பக்கங்கள்

திங்கள், 15 பிப்ரவரி, 2021

தமிழ்_சமஸ்கிருதம்! நடைமுறையில் உள்ளது எது?


தமிழ்
உங்களது தாய்மொழி என்ன? தமிழ்

அதை எழுத்துப் பூர்வமாக பயன்படுத்துகிறீரா? ஆம்

உங்களது தொடர்பு மொழி யாக பரவலாக பயன்படுகிறதா? ஆம்

அரசு ஆவணங்கள் உங்கள் (தமிழ்) மொழியில் உள்ளதா? ஆம்

தமிழ் பேசும் மக்கள் அனை வருமே அதை பயன்படுத்துகி றார்களா? ஆம்

பள்ளி, பொதுப்பயன்பாடு, கலந்துரையாடல், வீடு, மற்றும் பொதுவிடத்தில் அனைவரும் தமிழ் பேசுகிறீர்களா? ஆம்

எங்கு எங்கு பேசுகிறீர்கள்? தமிழகம், சிறீலங்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் பெரும் பான்மையாகவும், மொரீசியஸ், மாலத்தீவு சிசல்ஸ், ரி யூனியன் போன்ற தீவு நாடுகளில் பரவ லாகவும், மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட பல தமிழர்கள் அதிக மாக வாழும் இந்திய மாநிலங் களில், தமிழர்கள் வாழும் பல் வேறு நாடுகளில் தொடர்பு மொழியாகவும் தமிழ் பயன்படு கிறது. இந்தியா மற்றும் இதர நாடுகளைச்சேர்த்தால் 12 கோடி அல்லது அதற்கும் சிறிது அதிக மான மக்களால் பேசப்படுகிறது.

சமஸ்கிருதம்

உங்களது தாய்மொழி என்ன?  சமஸ்கிருதம்

அதை எழுத்துப் பூர்வமாக பயன்படுத்துகிறீரா? இல்லை

உங்களது தொடர்பு மொழி யாக பரவலாக பயன்படுகிறதா? இல்லை

அரசு ஆவணங்கள் உங்கள் மொழியில் உள்ளதா? இல்லை

சமஸ்கிருதம் பேசும் மக்கள் அனைவருமே அதை பயன் படுத்துகிறார்களா?  இல்லை

பள்ளி, பொதுப்பயன்பாடு, கலந்துரையாடல், வீடு, மற்றும் பொதுவிடத்தில் அனைவரும் சமஸ்கிருதம் பேசுகிறீர்களா? இல்லை

எங்கு எங்குதான் பேசுகிறீர் கள்?

கருநாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள பெங்கல ஹல்லி தாலுகாவில் உள்ள ஹொஸ்னகல்லி ஊராட்சியில் உள்ள மட்டூர் என்ற குக் கிராமத்தில் பேசுகிறோம்

எத்தனைப் பேர் பேசுகி றார்கள்? 14, 000

அங்கே எத்தனைப் பேர் வசிக்கின்றனர்? 3,500 பேர்

பிறகு எப்படி 14,000 பேர் பேசுகிறார்கள் என்று கூறுகிறீர் கள்?

பாதி பேர் உள்ளூரிலிருந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர். அவர்களையும் சேர்த்துதான்,

அவர்கள் வெளியூரில்சமஸ்கிருதம் பேசுகிறார்களா? இருக்கலாம்!

உங்கள் ஊரில் பொதுப்பயன் பாட்டில் பேசுகின்றீர்களா? கடை வீதி, இதர வீட்டிற்கு வணிகம் செய்ய வருபவர்களிடம்? இல்லை

பிறகு என்ன மொழி பயன்படுத்துகிறீர்கள்? கன்னடம்

வீட்டில் நாளிதழ், தொலைக் காட்சி நிகழ்ச்சி திரைப்படம் போன்றவைகள் எந்த மொழியில் உள்ளது. கன்னடம், ஆங்கிலம், இந்தி

பிறகு எதைவைத்து சமஸ் கிருதம் உங்கள் தாய்மொழி என்று கூறுகிறீர்கள்???

பதில் மவுனம்

- மயிலாடன் கவிஞர் கலி. பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக