பக்கங்கள்

புதன், 29 ஏப்ரல், 2020

தேசம் தமிழ் சொல்லா?

தமிழில் திகையம் - தேயம் ஆனது . தேயம் - பிற மொழிகளில் தேசம் / தேஷ் எனத் திரிந்தது . 

√தேயம் - என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம் , மக்கள் கூட்டம் . 
√தேயம் - முதலில் எல்லையைக் குறித்து , பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது . 
√தேயம் - ஒரு திசையிலுள்ள நாடு . 

யகரம் சகரமாகத் திரிவது இயல்பானது . 

*கைலாயம் > கைலாசம் > கைலாஷ் . * ஆகாயம் > ஆகாசம் > ஆகாஷ் . 
* முயல் > முசல் . 
* மயிர் > மசிர் . 
* நேயம் > நேசம் . 
* குயவன் > குசவன் . 
* தோயை > தோசை . 
* பாயனம் > பாசனம் . 
* உயர்த்தி > உசத்தி . 
* மயக்கம் > மசக்கை . 

சரி . . . இப்போது தேயம் என்ற சொல் தமிழில் எவ்வழியில் வந்தது எனப் பார்ப்போமா ? 

திகு / திகை - என்பது இதன் மூலம் . 

திக்கு > திகை - என்றால் முடிவு , எல்லை , பக்கம் என்று பொருள்படும் . ( கார்த்திகை = கார்காலத்தின் முடிவு என்று பொருள் ) . 

* திகைதல் = முடிதல் , தீர்தல் . 
( " அதன் விலை இன்னும் திகையவில்லை " என்பது வழக்கு ) . 
* திகைத்தல் = முடித்தல் . 
* திகை - திசை எனத் திரிந்தது . 
( ககர சகரப் போலி ) . 
* திகை - திசை = முடிவு , எல்லை , பக்கம் . திக்கு . 
* திசை = தேசம் , பக்கம் , இடம் . 
* திகதி - தேதி என மாறியது போல் . . திகையம் > தேயம் ஆவதும் தமிழில் இயல்பானதே . ! 

( * பகுதி > பாதி 
* மிகுதி > மீதி 
* திகதி > தேதி 
* தொகுப்பு > தோப்பு 
* முகிழ்த்தி > மூர்த்தி . 
* அகப்பை > ஆப்பை . 
* அகத்துக்காரி > ஆத்துக்காரி ) .
கியூரா செயலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக