பக்கங்கள்

புதன், 20 மே, 2020

இலக்கியத்தில் தமிழ் என்ற சொல்

தமிழர்நாடு :-
---------------------
1. தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31
இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்
தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
- பரிபாடல் 9
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்)
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
- பதிற்றுப்பத்து 63
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து)
தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227
(தமிழகம் எனும் சொல்)
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
- சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை)
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
- சிலப்பதிகாரம், வேனில் காதை
(வரம்பு அதாவது எல்லை)
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை
தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை
(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி)
அறவாழி கிருபானந்தன்

2. தமிழிலக்கியங்களில் தமிழ் என்ற சொல் வழங்கப்பட்டிருத்தலைக் காண்போம்.
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே (புறம்.58)
அதூஉம் சாலுநற் றமிழ்முழு தறிதல் (புறம் 50)
தமிழ் வையை தண்ணம் புனல் (பரி.6. 60)
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே (திருமந்.81)
(இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். ..இவை போதுமானது. மற்றவற்றைத் தேடிக் காண்க)
***
தமிழர் என்ற சொல் வழங்கும் நூல்கள். . . .
மண்டினிக் கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் (புறம் 35)
அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட (சிலம்பு.நீர்ப்படைக் காதை)
(இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். ..இவை போதுமானது. மற்றவற்றைத் தேடிக் காண்க)
****
தமிழகம் என்ற சொல் வழங்கப்பட்ட நூல்கள். . .
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்
(தொல். சி.பாயிரம்)
தமிழகப் படுத்த இமிழிசை முரசின் (அகம் 227)
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிந்த (சில. அரங்)
தென்தமிழ் நாட்டுச் செழுவில் (சில.காட்சி)
(இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். ..இவை போதுமானது. மற்றவற்றைத் தேடிக் காண்க)
- நடவரசன் அமிர்தம், முகநூல் பதிவு, 20.5.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக