பக்கங்கள்

வியாழன், 27 ஜூன், 2019

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னாரா???

பெரியார் தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அறிவியல் வளர்ச்சிக்கு தக்கவாறு தட்டச்சு ,கணினி போன்றவற்றில் 247 எழுத்துக்களை பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழறிஞர்களுக்கு எழுத்து சீர்திருத்தம் செய்ய அழைப்பு தருகிறார்,

அதோடு நிற்காமல் முன்மாதிரியாக பெரியார் எழுத்து சீர்திருத்தம் மாதிரி வெளியிடுகிறார்  அதில் 247 தமிழ் எழுத்துக்கள் 30 + ஆக குறைத்து வெளியிடுகிறார்,

உதாரணமாக
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12,
அதில் குறில் எழுத்துக்கள் அ,இ,உ,எ,ஒ இதை நெடிலாக மாற்ற  உயிர் மெய் எழுத்தில் "க "க்கு அருகில் துணை கால் எழுத்து மட்டும் சேர்த்தால் "கா" எழுத்து நெடிலாக மாறுவதைப்போல் உயிர் எழுத்து குறில் எழுத்துக்களோடு கா அருகில் வரும் துணைக்கால் மட்டும் சேர்த்தால் அ,இ,உ,எ,ஒ + துணைக்கால் சேர்த்து எழுதினால் உயிர் எழுத்தில் நான்கு எழுத்துக்கள் குறையும்,மேலும் "ஐ " க்கு பதிலாக "அய்" என எழுதினால் மேலும் ஒரு உயிரெழுத்து குறையும் ,மொத்தம் 12 உயிர் எழுத்துக்கள் 6 எழுத்துக்களாகவும் ,உயிர் மெய் எழுத்துக்களில் பல மாற்றங்கள் உதாரணமாக முன்பு " லை " நை,ணை போன்ற எழுத்துக்கள் வேறு வடிவங்களில் இருந்தன,
ண தனி எழுத்து "ணை " வேறு வடிவில் இருக்கும் , ண+ துணை கால் சேர்ந்து "ணை" ஆனது போல் உயிர் மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்தார்,

பல தமிழ் அறிஞர்கள் பக்தியாளர்கள் உயிர் எழுத்துக்களில் மாற்றம் வருவதை ஏற்கவில்லை, உதாரணமாக "ஓ" நெடில், "ஐ " போன்ற எழுத்துகள் கடவுள்களை அடையாள படுத்தும்  (குறிக்கும் ) சொற்கள் அவைகளை மாற்ற கூடாது என்பது போன்ற வாதங்களை வைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,

பெரியார் தமிழறிஞர்கள் போர்வையில்  தமிழின் அறிவியல் வளர்ச்சிக்கு தடையாக எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் எழுத்துசீர்திருத்தம் வேண்டும் என்றும் அப்போது தான் தமிழில் அறிவியல் வளரும் என்று கோபம் கொள்கிறார்,

பழங்கால வழக்கப்படி தமிழில் புராண ,இதிகாசங்களை மட்டும் வைத்துக்கொண்டு அறிவியல் தமிழ் வளர்ச்சி பெறாது,

எனவே எழுத்து சீர்திருத்தத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு கோருகிறார்,

பழமையை மாற்ற விரும்பாத பக்தியில் ஊறிய தமிழறிஞர்கள் பரப்பியதே பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்பது,

தமிழ் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி கால மாறுதல்களுக்கு ஏற்ப பல மாற்றங்களை கொண்டே இன்றைய நிலையை அடைந்திருக்கிறது,

"பெரியார்" 247 தமிழ் எழுத்துக்களை 30+ ஆக மாற்றினார் என்பாதாலேயே முழுமையாக ஏற்க மறுத்து பெரியாரை தமிழுக்கு எதிரானவர் என கருத்து பரப்புதல் செய்தனர்,செய்கின்றனர்,

(ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே ,தட்டச்சு ,கணினி க்கு எளிதாக இருக்கிறது)

எம் ஜிஆர் ஆட்சிகாலத்தில் பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் குறைந்த அளவில் தமிழக அரசு ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்தியதே ,

நாம் இப்போது 1980 க்கு பிறகு பயன் படுத்துகிறோம்,

பெரியாரின் "தமிழ் எழுத்து சீர்திருத்தம்" தேடி  நடுநிலயோடு படித்து முடிவெடுக்கவும், அப்போது தெரியும் பெரியார் தமிழுக்கு எதிரியா??
தமிழை அறிவியல் மொழியாக்க முயற்சித்தாரா என விடைகிடைக்கும்.

கடவுள் ஏற்படுத்தியது தான் சாதிமுறை என்ற வாதம் வந்தபோது, மக்களை
பிளவு படுத்தி தீண்டதகாதவர்களாக கடவுள்தான் படைத்தார் என்றால் அந்த கடவுள் செயல் என்பதை ஒழிப்பேன் என்றார் பெரியார் "கடவுள் இல்லை" என்று முழக்கமிட்டு பிரச்சாரம் செய்தார்.

"பெரியார் மனிதத்தை நேசித்த மாண்பாளர்"

-முல்லைவேந்தன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக