சனி, 28 மார்ச், 2020
சமசுகிருத சொல்லுக்கு தமிழ்ச்சொல்
வெள்ளி, 13 மார்ச், 2020
வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு
சென்னை, மார்ச் 13- வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆங்கிலம் 2ஆவது இடத்திலும், மற்ற மொழிகள் 3ஆவது இடத்திலும் இருக்க வேண்டும். கடைப் பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ கத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன் மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் பட வில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன. கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987ஆம் ஆண்டு அரசாணைப்படி ஆட்சி மொழியான தமிழ்மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ் மொழியின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் தொழிலாளர் ஆணையம் தரப்பி லிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த அரசாணை பின்பற்றப்பட வில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்களில் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற மொழிகள் பெயர்ப்பலகை உபயோகிக்கப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற மொழிகள் மூன்றாவது இடத் திலும் இருக்க வேண்டும் என்றும் தற்போது அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு 13 3 20
செவ்வாய், 3 மார்ச், 2020
தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி ஊர்திப் பயணம் வா.மு.சேதுராமன் குழுவினருக்கு வடலூரில் வரவேற்பு
வடலூர், மார்ச் 1- தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஊர்தி பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ள பன் னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் குழுவினர் 23.2.2020 அன்று காலை 11 மணியளவில் வடலூர் வருகை தந்தனர்.
வடலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி 11 30 மணி முதல் 2 மணி வரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. நகரக் கழக தலைவர் புலவர் சு.இராவணன் வரவேற்புரையாற்றினார். அரிமா சங்க தலைவர் அ.சந்திரகாசன், முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெ.இராமானுசம், மாவட்ட கழக அமைப்பாளர் சி.மணிவேல், கோ.இந்திரசித், பொதட்டூர்பேட்டை கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் இரா.மாணிக்கவேல், ஒன்றிய கழக அமைப்பாளர் க.சேகர் ஆசிரியரணியைச் சேர்ந்த பெரியார் செல்வம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டன.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை ஆற்றினார். வடலூர் கழக செயலாளர் இரா.குண சேகரன் நன்றி கூறினார்.
கல்லக்குறிச்சி ம.சுப்பராயனுக்கு திருவள்ளுவர் விருது
உளுந்தூர்பேட்டை, மார்ச் 1 உலகத்தமிழ் கவிஞர் பேரவை, பாவேந்தர் பேரவை உளுந்தூர்பேட்டை அருணா கல்வி கட்டளை இணைந்து 15.2.2020 அன்று நடத்திய முப் பெரும் விழாவில் கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் அவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பாராட்டு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, முனைவர் துரை.ரவிக்குமார், மருத்துவர் பொன் கவுதமசிகாமணி, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசியத்தலைவர் நல்லாவூர் பெரியண்ணன் ஆகியோர் பங்கேற்று விருது வழங்கி சிறப் புரையாற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடு களை அருணா கல்வி அறக் கட்டளையின் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.தொல் காப்பியன், உலகத்தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச் செயலாளர் பனப்பாக்கம் புலவர்
கு.சீத்தா, பாவேந்தர் பேரவையின் பொதுச் செயலாளர் உலகதுறை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருவள்ளுவர் விருதாளர் ம.சுப்பராயன் 27 ஆண்டுகளாக மேனிலைக் கணித ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்தமைக்கவும், 6 ஆண்டுகள் மேனிலைப்பள்ளி தலை மையாசிரியராகப் பாராட்டும்படி பணிபுரிந்தமைக்காகவும், பகுத் தறிவாளர் கழகத்தில் 25 ஆண்டுகள் தொண் டாற்றியதுடன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக தொண்டாற்றி வருவதற்காகவும் மேலும் திருக்குறள் பற்றி 15 ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டமைக் காகவும் பாராட்டி விருது வழங்குவதாக விழாக்குழுவினர் பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்கள். மேலும் திருவள்ளுவர் விருதுபெற்ற ம.சுப்ப ராயன் 2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் பன் னாட்டு சுயமரியாதை மாநாட்டிலும் 2019 செப்டம்பரில் அமெரிக்கா வாசிங்டனில் நடைப்பெற்ற பெரியார் பன்னாட்டு சுயமரியாதை மாநாட்டிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- விடுதலை நாளேடு, 1.3.20
ஞாயிறு, 1 மார்ச், 2020
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்குசாகித்ய அகாடமி விருது
சென்னை, பிப். 26- சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண் டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாயும், ஒரு பட்டயமும் வழங் கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர் களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயசிறீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது ஜெயசிறீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கே.வி.ஜெயசிறீ கூறுகையில், ‘மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெய மோகன் பரிந்துரைத்தார். சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது வியப்பை அளித்தது. மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக் கிறது. 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரு கிறேன்’, என தெரிவித்தார்.
- விடுதலை நாளேடு, 26.2.20