- கிரீஷ் சஹானே
2014 ஆம்
ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிவந்த மிகப் பெரிய செய்தி மக்களின் மனம் கவர்ந்த
நரேந்திரமோடியின் தலைமையில் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்றதுதான். நாடாளுமன்றத்தில்
அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்று பலராலும் கருதப்பட்டதை பா.ஜ.க. செய்து
காட்டி சாதனை படைத்துள்ளது. கட்டுப்பாடோ, வரையறையோ
அற்ற வியப்பளிக்கும் இந்துத்துவ வரலாறு என்ற எனது முந்தைய கட்டுரையில், மோடியும், அவரது
எண்ணற்ற சகாக்களும் கொண்டிருக்கும் கருத்துகள் பற்றி நான் விவரித்திருந்தேன்.
என்றாலும், வரலாற்றை தவறாகப்
படித்துக் காட்டுவதன் மூலம், பெரும்பான்மையான
மக்களிடையே பொய்யான வரலாற்று நிகழ்வுகளை உண்மையானவை என்று கருதச் செய்யும்
பா.ஜ.க.வின் முயற்சி நீடித்து நிலைபெற்று வந்துள்ளது. பெரும்பாலான
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தகைய முக்கியமான அய்ந்து கட்டுக் கதைகளை கால
வரிசையில் பின்னோக்கிச் செல்லும் வண்ணம் நான் இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
. 4. சமஸ்கிருதம்
பற்றிய கட்டுக்கதை
சமஸ்கிருத மொழி மாபெரும் அளவி லான பாடல்கள், தத்துவநெறிகள், தியான நெறிகள், கவிதைகள், புராணங்கள், இதிகாசங்கள், நாடகங்கள், ஒப்பந்தங்கள் என்று பல்வகை இலக்கியங்களை
உருவாக்கி யுள்ளது. கலாச்சார அடிப் படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக
மொழிகளில் அதுவும் ஒன்று என்பதில் அய்யமேதும் இருக்க முடியாது. ஆனால், அனைத்து மொழி களுக்கும் சமஸ்கிருத மொழியே தாய்
என்று சொல்லப்படுவது மட்டும் உண்மையல்ல. சமஸ்கிருத மொழி சார்ந் துள்ள
இந்திய-அய்ரோப்பிய மொழிக் குடும் பத்து மொழிகளுக்கு அடிப்படையான மொழி என்று கூட
அதனைக் கூற முடியாது.
இம்மொழிக் குடும்பத்தை முதன் முதலாக அடையாளம்
கண்ட வில்லியம் ஜோன்ஸ் என்பவர், சமஸ்கிருத, லத்தீன், பாரசீக மொழிகள், முன்பு இருந்து இப்போது மறைந்து போயிருக்க
இயன்ற ஒரு பொதுவான மூலத்திலிருந்து பிறந்த மொழிகளாக இருக்கக்கூடும் என்று 1786 ஆம் ஆண்டின்போதே கருத்து தெரி வித்திருந்தார்.
அந்த மூலம்
இந்திய அய்ரோப்பிய மொழிக்குடும்பத்துக்கு
முந்தையது என்று இப்போது அழைக் கப்படுவதாகும். அந்த மூலமொழி கருங் கடலைச்
சுற்றியுள்ள பகுதிகளில் 5500
முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட் டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு முந் தைய மொழி
ஒன்று இன்றைய துருக்கி, உக்ரைன் நாடுகளில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த
கால்நடை களுக்குத் தீவனம் தேடி புலம் பெயரும் நாடோடி களால் பேசப்பட்டது என்று
கூறுவது இந்தியாவில் ஏற்றுக் கொள் ளப்படாத தாகவும்; விரும்பப்படாததாகவும்; மறுக் கப்பட இயன்றதாகவும் இருப்பதாகும். ஆனால், அதுதான் சமஸ்கிருதத்தை மற்ற பல மொழி களைப் போல
ஆக்க இயன்றதாகும்.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை,6.1.15பக்2