பக்கங்கள்

வெள்ளி, 23 ஜூன், 2017

இந்தி

1940-க்கு முன்பு ஆங்கிலம் மற்றும் உருதுதான் அரசின் தகவல் பரிமாற்ற மொழியாக இருந்தது, சமஸ்கிருதம் இன்று எப்படி உள்ளதோ அதே போல் தான் அன்றும் இருந்தது, பார்சி மொழி பெரிய பணக்காரர் களிடையே இன்று ஆங்கிலம் போல் அன்று விளங்கியது. மிகப் பெரிய எடுத்துக்காட்டு அடல் பிகாரி வாஜ்பாய் சுதந்திரப் போராட்ட வீரரைக் காட்டிக் கொடுத்து இந்தியிலோ, ஆங்கி லத்திலோ எழுதவில்லை - அவர் உருதுவில் மட்டுமே எழுதியிருந் தார், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தனர்.

முகலாயர்களின் ஆட்சி காலத்தில் நன்குதழைத்த உருது, ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அது ஆங்கிலத்திற்குப் பிறகு இரண்டாம் மொழியாகிவிட்டது, 1935க்குப் பிறகு தான் இந்தியே வருகிறது.   சரி முகலாயர்களின் வருகைக்குப் பிறகுதான் உருது வலுவாகிறது,

இன்றும் பாகிஸ்தானில் ஆங்கிலம் உருதுவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மொழி 'பருஇ',  இதன் முந்தைய பெயர் "பேசு" என்பதாகும், இதை உருதுவில்        ப ர வு இ என்று அழைப்பார்கள், பாகிஸ்தானின் பழைமையான ஊர் பெயர்கள் அனைத்தும் இந்த பருஇ மொழியில்தான் இருக்கும்,

பருஇ மொழியும் திராவிட மொழிப்பிரிவுதான், இதில் ஸ், ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் இல்லை. இன்று பருஇ மொழியின் எழுத்து வடிவங்கள் மறைந்து அது உருதுவிலேயே எழுதப்படுகிறது.

மராட்டி, துளு போன்றவை களும் வரிவடிவம் மறைந்து இந்தி வடிவிலும், கன்னட வடிவிலும் எழுதப்படுவது போன்றே பருஇ மொழியும் அப்படி மாறிவிட்டது,

உத்தரப்பிரதேச மாநில பள்ளிக் கல்வி வாரியம் வெளி யிட்டுள்ள ஓர் அறிக்கையில் 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தி பாடத்தில் மட்டும் 5.23 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 29 லட்சம் பேர் இந்தி தேர்வு எழுதியுள்ளனர். 23.5 லட்சம் பேர் வெற்றி பெற்றுள் ளனர். சுமார் 20 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இதே நிலைதான் ஆங்கிலப் பாடத்திற்கும் நடந்துள்ளது. இந்தி பாடத்தில் 81.28 சதவீதம் மாண வர்கள் வெற்றி பெற்றனர் என் றால், ஆங்கிலத்தில் 81.46 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். மொழிப் பாடத்தைக் காட் டிலும் ஆங்கிலத்தில் அதிகளவு மாணவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு 35 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்வு எழுதினர். அவர்களில் 3 லட்சம் பேர் தோல்வி. 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே 50க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மேற்குவங்கத்தினர், இஸ்லாமி யர்கள், மற்றும் பஞ்சாபியர்களின் குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு வங்கம், உருது பஞ்சாபி மொழியில் பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வாழ்பவர் களின் தாய்மொழி போஜ்புரி ஆகும். சுதந்திரத்திற்கு முன்பு வங்கமொழியைப் போன்ற எழுத் துருகொண்ட போஜ்புரி நாள டைவில் அழிந்து இன்று பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது, இருப் பினும் இன்றளவும் உபி பீகாரில் அதிக அளவில் பேசப்படும் மொழி போஜ்புரி ஆகும். அதே போல் மத்திய இந்தியா, மத்தியப் பிரதேசம், டில்லி உள்ளிட்ட பகுதி களில் பேசப்படும் மொழி கரி போலி எனப்படும் பழைமையான வழக்கு மொழி ஆகும். இந்தி மொழி, போஜ்புரி மற்றும் வழக்கு மொழியான கரிபோலிக்கு முற் றிலும் வேறான ஆகும்.

இந்தி இந்தி என்கிறார்களே - அதில்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்.

- மயிலாடன்

-விடுதலை,18.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக