பக்கங்கள்

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

இலக்கிய பெருமகனார் சிலம்பொலி செல்லப்பனார் மறைவு திராவிடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை



சென்னை, ஏப். 7- தமிழர் பெருமைப்படத்தக்க இலக்கிய பெருமகனார், தமிழறிஞர் சிலம் பொலி செல்லப்பனார் (வயது 91) நேற்று (6.4.2019) சென்னையில் இயற்கை எய்தினார்.

திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு 6.4.2019 அன்று மாலை 6 மணியளவில் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

சிலம்பொலி செல்லப்பனார் மறைவு குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியறிக் கையை, சிலம்பொலி செல்லப்பனாரின் மகன் கொங்குவேள், மகள்கள் மணிமேகலை, கவு தமி, கனகமுத்து ஆகியோரிடம் தந்து ஆறு தல் கூறினர்.

திராவிடர் கழக வெளியுறவுத்துறை செயலாளர் கோ.கருணாநிதி, பெரியார் திடல் மேலாளர் ப.சீத்தாராமன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, உண்மை வாசகர் வட்டத் தலை வர் வை.கலையரசன் ஆகியோரும் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சந்தியநாராயணன், வாழ்நாள் உறுப்பி னர்கள் கோ.பரந்தாமன், க.செல்லப்பன் ஆகியோர் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் சிலம்பொலி செல்லப்பனார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் இறுதி மரியாதை


சிலம்பொலி செல்லப்பனாரின் உடலுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி செல்வம், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தமிழறிஞர்கள், எழுத் தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

சிலம்பொலி செல்லப்பனாரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நாளை (8.4.2019) அங்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- விடுதலை நாளேடு, 7.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக