பக்கங்கள்

வியாழன், 25 மே, 2017

மொழி ஒப்பாய்வு வரலாறு


மொழி ஒப்பாய்வுக்கு ஓர் உந்து விசையாக விளங்கியது டார்வினுடைய பரிணாம வளர்ச்சிக்கொள்கை ஆய்வு பரிணாம வளர்ச்சிக் கொள்கைதான் ஒப்பாய்வுகள் எல்லாவற்றிற்கும் தாயாக இருந்து வழிகாட்டி இருக்கிறது. டார்வினுடைய அணுகுமுறையை மிக நல்ல அளவிற்குப் பயன்படுத்தி வெற்றி கண்டது மொழியியல் உலகு. இந்த அணுகு முறையை அப்படியே இலக்கிய ஒப்பாய் விற்கும் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு ஒப்பாய்வுக் களங்கள் எல்லாவற்றிற்கும் இந்த ஆய்வு முறை விரிவுபடுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் இந்த மொழி ஒப்பாய்வு அய்ரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த பொழுதெல்லாம் மிகுந்த வியப்போடு பார்த்தார்கள். சில விதிமுறைகளை வகுத்துக் காட்டி மொழியியல் உலகில் வகுக்கப்பட்ட இந்த விதிமுறை ஒரு இயற்பியல் துறையில் ஏற்பட்ட விதி முறை போல, ஒரு வேதியல் துறையில் ஏற்பட்ட விதிமுறை போலப் போற்றத்தகுந்தது என்றெல்லாம் ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது தான் இந்த மொழி ஒப்பாய்வுக்கு அறிவியல் நிகர் நிலை கிடைத்தது. முன்பே குறிப்பிட்டது போல 78, 79 வாக்கில் எதிர்பாராத விதமாக தமிழ் - ஜப்பானிய மொழி ஒப்பாய்வில் பலருக்கும் ஒரு அக்கறை ஏற்பட்டது.

திராவிட மொழிகளும்

உலகில் உள்ள வேறு சில மொழிகளும்

மிக் ஆல்ப்பின் என்பவர் ஒருவர் 70 வாக்கில் ஏலமைட் மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள ஒப்புமையை ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்குக் கொஞ்சம் முன்னதாகவே டாக்டர் சதாசிவம் என்பவர் (பேராசிரியர் பர்ரோ அவர்களிடம் ஆய்வு செய்தவர்) சுமேரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள உறவைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். அது நூலாக விரிவாக வெளிவரவில்லை. ஆய்வறிக்கை அளவில் அப்படியே அமைந்து போய்விட்டது. அதை வெளியிடுவதற்கும் சில முயற்சி கள் எடுத்தோம், சரியாக நிறைவேறவில்லை. அதன் பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆப்பிரிக்க மொழிகளுள் ஒன்றான ‘ஒலூஃப்’ என்ற ஒரு மொழியையும் திராவிட மொழி களையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வு நடந்தது. இன்டியாயே என்பது அந்த ஆய்வை நடத்தியவர் பெயர். மதிப்பிற்குரிய செங்கோர் என்பவர் அங்கே அதிபராக இருந்த காலத்தில் அந்த ஆய்வு இங்கே தொடங்கப்பட்டது. அந்த ஆய்வு நிகழ்ந்தபொழுது அதுவும் வியப்பிற்குரியதாக இருந்தது. அந்த ஆய்வுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆய்வு அது.

இப்படித் திராவிட மொழிகளையும் உலகில் உள்ள மற்ற மொழிகளையும் ஒப்பிட்டு நடக்கிற ஆய்வு 70 களில் ஆங்காங்கே நடந்தது. சுமேரிய மொழிக்கும் - தமிழுக்கும், ஏலமைட் மொழிக் கும் - திராவிட மொழிகளுக்கும், ஒலூஃப் மொழிக்கும் - திராவிட மொழிகளுக்கும் இப்படி ஆய்வுகள் நடந்தன. அப்புறம், பாஸ்க்கு மொழிகளுக்கும் - திராவிட மொழிகளுக்கும் உள்ள உறவைப் பற்றி லகோவரி என்ற ஓர் அறிஞர் ஒரு புத்தகமே வெளியிட்டார். அது 70 களுக்கு முன்பு நடந்தது. இப்படிப் பல்வேறு ஆய்வுகள் வந்துகொண்டிருந்த நேரம். இவையெல்லாம் 70-களில் சற்று முன் பின்னாக, நடந்த ஆய்வுகள். இந்தச் சூழலில் பரவலாகத் திராவிட மொழி ஒப்பாய்வில் தனி அக்கறை ஒன்று ஏற்பட்டது. அதற்கு மேல் டில்லியில் இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லோகேஷ்சந்த்ரா, தமிழ் மொழிக்கும் - ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவைப் பற்றி ஒரு பெரிய கட்டுரை ஒன்றை எழுதியி ருந்தார். அதுவும் 70களில் நடந்தது (கொஞ்சம் முன்பு கூட இருக்கலாம்)

அந்தக் கட்டுரையில் அவர் பொதுவாகச் சில நல்ல செய்தி களை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் மொழிக்கும், ஜப்பானிய மொழிக்கும் உள்ள ஒலி அமைப்பு முறை ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை அந்தக் கட்டுரையில் தெளிவாக்கி எழுதியிருந்தார். இது அப்பொழுது இருந்த ஒரு சூழ்நிலை.

பல்வேறு மொழியியற் கொள்கைகள்

எழுபதுகளுக்கு முன்பு மொழியியல் உலகில் பல்வேறு கொள்கைகள் உருவாயின. சோம்ஸ்கி ஒரு கொள்கை சொல்லுவார், சார்லஸ் லேம்ப் இன்னொரு கொள்கை சொல்லுவார், ஹாலிடே என்பவர் வேறு ஒரு கொள்கை சொல்லுவார். இப்படி மொழியி யலில் பல்வேறு அணுகுமுறைகள், கொள்கைகள் வெளிவந்த நேரம். இப்படி கொள்கைகள் வெளிவந்த பொழுதெல்லாம் அந்தக் கொள்கைகள் வரலாற்று முறையில் ஆய்ந்த ஆய்வுக்கு மாற்றாக அமையவில்லை. இதில் நான் சொல்ல வருகிற செய்தி மொழியியலில் இன்றைக்கு உள்ள மொழியின் இன்றைய நிலையை ஆராய்வது ஒன்று. மொழியினுடைய வரலாற்றை ஆராய்வது என்பது வேறொன்று. இரண்டு விதமான பிரிவு இருக்கிறது. இன்றைக்கு உள்ள நிலையை ஆராய்வதை Descriptive Linguistics  என்று சொல்லுகிறோம். வரலாற்றை ஆராய்வதை Historical and Comparative Linguistics என்று சொல்லுகிறோம்.

நன்றி: நூல்: தமிழ் - ஜப்பானிய ஒப்பாய்வு,

அளித்தவர்: மணிசாரதி

-விடுதலை ஞா.ம.,20.5.17

திங்கள், 22 மே, 2017

யார் தமிழர்? தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?

யார் தமிழர்?
தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?

”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?

--மருத்துவர் ஷாலினி.

வெள்ளி, 12 மே, 2017

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த ‘பிபிசி தமிழோசை’ சிற்றலை வானொலி சேவை நிறுத்தப்பட்டது

லண்டன், மே 3 பிபிசி தமிழோசையின் சிற்றலைசேவையைஇனிவழங் குவதில்லை என பிபிசி அறிவித்துள் ளது. தொலைக்காட்சி மற்றும் இணை யம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் அய்ந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிபிசி வானொலி செய்தி நிறுவனத் தின் சார்பில் 3.5.1941 முதல் தமிழ் செய்தி ஒலிபரப்பாக பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பாக சிற்றலையில்  ஒலிபரப்பப்பட்டு வந்தது.

வாரம் ஒரு முறை ஒலிபரப்பாகத் தொடங்கப்பட்டு, பின்னர் வாரமிரு முறை ஒலிபரப்பாக ஒலிபரப்பானது. அதன்பின்னர், வார நாள்களில் அரை மணிநேர ஒலிபரப்பாக இந்திய நேரப் படி இரவு 9.45 முதல் 10.15 வரையிலும், அதன்பின்னர் இந்திய நேரப்படி இரவு 9.15 முதல் 9.45 மணி வரையிலும் அரை மணிநேர ஒலிபரப்பு தொடர்ந்து ஒலிபரப்பாக இருந்துவந்தது.

பிபிசியின் வானொலியில் முதலில் தமிழில் ஒலிபரப்பு என்பது பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கென்றே பிபிசிதமிழோசை ஒலிபரப்பு தொடங் கப்பெற்றது. சிற்றலைவழியே இலண் டனிலிருந்து தமிழில் வானொலி ஒலிபரப்பு தெளிவான உச்சரிப்பில் குறிப்பாக சமஸ்கிருத கலப்பின்றி தமிழ் உறவுகளுக்கான தனித்த இடத்தைத் தக்கவைத்திருந்தது. செய்திகளிலும், செய்திவிமர்சனங்களிலும்உண்மைத் தன்மை,நம்பகத்தன்மைஎன்பது வானொலிநேயர்களைஅதி கரிக்கச் செய்தது. உலகப்பந்தைசுழற்றியபடி, உலகச் செய்திகளைநாடுவாரியாகபிபிசி வானொலிச் செய்தியில் அறிந்துகொள்ள லாம்.

பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பில் சங்கர் அண்ணா, ஆனந்தி அக்கா, மணிவண்ணன் என தமிழர்களின் இல்லந்தோறும் உறவுகளாக மாறிப்போன ஒலிபரப் பாளர்களை எவரும் மறக்க முடியாது. தமிழர்களின் வாழ்வியலில் உள்ள மரபுக்கூறுகளை ஆய்ந்து கூறும் வண்ணம் பல்வேறு அரிய தகவல்களை உலகுக்கு பறைசாற்றியவர்கள் பிபிசி தமிழோசையில் பணியாற்றிய தமிழ் உணர்வுமிக்க சான்றோர்கள் என்றால் மிகையில்லை.

ஆசிரியர் கி.வீரமணி ‘செவ்வி’யுடன்...

இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளிநாடு பய ணம் என்றால்,  இலண்டன்வழி பயணம் என்றால், நிச்சயமாக அவரு டைய ‘செவ்வி’ (பேட்டி) பிபிசி தமி ழோசையில் இடம்பெறும். அந்த அளவுக்கு தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றது பிபிசி தமிழோசை.

திராவிடர் கழகத்தின் பகுத்தறி வாளர் கழக நாட்குறிப்பில் வெளிநாடு களிலிருந்து தமிழ் வானொலி ஒலி பரப்புகள் என்கிற பட்டியலில் பிபிசி தமிழோசை முதலிடம் பெற்றிருக்கும்.

தமிழ்நாடு அரசியல் களம் மட்டு மல்லாமல்,ஈழத்தமிழர்களின்உரி மைப்போராட்டத்தில்பிபிசி தமிழோ சையின்பங்களிப்புஎன்பதுமிகவும் போற்றத்தக்க நிலையில் இருந்தது. ஈழத்தில் போர்க்கால சூழலில் மின் வசதி, பேட்டரி வசதி ஏதுமீல்லாத நிலையில் மிதிவண்டியின் டயன மோவைப் பயன்படுத்தி,  பிபிசி தமிழோசை வானொலி செய்தியை தமிழர்கள் பெருந்திரளாக திரண்டு கேட்பார்கள் என்றால், அதன் நம்பகத் தன்மையை, உடனுக்குடன் செய்தி வழங்கும் தன்மையை உணரலாம்.

ஆங்கிலம் அறிந்துகொள்ளவும், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா ஆக்கங் களை தமிழில் அறிந்துகொள்ளவும் பிபிசி தமிழோசை மிகவும் பயனுள் ளதாக இருந்தது.

கேபிள் இணைப்பு என்கிற முறை யில் தொலைக்காட்சி அறிமுகமான பிறகு, அதிலும் 24 மணிநேர செய்தி அலைவரிசைகள் பல தோன்றிய பிறகும்கூட, 2000ஆம் ஆண்டின் பிற் பகுதியில் தமிழர்கள் இணைய வழியில் பிபிசி தமிழோசைக்கான ஆதரவை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்கள்.

பிபிசிதமிழோசை30.4.2017தேதி யுடன் தன்னுடைய வானொலி வழி யிலான சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இணைய வழியில் பிபிசி தமிழ் தன்னுடையபணியைத்தொட ருகிறது. இலங்கையில் சக்தி பண்பலை வாயி லாக 5 நிமிட ஒலி பரப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழோசை உலகின் பல்வேறு பகுதிகளிலும் இனவேறுபாடுகளை எதிர்த்துப்போராடிவந்த தலைவர்கள், அமைப்புகளின் போராட்ட செயல் பாடுகளை செய்தியாக தந்தது. தென் னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஈழ விடு தலைப்போராட்டம் என பல்வேறு இனவிடுதலைப்போராட்டங்கள் குறித்த தகவல்களை போர்முனையிலிருந்து விரிவாக செய்தியை அளித்துவந்தது. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற வீரர்கள் என நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், வேலு.பிரபாகரன் ஆகியோரை பிபிசி அறிவித்தது.

-விடுதலை,3.5.17

தமிழகத்தைத் தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து ஒடிசாவும் போர்க்கொடி!



கட்டாக், ஏப். 28  ஒடிசா மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரிய மொழியை அழித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு ஒடிசா மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரி வித்து வருகின்றனர். ஒடிய இளைஞர் அமைப்புகள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தியை வலுக்கட் டாயமாக எழுதி தமிழுக்கு எதிரான நட வடிக்கையைத் துவங்கியது போல், ஒடிசா மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இருந்த ஒரிய மொழியை நீக்கிவிட்டு அங்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒடிய மாணவர் அமைப்புகள் மொழிப்பாதுகாப்பு இயக்கத்தை தொடங் கியுள்ளனர்.  இந்த இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் ஒரிய எழுத்துக்களுடன் இருந்த மைல்கற்களையும்,தற்போதுஅவைநீக்கப் பட்ட நிலையில் காணப்படும் மைல் கற் களையும் பதாகைகளில் ஏந்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தஇளைஞர்அமைப்பினர்,சமூக வலைதளங்களில்இந்திக்குஎதிரானபரப் புரையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒரிய மொழி பாதுகாப் பிற்காக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி உள்ளனர்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட துறை தொடர்பான அனைவருக்கும் கையெழுத்து மனுவை அனுப்பி வைக்க இருக்கின்றனர். ஒடிசாவில் உள்ள மைல்கற்களில், ஒரிய எழுத்துகள் மீண்டும் எழுதப்படுவதை, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும், அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் ஒரிய மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

ஒரிய மக்களின் இந்த இயக்கத்திற்கு இந்திக்குஎதிரான மாநிலங்களில் உள்ள பலர் ஆதரவு தந்துள்ளனர். கூடிய விரை வில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஒன்றுகூடிஇந்திக்குஎதிரானஒருமாபெரும் போராட்டம் எதிர்காலத்தில் நடக்கப் போவதை இந்தி பேசாத மாநிலங்களில் எழும் இந்தி எதிர்ப்புணர்வு வெளிப்படுத்துகிறது.
-விடுதலை,28.4.17

செவ்வாய், 9 மே, 2017

எது தமிழ்ப் புத்தாண்டு? - சிகரம்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு, சமஸ்கிருத ஆண்டைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.

தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?

தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.

நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்ல மாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?

மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?

குளிப்பது என்பதற்கு ஸ்னானம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?

உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.

உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!

உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!

உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!

உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!

அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!

அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.

ஒரு நாள் என்பது என்ன?

சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும் அதே நிலை  (மீண்டும் உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும்; பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும்; பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்; பின் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.

ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத் திலிருந்து வடமேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஏசு பிறப்பை வைத்து ஆங்கில ஆண்டுக் கணக்கீடு என்பது சரியன்று. காரணம், ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

எனவே, சூரியச் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுக் -கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.

மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், ஜெயலலிதா தன் காழ்ப்புணர்ச்சியால் அதை மாற்றி சித்திரையை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக ஆக்கி தமிழர் பெருமையைக் கெடுத்தார். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?

சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா?

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே தமிழ் அறிஞர்கள், சான்-றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்து, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்து, 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.

எனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவியல் சார் தமிழர் மரபை நாம் ஏற்றுக்கொண்டாடுவதோடு, அதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.  
-உண்மை இதழ்,1.15.4.17