லண்டன், மே 3 பிபிசி தமிழோசையின் சிற்றலைசேவையைஇனிவழங் குவதில்லை என பிபிசி அறிவித்துள் ளது. தொலைக்காட்சி மற்றும் இணை யம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் அய்ந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
பிபிசி வானொலி செய்தி நிறுவனத் தின் சார்பில் 3.5.1941 முதல் தமிழ் செய்தி ஒலிபரப்பாக பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பாக சிற்றலையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
வாரம் ஒரு முறை ஒலிபரப்பாகத் தொடங்கப்பட்டு, பின்னர் வாரமிரு முறை ஒலிபரப்பாக ஒலிபரப்பானது. அதன்பின்னர், வார நாள்களில் அரை மணிநேர ஒலிபரப்பாக இந்திய நேரப் படி இரவு 9.45 முதல் 10.15 வரையிலும், அதன்பின்னர் இந்திய நேரப்படி இரவு 9.15 முதல் 9.45 மணி வரையிலும் அரை மணிநேர ஒலிபரப்பு தொடர்ந்து ஒலிபரப்பாக இருந்துவந்தது.
பிபிசியின் வானொலியில் முதலில் தமிழில் ஒலிபரப்பு என்பது பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கென்றே பிபிசிதமிழோசை ஒலிபரப்பு தொடங் கப்பெற்றது. சிற்றலைவழியே இலண் டனிலிருந்து தமிழில் வானொலி ஒலிபரப்பு தெளிவான உச்சரிப்பில் குறிப்பாக சமஸ்கிருத கலப்பின்றி தமிழ் உறவுகளுக்கான தனித்த இடத்தைத் தக்கவைத்திருந்தது. செய்திகளிலும், செய்திவிமர்சனங்களிலும்உண்மைத் தன்மை,நம்பகத்தன்மைஎன்பது வானொலிநேயர்களைஅதி கரிக்கச் செய்தது. உலகப்பந்தைசுழற்றியபடி, உலகச் செய்திகளைநாடுவாரியாகபிபிசி வானொலிச் செய்தியில் அறிந்துகொள்ள லாம்.
பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பில் சங்கர் அண்ணா, ஆனந்தி அக்கா, மணிவண்ணன் என தமிழர்களின் இல்லந்தோறும் உறவுகளாக மாறிப்போன ஒலிபரப் பாளர்களை எவரும் மறக்க முடியாது. தமிழர்களின் வாழ்வியலில் உள்ள மரபுக்கூறுகளை ஆய்ந்து கூறும் வண்ணம் பல்வேறு அரிய தகவல்களை உலகுக்கு பறைசாற்றியவர்கள் பிபிசி தமிழோசையில் பணியாற்றிய தமிழ் உணர்வுமிக்க சான்றோர்கள் என்றால் மிகையில்லை.
ஆசிரியர் கி.வீரமணி ‘செவ்வி’யுடன்...
இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளிநாடு பய ணம் என்றால், இலண்டன்வழி பயணம் என்றால், நிச்சயமாக அவரு டைய ‘செவ்வி’ (பேட்டி) பிபிசி தமி ழோசையில் இடம்பெறும். அந்த அளவுக்கு தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றது பிபிசி தமிழோசை.
திராவிடர் கழகத்தின் பகுத்தறி வாளர் கழக நாட்குறிப்பில் வெளிநாடு களிலிருந்து தமிழ் வானொலி ஒலி பரப்புகள் என்கிற பட்டியலில் பிபிசி தமிழோசை முதலிடம் பெற்றிருக்கும்.
தமிழ்நாடு அரசியல் களம் மட்டு மல்லாமல்,ஈழத்தமிழர்களின்உரி மைப்போராட்டத்தில்பிபிசி தமிழோ சையின்பங்களிப்புஎன்பதுமிகவும் போற்றத்தக்க நிலையில் இருந்தது. ஈழத்தில் போர்க்கால சூழலில் மின் வசதி, பேட்டரி வசதி ஏதுமீல்லாத நிலையில் மிதிவண்டியின் டயன மோவைப் பயன்படுத்தி, பிபிசி தமிழோசை வானொலி செய்தியை தமிழர்கள் பெருந்திரளாக திரண்டு கேட்பார்கள் என்றால், அதன் நம்பகத் தன்மையை, உடனுக்குடன் செய்தி வழங்கும் தன்மையை உணரலாம்.
ஆங்கிலம் அறிந்துகொள்ளவும், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா ஆக்கங் களை தமிழில் அறிந்துகொள்ளவும் பிபிசி தமிழோசை மிகவும் பயனுள் ளதாக இருந்தது.
கேபிள் இணைப்பு என்கிற முறை யில் தொலைக்காட்சி அறிமுகமான பிறகு, அதிலும் 24 மணிநேர செய்தி அலைவரிசைகள் பல தோன்றிய பிறகும்கூட, 2000ஆம் ஆண்டின் பிற் பகுதியில் தமிழர்கள் இணைய வழியில் பிபிசி தமிழோசைக்கான ஆதரவை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்கள்.
பிபிசிதமிழோசை30.4.2017தேதி யுடன் தன்னுடைய வானொலி வழி யிலான சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இணைய வழியில் பிபிசி தமிழ் தன்னுடையபணியைத்தொட ருகிறது. இலங்கையில் சக்தி பண்பலை வாயி லாக 5 நிமிட ஒலி பரப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழோசை உலகின் பல்வேறு பகுதிகளிலும் இனவேறுபாடுகளை எதிர்த்துப்போராடிவந்த தலைவர்கள், அமைப்புகளின் போராட்ட செயல் பாடுகளை செய்தியாக தந்தது. தென் னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஈழ விடு தலைப்போராட்டம் என பல்வேறு இனவிடுதலைப்போராட்டங்கள் குறித்த தகவல்களை போர்முனையிலிருந்து விரிவாக செய்தியை அளித்துவந்தது. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற வீரர்கள் என நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், வேலு.பிரபாகரன் ஆகியோரை பிபிசி அறிவித்தது.
-விடுதலை,3.5.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக