பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

        பெரியாரை தமிழுக்கு எதிரியாகவும், தமிழர்க்கும் எதிரியாகவும் கட்டமைத்து அவதூறு செய்யும் சாலையோர வேலையற்றதுகளுக்கும், பெரியாரை அவமதிக்கும் கோணல் புத்திகாரர்-களுக்காக:

இதோ ஒரு பட்டியல் :

*             கண்ணைத் திறந்து படிக்கட்டும். அறிவுக் கண்ணும் திறக்கட்டும்!

1)            1926 _ இந்தி வருவதே தமிழர்க்கு துரோகம் செய்யத்தான் என எச்சரித்தார்.

2)            1926 _ வடமொழிக் கலப்பில்லாத தனிச் செந்தமிழ் இனிக்கும் என்றார்.

3)            1927 _ சமஸ்கிருதம் நீக்கிய தமிழர் திருமண முறையை வலியுறுத்தினார்.

4)            1929 _ தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென உணர்த்தினார்.

5)            1931 _ தமிழ் மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என வேண்டினார்.

6)            1938 _ இந்திப் போர் என்பது தமிழுக்காக, தமிழர் தன்மானத்திற்காக என அறைகூவல் விட்டார்.

7)            1938 _ தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கினார்.

8)            1941 _ தமிழ்நாட்டு மேடைகளில், தமிழிசை பாடப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

9)            1941 _ கல்வி திட்டத்தில் தாய் மொழியும், பொது மொழியாக ஆங்கிலம் போதிக்கப்-பட்டால் போதும் என்றார்.

10)         1945 _ தமிழ் மொழி உணர்ச்சி தான், தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் எனக் கணித்தார்.

11)         1947 _ தமிழர் விழாவாக பொங்கலைக் கொண்டாட வேண்டும் என முதலில் அறிக்கை விட்டார்.

12)         1952 _ தாய் மொழியில் அனைத்தும் மொழிபெயர்க்க வேண்டுமென தலையங்கம் தீட்டினார்.

13)         1952 _ நீதிமன்றங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

14)         1954 _ ‘ஸ்ரீ’ என்று எழுதாதே, ‘திரு’ என்று எழுது என அறிவுறுத்தினார்.

15)         1955 _ மக்கள் மொழியை விட்டு, வேறு மொழி மூலம் ஆட்சியை நடத்துகிற ஒரே நாடு _ உலகத்திலேயே தமிழ்நாடு தான் என வருந்தினார்.

16)         1955 _ தமிழ்நாட்டுக் கடவுளுக்கு தமிழ் புரியாதா? என கேள்வி கேட்டார்.

17)         1955 _ தமிழில் கல்லூரிப் படிப்பைத் தொடங்க வேண்டும் என ஆரம்பித்தார்.

18)         1956 _ தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

19)         1956 _ விஞ்ஞான நூல்களையெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாகக் குவிக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

20)         1960 _ தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்னும் பெயரில்லையே என கோபப்பட்டார்.

21)         1964 _ தமிழ் முன்னேற்றமடைந்து, உலக வரிசையில் வரவேண்டும் என்றால், தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என ஆலோசனை சொன்னார்.

22)         1965 _ கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் எனக் கோரினார்.

23)         1966 _ ஜனநாயகம் என்பது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழிதான் ‘குடிஅரசு’. அப்படித்தான் எனது இதழுக்குப் பெயர் சூட்டினேன் என விளக்கினார்.

24)         1967 _ நம்மை தமிழும் இந்தியும் படிக்கச் செய்து விட்டு, பார்ப்பானும் பணக்காரனும் ஆங்கிலம் படித்து, பதவிக்குப் போய் விடுவார்கள் என எச்சரித்தார்.

25)         1972 _ ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலும், தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை என வகுப்பெடுத்தார்.

*               “தமிழன் பிரார்த்தனை செய்யும் கோயில்கள் ஒன்றிலாவது, தமிழனுக்கு மரியாதை கிடையாது” என தமிழர்கள் மீது அன்பும், பரிவும் கொண்டு பேசியவர் _ பெரியார்.

*               “சரித்திரம் எழுதுபவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், தமிழர்களின் சரித்திரத்தை மறைத்து விட்டார்கள்!” என தமிழர்களின் வரலாற்று மீதும் அக்கறை கொண்டு பேசியவர் _ பெரியார்.

*              இப்போது சொல்லுங்கள்!

*               இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? … நூலை படித்த பின்பு, நீங்களும் அந்த கேள்வியைத்தான் கேட்பீர்கள்!

*               இதைப் படைத்த ப. திருமாவேலனுக்கு பெரியாரியவாதிகள் மட்டுமல்ல, தமிழினமே வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளது!

  'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? ' என்ற நூலைப் பற்றி விமர்சனம்...

நூல் மதிப்புரை:

நாகராஜன் பொன்னுசாமி

பெரியாரியல் ஆய்வாளர்