரையர், நுளம்பர் மரபினரின் கல்வெட்டுகள் உள்ளன. சோழர்களின் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன.

இவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், ஒன்றிய அரசின் பரா மரிப்பிலேயே உள்ளது. எனவே, கல்வெட்டு தகவல்களை வெளியிட ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மொத்தம் உள்ள 24 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளில் 15 ஆயிரம் கல் வெட்டுகள் இதுவரை தொல்லியல் துறையால் வெளியிடப்படாத புதியவை ஆகும். அவற்றில் மன்னர்களின் வரலாறு மட்டுமின்றி மருத்துவம், கல்வி, கலைகள், கோயில்களில் அரங் கேற்றப்பட்ட நாடகம், நடனம் உள் ளிட்ட மக்கள் வாழ்வியல் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, மைசூருவில் உள்ள மற்ற தமிழ் கல் வெட்டு படிகளையும் விரைந்து பெற்று, அதில் உள்ள அரிய விவரங் களை தொகுத்து வெளியிட்டால், 18ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் நாட் டின் புதிய வரலாற்று தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர் சண்முக சுப்ர மணியன் கூறும்போது, ‘‘மைசூரு ஆய்வ கத்தில் 48 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 24 ஆயிரம் படிகளே உள்ளன. எனவே, எஞ்சியவற்றையும் விரைந்து மீட்கவேண்டும்.

மீட்கப்பட்ட படிகளை மாநில தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை குளிர்ந்த நிலையில் பராமரிப்பது அவசியம் என்பதால், ஊட்டி போன்ற மலைப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழ் கல்வெட்டுகளில் இருந்து, இதுவரை வெளிவராத முக்கிய வரலாற்று பதி வுகள், குறிப்புகளை வெளியிட வேண் டும்’’ என்றார்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

சீனாவில் தமிழ் கல்வெட்டு

சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 கல் வடக்கே *சூவன்சவ்* என்னும் துறைமுக நகர் உள்ளது.

பண்டை காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கியது!

பண்டைய காலத்தில் தமிழ் வணிகர்கள் ஏராளமானோர் இந்த துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிக கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன்
மேற்கு கரையோரமாக
உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு,
வியட்நாம் சென்று அங்கிருந்து
*சீன நாட்டை* அடைந்துள்ளன!

சீனாவில் தமிழ் வணிகர்கள் காண்டன் நகரில் மட்டுமின்றி மேலும் சில இடங்களிலும் குடியேற்றங்களை அமைத்திருந்தனர்.

பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்ப்பெற்ற வணிகக் குழாமான

*திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்* எனும் குழுவினர், சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம்  செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான *செங்கீஸ்கானின் பேரன்களில் ஒருவன் குப்லாய்கான்!*

இவன் கி.பி.1260இல் சீனா சக்கரவர்த்தியாக பொறுப்பேற்றான் !

இவனது ஆட்சியின் கீழ் சீனா இருந்த போது, 
பெய்சிங்க் என்னும் புதிய நகரை  உருவாக்கி அதனை தனது பேரரசின் தலைநகராக்கினான்! புகழ்ப்பெற்ற *யுவான் அரச மரபை* இவனே தொடங்கினான்.

*தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில்,* 
அப்போதிருந்த

*பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியன் சீனா மன்னனுடன் நல்லுறவைப் பேணினான்.!*

*பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர்.!*

*இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது!*

*இந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு சான்றாக*

* சீன நாட்டில் குவன் சவ் துறைமுக நகரில் பழமைவாய்ந்த. சிவ ஆலயம் ஒன்றில்
*தமிழ் கல்வெட்டு* *ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது*.

*பண்டைய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டில்* கடைசி வரிகள்
*சீன எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளன*.

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ் கல்வெட்டாக இது கருதப்படுகிறது.
---------------*
நன்றி;
தமிழர் தகவல் தளத்தில்

படித்ததில் பிடித்தது

https://m.facebook.com/story.php?story_fbid=726446251153103&id=100013632037906

MGR TV ஹமீது
@
MGR TV NEWS
இந்தியன் ஜர்னலிஸ்டு சர்வீஸ் IJS அகடாமி
99410 86586

திங்கள், 7 அக்டோபர், 2019

தூத்துக்குடி அருகே 17ஆம் நூற்றாண்டு தமிழ் மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி,அக்.7 தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே யுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை பரும்பு மற்றும் குளக்கரை பகுதி களில் முன்னோர்கள் காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளது.
சிறீவைகுண்டம் குமரகுருபரர் சாமிகள் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லூரியில் வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில்  முனைவர் பட்டம் படிப்பிற்காக சிவகளை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சிவகளையில் தமிழ் வட்டெழுத்து, தமிழ்மொழி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து, வரலாற்று ஆசிரி யர் சிவகளை மாணிக்கம் கூறியதா வது: எனது வரலாற்று ஆய்வுப்பணிக் காக சிவகளை மேலக்குளத்தின் நீர் வெளியேறும் மடையின் படிக்கட்டு களை ஆய்வு செய்தபோது அதில் 11ஆம் நூற்றாண்டின் தமிழ் வட் டெழுத்துக்கள் பொறிக்கப்பட் டுள்ள கல்வெட்டும், 17ஆம் நூற் றாண்டின் தமிழ்மொழி கல்வெட்டு களும் இருந்தன.
இதனை இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் யத்தீஸ் குமார், பிரசன்னா, கல் வெட்டு ஆய்வாளர் வீரமணிகண்டன் மற்றும் பெங்களூரு கல்வெட்டு படியெடுப்பாளர் நசுருல்லா ஆகி யோர் தலைமையிலான குழுவினர் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தனர். நான்கு வரிகளை கொண்டுள்ள இக்கல்வெட்டு 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்ட எழுத்து என்பதும், இந்த எழுத்துக்களில் சிவகளையிலுள்ள இந்த குளம் அக்காலத்தில் நாராயணன் ஏரி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதே போன்று, சிவகளை சேர்ந்தையன் சாஸ்தா கோவிலுக்கு எதிரேயுள்ள தரிசு குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் அது 17ஆம் நூற் றாண்டை சேர்ந்த தமிழ்மொழி கல்வெட்டு என்பதும், இந்த கல் வெட்டில், சிவகளையின் பெயரா னது கடந்த நூற்றாண்டுகளில் செவளை என்றும், செவளையானது ஊருகாலவம்பிள்ளை மகன் சந்திகா வலம்பிள்ளை என்பவருக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். இந்த கல்வெட்டுக்களை திருநெல்வேலி சதக்அப்துல்லா கல்லூரி முதல்வர் முகம்மதுசாதிக், வரலாற்றுத்துறை தலைவர் நசீர் அகமது, ஆராய்ச்சி மய்ய ஒருங் கிணைப்பாளர் சின்னத்தம்பி, பேராசிரியை ஆஷா மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலரும். வியப் புடன் கண்டு சென்றனர்.
- விடுதலை நாளேடு, 7.10.19

சனி, 4 மே, 2019

1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு



மேட்டூர், மே 4 சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பொட்டனேரி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுத்தனர்.

மேச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் கோ.பெ. நாராயணசாமி, வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில்,  தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சு. இராஜகோபால்,  கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம்,  சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த விழுப்புரம் வீரராகவன்,  ஆறகளூர் பொன். வெங்க டேசன்,  மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே பொட்டனேரி கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்தக் கல்வெட்டின் உயரம் 70 செ.மீ.,  அகலம் 65 செ.மீ.  தடிமண் 10 செ.மீ. ஆகும்.  இதன் மேல்பகுதி உடைந்துள்ளது.  உடைந்த மேல்பகுதி அங்கு காணப்பட வில்லை.   எட்டு வரிகளில் வட் டெழுத் துடன் கல்வெட்டுள்ளது.

இதன் காலம் 8-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம்.  எழுத்தமைவானது 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது.  கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும்,  பின் வட்டெழுத்திலும், 9-ஆம் நூற் றாண்டுக்குப் பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட் டுள்ளன.

வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் மேல்பகுதி காணப் படாததால்,  நிலம் யாருக்கு, எதற்காகக் கொடுக்கப்பட்டது என்ற செய் தியை அறிந்து கொள்ள முடியவில்லை. வாணர்கள் யார்?: வாணன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சங்கக் காலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள்.  வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள்,  தருமபுரி கிருஷ்ணகிரி, செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்துள்ளன.

12-ஆம் நூற்றாண்டில் இவர்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகளூரைத் தலைநகராக கொண்டு வாணகோவரை யர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக் கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை சேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8-ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

- விடுதலை நாளேடு, 4.5.19