திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் இன்னொரு நாட்டிலிருந்த தமிழ்ப் பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். இந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் தென் னெல்லைக் காவலன் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி.
திருவிதாங்கூர் தமிழர்கள், சமூகநீதி, பெண்ணுரிமை, மண்காப்பு, ஆலய நுழைவு, வாக்குரிமை, மொழிக்காப்பு ஆகியவற்றிற்காக சுமார் 300 ஆண்டு கள் போராடி வந்தனர். 1921 லிருந்து 1956 வரை நேசமணி வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இந்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் 1948 பிப்ரவரி 8 இல் தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இரு போராளிகளும் திருவிதாங்கூர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழர்களை மிகவும் துன்புறுத்தியது திருவிதாங்கூர் அரசு. தமிழ்த்தலைவர்களை கையில் விலங்குபோட்டு அழைத்து சென்றனர். 650க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டனர். குப்புசாமி என்ற இளை ஞரை அடித்து செவிப்பறையைக் கிழித்து விட்டனர். சுப்பையா என்ப வரை விலங்குபோட்டு கடைவீதியிலே நடக்கச் செய்தனர். 434 தமிழர்களையும் 20 தமிழ்ப் பெண்களையும் ஒரே சிறை யில் அடைத்தனர். எங்கும் கதறலும் கண்ணீருமாக இருந்தது. அவர்களின் அபயக்குரல் கேட்ட தலைவர் நேசமணி ஜனாப்ரசாக் (எம்.பி), முன் னாள் அமைச்சர் மாண்புமிகு சிதம்பர நாதன் ஆகியோர் தேவிகுளம் சென் றனர். 4.7.1954 அன்று அவர்கள் மூணாற்றில் வைத்து பி.சி.அலெக் சாண்டரால் கைது செய்யப்பட்டனர். பீர்மேடு, தேவிகுளம் பற்றி நேசமணியின் உரை
நீங்கள் தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களுக்குச் சென்று அங்கே வளர்க்கப்பட்டிருக்கின்ற தேயிலைச் செடிகளையெல்லாம் கேட்டுப் பாருங் கள். அவைகளையெல்லாம் தங்களது பிஞ்சுக்கரங்களால் தமிழர்கள் எவ்வாறு நட்டனர் எனவும், தங்களது நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி எவ்வாறு அவைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினர் என்றும், தங்களது எலும்பையும், குருதி யையும் காணிக்கையாக்கி அவை களுக்கு எவ்வாறு உரமிட்டனர் என்பனவற்றையெல்லாம் உங்களுக்கு அவைகள் கூறும். தவிரவும் அப் பிரதேசங்கள் அனைத்தும் தமிழர் களுக்குச் சொந்தமான நாடு என்பதை யும் உங்களுக்கு அவைகள் எடுத்தி யம்பும் என்று கூறுகிறார்.
தந்தை பெரியாரின் பங்கு
மார்சல் நேசமணி கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தபோது, திரு விதாங்கூர், தமிழ்நாடு காங்கிரசைத் தங்கள் இயக்கத்துடன் இணைக்க தமிழகத்திலுள்ள பல தலைவர்கள் ஆசைப்பட்டனர். திருவிதாங்கூர், தமிழ் நாடு காங்கிரசை உடைத்தெறிய மலை யாள அரசு ஆசைப்பட்டது. இவற்றுக் கெல்லாம் அப்பாற்பட்டு செயல்பட்ட வர்தான் பெரியார். ஆகையால்தான் நேசமணியும், தியாகிகளும் பெரியார் என்றவுடன் மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளனர். தன் கரத்தால் நேசமணி மாலை சூட்டியது பெரியாருக்கு மட்டுமே.
தென்னெல்லைக் காவலன் நேச மணியையும் உடன் சென்றவர்களை யும் விடுதலை செய்ய திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அடக்க முடியாத அரசு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவர்களை விடுதலை செய்தது. நேசமணி விடுதலை தினத்தையும், நாட்டு விடுதலை தினத்தையும் இணைந்து கொண்டாட திருவிதாங்கூர் தமிழ்மக்கள் திட்டம் போட்டனர். எங்கும் ஊர்வலமும் கூட்டமும் நடை பெற்றன. இதனால் விளவங்கோட்டில் துப்பாக்கிச் சூடுநடந்தது. இந்த துப் பாக்கிச் சூட்டில் இறந்த தமிழ் தியாகிகள் தினம்தான் 1954 ஆகஸ்ட் 11.
இப்போராட்டத்தில் தன் இன்னுயிரை தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் ஈந்த தியாகிகள்:
ஏ.அருளப்பன் நாடார் - புதுக்கடை, எம்.முத்துசாமி நாடார் - கிள்ளியூர், எம்.குமரன் நாடார் - தோட்டவாரம், எம்.செல்லப்பா பிள்ளை - புதுக்கடை, ஏ.பீர்முகமது - தேங்காய்ப்பட்டணம், சி.பப்புப் பணிக்கர் - தொடுவெட்டி, எஸ்.இராமையன் நாடார் - நட்டாலம், ஏ.பொன்னப்பன் நாடார் - தோட்ட விளை, எம்.பாலையன் நாடார் - தோட்டவிளை, மணலி
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன் நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். ஒருவர் வண்டி யேற்றிக் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மடிச்சல் சங்கு நாடார் கொலை செய்யப்பட்டு கிணற் றில் போடப்பட்டார். கருவுற்ற பெண் ஒருத்தியும் கொல்லப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாகச் சான்றுகள் உள்ளன.
இந்தத் தியாகிகளைத் தமிழ் உலகம் கண்டுகொள்ளவே இல்லை. அவர் களுக்கு சிலை வைக்கவோ, பாராட்டு நடத்தவோ இல்லை. அதைவிட வேத னையான ஒன்று திருவிதாங்கூர் தமிழர்களே இந்தத் தியாகிகளை மறந்து விட்டார்கள். தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்வோம். மதிப்போம், இறந்து போன தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து வாழ வைக்கும் படி வேண்டுகிறோம்.
அன்றைய அரசர்கள் வட்டார மொழிகளுக்கு இடம் கொடுத்த கார ணத்தால் பல கிளைமொழிகள் தோன் றின. ஆகையால் தமிழக அரசு, வட்டார மொழிகளுக்கு சிறிதும் இடம் கொடுக் காமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறோம். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி களைப் பாராட்டி தமிழக அரசு நினைவு நாள் கடைப்பிடித்து வருகிறது. அவர் களது தியாகத்தை நினைவுகூரும் தமிழக அரசைப் பாராட்டுகிறோம். இதைப்போன்று தமிழ் மண் ணுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தென்னெல்லைக் காவலன் குமரித் தந்தை மார்ஷல் நேசமணி தலை மையில் நடந்த போராட்டத்தில் தம் இன்னுயிரைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுத்த தியாகிகளை இணைத்தோ அல்லது அவர்கள் பலியான ஆகஸ்ட் 11 அய் நினைவு நாளாக கடைப்பிடிக்க தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆணை பிறப்பிக்க கேட்டுக்கொள் கிறோம்.
- டாக்டர் ஆ.மலர்ரெத்னா
(நாகர்கோவில்)
-விடுதலை,12.8.15