பக்கங்கள்

புதன், 30 மே, 2018

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு



 


சிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடை பெற்ற நான்காம் கட்ட அகழாய் வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்ப ளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அங்கு அகழாய்வுப் பணி கள் தொடங்கின. முதல் இரண்டு கட்ட அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான நகர வீடுகள், மண் பாண்ட ஓடுகள், கலை நயமிக்க பானை கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கிடைத்தன.

பின்னர் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வில், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சதுர மற்றும் வட்ட வடிவிலான செப்புக் காசுகள், தங்கப் பொருள்கள், மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்தன.

இந்நிலையில் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ளும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி  நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங் கின. இதுவரை 13 குழிகள் தோண்டப் பட்டுள்ளன.

இதில், மண் பானைகள், கலை நயமிக்க மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங் காலப் பொருள்கள் தற்போது கிடைத்துள்ளன. இப்பணியில், தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள், ஆய்வு மாண வர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 20.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக