பக்கங்கள்

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு: அரபி மொழி பெயர்ப்பில் திருக்குறள் வெளியீடு

குவைத், டிச.1 உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் திருக்குறள் மாநாடு 29.11.2019 அன்று குவைத் ரிக்காயி நெய்வேலி ராசாராம் சீனியம்மாள் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு நூலகக் காப்பாளர் ச.செல்லபெருமாள் தலைமை வகித்தார்.
தமிழ்நாடான், முத்துகுமார் முன்னி லையில் நடைபெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகளில்ஜென்சி ராபர்ட் கிழவனல்ல எங்கள் கிழக்கு திசை பாடலுக்கு பரதம் ஆடினார். ராஜ்குமார் குழுவினரின் டிக் டாக் நிகழ்ச்சி நடைபெற்றது. குவைத் இசுலா மிய தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் குறளை தமிழிலும் அரபி மொழி பெயர்ப் பையும் அழகாக சொல்லி மகிழ்ந்தனர்.
பானு இக்பால், ஜெசிமா சிராஜூதீன், கம்பளிபஷீர்(காயிதேமில்லத் பேரவை) புதுக்கோட்டை பஷீர்( பன்னாட்டு திமுக) ஆ.அறிவழகன் (விசிக)  மணிவாச கன் (மதிமுக) வாழ்த்துரை வழங்கினர்.  இரா.சித்தார்த்தன் (பெரியார்நூலகம்) முனைவர் அ.ஜாஹிர்உசேன் (சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்) கவிஞர்.கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத் தலைவர்) சிறப்புரையாற்றினர்.
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறள் அரபி மொழி பெயர்ப்பை வெளியிட, குவைத் தொழில் அதிபர் ஹமூத் அல் ஹபீப்முனாவர் அவர்கள்  பெற்றுக் கொண்டார். பல்வேறு தமிழ் அமைப்பினர் பெருந்திரளாய் கலந்துகொண்டனர் பெருமளவில் பெண்கள் கலந்து கொண் டது சிறப்பாய் அமைந்தது.
விழாக்குழுவினர் அமானுல்லாஹ் அன்பரசன், சத்திரமனை அசன்முகம்மது ஆலஞ்சியார் இனிக்கும் தமிழ்  ரபீக் ராஜா சித்தார்த்தனுக்கு சிறப்பு செய்தனர். ‘‘திராவிட வேள்''  விருது சித்தார்த்தனுக்கும், ‘‘குறளொளி சுடர்'' விருது முனைவர் அ.ஜாஹிர் உசேன் அவர்களுக்கும், ‘‘திராவிட சுடரொளி'' விருது கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கும், பெரியார் பிஞ்சு தஞ்சை தீன.சித்தார்த்துக்கு ‘‘திராவிட தளிர்'' என்ற பட்டமும் வழங்கி மகிழ்ந்தது பெரி யார் நூலகம்.  விழாவை நெறியாளர் தொகுத்து வழங்கினார். வெற்றியூர் அன் பரசன் (விசிக) தொகுத்து வழங்கினார்.
விடுதலை நாளேடு, 1.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக