பக்கங்கள்

வெள்ளி, 18 மே, 2018

'சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும்



சிங்கப்பூர், மே 15- சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற் றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதிய ளித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள 4 அதிகாரப்பூர்வ ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. பள்ளி, கல்லூரிகளில் தமிழ், தாய் மொழியாக கற் பிக்கப்பட்டு வருவதுடன் சிங் கப்பூர் அரசு நிகழ்ச்சிகள் மற் றும் அந்நாட்டு கரன்சியான டாலரிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அத்த கைய மரியாதை சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு வழங்கப் பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மொழி தொடர்ந்து அதிகாரப் பூர்வ ஆட்சிமொழியாக இருக் கும் என்றும் தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதிலும் காப்பதி லும் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் தினந்தோறும் அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண் டும் என்றும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்கு விப்பதற்கும், இளைய தலை முறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு, 15.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக