பக்கங்கள்

திங்கள், 6 டிசம்பர், 2021

‘பெரியாரிடம்’ கண்ட ‘தமிழ்த் தேசியக்’ கூறுகள்: - சிந்தனைக் களம்


வெள்ளி, 19 நவம்பர், 2021

வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்கள்

 

முதலமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை,நவ.19- கப்பலோட்டிய தமிழர் ..சி.யின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட் டத்தின் முன்னெடுப்பாக ..சிபன்னூல் திரட்டு மற்றும் ..சிதிருக்குறள் உரை ஆகிய நூல்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (18.11.2021) வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (18.11.2021) தலைமைச் செயலகத்தில்விடுத லைப் போராட்ட வீரர் ..சி.யின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப் பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள ..சிபன்னூல் திரட்டு - முதல் தொகுதி மற்றும் ..சிதிருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் அறிவிப்பு

..சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி முதலமைச்சர் மு..ஸ்டாலின் 14 வகையான அறிவிப்புகளைச் சட்ட மன்றத்தில் அறிவித்தார்அவற்றுள் “..சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்பதும் ஒன்றாகும்அதன் தொடர்ச்சியாகபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பள்ளிக் கல்வித் துறைச் சீராய்வுக் கூட்டத்தின்போதுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பின்படி..சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்பு களை ..சிநூற்களஞ்சியமாக நான்கு நூல் திரட்டுகளாக பதிப்பிக் கலாம் என்று அறிவுறுத்தினார்.

..சிநூல் களஞ்சியம்

அதன்படிவிடுதலைப் போராட்ட வீரரும்கப்பலோட்டிய தமிழரும்பழம்பெரும் நூல்களைத் தேடி பதிப்பித்து உரை எழுதிய வருமான ..சிதம்பரனாரின் எழுத்துகள் ..சிநூல் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டுஅவரது 150-ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால்குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது.

முதல் கட்டமாக ..சிதம்பர னார் எழுதி வெளிவராத படைப்பு கள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்துமுதல் தொகுதி - ..சிபன்னூல் திரட்டு எனும் தலைப்பிலும்இரண்டாம் தொகுதி - ..சிதிருக்குறள் உரை எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படுகிறது.

அரசியல் பெருஞ்சொல்

முதல் தொகுதியில் ..சிஎழுதிய தன் வரலாறுமெய்யறிவுமெய்யறம் ஆகிய நூல்களும் 1927 காங்கிரஸ் மாநாட்டில் அவர் ஆற்றிய அரசியல் பெருஞ்சொல் என்ற உரை..சிகண்ட பாரதி என்ற நூல்..சி.யின் பாடல் திரட்டு..சிகட்டுரைகள் ஆகி யவை அடங்கியுள்ளனமேலும்இத்தொகுதியில் ..சி பதிப்பித்த திருக்குறள் (அறத்துப்பால்மணக் குடவர் உரை சேர்க்கப்பட்டுள்ளது..சிஎழுதிய இன்னிலை விருத்தி உரையும் சிவஞானபோதம் உரையும் இடம் பெற்றுள்ளன.

இவற்றோடு ..சிமொழி பெயர்த்த ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களான ‘மனம்போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ ‘சாந்திக்கு மார்க்கம்’ ஆகியவையும் உள்ளனஇவை தவிர ..சி.யின் வேறு சில கட்டுரைகளும் பின்னி ணைப்பாக இடம் பெற்றுள்ளன.

தொழிற்சங்கத் தொண்டு

இரண்டாம் தொகுதி ..சிதிருக்குறளுக்கு எழுதிய உரையாகும்..சி.யின் தேசப்பணிதியாகம்தொழிற்சங்கத் தொண்டு ஆகிய வற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல ..சி.யின் இலக்கியப் பணிதன் வாழ்வைத் திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொண்ட ..சிதிருக்குறளுக்கான மணக் குடவர் உரையைத் தேடிப் பதிப்பித் தார்கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நூலாகத் திருக்குறள் திகழ்வதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று மணக்குடவர் உரையை அடிப்படையாகக் கொண்டு ..சிஎழுதிய புதிய உரையாகும்.

தனது திருக்குறள் உரையில் 11ஆம் நூற் றாண்டில் எழுந்த அவைதீக உரையான மணக்குடவர் உரையில் இருந்து 13ஆம் நூற்றாண்டில் எழுந்த வைதீக உரையான பரிமேல ழகர் உரை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்கியுள்ளார்பரிமே லழகர் உரையிலிருந்து தான் வேறு படும் இடங்களையும் ஒன்றுபடும் இடங்களையும் சுட்டிக்காட்டி இருப்பதோடுகுறளுக்குப் பொருள் கொள்வதில் வாசகனுக்கு உள்ள சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டி ருப்பதை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரலாம்.

வெளிவராத படைப்புகள்

..சிஎழுத்துகளை ஆய்வு செய்து வெளிவராத படைப்புகளைச் சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வீ.அரசு பதிப்பாசிரியராக இருந்து இப் பெருந்திரட்டுகளைத் தொகுத்துள் ளார்புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அட்டைப்படம் வடி வமைத்துள்ளார்.

இந்த நிகழ்வில்பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனிதலைமைச் செய லாளர் முனைவர் வெ.இறையன்புபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் மேலாண்மை இயக்குநர் டி.மணிகண்டன்உறுப் பினர் செயலர் எஸ்.கண்ணப்பன்துணை இயக்குநர் டி.சங்கர சரவ ணன்ஆலோசகர் .அப்பண்ண சாமிபதிப்பாசிரியர் பேராசிரியர் வீ.அரசுஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பங்கேற்றனர்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

தமிழ்நாடு நாள் நவம்பர் ஒன்றா? ஜூலை 18 ஆம் நாளா?

  

ஊட்டியில் தமிழர் தலைவர் பேட்டி

ஊட்டிநவ.2  தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டியது நவம்பர் ஒன்றாஜூலை 18 ஆம் நாளாதுணைவேந்தர்கள் நியமனம் ஆளுநரைச் சார்ந்ததாபோன்ற கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.

நேற்று (1.11.2021) காலை ஊட்டிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

தமிழ்நாடு நாள் என்று அரசு அறிவித்திருப்பது குறித்து...

செய்தியாளர்: நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினத்தை கொண்டாடவேண்டும் என்று அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள்ஆனால்ஜூலை 18 ஆம்  தேதி கொண்டாடுவோம் என்று அரசு அறிவித்திருக்கிறதே?

தமிழர் தலைவர்ஏற்கெ னவே கடந்த ஆண்டே அவர்கள் அதை அறிவித்தவுடன்திராவிடர் கழகம் முன்பே இதுபற்றி சொல்லியிருக்கிறது.

தமிழ்நாடு நாள் - என் றைக்குத் தமிழ்நாடு என்று அறிவிக்கப்பட்டதோஅன்றைய தினத்தை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவதுதான் உரிய முறையில் பொருத்த மானதாக இருக்கும்.

காரணம் என்னவென் றால், 1956, நவம்பர் ஒன்றாம் தேதி வந்தது மாநிலங்கள் சீரமைப்பு - மொழி வழி மாநிலங்கள்சென்னை ராஜ் ஜியம் என்றுதான் இருந்ததுஅதிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டனசில பகுதிகள் இணைக்கப்பட்டன.

ஆகவேமுழுக்க முழுக்க அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபொழுது, ''Call My State as Tamil Nadu'' என்று மிக அழகாகஆணித்தரமாக வாதம் செய்தார்.

1961ஆம் ஆண்டிலேயேஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் முதன் மையானவராக இருந்த பூபேஷ் குப்தா அவர்கள்சென்னை ராஜ்ஜியம் பிரிந்தவுடன், ''தமிழ்நாடு'' என்று அதற்குப் பெயர் இல்லை - வெறும் சென்னை ராஜ்ஜியமாக இருக்கிறது என்று சொன்னார்.

''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்று 1956 இல் சொன்னார் தந்தை பெரியார்!

அதற்கு முன்பே 1956 இல் தந்தை பெரியார், ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்பதை முதன்முதலில் வலியுறுத்தினார்.

எனவேபெரியார் வலியுறுத்திவடக்கேயும் மாநிலங்களவையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டுவங்காளத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் வைக்குமாறு கோரியதை அன்றைக்கு  ஒன்றிய அரசினர் ஒப்புக் கொள்ள வில்லை.

மாநிலங்களவைக்குச் சென்றவுடன் அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு சொன்னதையும் அவர்கள் ஏற்கவில்லை.

அதே அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு, 18.7.1967 இல் தெளிவாக தமிழ்நாடு என்று சட்டம் கொண்டு வந்து பெயர் மாற்றம் செய்தார்அப்படி செய்ததோடு மட்டுமல்லசட்டப்பேரவை வரலாற்றிலேயே ''தமிழ்நாடு'' என்று மூன்று முறை முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொல்ல, ''வாழ்கவாழ்க வாழ்க'' என்று அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி சொல்லி அன்றிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் வந்தது.

எனவேதான்தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகின்ற நேரத்தில், ''தமிழ்நாடு'' என்று என்றைக்குப் பெயர் சூட்டப்பட்டதோஅன்றைய நாளைத்தான் கொண்டாடவேண்டும்.

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை நவம்பர் ஒன்றாம் தேதியில் கொண்டாடலாம்.

எல்லைப் போராட்ட வீரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்!

எல்லையில் சில பகுதிகள் சேர்க்கப்பட போராடிய எல்லைப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்தலாம்தமிழ்நாடு அரசுஅவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்திருக்கிறதுஅவர்களை சிறப்பாகக் கவுரவப்படுத்தவேண்டும் என்பதற்காகஒரு லட்சம் ரூபாயை  நம்முடைய 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்இந்தியாவின் முதலமைச்சர்களில்முதல் முதலமைச்சர் என்கிற சிறப்போடு  இருக்கின்ற மு..ஸ்டாலின் அவர்கள் அதை செய்திருக்கிறார்கள்.

ஆகவேஇரண்டும் முரண்பாடல்லஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் என்று வரலாற்று ரீதியாக கொண்டாடப்படும் என்று சொன்னது சரியான முடிவுஆகவேமாநிலங்கள் சீரமைப்புக்கான நாளே அவர்கள் தரப்பில் கூறப்படும் நவம்பர் ஒன்றாம் தேதியாகும்.

எனவேசென்னை ராஜ்ஜியம் பிறந்தது என்று சொல்லிநவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடினால் சரிஆனால்தமிழ்நாடு நாள் என்று கொண்டாடவேண்டும் என்றால்இன்றைய தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஜூலை 18 ஆம் தேதிதான் சரியானது என்பது எங்களைப் போன்றவர்களுடைய உறுதியான கருத்தாகும்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

(பேட்டியின் முதல்பகுதி)