பக்கங்கள்

செவ்வாய், 3 மார்ச், 2020

கல்லக்குறிச்சி ம.சுப்பராயனுக்கு திருவள்ளுவர் விருது

உளுந்தூர்பேட்டை, மார்ச் 1 உலகத்தமிழ் கவிஞர் பேரவை, பாவேந்தர் பேரவை உளுந்தூர்பேட்டை அருணா கல்வி கட்டளை இணைந்து 15.2.2020 அன்று நடத்திய முப் பெரும் விழாவில் கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் அவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பாராட்டு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, முனைவர் துரை.ரவிக்குமார், மருத்துவர் பொன் கவுதமசிகாமணி, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசியத்தலைவர் நல்லாவூர் பெரியண்ணன் ஆகியோர் பங்கேற்று விருது வழங்கி சிறப் புரையாற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடு களை அருணா கல்வி அறக் கட்டளையின் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.தொல் காப்பியன், உலகத்தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச் செயலாளர் பனப்பாக்கம் புலவர்

கு.சீத்தா, பாவேந்தர் பேரவையின் பொதுச் செயலாளர் உலகதுறை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவள்ளுவர் விருதாளர் ம.சுப்பராயன் 27 ஆண்டுகளாக மேனிலைக் கணித ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்தமைக்கவும், 6 ஆண்டுகள் மேனிலைப்பள்ளி தலை மையாசிரியராகப் பாராட்டும்படி பணிபுரிந்தமைக்காகவும், பகுத் தறிவாளர் கழகத்தில் 25 ஆண்டுகள் தொண் டாற்றியதுடன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக தொண்டாற்றி வருவதற்காகவும் மேலும் திருக்குறள் பற்றி 15 ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டமைக் காகவும் பாராட்டி விருது வழங்குவதாக விழாக்குழுவினர் பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்கள். மேலும் திருவள்ளுவர் விருதுபெற்ற ம.சுப்ப ராயன் 2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் பன் னாட்டு சுயமரியாதை மாநாட்டிலும் 2019 செப்டம்பரில் அமெரிக்கா வாசிங்டனில் நடைப்பெற்ற பெரியார் பன்னாட்டு சுயமரியாதை மாநாட்டிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- விடுதலை நாளேடு, 1.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக