பக்கங்கள்

புதன், 8 ஜூலை, 2026

தாய்லாந்தில்2000 ஆண்டு பழைமையான ‘தமிழி’ முத்திரை மோதிரம் கண்டெடுப்பு

கடல் கடந்த தமிழ் நாகரிகத்திற்கு மேலும் ஒரு சான்று!

தாய்லாந்தில்
2000 ஆண்டு பழைமையான ‘தமிழி’ முத்திரை மோதிரம் கண்டெடுப்பு

பெட்சாபுரி,  ஜூலை 8  கடல் கடந்து பரவியிருந்த பண்டைய தமிழர்களின் வணிகம் மற்றும் பண்பாட்டு தடயங்களுக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சான்று கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடந்த அகழாய்வில், 2000 ஆண்டுகள் பழைமையான தங்க முத்திரை மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் தொடக்கத்தில் ‘பிராமி’ எழுத்துகள் என தவறாகப் படிக்கப்பட்டன.

ஆனால் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘சார்’ குழுவின் ஆய்வாளர் ரஞ்சித் குமார் மேற்கொண்ட ஆய்வில், அது இடவல மாற்றமாக அதாவது Mirror Image-இல் பொறிக்கப்பட்ட ‘தமிழி’ எழுத்துக்கள் என்பது உறுதியாகி யுள்ளது.

‘அளர் வைரதன்’ – தமிழரின் பெயர்

அச்சிடுவதற்கு ஏதுவாக தலைகீழாக பொறிக்கப்பட்டு உள்ள அந்த மோதிரத்தில் ‘அளர் வைரதன்’ என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

- விடுதலை நாளேடு, 8.7.26


புதன், 1 ஜூலை, 2026

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகளில் சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் எழுத்துகள் ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல்

 திருச்சி, ஜூன் 15– உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் பண்டைய காலத்தில் பாரோ (Pharaoh) என்ற பூமியை ஆள்வோன் என்னும் சிறப்பு பெயருடைய மன்னர் வம்சத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ளன.

இங்கு 4,540 ஆண்டுகள் பழமையான பாரோ கூபுவின் சமாதியான கிசா(Giza) என்ற பெரிய பிரமிடின் நுழைவாசலில் பொறிக்கப்பட்டுள்ளவை குறியீடுகள் அல்ல என்றும், அவை கிமு 7500 ஆண்டுகள் முதல் 3500 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு உட்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் மொழியின் 6 எழுத்துகள் என திருச்சியைச் சேர்ந்த சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள் ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பெரிய பிரமிடின் 6 எழுத்துகளை சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதும் முறைப்படி இடமிருந்து வலமாகவும், உள்ளிருந்து வெளியாகவும் 2 விதமாக படித்து பொருளறியலாம். முதலாவதாக, ‘பஉளின் நள்’ அதாவது ‘பவுழியன் நள்’ எனவும், அதற்கு தமிழ் அகராதியின் துணையுடன் ‘பூமி நாட்டை ஆண்டவனான சேரன் நடுவே’ எனவும் பொருளறியலாம்.இரண்டாவதாக, ‘பா உ(ள்) ளன்நள்’ என்பதற்கு ‘தூய்மையான உற்ற நட்பினன் நடுவே’ என பொருளறியலாம். இவற்றில் முதலாவதை பூமியை ஆள்வோன் (பார்வோன்) என்பதால் பூமி நாட்டை ஆண்டமன்னன் நடுவே என்பதைக் கொண்டு ‘கூட்டுப் பொருள்கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்படி ‘நடுவே உள்ளவன் பார்வோன்’ எனக் கருதலாம்.

தமிழ்நாடு

சிந்து சமவெளி செந்தமிழ்
உயிர், மெய் எழுத்துகள்

இரண்டாவதை சிந்து சமவெளி நகர நாகரிக பானை ஓடுகள், வில்லைகள், முத்திரைகளில் தூய்மை எனப் பொருள்பெறும் ‘பா’ என்ற சொல் அதிக அளவில் முன்னிலை பெற்றுள்ளதால், தூய்மையான உற்ற நட்பினன் நடுவே என்பதைக் கொண்டு ‘கூட்டுப் பொருள்கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்படி நடுவே உள்ளவன் தூய்மையான உற்ற நட்பினன் எனவும் கருதலாம்.

நைல் நதிக் கரையோரம் அமைந்துள்ள மன்னர்கள் பள்ளத்தாக்கில் (கிங்ஸ் வேலி) மேலை நாட்டு அறிஞர் பெருமக்களால் கண்டறியப் பெற்றுள்ளதும், 2100 ஆண்டுகளுக்கும் முற்பட்டதுமான சிகைக் கொற்றான், சாத்தன் போன்றவை செந்தமிழ் பெயர்ச் சொற்கள் என்பதால் எகிப்து நாட்டுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவருகிறது. இருப்பினும், எகிப்து நாட்டுக்கும், சிந்து சமவெளிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான தொடர்பு எவ்வகையானது, பிரமிடின் கட்டுமானப் பணியில் தமிழ்நாட்டு கட்டடக்கலைஞர்களின் பங்கு இருந்துள்ளதா போன்ற வினாக்களுக்கான விடைகள் ஆராயத்தக்கவை. இவ்வாறு அவர் கூறினார்.

-விடுதலை நாளேடு, 15.6.26