பக்கங்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2024

தமிழ்த் தாத்தா தகுதி உ.வே.சா.விற்கு உள்ளதா ? – சிகரம்

 


2024 ஏப்ரல் 1-15, 2024
வே.சாமிநாத அய்யர்
உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் நூல்களையெல்லாம் தேடித் தேடி அலைந்து பதிப்பித்தார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி, அதன் அடிப்படையில் அவரைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று பெருமைப்படுத்துகின்றனர். இவை உண்மையா? உண்மையில் தமிழில் உள்ள முதன்மையான நூல்களைப் பதிப்பித்தவர்கள் யார் என்பனவற்றை ஆதாரங்களோடு இங்குக் காண்போம்.
அவர் பதிப்பித்த பழந்தமிழ் இலக்கிய நூல்கள்:
1. சீவக சிந்தாமணி-1887
2. பத்துப்பாட்டு மூலமும் உரையும்- 1889
3. சிலப்பதிகாரம் – 1892
4. புறநானூறு- 1894
5. மணிமேகலை- 1898
6. ஐங்குறு நூறு- 1903
7. பரிபாடல்-1918
8. பெருங்கதை- 1924
9. குறுந்தொகை- 1937
அவர் பதிப்பித்த பழந்தமிழ் இலக்கியம்
சார்ந்த நூல்கள்:
1. புறப்பொருள் வெண்பா மாலை- 1895
2. புத்த சரித்திரம், பெளத்த தருமம்,
பௌத்த சங்கம்- 1898
3. உதயணன் சரித்திரச் சுருக்கம்-1924
4. நன்னூல் சங்கர நமச்சிவாயருரை-1925
5. நன்னூல் மயிலை நாதருரை-1925
6. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்-1928
7. தமிழ்விடு தூது-1930
8. உதயண குமார காவியம்- 1935
9. திருவள்ளுவரும் திருக்குறளும்-1936
10. நல்லுரைக் கோவை பகுதி 1- 1937
11. நல்லுரைக் கோவை பகுதி 2- 1937
12. நல்லுரைக் கோவை பகுதி 3- 1938
13. நல்லுரைக் கோவை பகுதி 4- 1939
அவர் பதிப்பித்த பக்தி நூல்கள்:
1. நீலி இரட்டை மணிமாலை-1874
2. வேணுவனலிங்க விலாசச் சிறப்பு-1878
3. திருக்குடந்தைப் புராணம்- 1883
4. மத்தியார்ச்சுன மான்மியம்- 1885
5. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது-1888
6. திருமயிலைத் திரிபந்தாதி- 1888
7. தண்டபாணி விருத்தம்- 1891
8. திருப்பெருந்துறைப் புராணம்- 1892
9. சீகாழிக் கோவை-1903
10. திருவாவடுதுறைக் கோவை-1903
11. வீரவனப் புராணம்-1903
12. சூரைமாநகர்ப் புராணம்-1904
13. திருக்காளத்தி நாதருலா-1904
14. திருப்பூவன நாதருலா-1904
15. பதிற்றுப் பத்து-1904
16. திருவாரூர்த் தியாகராச லீலை- 1905
17. திருவாரூருலா- 1905
18. திருவாலவாயுடையார்
   திருவிளையாடற்புராணம்- 1906
19. தனியூர்ப் புராணம்- 1907
20. தேவையுலா-1907
21. மண்ணிப்படிக்கரைப் புராணம்-1907
22. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்-1908
23. திருக்காளத்திப் புராணம்-1912
24. திருத்தணிகைத் திருவிருத்தம்-1914
25. தக்கயாகப் பரணி-1930
26. மதுரைச் சொக்கநாதர் உலா-1931
27. கடம்பர் கோயிலுலா- 1932
28. களக்காட்டு சத்தியவாகீசர்
இரட்டை மணிமாலை- 1932
29. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்- 1932
30. பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது-1932
31. பழனி பிள்ளைத் தமிழ்-1932
32. மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்கோவை-1932
33. வலிவல மும்மணிக் கோவை -1932
34. சங்கரலிங்க உலா-1933
35. திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா-1933
36. பாசவதைப் பரணி -1933
37. சங்கரநயினார் கோயிலந்தாதி-1934
38. விளத்தொட்டிப் புராணம்-1934
39. ஆற்றூர்ப் புராணம்-1935
40. கலைசைக் கோவை 1935
41. திரு இலஞ்சி முருகன் உலா-1935
42. பழமலைக் கோவை- 1935
43. பழனி இரட்டைமணி மாலை-1935
44. இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை-1936
45. திருநீலகண்டனார் சரித்திரம்- 1936
46. திருமயிலை யமக அந்தாதி – 1936
47. சிராமலைக் கோவை- 1937
48. திருவாரூர்க் கோவை- 1937
49. அழகர் கிள்ளை விடு தூது- 1938
50. சிவசிவ வெண்பா-1938
51. திருக்கழுக்குன்றத்துலா- 1938
52. திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை- 1938
53. திருமலையாண்டவர் குறவஞ்சி- 1938
54. குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு- 1939
55. தணிகாசல புராணம்-1939
56. மகரநெடுங் குழைக்காதர் பாமாலை- 1939
57. கபாலீசுவரர் பஞ்சரத்தினம்- 1940
58. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா-1940
59. வில்லைப்புராணம்- 1940
60. செவ்வைச் சூடுவார் பாகவதம்-1941
அவர் பதிப்பித்த பிற நூல்கள்:
1. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத்திரட்டு – 1910
2. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவகாள்
சரித்திரம் – பகுதி 1-1933
3. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
– பகுதி 2-1934
4. கனம் கிருஷ்ணையர்-1936
5. கோபால கிருஷ்ண பாரதியார்-1936
6. நான் கண்டதும் கேட்டதும்-1936
7. புதியதும் பழையதும் -1936
8. மகாவைத்தியநாதையர்-1936
9. மான் விடு தூது- 1936
10. தமிழ்நெறி விளக்கம்- 1937
11. நினைவு மஞ்சரி- பகுதி 1- 1937
12. புகையிலை விடு தூது – 1939
13. நினைவு மஞ்சரி – பகுதி 2 – 1942
14. வித்துவான் தியாகராச செட்டியார்- 1942
இவையே உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்
இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வகைகளை வைத்துப் பார்த்தால் 63% என்ற கணக்கில் முதலிடத்தைப் பிடிப்பது பக்தி நூல்கள் மட்டுமே.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் 15% நூல்கள் இவருக்குப் பொருள் தந்து உதவியவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுபவை.
14% நூல்கள் சிறு சிறு இலக்கிய நூல்கள்.
எஞ்சிய 8% நூல்கள்தான் இலக்கிய நூல்கள்.
இதிலும் ஓர் உண்மை என்னவென்றால், சிலப்பதிகாரத்தை இவர் பதிப்பத்தார் என்றாலும், அதை முதலில் பதிப்பித்தவர் (1850) சபாபதி முதலியாரின் அச்சுக்கூடத்தவர்தான். இவர் அதை 1892இல் பதிப்பித்தார் என்பதே வரலாறு.
உண்மை இப்படியாக, எல்லா தமிழ் இலக்கியங்களையும் இவரே தேடியலைந்து திரட்டிப் பதிப்பித்ததாக ஒரு பொய்யைக் கட்டமைத்து இவரைத் தூக்கி நிறுத்துகின்றனர்.
ஆனால், இவர் தமிழுக்குச் செய்த துரோகம், தமிழின் முதன்மை நூல்களான தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் பதிப்பிக்காதது ஆகும்.
இதன் உள்நோக்கம் என்ன?
தமிழின் சிறப்பு வெளிப்படக்கூடாது என்பதுதானே?
தொல்காப்பியத்தை முதன்முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாமோதரன் பிள்ளை அவர்கள். இவர் வைரவநாதப்பிள்ளை- பெருந்தேவி தம்பதியருக்கு 1832ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ஆம் நாள் மகனாகப் பிறந்தார். 1853இல் சென்னைக்கு வந்து, சென்னை இராசதானிக் கல்லூரியில் பண்டிதராகப் பணியாற்றினார். 1858இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பில் முதல் மாணாக்கராகத் தேர்வு பெற்றார். 1871இல் பி.எல். படித்த முடித்து கும்பகோணத்தில் வழக்குரைஞராகவும், 1884இல் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். 1895இல் அரசு இவருக்கு ‘ராவ்பகதூர்’ பட்டம் அளித்துப் பாராட்டியது.
இவர் பதிப்பித்த நூல்கள்:
நீதிநெறி விளக்கவுரை
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
வீரசோழியம் (1881)
திருத்தணிகைப் புராணம்
இறையனார் அகப்பொருள் உரை
தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
கலித்தொகை
இலக்கண விளக்கம்
சூளாமணி
தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கான நச்சினார்க்கினியாருரை
தாமோதரனார் தாமே எழுதிப் பதிப்பித்த நூல்கள் பின்வருமாறு:
கட்டளைக் கலித்துறை
சைவ மகத்துவம்
வசன சூளாமணி
நட்சத்திர மாலை
ஆறாம் வாசகப் புத்தகம்
ஏழாம் வாசகப் புத்தகம்
ஆதியாகமம் கீர்த்தனம்
விவிலிய விரோதம்
காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் நோபல்பெஸ்கி என்பவர் 1711இல் மதுரைக்கு வந்து சேர்ந்தார். இவரே வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்டவர்.
இவர்தான் திருக்குறளை முதன்முதலில் அச்சில் பதிப்பித்தவர். மேலும், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி, தொன்னூல் முதலியவற்றை அச்சேற்றினார். சதுர் அகராதி, தேம்பாவணி, காவலூர் கலம்பகம், தேவர் ஒழுக்கம், பரமார்த்த குருவின் கதை போன்ற தமது நூல்களையும் அச்சேற்றினார்.
அடுத்து அதிக அளவு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். இலங்கையில் 1854இல் பிறந்த சுண்ணாகம் அ. குமாரசுவாமிப் புலவர். இவர் தமிழ் அச்சுக் கலைக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது.
இவர் பல நூல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் பதிப்பித்த நூல்களின் சிலவற்றைக் கீழே காண்போம்.
இதோபதேசம் (1886)
நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895)
யாப்பருங்கலக் காரிகை பழையவுரை (1900)
ஆசாரக்கோவை (1900)
நான்மணிக்கடிகை (1900)
ஆத்திசூடி வெண்பா (1901)
சிவசேத்திர விளக்கம் (1901)
உரிச்சொனிகண்டு (1902)
திருவாதவூரர் புராணமூலம் (1902)
பழமொழி விளக்கம் (1903)
சதாசாரக் கவித்திரட்டு (1901)
சிவத்தோத்திரக் கவித்திரட்டு (1911)
1834இல் கல்வி விளக்கம் பதிப்பகம் மூலம், சரவணப்பெருமாள் அய்யர் மற்றும் பிச்சைப் பெருமாள் அய்யர் இருவருமே முதன்முதலில் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்தவர்கள்.
19ஆம் நூற்றாண்டில் இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகநாவலர் அவர்கள்.
1. சூளாமணி நிகண்டு (1849)
2. நன்னூல் (1851)
3. திருமுருகாற்றுப்படை
4. திருவாசகம்
5. பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளைப் பதிப்பித்தார்.
ஆக, முதன்மையான தமிழ் நூல்களையெல்லாம் பதிப்பித்தவர்களை மறைத்துவிட்டு, பக்தியையும், மூடநம்பிக்கையும் வளர்க்கக் கூடிய நூல்களை மட்டுமே பதிப்பித்தவரை தமிழ்த் தாத்தா என்பது மோசடியல்லவா?
அது மட்டுமல்ல, உ.வே.சா. ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி, ஓடி ஓடிச் சேகரித்தார் என்று மிகைப்படுத்துகிறார்கள். அவர் எங்கும் தேடி, ஓடி ஓடி அலையவில்லை. மீனாட்சி சுந்தரம்பிள்ளை  அவர்கள் (இவரது ஆசிரியர்) தொகுத்து வைத்திருந்தவற்றையும், திருவாடுதுறை ஆதீனத்தின் கருவூலத்தில் இருந்த ஓலைச்சுவடிகளையே அச்சேற்றினார். தேனீக்கள் சேகரித்த தேனை தேன் அடையை எடுப்பவன் பெறுவதுபோல இவர் மற்றவர் சேகரித்துவைத்திருந்ததை எடுத்துக்கொண்டார் என்பதே உண்மை. இவர் உழைத்ததெல்லாம் பக்தியை வளர்க்கத்தானேயன்றி, தமிழை வளர்க்க அல்ல. எனவே, இவர் தமிழ்த்தாத்தா என்று பெருமை கொள்ளத் தகுதியற்றவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக