• Viduthalai
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை,நவ.19- கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட் டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை ஆகிய நூல்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.11.2021) வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.11.2021) தலைமைச் செயலகத்தில், விடுத லைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப் பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வ.உ.சி. பன்னூல் திரட்டு - முதல் தொகுதி மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.
சட்டமன்றத்தில் அறிவிப்பு
வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 வகையான அறிவிப்புகளைச் சட்ட மன்றத்தில் அறிவித்தார். அவற்றுள் “வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்பதும் ஒன்றாகும். அதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பள்ளிக் கல்வித் துறைச் சீராய்வுக் கூட்டத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்பு களை வ.உ.சி. நூற்களஞ்சியமாக நான்கு நூல் திரட்டுகளாக பதிப்பிக் கலாம் என்று அறிவுறுத்தினார்.
வ.உ.சி. நூல் களஞ்சியம்
அதன்படி, விடுதலைப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழரும், பழம்பெரும் நூல்களைத் தேடி பதிப்பித்து உரை எழுதிய வருமான வ.உ.சிதம்பரனாரின் எழுத்துகள் வ.உ.சி. நூல் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டு, அவரது 150-ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால், குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது.
முதல் கட்டமாக வ.உ.சிதம்பர னார் எழுதி வெளிவராத படைப்பு கள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்து, முதல் தொகுதி - வ.உ.சி. பன்னூல் திரட்டு எனும் தலைப்பிலும், இரண்டாம் தொகுதி - வ.உ.சி. திருக்குறள் உரை எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படுகிறது.
அரசியல் பெருஞ்சொல்
முதல் தொகுதியில் வ.உ.சி. எழுதிய தன் வரலாறு, மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களும் 1927 காங்கிரஸ் மாநாட்டில் அவர் ஆற்றிய அரசியல் பெருஞ்சொல் என்ற உரை, வ.உ.சி. கண்ட பாரதி என்ற நூல், வ.உ.சி.யின் பாடல் திரட்டு, வ.உ.சி. கட்டுரைகள் ஆகி யவை அடங்கியுள்ளன. மேலும், இத்தொகுதியில் வ.உ.சி பதிப்பித்த திருக்குறள் (அறத்துப்பால்) மணக் குடவர் உரை சேர்க்கப்பட்டுள்ளது. வ.உ.சி. எழுதிய இன்னிலை விருத்தி உரையும் சிவஞானபோதம் உரையும் இடம் பெற்றுள்ளன.
இவற்றோடு வ.உ.சி. மொழி பெயர்த்த ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களான ‘மனம்போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ ‘சாந்திக்கு மார்க்கம்’ ஆகியவையும் உள்ளன. இவை தவிர வ.உ.சி.யின் வேறு சில கட்டுரைகளும் பின்னி ணைப்பாக இடம் பெற்றுள்ளன.
தொழிற்சங்கத் தொண்டு
இரண்டாம் தொகுதி வ.உ.சி. திருக்குறளுக்கு எழுதிய உரையாகும். வ.உ.சி.யின் தேசப்பணி, தியாகம், தொழிற்சங்கத் தொண்டு ஆகிய வற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல வ.உ.சி.யின் இலக்கியப் பணி. தன் வாழ்வைத் திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொண்ட வ.உ.சி. திருக்குறளுக்கான மணக் குடவர் உரையைத் தேடிப் பதிப்பித் தார். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நூலாகத் திருக்குறள் திகழ்வதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று மணக்குடவர் உரையை அடிப்படையாகக் கொண்டு வ.உ.சி. எழுதிய புதிய உரையாகும்.
தனது திருக்குறள் உரையில் 11ஆம் நூற் றாண்டில் எழுந்த அவைதீக உரையான மணக்குடவர் உரையில் இருந்து 13ஆம் நூற்றாண்டில் எழுந்த வைதீக உரையான பரிமேல ழகர் உரை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்கியுள்ளார். பரிமே லழகர் உரையிலிருந்து தான் வேறு படும் இடங்களையும் ஒன்றுபடும் இடங்களையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு, குறளுக்குப் பொருள் கொள்வதில் வாசகனுக்கு உள்ள சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டி ருப்பதை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரலாம்.
வெளிவராத படைப்புகள்
வ.உ.சி. எழுத்துகளை ஆய்வு செய்து வெளிவராத படைப்புகளைச் சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வீ.அரசு பதிப்பாசிரியராக இருந்து இப் பெருந்திரட்டுகளைத் தொகுத்துள் ளார். புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அட்டைப்படம் வடி வமைத்துள்ளார்.
இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, தலைமைச் செய லாளர் முனைவர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் மேலாண்மை இயக்குநர் டி.மணிகண்டன், உறுப் பினர் செயலர் எஸ்.கண்ணப்பன், துணை இயக்குநர் டி.சங்கர சரவ ணன், ஆலோசகர் ச.அப்பண்ண சாமி, பதிப்பாசிரியர் பேராசிரியர் வீ.அரசு, ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பங்கேற்றனர்.
Titanium-Arms.com - The Fastest Growing Tools to Improve Your Tits
பதிலளிநீக்குLearn about Titanium-Arms.com nano titanium babyliss pro including our babyliss pro nano titanium easy-to-use and fast-growing tools, the titanium chain largest selection of TITAR-CMS.com titanium muzzle brake products. titanium engine block