பக்கங்கள்

திங்கள், 31 ஜூலை, 2023

யார் இந்த சங்கீத மும்மூர்த்திகள் ?



காலத்தால் முந்தியவர்கள் மட்டுமல்ல ! உயர்தனிச் செம்மொழியாம் தமிழி்ல் பாடல்களை இயற்றிப் பாடி புகழ் 
பெற்றவர்களான ;
முத்துத் தாண்டவர் (1525-1625)
அருணாசலக் கவிராயர் (1711-1787)
மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787)

ஆனால் பார்ப்பனீய திமிரும் சமஸ்கிருத வெறியும் கொண்ட ஆரியம் !  சமஸ்கிருதத்திலும் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வந்த 
தியாகராயர் (1767-1848)
சியாமா சாஸ்திரிகள் (1762-1827)
முத்துசாமி தீட்சிதர் (1776-1836)

ஆகியோரையே சங்கீத மும்மூர்த்திகளாக கொண்டாடுகிறது.  இதற்கு பெயர் பிராமனீயத்துவம் - சூத்திரப் பார்வை என்பது.  

மேலும் 1946ல் திருவையாரில் நடந்த தியாகராயர் பிரம்மோர்ச்சவத்தில் திரு தண்டபானி தேசிகர் அவர்கள் சித்தி விநாயகனே என்ற பாடலை தமிழிசையில் பாடினார். அதுவும் அவர் நமது பெரியாரைப் பாடவில்லை, புள்ளையாரைத்தான் பாடினார்.  அதற்கே நீசபாஷை (!!!) தமிழில் பாடியதால் மேடைத் தீட்டாயிடிச்சி என்று சொல்லி மேடையை தண்ணீர் விட்டு கழுவிய பிறகுதான் மற்ற நிகழ்ச்சிகள் நடந்தன...! 

இதை கண்டிக்கும் விதமாக  முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் குடியரசு இதழில் (9.2.1946) "தீட்டாயிடுத்து" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அய்யா பெரியாரின் பாராட்டைப் பெற்றார்.
என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ???

அன்புடன் 
பி என் எம் பெரியசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக