கட்டாக், ஏப். 28 ஒடிசா மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரிய மொழியை அழித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு ஒடிசா மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரி வித்து வருகின்றனர். ஒடிய இளைஞர் அமைப்புகள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தியை வலுக்கட் டாயமாக எழுதி தமிழுக்கு எதிரான நட வடிக்கையைத் துவங்கியது போல், ஒடிசா மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இருந்த ஒரிய மொழியை நீக்கிவிட்டு அங்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒடிய மாணவர் அமைப்புகள் மொழிப்பாதுகாப்பு இயக்கத்தை தொடங் கியுள்ளனர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் ஒரிய எழுத்துக்களுடன் இருந்த மைல்கற்களையும்,தற்போதுஅவைநீக்கப் பட்ட நிலையில் காணப்படும் மைல் கற் களையும் பதாகைகளில் ஏந்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தஇளைஞர்அமைப்பினர்,சமூக வலைதளங்களில்இந்திக்குஎதிரானபரப் புரையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒரிய மொழி பாதுகாப் பிற்காக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி உள்ளனர்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட துறை தொடர்பான அனைவருக்கும் கையெழுத்து மனுவை அனுப்பி வைக்க இருக்கின்றனர். ஒடிசாவில் உள்ள மைல்கற்களில், ஒரிய எழுத்துகள் மீண்டும் எழுதப்படுவதை, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும், அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் ஒரிய மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.
ஒரிய மக்களின் இந்த இயக்கத்திற்கு இந்திக்குஎதிரான மாநிலங்களில் உள்ள பலர் ஆதரவு தந்துள்ளனர். கூடிய விரை வில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஒன்றுகூடிஇந்திக்குஎதிரானஒருமாபெரும் போராட்டம் எதிர்காலத்தில் நடக்கப் போவதை இந்தி பேசாத மாநிலங்களில் எழும் இந்தி எதிர்ப்புணர்வு வெளிப்படுத்துகிறது.
-விடுதலை,28.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக