பக்கங்கள்

திங்கள், 8 ஜூன், 2015

ரோமானிய எழுத்துக்களுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு


திருப்புவனம், மே 23_ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் மத்திய தொல் பொருள் துறையினர் நீண்ட அகழ் வாராய்ச்சியை மேற்கொண் டுள்ளனர்.
மத்திய தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந் திரா, கருநாடகம்) தலை மையில் சென்னை பல் கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் உட் பட 30 பேர் கொண்ட குழு இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பண்டைய வணிக நகரமான 'மதுரை நகரம்' முற்றிலும் அழிந்து விட் டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப் படவில்லை. முதன் முறை யாக மத்திய அரசு தொல்லி யல்துறைக்கு ஓர் ஆண்டு ஆய்வு மேற்கொள்ள அனு மதி அளித்து பணிகள் நடந்து வருகின்றன.
தற்போதைய ஆய்வில் பண்டைய மதுரை நகரம் வணிக நகரமாக திகழ்ந்த தற்கான சான்று கிடைத் துள்ளது. ராமேஸ்வரத் தில் இருந்து மதுரைக்கு ஏராளமான வணிகர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயன் படுத்திய பொருட்கள், நாணயங்கள், குறியீடுகள், தங்குமிடம் உள்ளிட்ட வற்றை தேடும் பணி நடைபெறுகிறது.
மதுரை நகரை ஒட்டி வைகையாறு செல்லும் பாதையில் 12 கி.மீ., தூரத் திற்குள் இந்த அகழ்வா ராய்ச்சி பணி நடைபெறு கிறது.
ராமேஸ்வரம் துறை முகத்தில் இறங்கிய வணி கர்கள், வைகை ஆறு வழி யாக வந்து கரையோரத் தில் வணிகத்தில் ஈடுபட் டுள்ளதாக தெரிகிறது என்றும், இதனை மய்ய மாக வைத்தும் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுவதாக அதி காரிகள் தெரிவித்தனர்.
ரோமானிய குறியீடுகள்
தமிழகத்தில் 1963 முதல் 1973 வரை காவிரி பூம்பட்டினத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிக்கு பிறகு மதுரை நகரை ஒட்டி மிக நீண்ட கால அகழ்வா ராய்ச்சி பணி நடைபெறு கிறது. தற்போதைய அகழ் வாராய்ச்சி பணியில் ரோமானிய குறியீடுகளு டன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத் தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப் பட்டுள்ளன. பழங்காலத் தில் பயன்படுத்திய அகல மான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறை கள், தொட்டிகள் ஆகிய வற்றையும் தற்போது கண் டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே யுள்ள கீழடி பள்ளிச் சந்தை திடல் என்றழைக் கப்படும் இடத்தில் சோனை மகன் சந்திரன், அப்துல் ஜபார் மகன் திலிப்கான் என்பவரது இடங்களில் 5மீட்டர் ஆழம், 5மீட்டர் அகலம் கொண்ட குழி கள் வெட்டப்பட்டு அகழ் வராய்ச்சி பணி நடை பெறுகிறது.
தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர் நாத் ராமகிருஷ்ணன் கூறுகையில், தென் தமிழகத்தில் மதுரையை மய்யமாக கொண்டு பாண் டிய மன்னர்களின் ஆட்சி காலம் குறித்த முதல் அகழ்வராய்ச்சி இது. குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகை யாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண் மையா என ஆராய இந்த பணி நடைபெறுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப் பாக நடந்தது என்பதற் கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சி யில் கிடைத்துள்ளன.
ரோமானிய குறியீடுக ளுடன் கூடிய மண் பானை துண்டுகள், பாண் டிய மன்னர்கள் காலத்திய முத்து மாலைகள், அவர் கள் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் மண்பானைகளில் கருப்பு, சிவப்பு உள்ளிட்ட இரண்டு வர்ணங்கள் மட்டுமே உள்ளன. தண்ணீர் ஊற்ற பயன்படும் 'ஜக்' போன்ற அமைப்பின் வாய்ப்பகுதி கிடைத்துள்ளது. பெரிய அகலமான செங்கற்கள் கொண்ட வீட்டின் ஒரு பகுதி மட்டும் முழுமை யாக உள்ளது. பள்ளிச் சந்தை திடல் என்பது வணி கர்கள் திடல் என்பதால் இங்கு பணிகளை மேற் கொண்டுள்ளோம். மார்ச் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை அகழ்வ ராய்ச்சி பணி நடை பெறும். இதுவரை 19 இடங் களில் பணிகள் மேற் கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளோம், என்றார்.

-விடுதலை,23.5.15,பக்-4

சனி, 21 மார்ச், 2015

தமிழின் தனித் தன்மை


உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.
இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.
இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.
உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்
தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).
தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.
வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)
ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.
தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது

-விடுதலை ஞாயிறு மலர் 21.3.15,பக்கம்-3

வெள்ளி, 20 மார்ச், 2015

சனி, 31 ஜனவரி, 2015

சமஸ்கிருதம் பற்றிய கட்டுக்கதை

- கிரீஷ் சஹானே

2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிவந்த மிகப் பெரிய செய்தி மக்களின் மனம் கவர்ந்த நரேந்திரமோடியின் தலைமையில் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்றதுதான்.  நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்று பலராலும் கருதப்பட்டதை பா.ஜ.க. செய்து காட்டி சாதனை படைத்துள்ளது.  கட்டுப்பாடோ, வரையறையோ அற்ற வியப்பளிக்கும் இந்துத்துவ வரலாறு என்ற எனது முந்தைய கட்டுரையில், மோடியும், அவரது எண்ணற்ற சகாக்களும் கொண்டிருக்கும் கருத்துகள் பற்றி நான் விவரித்திருந்தேன். என்றாலும், வரலாற்றை  தவறாகப் படித்துக் காட்டுவதன் மூலம், பெரும்பான்மையான மக்களிடையே பொய்யான வரலாற்று நிகழ்வுகளை உண்மையானவை என்று கருதச் செய்யும் பா.ஜ.க.வின் முயற்சி நீடித்து நிலைபெற்று வந்துள்ளது.  பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தகைய முக்கியமான அய்ந்து கட்டுக் கதைகளை கால வரிசையில் பின்னோக்கிச் செல்லும் வண்ணம் நான் இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
 நாலாவது கட்டுக்கதை
. 4. சமஸ்கிருதம் பற்றிய கட்டுக்கதை
சமஸ்கிருத மொழி மாபெரும் அளவி லான பாடல்கள், தத்துவநெறிகள், தியான நெறிகள்,  கவிதைகள், புராணங்கள், இதிகாசங்கள், நாடகங்கள், ஒப்பந்தங்கள் என்று பல்வகை இலக்கியங்களை உருவாக்கி யுள்ளது. கலாச்சார அடிப் படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக மொழிகளில் அதுவும் ஒன்று என்பதில் அய்யமேதும் இருக்க முடியாது. ஆனால், அனைத்து மொழி களுக்கும் சமஸ்கிருத மொழியே தாய் என்று சொல்லப்படுவது மட்டும் உண்மையல்ல. சமஸ்கிருத மொழி சார்ந் துள்ள இந்திய-அய்ரோப்பிய மொழிக் குடும் பத்து மொழிகளுக்கு அடிப்படையான மொழி என்று கூட அதனைக் கூற முடியாது.
இம்மொழிக் குடும்பத்தை முதன் முதலாக அடையாளம் கண்ட வில்லியம் ஜோன்ஸ் என்பவர்,  சமஸ்கிருத, லத்தீன், பாரசீக மொழிகள், முன்பு இருந்து இப்போது மறைந்து போயிருக்க இயன்ற ஒரு பொதுவான மூலத்திலிருந்து பிறந்த மொழிகளாக இருக்கக்கூடும் என்று 1786 ஆம் ஆண்டின்போதே கருத்து தெரி வித்திருந்தார். அந்த மூலம்   இந்திய அய்ரோப்பிய மொழிக்குடும்பத்துக்கு முந்தையது என்று இப்போது அழைக் கப்படுவதாகும். அந்த மூலமொழி கருங் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5500 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட் டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு முந் தைய மொழி ஒன்று இன்றைய துருக்கி, உக்ரைன் நாடுகளில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த கால்நடை களுக்குத் தீவனம் தேடி புலம் பெயரும் நாடோடி களால் பேசப்பட்டது என்று கூறுவது இந்தியாவில் ஏற்றுக் கொள் ளப்படாத தாகவும்; விரும்பப்படாததாகவும்; மறுக் கப்பட இயன்றதாகவும் இருப்பதாகும். ஆனால், அதுதான் சமஸ்கிருதத்தை மற்ற பல மொழி களைப் போல ஆக்க இயன்றதாகும்.

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை,6.1.15பக்2



வெள்ளி, 23 ஜனவரி, 2015

கற்கால (தமிழர்கள்)மனிதர்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதம்



பழனி, 

திண்டுக்கல் அருகே, 4,500 ஆண்டுகள் பழமையான கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தொல்லியல்துறை ஆய்வு

திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பழனி தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை டி.கூடலூருக்கு அருகே மண்மேடான பகுதியில் உடைந்த நிலையில் வித்தியாசமான கல் ஒன்றை அவர்கள் கண்டனர்.

அதை எடுத்து பார்த்தபோது, அது கல்லால் செய்யப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது. அந்த ஆயுதத்தை பத்திரமாக மீட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது குவார்ட்ஸ் எனப்படும் ஒருவகை கல்லில் இருந்து உருவாக்கப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது. அந்த கல்லால் ஆன ஆயுதம் 8 செ.மீட்டர் நீளமும், 13 செ.மீட்டர் குறுக்கு சுற்றளவும், 216 கிராம் எடையும் இருந்தது.

4,500 ஆண்டுகள் பழமையானது

இதையடுத்து அந்த ஆயுதம் உருவாக்கப்பட்ட காலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் உருவாக்கியதும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக அந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

அந்த ஆயுதத்தில் ஆங்காங்கே தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள், சிந்துசமவெளி நாகரீகத்தின் போது வழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களை போல இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பழமையான தமிழர் நாகரீகமும், சிந்துசமவெளி நாகரீகமும் ஒன்றானவையே என்பதற்கான மற்றொரு ஆதாரம் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 -தினத்தந்தி,23.1.2015,பக்-9

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தமிழின் தனித்தன்மை

தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்

பகுதி II - தமிழின் தனித்தன்மை


தவிர்க்க இயலாத தத்துவம்
மாற்றம் என்பது மாறாத உலகத்தியற்கை; எத்துறையும் இதில் விலக்கன்று. மொழியும் இதிலடங்கும். தமிழ்மொழியும் இதிலடங்கும்.
சமுதாயம் மாற்றம், வளர்ச்சி இவற்றிற்கேற்றபடி மொழியிலும் மாற்றம், வளர்ச்சி ஏற்படும்; ஏற்படவேண்டும். இது, தவிர்க்க இயலாத் தத்துவம் _ விதி _ நியதி _ இயற்கைச் சட்டம்.
தமிழின் இன்றியமையாத அடிப்படையான இலக்கண அமைதியை இந்த மாற்றம் அடிப்படையில் வைத்து ஆராய்வோம்.
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நம் தமிழ்மொழி _ தனித்தன்மைகள் கொண்ட நம் தமிழ்மொழி, தவிர்க்க இயலாத சில அல்லது பல மாற்றங்களை வளர்ச்சி நோக்கில் கையாள வேண்டும்.
இல்லையேல்,
தமிழ் காலத்தால் பின்தங்கி, பிற்போக்கு நிலைபெற்று, பிற மொழிகளோடு ஒப்பிடுகையில் அது தனிமையாகிவிடும். அல்லது தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.
வருந்தத்தக்க இந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்கப்பட வேண்டும் என்றால் இலக்கணத்தில் இன்றியமையாத சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏற்புடைய புத்திலக்கணத்தின் இன்றியமையாமை
மொழிவளர்ச்சியும், புதிய இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. மொழிவளர, புதிய இலக்கணங்களும் தோன்றியாக வேண்டும்; தோன்றியேயாக வேண்டும். இன்றேல், மொழியில் குழப்பங்கள், தெளிவின்மை மிகுதியாகும். மொழிவழக்கில், ஓர் ஒருமைப்பாடும் (Uniformity) செம்மையும், சீர்திருத்தமும் (reform)  இல்லாமல் போய்விடும். விளைவு?
நம் தமிழ் தனிமைப்படுத்தப்பட்டுவிடும். ஓடும் நீரோடையாக அல்லாமல் தேங்கிய குட்டையாகிவிடும். ஆதலின், மொழிவளர, புதிய இலக்கணங்கள், காலத்தின் போக்குக்கு இயைப _ ஏற்ப தேவை என்பது தெளிவாகும்.
அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்:
முக்காலமும் தற்காலமும்
வந்தான், வருகிறான், வருவான் - என்கிற முக்கால வினைகள்தான் பண்டைய இலக்கணத்துடன் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த முக்காலங்களோடு, வந்துவிட்டான்;
வந்திருக்கிறான்;
வரப்பார்த்தான்;
வரமுடியும்;
வரவேண்டும்;
வரலாம்; என்பன இன்றைய வழக்காற்றில் உள்ளன. இவற்றைத் தவிர்க்க இயலாது; பழைய இலக்கண வழக்கில் இல்லை என விலக்க இயலாது; முடியாது, முயன்றால், தமிழ் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.
பலர்பால் வினைமுற்று படும்பாடு
ஆசிரியர் வந்தார் என்பதில் ஆசிரியர் என்பது பலர்பால்; வந்தார் என்பது பலர்பால் வினைமுற்று. இன்று, அது உயர்திணை ஒருமைப் பலர்பாலுக்கு உரியது.
வேற்றுமொழி எழுத்துகளின் பயன்பாடு
தனித்தமிழ் சொற்களை எழுத வடமொழிக் கிரந்த எழுத்துகள் தேவையில்லை. ஆனால், வேற்றுநாட்டுப் பெயர்; ஆள் பெயர்கள்; இடப்பெயர்கள்; வேற்றுநாட்டார் உண்டாக்கி நாம் பயன்படுத்தும் பொருள்களின் பெயர்கள்; போன்றவற்றைக் குறிக்கும்போதும் தமிழ் எழுத்துகளில் குறிக்கப்பட முடியாத போதும் தமிழ்நாட்டில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம். இதனால், தமிழ்ப் பண்பாடோ, தனித்தன்மையோ கெடுவதில்லை.
எடுத்துக்காட்டு
ஆகஸ்டு - இதனை அப்படியே எழுதலாம். ஆகச்சுட்டு என்று எழுதவேண்டியதில்லை. பெர்னாட்ஷா - இதனை, பெருனாருடுசா என எழுத வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தன்மை காக்கும் நோக்குடன் மேற்கண்டவாறு குறித்தால் அந்தச் சொற்கள் நாம் எதை, யாரைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோமோ அவற்றை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறதல்லவா?
தலைநிமிரவா? தடம் புரளவா?
பழமை, பழம்பெருமை, பழைய பண்பாடு, மொழியின் தனித்தன்மை, தூய்மை முதலானவை நாம் தலைநிமிரவும் பயன்படலாம்; தடம் புரளவும் பயன்படலாம்.
நீரோடும் நிலத்தோடும்
அறிவியல் _ தொழில்நுட்பம் (Science - Technology) என நாம் இன்று குறிப்பிடும் கல்வித்துறை முழுமையாக மேலைநாட்டினரின் படைப்பாகும்.
தனித்திருந்து வாழும் தவமணி
நாம் அறிந்த, நம் நாடு கண்ட தொழில் நுட்பம் நம் மொழியில் இல்லை. அறிவியல் தொழில்நுட்பம் நம் மொழியிலிருந்து விலகி நிற்கிறது என்பது இல்லை. அது, நம்மிடமிருந்தும், நம் மண்ணிலிருந்தும் விலகி நிற்கிறது. தனித்திருந்து வாழும் தவமணியாக நம் மொழி _ செம்மொழி இருக்கிறது. இதனால், தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
அய்யா வழியில் அடிகளார்:
தந்தை பெரியாரின் கருத்துக்கு, தமிழ்மா முனிவர் குன்றக்குடி அடிகளார் பின்வருமாறு விளக்கம் தந்தார். இன்று வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானம் _ தொழில்நுட்பம் தமிழில் உண்டா? என, பெரியார் கேட்டார். ஆம்! காலத்திற்குக் காலம் தமிழ் வளரவேண்டும். உலகம் தழீஇய(தழுவிய) ஒட்பத்துடன் (சிறப்புடன்) வளரவேண்டும். அங்ஙனம் தமிழ் வளர்ந்ததா? வளர்க்கப் பெற்றிருக்கிறதா?... இன்று, தமிழ் அறிவியல் தமிழாக வளரவில்லை; வளர்க்கவேண்டும் என்ற முனைப்பும் இல்லை. தெருவில் வழக்கமான பட்டிமன்றம்தான்! கைகேயியா? கூனியா? என்பன போன்ற தலைப்புகள்...
காலந்தொட்டு இயைந்த நிலையில் தமிழன் தன்னை வளர்த்துக் கொள்ளாது போனால் அவன் தலைவர் பெரியார் பார்வையில் காட்டு மிராண்டிதான்! அவன் பேசும் மொழியும் காட்டுமிராண்டி மொழிதான்! (பெரியார் 116ஆம் பிறந்தநாள் விடுதலை மலர்)
அறிவியல் தமிழாக்கத்திற்கான சிலவழி முறைகள் புதிய சொற்கள் புனைவதா?
எல்லாப் பிறமொழிச் சொற்களையும் அவற்றை அப்படியே ஒலிக்காமல் அவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்பதோ புதிய சொற்கள் புனவைதென்பதோ இயலும் ஒன்றல்ல; தேவையானதுமல்ல. அவற்றை அப்படியே தாய்மொழியில் பயன்படுத்துவதால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடாது.
அவற்றை மொழிபெயர்த்தே ஆதல் வேண்டும் என்று அடம்பிடித்தால் தமிழ்மொழி தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும்.
அய்யமில்லை! அதேசமயம், நடைமுறைத்  தடுமாற்றத்தால், தெளிவின்மையால் தமிழ் தனிமைப்பட்டுவிடும்.
சான்றாக, புதிய ஆங்கில மருந்துகளான பென்சிலின் (Pencillin), ஸ்டெரப்டோமைசின் (Streptomycin), இன்சுலின் (Insulin) முதலான பெயர்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியமை அல்ல.
தனித்தன்மையா? தனிமையா?
நம் தமிழின் தனித்தன்மையைக் காப்பதாக எண்ணி அறிவு வளர்ச்சியில் நம்மைத் தனிமைப்படுத்துவதோடு தமிழையும் தனிமைப்படுத்தி விடுகிறோம்.
மாற்றம் எதுவுமின்றி உலக அளவில் பொதுமையாகப் பயன்பாட்டில் உள்ள குறியீடுகள் (symbols) இவற்றைத் தமிழில் எழுதித்தான் ஆகவேண்டும் என்பது இல்லை.
அவ்வண்ணம், குறித்தால்தான் தமிழ்ப்பற்று, தமிழுணர்வு இருப்பதாகக் கூறுதல் சரியான அணுகுமுறையோ, கொள்கையோ ஆகாது.
சான்று பி2ளி இருமடங்கு நீரிய (Hydrogen)மும் ஒரு பங்கு உயிரிய (Oxygen)மும் இணைவதால் உண்டாவது நீர். இது வேதியியல் விளைவு. இதற்கான உலகளாவிய குறியீடுதான் பி2ளி என்பது. இதனை, ஆங்கில மொழிச் சொற்குறியீடு என்பதால் நீ2உ _ என்று தமிழ்மொழியாக்கம் செய்தல் கூடாது.
அறிவியல் மாணவர்கள் குழப்பம் அடைவர். மாற்றமில்லாது அப்படியே பயன்படுத்த வேண்டிய சொற்களை ஏற்றல்.
சான்று: ஓம் (Ohm),, ஆம்பியர் (Ampere) டயர் (Tyre) இவற்றிற்கு வேறு பெயர்களைத் தமிழில் காண, உருவாக்க முயல்வது தேவையற்றது.
மேற்கண்ட பெயர்கள் அவற்றுடன் தொடர்புடைய இயற்றுநர் (Inventor) பெயர்களைத் தாங்கி நிற்பன. இவற்றை மொழிபெயர்த்தல் என்ற எண்ணமே, முயற்சியே தேவையில்லை. செய்தால் தமிழ் தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.
எழுத்துச் சீரமைப்பு
தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான முதல்படி எழுத்துச் சீரமைப்பு. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தந்தை பெரியார் அவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தில் ஒரு பகுதி அரசுஆணையாக எம்.ஜி.ஆர். அவர்களால் வெளியிடப்பட்டது.
குறைந்த குறியீடுகள்
தந்தை பெரியார் அவர்கள் ஐ, ஔ, என்ற 2 உயிரெழுத்துகளுக்குப் பயன்படுத்திய மாற்றங்கள் மட்டும் அரசு ஆணையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. தமிழ் வரிவடிவத்தில் கடந்த 2000 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பல. அறவே, அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு வரிவடிவம் மாறுபட்டுள்ளது. இப்போதைய வரிவடிவங்களில் சில வீரமாமுனிவரால் மாற்றம் செய்யப்பட்டன. ஒலிகளுக்காக, நாம் அமைக்கும் குறியீடுகள் மிக எளிய _ முடிந்த அளவு குறைந்த எண்ணிக்கையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
பெரியாரைத் துணைக்கோடல்:
தந்தை பெரியார் அவர்கள் 1948_ல் கூறிய பின்வரும் கருத்தினை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
மாற்றுவதும், திருத்துவதும் எதற்கும், யாருக்கும் இழிவாகவோ, குற்றமாகவோ ஆகிவிடாது. பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக்காலத்திய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் அழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம்.
மொழி என்பது, உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போராட்டக் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். _ (தந்தை பெரியார் கட்டுரைத் தொகுப்பு. பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியிடு, திருச்சி-_1948)
தனித்தமிழின் தகைமை காப்போம்!
வரம்பு மீறி, தேவையில்லாமல், தாராளமாக வரைமுறையில்லாமல் அயல்மொழிக் கலப்பு தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டியது; தடுத்து நிறுத்தப்படுவதற்கு உரியது ஆகும்.
ஓர் இனத்திற்கும் மொழிக்கும் தனித்தன்மை உண்டு. அது, தேவைப்படும் போதெல்லாம் பாதுகாக்கப்படல் வேண்டும்; முடிந்தவரை வளர்க்கப்படல் வேண்டும். அதற்காக, ஓர் இனமோ, மொழியோ, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதல் கூடாது.
பாதையும் பயணமும்
கடந்த கால வரலாறு; இன்றைய நடைமுறை; அனைத்துக்கும் மேலாக, உலகு அளவிய கோட்பாடு ஆகிய அனைத்துக்கும் மாறான பாதையில், நம் மொழி _ தமிழ்ப் பயணமும்; முயற்சியும் சென்றுவிடுதல் கூடாது!
காப்போம்! தவிர்ப்போம்!!
நாம், நம் தமிழின் தனித்தன்மையைக் காப்பதாக எண்ணி, நாளுக்குநாள் நம்மை அறிவுலக வளர்ச்சிப் பாதையில் தனிமைப்படுத்துவதோடு, நம் தமிழையும் தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடுகிறோம்.
தனிமைப்படலும் (Isolation), தேக்கமும் (Stagnation) வளர்ச்சிக்கு வழி அன்று. தமிழின் தனித்தன்மையைக் காப்போம்! அதே சமயம், தமிழ் தனிமைத்தன்மை அடைவதைத் தவிர்ப்போம்!

- பேராசிரியர் ந.வெற்றியழகன்
உண்மை, ஜூலை16-31, 2012