வட கேரளா மற்றும் தென் கருநாடகாவில் பேசப்பட்டு வரும் துளுவ மொழிக்கு அலுவல் மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்தியத் துளுவ மொழியின் வரலாறு
கருநாடகாவின் இரண்டு கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பியிலும், கேரளத்தின் காசர்கோடு பகுதியிலும் பேசப்பட்டு வரும் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழி தான் துளுவம். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 18,48, 427 நபர்கள் இம்மொழி பேசி வருகின்றனர். 2000 ஆண்டுகள் பழமை கொண்ட, திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ராபர்ட் கால்ட்வெல், A Comparative Grammar of the Dravidian- என்ற தன்னுடைய புத்தகத்தில் திராவிட மொழிக்குடும்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த மொழிகளில் ஒன்றாக துளுவை குறிப்பிட்டுள்ளார்.
துளு மொழி பேசும் மக்களின் உணமையான கோரிக்கை
கருநாடகா மற்றும் கேரளாவில் இருக்கும் துளு மொழி பேசும் மக்கள் இம்மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதோடு இந்திய அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையின் கீழ் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடா, கஷ்மீரி, கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ் , தெலுங்கு, உருது, போடோ, சந்தாலி, மைதிலி மற்றும் டோக்ரி ஆகிய 22 மொழிகள் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன
இந்தக்கோரிக்கையை ஆதரித்து தக்ஷின கன்னடா எம்.பி. நளின் குமார் கத்தீல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், “அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் துளுவை இணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது உள்ளது. இந்த ஆட்சி நிறைவடைவதற்குள் துளுவை அலுவல் மொழியாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
தக்ஷின கன்னடாவின் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோட்ட சிறீ நிவாஸ் பூஜாரி, “துளு ஒரு மொழி மட்டும் அல்ல. வரலாற்றுடன் கூடிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அம்மொழி கொண்டுள்ளது” என்று கூறினார்.
துளு எங்களின் தாய்மொழி. அனைவரும் துளுவை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வேதவ்யாஸ் காமத் கூறினார்.
அரசியல்வாதிகளைத் தவிர கன்னட நடிகர்கள், துளுவை தாய்மொழியாக கொண்ட ரக்ஷித் ஷெட்டி, ப்ருத்வி அம்பார் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
துளுவ மொழியின் தற்போதைய நிலை
கருநாடகாவின் துளு சாகித்ய அகாதெமி தலைவர் தயானந்த கி.கத்தல்சர், துளு மொழி பேசும் மக்கள் மேல் கூறிய பகுதிகளில் கேரளா மற்றும் கருநாடகாவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளை துளுநாடு என்று அழைக்கின்றோம். துளு தற்போது அலுவல் மொழி அல்ல.
ஆனால் துளுவை அட்டவணை 8இன் கீழ் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துளு 8ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டால், சாகித்ய அகாதெமியின் அங்கீகாரம் துளு மொழிக்கு கிடைக்கும் என்று கூறினார்.
கல்வியில் துளு
கருநாடக அரசு துளுவை சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தது.
மாநில கல்வித்துறையின் படி, 2020ஆம் ஆண்டு மொத்தமாக தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த 956 பள்ளி மாணவர்கள் தங்களின் மூன்றாவது மொழியாக துளுவை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினார்கள். துளு அறிமுகம் செய்யப்பட்ட போது
2014-2015 ஆண்டுகளில் 18 மாணவர்கள் துளுவை தங்களின் மூன்றாவது விருப்ப மொழியாக தேர்வு செய்தனர்.
கடந்த ஆண்டு ஜெய் துளுநாட் என்ற அமைப்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில் துளு மொழியை இணைக்க வேண்டும் என்று இணையங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டது. Education In Tulu என்ற ஹேஷ்டேக்கில் தங்களின் கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.
துளு நாடு - தனி மாநில கோரிக்கை
29ஏ பிரிவு, மக்கள் பிரதிநிதி சட்டம் 1951இன் கீழ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற துளுவேரே பக்ஷா என்ற அரசியல் கட்சி, துளு மொழி பேசும் மக்களின் அரசியல் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க துவங்கியுள்ளது.
துளுவேரே பக்ஷா கட்சியின் மத்திய குழு தலைவர் ஷைலேஷ் ஆர்.ஜே. இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, மொழி அடிப்படையில் நாடு மறுசீரமைக்கப்பட்டபோது துளுநாடு கேரளா மற்றும் கருநாடக மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களுக்கு தனி மாநிலங்கள் இருக்கின்ற போது துளுநாடு ஏன் தனி மாநிலமாக இருக்க கூடாது? என்ற கேள்வியை வைத்தார்.
இந்தக் குடகை ஆங்கிலேயர்கள் கூர்க் என்று அழைத்துவந்தனர், இந்தக்குடகுபகுதியில் தான் காவிரி நீர் உறுபத்தியாகும் தலைக்காவிரி உள்ளது,
இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவானது.
பின்னர் 1957இல் குடகு மக்கள் தங்களை யூனியன் பகுதியாக இந்தியா இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, வேண்டுமெனில் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.
நேருவின் ஆலோசனைப்படி குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழக அரசியலாளர்கள், அதனை நிராகரித்துவிட்டார்கள். அப்போது தந்தை பெரியார் ஒருவர்தான், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். ‘விடுதலை’ பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அலட்சியம் செய்ததின் விளைவைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
தமிழகம் குடகை நிராகரித்தைப் போன்றே, கருநாடகமும் முதலில் நிராகரிக்கவே செய்தது. ஆனால் ‘மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா’ எனும் அறியப்பட்ட பொறியியல் விஞ்ஞானியின் கருத்தினால், கருநாடகம் குடகை ஏற்றுக்கொண்டது. கருநாடகம் ஒரு அறிவியல் அறிஞரின் குரலுக்கு செவி சாய்த்ததிலும், தமிழகம் சமூகவியல் அறிஞரான பெரியாரின் குரலை அலட்சியம் செய்ததிலும் இருக்கிறது காவிரி மீது பறிபோன நமது உரிமை
குடகு மக்களுக்கும் தமிழருக்கும் மிக நெருங்கிய கலாச்சார மொழி தொடர்பு உண்டு, ஆகையால் தான் அவர்கள் எங்களின் தாய்மொழி மாநிலமான தமிழகத்தோடு இணைகிறோம் என்றனர்.
ஆனால் அவர்கள் கருநாடகத்தோடு இணைந்ததால அவர்களின் மொழி உரிமையும் பறிபோய் எழுத்து சிதைந்து துளு பேசும் குடும்பத்தின் இளையதலைமுறைகள் கன்னடம் மட்டுமே கற்கும் அவலம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் தங்களின் மொழி உரிமையை மீட்க மீண்டும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக