பக்கங்கள்

சனி, 22 ஜூலை, 2017

மைல்கற்களில்(கர்நாடகா) இந்தி மொழி அழிப்பு

நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்கள் மை பூசி அழிப்பு



மண்டியாவில், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்களை கன்னட அமைப்பினர் மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 05, 2017, 03:14 AM

மண்டியா,

மண்டியாவில், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்களை கன்னட அமைப்பினர் மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தி மொழி திணிப்பு

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் இந்தி மொழி அல்லாத மொழி வாரிய மாநிலங்களிலும் இந்தி மொழியை திணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் ஒரு படியாக நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் மைல்கல்லில் இந்தி மொழியில் மட்டுமே ஊரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா–பீதர், கனகாபூர்–மைசூரு, பெங்களூரு–மைசூரு ஆகிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் மட்டும் எழுதப்பட்டன.

கன்னட அமைப்பினர் போராட்டம்

இதற்கு கன்னட அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்த ஊர்களின் பெயர்களை மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘இது கன்னட நாடு. கன்னட மொழி பழமையான மொழி. கன்னட மொழியைத்தான் அனைவரும் பேச வேண்டும், கன்னடத்தைத்தான் அனைவரும் படிக்க வேண்டும். கன்னட மொழிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்’’ என்று கூறினார்.

-தினத்தந்தி,5.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக