பக்கங்கள்

புதன், 11 டிசம்பர், 2019

கிறிஸ்தவக் கல்லூரியில் இந்தி பற்றிச் சொற்போர்

அண்ணாதுரை முழக்கம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை கருத்து

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவர் தமிழ்ப் பேரவையின் ஆதரவில் ஒரு சொற்போர்க் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குச் சென்னையின் பல பாகங்களிலிருக் கும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர். மாணவர்களும் மிகுதியாக வந்திருந்தனர்.

அவைத் தலைவர் தோழர் என்.இராமச்சந்திரன் (மாண வர் 4ஆம் வகுப்பு) தலைமை வகித்தார். கல்லூரியாசிரியர் தோழர் ஆலாலசுந்தரம் செட்டியார் அவர்கள், கண்காணிப் பாளர், ஒட்டிப் பேசுபவர், வெட்டிப் பேசுபவர் ஆகியவர் களைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

தோழர் வித்துவான் டி.பி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை கண் காணிப்பாளராக இருந்து சொற்போரைக் கவனித்து வந்தார்.

வித்வான் இராசமணிக்கம்

"இந்தி பொதுமொழியாவதற்கு எவ்வாற்றானும் பொருத் தமுடையதல்ல'' என்ற தீர்மானத்தைக்கொண்டு வந்து வித் வான் எம்.இராசமாணிக்கம் பிள்ளை பி.ஒ.எல். பேசியதாவது:-

பண்டும் இன்றும் உலகத்தில் பல வல்லரசுகள், பொது மொழியில்லாமலேயே அமைதியாக ஆட்சி நடைபெற்றன. முக்கால் இந்தியாவைக்கட்டி ஆண்ட அசோகன் காலத்தி லும் நாட்டில் பொது மொழி ஒன்று இருந்ததாகத் தெரிய வில்லை. அன்று நாட்டில் ஒற்றுமை நிறைந்திருந்து. ஆத லின் பொதுமொழி இல்லாது நாடு தீமையடையாது. பொது மொழியால் நன்மையுண்டா? அதனால் ஒற்றுமையுண்டாகு மெனக் கூறுகின்றனர். ஒரே மொழி பேசும் தென்கலை, வடகலை வைணவர் சண்டை சொல்ல முடியவில்லை. ஆதலின் மொழியால் ஒற்றுமை உண்டாகுமெனக் கூறுவது தவறு. வடநாட்டில் வேலை கிடைக்குமென்பதும் தவறு. மாகாணப்பற்று பெருகிவரும் இக்காலத்து அந்தந்த மாகாணத்தாருக்கே முதல் உரிமை கிடைக்கும். அன்று நாம் வடநாட்டில் வேலையை எதிர்பார்க்க முடியுமா? மேலும் நமது நாகரிகம், பழக்க வழக்கம் ஆகியவைகட்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழியை 3 ஆண்டுகள் படிப்பதால் என்ன நன்மை உண்டாகும். நினைவில் தான் இருக்குமா?

இந்தி மொழி வரலாறு.

நிற்க, இந்தியின் பிறப்பு வளர்ப்பைக் கவனிப்போம். இந்தி தனக்கென ஒரு எழுத்தில்லாதது. அது 22 கோடி மக் களால் பேசப்படுகிறதென சில அரசியல்வாதிகள் கூறுகின் றனர். இந்தி, மேற்கு இந்தி, கிழக்கு இந்தி, பிகாரி என மூன்று பெரும் பிரிவு உடையது. மற்றும் 11 உட்பிரிவுகள் கொண்டது. ஒரு பிரிவார் பேசும் இந்தி மற்றொரு பிரிவாருக்குப் புரியாது. (இச் சமயத்து ஒரு இந்தியா படத்தைக் கொண்டு இதை விளக்கினார்) இத்தகைய மொழி எங்கனம் பொது மொழி யாகும்? உருது என்றால் பாசறை. மொகலாயர் காலத்து உருது பாரசீகம் கலந்த ஒரு மொழியாகச் சில ராணுவ வீரர்களால் பேசப்பட்டது. பின்னர் லல்லுஜிபாய் என்பவர் இதிலுள்ள உருதுச் சொற்களை நீக்கிவிட்டுச் சரிக்குச்சரி சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து செப்பம் செய்தார். அது தான். மைதிலி. இதைத் தான் நமது நாட்டில் கட்டாய பாட மாக்கியிருக்கின்றனர். இம்மைதிலி பேசுவோர் 1 கோடிக்கு அதிகம் இரார். அறிஞர் ராமானந்தசாட்டர்ஜி போன்றவர்கள் இந்தி பொது மொழியாகாது எனக் கூறுகின்றனர். இந்தி இலக்கண, இலக்கியமில்லாதது. 11 மாகாணத்திலும் கட்டாய பாடமாக்கினால் அந்தந்த மாகாணத்தின் பழக்க வழக்கங் களுக்கேற்ற மொழிமாறி ஒலிமாறி இன்றைய 11 பிரிவான இந்தி 110 பிரிவு ஆக மாறும். எனவே இந்தி எவ்வாற்றேனும் பொது மொழியாதற்கு ஏற்றதல்ல.

சி.என்.அண்ணதுரை

இத்தீர்மானத்தை ஒட்டி, தோழர் சி.என்.அண்ணாதுரை பேசியதாவது:-

எனக்கு முன் பேசிய பண்டிதர் இந்தி பொது மொழியா வதற்கு ஏற்றதல்ல என்பதற்குப் பல காரணங்களைக் காட்டி நன்கு விளக்கினார். நானோ இதை வெட்டிப்பேச இருக்கும் தோழர் - செங்கல்வராயரோ இதைப் பற்றி இம்மாணவர் மன்றத்தில் பேச லாயக்குடையவர்களல்ல. அரசியல் துறை யில் இதைப் பற்றிப் பேச எங்களுக்கு வேறு மன்றங்களிருக் கின்றன. இதற்கு ஆராய்ச்சி வேண்டியதில்லை. ஏன்? நாங்கள் சும்மா இல்லை. ஆராய்ச்சித்துறையில் 'சென்ட்ரலிய சேஷன்' என்ற முறை உண்டு. ஒரு பொருளைப்பற்றிப் பொதுவாக்குவது' பிரித்துப் பார்ப்பது' என்ற இருமுறையில் ஆராயலாம். ஒரு காலத்தில் பொது மொழி வேண்டப்பட்டது. மதம் முதலிய யாவற்றிலும் பொது அதாவது சென்ட்ரலிய சேஷன்' - பொதுவாக்குவது வேண்டப்பட்டது. ஆனால் இன்று மொழி, மதம் முதலியவற்றில் பிரித்துப் பார்க்கும்' முறை ஏற்பட்டு விட்டது. இது 'சென்ட்ரலிய சேஷனை விரும்பும் காலம். பகுத்தறிவுக்கு மதிப்புத்தரும் காலம். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு'' என்றார் வள்ளுவர். சொல்லு பவர் யாராயிருந்தாலும் கேட்பவர் யாராயிருந்தாலும் உண்மையை அலசிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே யார், யார் எனப்போட்டார் வள்ளுவர். இந்தியாவுக்குப் பொது மொழி வேண்டுமென்பதற்கு முன் இந்தியா ஒரு நாடா? என்பதை ஆராய வேண்டும். பெரிய இமயமலையை உடையது; சிறந்த ஆறுகளை உடையது; பல வளங்கள் நிறைந்தது என்று கூறலாம். இந்தியா ஒரு கண்டம். ஒரு நாடல்ல. இதை எந்த தேசீயவாதியும், தங்கள் தேசியத் திரையால் மறைக்க முடியாது.

நிற்க, இந்தியாவுக்கு பொது மொழியில்லாததால் ஏற் பட்ட குறை என்ன? ஆங்கில ஆட்சியால் அடிமையானோம் எனப்பேச்சிற்காக சொல்லழகிற்காகக் கூறலாமே ஒழிய ஆதாரமென்ன? தேர்தலுக்கு முன், இந்திய மக்கள் வறுமை யால் வாடுகின்றனர்; வரிச்சுமை தாளமுடியவில்லை; பாரத தேவியின் அடிமை விலங்கை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டதே ஒழிய இவைகள் இந்நாட்டு இன்னலுக்குக் காரணங்களாகக் காட்டப்பட்டனவே ஒழிய, பொது மொழி வேண்டுமென்றோ, பொதுமொழியின்மையால் இத்துன்பங் கள் வந்தன என்றோ எந்த மேடையிலும் யாராலும் கூறப் படவில்லை.

இந்தியா ஒருகண்டமாயிருந்ததால், முன்பு ஆண்ட மொகலாயரோ, மவுரியரோ, அசோகனோ, மூவேந்தர்களோ இந்நாட்டிற்குப் பொது மொழி வேண்டுமென்று கூறவில்லை. அது இல்லாமையால் நாட்டிற்குத் தீமையுண்டாகுமெனவும் நினைக்கவில்லை.

ஒற்றுமைக்குப் பொது மொழி தேவையா?

இந்தியாவுக்கு எதிர்காலத்தில் வரப்போவது (யூனிட்டரி கவர்மெண்ட்) ஒற்றுமையாட்சியல்ல ; கூட்டாட்சி (பெடரல் கவர்ன் மெண்ட்) தான். இந்தியா ஒரு மிக்க வேண்டுமென நினைத்தால் கூட்டாக மட்டுமல்லாது கலந்து வாழ வேண்டு மென விரும்பினால் ஒற்றுமையாட்சி தான் வேண்டும்.. அதில்லாது பல நாடுகளையும் சேர்த்து ஆளுவது தான் கூட்டாட்சி. பொதுமொழி வேண்டுமென்றால், பொது மதம் வேண்டாமா? பொது உணவு வேண்டாமா? நமது தலை களாவது ஒரே விதமாக இருக்க வேண்டாமா? நடை, உடை, பாவனைகளில் ஒற்றுமை பொதுமுறை வேண்டாமா? மொழியால் ஒற்றுமை உண்டாகுமெனக் கூறுகின்றனர். ஒரே மொழி பேசும் இந்து முஸ்லீம்கள் சண்டையில்லாதிருக் கின்றனரா? நாட்டில் சைவ, வைணவச் சண்டைகள் ஓய்ந்த பாடில்லையே. இன்னும் பொருளாதாரச் சண்டை ஒரு பக்கம். கேவலம் தேர்தல் சண்டை கூட நிற்கவில்லையே. தொல்காப்பியத்தைத் தந்த - உலகப் பொதுமறையாம் திருக் குறளைப் பயந்த - சங்கமிருந்து ஆராய்ந்த பேசற்கினிய இலக்கண இலக்கியங்கள் நிறைந்த பண்டைத் தமிழால் ஒற்றுமையில்லை தமிழரிடை என்றால், பாலாஜி ஹரிராம்' மொழியிலா ஒற்றுமை ஏற்பட்டு விடும்? இத்தகைய சண்டை கள் ஓயவில்லை . ஓயவும் போவதில்லை. ஒற்றுமைக்குப் பொது மொழியும் தேவை இல்லை அதற்கு இந்தியும் ஏற்றதல்ல.

வடநாட்டில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் அதிகமிருப் பதால், அவர்கள் இங்கு வந்து நம்முடன் பேசிவிடுகிறார்கள். நம்மில் ஆங்கிலம் அதிகம் பேசத் தெரியாததால் வடநாட்டில் சென்று அவர்களுடன் பேச இந்தி படித்துக்கொள்வது அவசியம்'' எனச் சமீபத்தில் விளம்பர மந்திரி - கனம் ராம நாதன் கூறுகிறார். இது எப்படியிருக்கிறது. 100க்கு 92 பேர் தாய் மொழியில் கூடப் படிக்காத காலத்துக் கட்டாயபாட மேன்?

அண்மையில் வங்காள சாஹித்ய மண்டலத்தில், இந்தி பொதுமொழியாவதற்கு லாயக்கற்றது; வங்காளம் தான் பொது மொழி ஆகவேண்டும் என்று அவர்கள் கூறி விட் டனர். இன்றைய காங்கிரஸ் தலைவர் வங்காளி; எனவே இந்தி பொது மொழியாக முடியாதென நாங்கள் நம்புகிறோம். கோடி முஸ்லிம்கட்குத் தாய் மொழியாக உள்ள உருதுவை விட நல்ல மொழி வேறு எது என்கிறார் ஜனாப் ஜின்னா.

இந்தி 600 ஆண்டுகட்கு முன் தோன்றியது. இலக்கண இலக்கியமில்லா ஒரு உருப்படா மொழி, ஆண்டு தோறும் மாநாடு கூட்டி இலக்கியங்கள் சேர்க்கிறோம். சேர்த்த பின் தான் இந்தி மக்கள் மனதைக் கவரும் என்கிறார் காந்தியார். இந்தி வந்தால் தமிழ் கெடும் என்று நினைத்துத்தான் கட்டாய இந்தி கூடாதென்கிறோம். தமிழில் இப்பொழுதே பாதிக்கு மேல் வடசொற்கள் கலந்து விட்டன. பிள்ளையைப் பள்ளிக்கூடம் அனுப்ப நினைக்கும் பெற்றோர்கள் அட்சராப் பியாசப் பத்திரிகை' என அழைப்புகள் அனுப்பும் நிலையில் இன்று தமிழ் இருக்கிறது. பொது மொழிக் கொள்கை 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அழிந்துபட்டது. எனவே சிறந்த இலக்கண இலக்கியங்களை உடைய உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் வழங்கும் நாட்டில், தனது சொந்த நாட்டிலேயே ஒற்றுமையை உண்டாக்கமுடியாத ஒருசிறு மொழி - ஏன்? இன்னும் சற்று வெளிப்படையாகச் சொன்னால் அந்தலம்பாடி மொழி புகுத்தப்பட வேண்டா மென்றே நாங்கள் கூறுகிறோம்.

வெட்டிப் பேச்சு

தோழர் டி.செங்கல்வராயன் இத்தீர்மானத்தை வெட்டிப் பேசுகையில் கூறியதாவது:- நான் மகாத்மா காந்தியின் அஹிம்சா தர்மத்தைத் தலைமேல் தாங்கு பவனாதலால், நான் வெட்டிப்பேச விரும்பவில்லை; விளக்கிப் பேசுகிறேன். ஒட்டிப் பேசியவர்கள் கூறியவை ஒவ்வொன்றிற்கும் பதில் கூறக்காலமில்லை. சரித்திரத்தில் பொது மொழி இயக்கம் இல்லை என்றார். உலக சரித்திரத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இன்றைய நிலையில் நமது நாட்டிற்குப் பொது மொழி ஒன்று வேண்டுமா? அதனால் பயன், நன்மை என்ன? என்பனதாம் நாம் பார்க்க வேண்டியவைகள். இந்தி பொது மொழியாவதால் 80-பங்கு நன்மை என்றால் 20 பங்கு தீமையிருக்கலாம். அதற்காகப் பொது மொழி வேண்டா மென்பது தர்மமல்ல.. ஒரு மொழி பேசுபவரிடம் சண்டையில்லையா? என்றார்கள். அது மதத்தால் மதம் பிடித்துச் செய்கிறார்களே ஒழிய மொழியாலல்ல. இந்தி படித்தால் வடநாட்டில் உத்தியோகம் வரும் என்று யாரும் கூறவில்லை. வடநாட்டில் உத்தியோகம் வந்தால் இந்தி படித்திருந்தால் நன்மை தானே என்று தான் கூறுகின்றோம். அன்னியரிடம் அடிமையாயிருக்கும் வரை நமக்கு எங்கு வேலை கிடைக் கப் போகின்றது, இந்தி 11 பிரிவாகவோ 110 பிரிவாகவோ இருக்கலாம். தமிழும் ஜில்லாவிற்கு - ஜில்லா சிறிது பேச்சில் மாறவில்லையா? ஒரு கொடியின் கீழ் ஒற்றுமையாட்சிக்குப் பொது மொழி வேண்டுவதில்லை. கூட்டாட்சியில் (பெட்ரல்) தான் பொது மொழி வேண்டும். இந்தியா அடிமைநாடு - ஒவ்வொரு நாட்டானும் தனது நாட்டுப் பெயரால் தன்னுடைய மொழியை அழைக்கின்றான் இந்தியன் என்ன கூறுவான். கூட்டாட்சி பெடரேஷன் வரும்பொழுது எல் லோரும் ஒரு மொழியில் பேசினால் தானே நல்லது அதை விட்டு கூவம் நதிக்கு அப்பால் வேண்டாம் என்பது தவறு இந்தியில் இலக்கண இலக்கியமில்லை என்றார்கள். அதனால் தான் அது பொது மொழியாக வேண்டும் என்று கூறுகின்றோம். நாம் பரிபூரண விடுதலையடையப் போகின் றோம். அன்று பொதுமொழி வேண்டும். ஒருவர் பொது மொழி வேண்டுமேன்று கூறுகையில், இன்னொருவர் வேண்டாமென்றால் நம்மில் ஒற்றுமை எப்படி வரும்? நாம் ஆங்கிலத்தை மறக்கவேண்டும். நானும் மறந்து வருகின் றேன். மொழியின் விஸ்தீரணம், ஜனத்தொகை, சுலபம் ஆகிய மூன்றையும் கவனித்தால் இந்தி தான் பொதுமொழி யாக லாயக்குடையது. இந்தி சுலபமானது தமிழைப் போல் 216 எழுத்தில்லை. நன்னூல் போன்ற இலக்கணங்கள் கிடையாது. தமிழை எல் லோரும் சுலபமாகக் கற்க முடியாது. 'ழ' கரத்தை யாராலும் உச்சரிக்க முடியாது. இந்தியை உபாத் தியாயர் உதவியில்லாது கற்றுக்கொள்ளலாம். அவ்வளவு சுலபமானது. சைகாலேஜ் முறைப்படி இந்தியா என்றால் இந்தி என்றிருக்க வேண்டும்."

- தொடரும்

- விடுதலை: 11.2.1939

- விடுதலை: 9.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக