பக்கங்கள்

வெள்ளி, 31 மே, 2019

திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்? (2)

துக்ளக்கின்' கோணல் பார்வை....


கி.தளபதிராஜ்


மயிலாடுதுறை


நேற்றைய தொடர்ச்சி....


சமதர்ம ஞானி வள்ளுவர்.!


வள்ளுவர் அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்மவாதியாவார் என்று கூடக் கூறலாம். ஏனென்றால் பொதுவுடைமையின் அடிப் படையை நாம் குறளில் காண முடிகிறது. 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்று ஒரு குறளில் கூறுகிறார். ஒருவன் பிச்சை எடுத் துத்தான் வாழவேண்டிய நிலை இருப்பின், அவனைப் படைத்ததாகக் கூறப்படும் படைத்தவனை ஒழி என்று எடுத்துக்காட்டியிருக் கிறார்.

'குடிஅரசு' 7.5.1949

திருவள்ளுவர் தலைசிறந்த சம தர்மவாதி. ஆனதால்தான் ஒரு துறையையும் பாக்கிவிடாமல் சக லத்தையும் தொகுத்துக் கூறியிருக் கிறார்

'குடிஅரசு' 8.11.1949

"திருக்குறள் இப்படி பொது வுடைமை பேசுவதாக குறிப்பிட்ட பெரியார், திருவள்ளுவரை பார்ப் பன ஆதிக்க எதிர்ப்பாளராகவும், திருக்குறளை கண்டன நூலாகவும் அடையாளம் காண்கிறார். பெரியா ரின் இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் குடி அரசில் திருக்குறளைப் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்தது.

"திருவள்ளுவர் குறளை எழுதிய காலம், ஆரிய மதக் கடவுள்கள், சாஸ்திரங்கள், புராண இதிகாசங் கள் ஆரிய பழக்கவழக்கங்கள் இந்த நாட்டில் புகுந்துவிட்ட காலமாகும். திருவள்ளுவர் அந்தணர் யார் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அதனாலேயே ஏற்பட்டி ருக்கிறது.

'அந்தணர் என்போர் அறவோர் மற்ற எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்'

என்கிற குறள், அந்தணர் என்கிற ஜீவகாருண்யம் நிறைந்த ஒரு தமிழ்ச் சொல்லை, ஜீவகாருண்யத்தின் ஜென்ம விரோதிகளான பார்ப் பனர்கள், தங்களையே குறிப்பிடக் கூடிய ஒரு தனி ஜாதிச் சொல்லாக ஆக்கிவிட எத்தனிக்க, அந்த எத் தனமும் மக்களால் உண்மை என்று நம்பக்கூடிய அளவில் வந்து விட்ட தனால்தானே, அந்தணர் என்பது ஜாதிப்பெயரல்ல யார் யார் மற்ற ஜீவன்களின் துன்பத்தை தொல் லையை, கஷ்ட நஷ்டத்தை தங்களு டையது என்று கருதி அவைகளைப் போக்குவதற்கான பரிகாரத்தை ஓய்வு ஒழிச்சலில்லாமல் வாழ்க் கையில் ஒரு லட்சியமாகக் கொண்டு நடக்கிறார்களோ அவர்கள் தான் அந்தணர்கள் என்று விளக்க வேண் டியதாகிவிட்டது. பார்ப்பனர்கள் தங்களை அந்தணர்கள் என்று சொல்லிகொள்வது தப்பு. அவர் களை மற்றவர்கள் அந்தணர்கள் என்று உடன்பட்டுப் போவது எழுதுவது அதைக்காட்டிலும் பெரிய தப்பு என்று இந்தக் குறள் கண்டிக்கவில்லையா? 'மறப்பினும் ஒத்த கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'

என்பது ஒரு குறள். இது பார்ப் பான் என்றால் அவன் எவ்வளவு தான் கொலை பாதகனாய் இருந் தாலும், அவன் பிறந்த பிறப் பினாலேயே உயர்ந்தவனாவான். பூதேவன் அவனே. அவனையே மக்கள் பூஜிக்க வேண்டும் என்கிற கருத்தைப் பார்ப்பனர்கள் பரப்பிய தனால் அல்லவா, அதை மறுத்து கடவுள் முகத்தில் பிறந்தவன் என்று சொல்லப்படுகிற பார்ப்பனனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டு விட்டால் அவன் இழி மகன்தான். மனிதனுக்கு ஒழுக்கம்தான் முக்கி யமே தவிர பிறப்பு ஜாதி முக்கியமல்ல என்று தானே இந்தக் குறள் வற்புறுத்துகிறது.

அவர்களுடைய கொள்கை, வேள்வி - யாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அது மட்டுமல்ல. யாக வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிற வர்கள் எல்லாம் சூத்திரர்கள் - சண்டாளர்கள் - அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப்பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? '

"அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செருத்து உண்ணாமை நன்று"

என்று சொல்லுகிறார். இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதை தெரிவிக்க வில்லையா? மற்றும் அதைக் கண்டன நூல் என்று மாத்திரமல்லாமல், ஒரு மாபெரும் பகுத்தறிவு நூல் என்றும் கருத வேண்டியிருக்கிறது.

கண்டன நூல் என்றால் எதைக் கண்டிக்கும் கண்டன நூல் என்று பார்ப்போமானால், ஆரியத்தை ஆரியப் பண்பை அதிலுள்ள உண் மையான ஒழுக்கத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஏற்காத ஆபாச மூட பழக்க வழக்கங்களைக் கண்டிக்கும் கண்டன நூல் என்றே எண்ணலாம். மற்றும் பல மதவாதிகளின் கற்பனை களை அதாவது பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் நிற்காததும், வெறும் நம்பிக்கை; நம்பியாக வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தி னால் மாத்திரமே நிற்பதாகிய பல மூட நம்பிக்கைகளை ஒழித்து, மக் களுக்கு இயற்கைத் தன்மை விளங் கும்படி செய்வதாகிய பகுத்தறிவு நூல் என்றே சொல்லலாம்."

'குடிஅரசு' 30.4.1949.

திருவள்ளுவரை பொதுவு டைமைவாதி என்றும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் என்றும் சொன்ன பெரியார் அவரை நாத் திகர் என்றும் அடையாளப்படுத் தினார். 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான்' என்ற குறளைச் சுட்டிக்காட்டி, "பிச்சை எடுத்து வாழும்படியாக மக்களை கடவுள் சிருஷ்டித்து இருந்தால் அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று வள்ளுவர் சொல் லியிருக்கிறார். அவர் பொய்யா மொழிப் புலவர் என்பதால் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்று துணிவாய்ச் சொல்லிவிட்டார். இப் படிச் சொல்வதால் வள்ளுவர் நாத் திகராகிறார்" என்கிறார் பெரியார்.

"எல்லாவிதத் துறைகளைப் பற்றியும் நல்வழி காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை. பொதுவாக நன்னடத்தை, நாகரீகம் என்பவையெல்லாம் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ள வேண்டி யதையே அடிப்படையாகக் கொண் டதாகும். அதற்கான நெறிகள் வழிகள் குறளில் காணலாம். சுலப மாக கூற வேண்டுமானால் குறள் ஒரு பகுத்தறிவு நூல்

குறளுக்குள் கடவுள், மதம், ஜாதி, மோட்சம், முன் ஜென்மம் என்பவை போன்ற சொற்கள் இல்லவே இல்லை. குறளில் கடவுள் என்ற சொல்லோ, கடவுள் என்ற வஸ்துத் தன்மையோ அறவே இல்லை. கட வுள் இல்லையானால் மற்ற வற்றை எப்படி அதில் காண முடியும்?

கடவுள் வாழ்த்து என்று குறளில் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே? என் றால், வள்ளுவர் தமது குறளில் எங்கேயாவது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா?"

'குடிஅரசு' 7.5.1949

இந்துமதப் புராணங்களில் காணப்படும் பிறவி பேதம் திருக் குறளில் இல்லை என்றும், அவற்றில் காணப்படும் மூட நம்பிக்கைகளும் குறளில் இல்லை என்றும், நமக்கு இருக்கும் ஒரே நீதி நூல் அதுவே என்பதால் அந்தக் குறள் வழி நின்று பணியாற்றுங்கள் என்று இளைஞர் களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

"திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் கூறுவதெல்லாம் நமது பெரியோர்கள் கூறிய நீதி நெறி நூல்களில் காணப்படுபவைகளே ஆகும். அவ்வித நீதி நெறி நூல்களில் தலையானதான குறளில் திராவி டரின் உயர்ந்த பண்புகள் காணப்படு கின்றன.

ராமாயணம், பாரதம், கீதை, மனுதர்மம் ஆகியவைகளை எதிர்த் துப் பேசியவர்கள், பேசுபவர்கள் ஏராளம் உண்டு. ஆனால் குறளை எதிர்த்துப் பேசியவர்கள் நம் நாட் டில் மட்டுமல்ல; மற்ற எந்த நாட்டிலும் கிடையாது. அவ்வளவு உயர்ந்த பண்புகள் அதில் மலிந்து கிடக்கின்றன. அவ்வித குறளை நாம் மறந்து, அதற்கு மாறான கருத்து களைக் கொண்ட ஆரியர்களின் மத இதிகாச நூல்களெனெப் படுபவை களை பின்பற்றியதாலேயே நாம் இந்த இழிநிலைக்கு ஆளானோம்.

ஆரியர்களின் நூலில் பிறவியில் உயர்வு _ தாழ்வு என்ற பேதமை கற்பிக்கப்பட்டுள்ளது. நமது வள் ளுவர் குறளிலோ, அவ்விதப் பேத மைகளைச் சிறிதும் காண முடியாது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கருத்தினை வகுத்துள்ளவர் நம் வள்ளுவரேயாவார். பிறப் பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் பேதமை என்பதை விளக்கியதோடு அவர் நின்று விடவில்லை. மேலும் கூறுகிறார். தொழிலினாலும் அவ் வித வேறுபாடுகள் கூடாதென்று. அதாவது 'சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையினால்  -_"ஒருவன் செய்யும் தொழிலைக் கொண்டும் மக்கள் சமுதாயத்திலே வேற்றுமை காண்பித்தல் கூடாது. என்று வலியுறுத்தியிருக்கிறார் வள்ளுவர்.

"அன்பர்களே! ஆரியர்களின் நீதி நூல்களென்று கூறப்படும் ராமா யணம், கீதை, புராணம் ஆகியவை களில் காணப்படும் மடமைகள் எவ்வளவு வஞ்சகம் நிறைந்ததென்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமா? நமது குறளில் எந்த இடத்திலும் மதக்குறி அணிய வேண்டுமென்று கூறப்படவில்லை. மோட்சத்திற்காக கடவுள் பேரால் கல்லைக் கட்டிக் கூத்தாடுமாறு கூறவில்லை ஆனால் மனிதத் தன் மையுடன், ஒழுக்கமுடன் நடந்து கொள்வதையே வலியுறுத்துகிறார்.

எனவே மக்களின் ஒழுக்கத்திற்கு மாறான ஆரிய நூல்களை அறவே புறக்கணித்து, நம் நீதி நூலாகிய குறளைப் படியுங்கள் என்று திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் கூறி வருகிறோம்.

இளைஞர்களே! எதிர்காலம் உங்களிடம் தான் இருக்கிறது. நம் நாடு மற்ற நாடுகளைப் போல முன்னணியில் நின்று, மக்களும் நல்வாழ்விற்கு உட்பட வேண்டுமா னால் நமக்கு இருக்கும் ஒரே நீதி நூலாகிய குறள் வழி நின்று பணியாற்றுங்கள். அதற்கு மாறான மற்ற ஆரிய நூல்களையும், அந் நூல்களுக்கு ஆதரவு தரும் கோயில், கடவுள், திருவிழா போன்றவைகளை யும் வெறுத்து ஒதுக்குங்கள்!" என்கிறார் பெரியார்

'விடுதலை' 14.4.1949

திருக்குறளுக்கு எதிராக உண்மையிலேயே செயல்பட்டவர்கள் யார்? மூன்றாவது சங்கத்தைப்பற்றி கால்டுவெல் சொல்லும்போது, வள் ளுவர் தாழ்த்தப்பட்ட புலையர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் மூன்றாம் சங்கத்தில் அவருடைய குறள் அரங்கேற்றப்பட்டதை பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் மூன்றாம் சங்கத்தையே கலைத்து விட்டனர்" என்று கூறுகிறார்.

"தீக்குறளைச் சென்றோதோம்' என்பதற்கு தீமை செய்யும் குறளைச் சென்று ஓதோம் என்று விளக்க மளித்தவர் சங்கராச்சாரியார்.

காவிரி நீர் பிரச்சினைத் தொடர் பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா? இல் லையா? அதற்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன? என்று பெங்களூரு திரு வள்ளுவர் சிலை திறப்பை நக்க லடித்தது "தினமலர்". திருக்குறளை அழிக்க நினைத்தவர்கள் அதற்கு வாய்ப் பில்லாமல் போகவே கீதை யின் சாரமே குறள் என்று கதை கட்டி விட்டார்கள். இவர் கள்தான் இப் போது பெரியார் மீது புழுதி வாரி வீசுகிறார்கள்.

திருவள்ளுவரை சமதர்ம ஞானி என்றும், பொதுவுடைமை வாதி என்றும், நாத்திகர் என்றும், திருக் குறளை தமிழர்களின் நீதிநூல் என்றும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த கண்டன நூல் என்றும் பாராட்டியும், போற்றியும் மாநாடு கள் கூட்டிப் பெருமைப்படுத்திய தந்தை பெரியாரை, திருக்குறளை மலம் என்று விமர்சித்ததாக திரித் திருக்கிறார் ஆடிட்டர் குரு மூர்த்தி. கோயபல்ஸ் பிரச்சாரங்கள் தமிழ் நாட்டில் ஒரு போதும் எடுபடாது என்பதை நாடாளுமன் றத் தேர்தல் முடிவுகளே உணர்த்தி விட்டன.

-  விடுதலை நாளேடு, 31.5.19

வியாழன், 30 மே, 2019

தமிழிலிருந்து களவாடல்!



தென்னிந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த வேத ஆரியர்கள், தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்தும் விரிவாகவும் கற்றனர். பின்னர் தமிழிலிருந்த கலை, அறிவியல் சார்ந்த அனைத்து நூல்களையும், சமஸ்கிருதத்தில், தங்கள் கருப்பொருள் போல் காட்டுவதற் கென மொழி பெயர்த்தனர்.

தமிழைக் கற்ற அளவில், சில துணை நூல்களையும், தமிழ்ச்சாயலில் சில நூல்களையும் படைத்து, தமிழர்கள், தங்கள் மேல் அய்யம் கொள்ளாத வகையில் பார்த்துக்கொண்டனர். கூடவே அத்தமிழ் நூல்களில், ஆரிய கொள்கைகளையும் புகுத்தினர். தங்களை இவ்வுலகின் தேவர்கள் அல்லது கடவுளர் என்று சொல்லிக் கொண்ட நிலையில், அது உண்மைதானா என்றும் ஆய்வு செய்யவோ, கேள்விகளைக் கேட்கவோ எவரும் முன் வரவில்லை, தமிழ்நாட்டு மன்னர்களால், மிகுந்த சிறப்புகள் அளிக்கப்பட்டு போற்றப்பட்டனர்.

அகத்தியர், மருத்துவ இயலையும், நாரதர் இசையியலையும், தமிழினின்று, சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தனர் என்று சொல்லப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் அறியப்படும் நாட்டியவியலும், நாடகவி யலும் பரதன் என்பவனால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், பரதன் என்ற பெயரைக் கொண்ட தமிழ் ஆசிரியனே எழுதியதை, மொழி பெயர்த்துக் கொண்டனர் என்றும் அறியலாம்.

இடக்கிடப்பியல் பற்றுகள் (ஜிஷீஜீஷீரீக்ஷீணீ  ஜீலீவீநீணீறீ ணீநீநீஷீஸீ) உள்ளிட்ட பதிவு செய்யப் படாத கலை மற்றும் அறிவியல் செய்திகள். சமஸ்கிருதத்தில் குறைவாக எழுதப்பட்டன.

ஒரு தமிழ்ப் படைப்பு, சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, அதில் புதிய செய்திகளை இணைத்து புதிய பெயரிட்டு முறையை புகுத்தி (ஸீஷீனீமீஸீ

நீறீணீக்ஷீமீ), மொழிபெயர்க்கப்பட்டது. சமஸ் கிருதம் மூலமே எனக்காட்ட முயன் றுள்ளனர். இசைத்துறையில் ஆரியர்களின் இதுபோன்ற உத்தியை வேறு எங்கும் காணவியலாது.

குமரிக்கண்டத்துத் தமிழ் இசை வாணர்கள், இசையுணர்வில், தன்னிகரற்ற மெல்லிசை அறிவை கொண்டிருந் தனர். ஆயிரக்கணக்கான வகைகளில், இசை நுணுக் கங்களை அறிந்து, நான்கு பிரிவு களாக அவற்றை வகைப்படுத்தி இருந்தனர்.

ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப் பாலை, முக்கோண பாலை என்பன வாகும். இவற்றின் நுணுக்கங்களை அறியாத ஆரியர்கள், ஆர்வமிகுதியால் அவற்றை அறிய முயன்று தோல்வியுற்று, தொல் தமிழ் இசையைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அவற்றை அழித்து விட்டனர்.

தென்னிந்திய இசை, பொதுவாக, கர்நாடக இசை என்று அழைக்கப்படும். இது சமஸ்கிருத கலைச்சொற் களால் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் இசையே எனலாம். மிகவும் அழகான பொருத்த மான பெயர்களை கொண்டி ருந்த தமிழ் இசை பணி களுக்கு சமஸ்கிருதப் பெயர் களை வலிந்து புகுத்தி மாற்றம் செய்தனர். மாற்றம் பெற்ற தமிழ்ப் பெயர்களாவன எ.கா.

கேள்வி - சுருதியெனவும்,

நிலை - தாயின் எனவும் பிரிக்கப்பட் டுள்ளன.

உலகின் முதல் செம்மொழி


மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் ஜிலீமீ றிக்ஷீவீனீணீக்ஷீஹ் சிறீணீவீநீணீறீ லிணீஸீரீணீரீமீ ஷீயீ லீமீ கீஷீக்ஷீறீபீ

தமிழில்: தக்கார் ம.சோ.விக்டர் அவர்கள்

யாத்திசைப் பதிப்பகம், அரியலூர் - ப: 305

- க.பழனிச்சாமி

தெ.புதுப்பட்டி

 -  விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

மூலமொழி - முதன்மொழி தமிழ்



இரா.முல்லைக்கோ பெங்களூரு


சமுதாய அமைப்பு

மேன்மை மிகு மானுட சமுதாயம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட தாக வரலாற்று ஆய்வாளப் பெருமக்கள் ஆய்ந்து அறிந்து பதிவு செய்துள்ளனர். இவற்றின் மூத்த குடியாக தமிழினத்தைக் கூறுகின்றனர். தெற்கே இலெமூரியா கண் டம் முதல் வடக்கே சிந்து கங்கை சமவெளி வரை விரிந்து பரந்து வாழ்ந்துள்ளனர்.

சிதைந்த தமிழகம்

கடல் கோள் வினையால் பஃருளியாறு உள்ளிட்ட வளமை வாய்ந்த நிலப்பரப்பு கடல் கொண்டு கன்னியாகுமரி வரை சுருங்கி காணமுடிகிறது. இதுவே இன்றைய நிலை!

நதிக்கரை

நதிக் கரையோரங்களில் தமிழர்கள் வாழ்க்கை நிலை அமையப்பெற்றதை நம்மால் இன்றளவில் கிடைக்கப்பெறும் சான்றுகள் பகருகின்றன. நதிச் சமவெளி களே நாகரிகத்தின் தொட்டில் என்பர் அறிஞர் பெருமக்கள். இன்று இந்தியா என்று அழைக்கப்படுகின்ற தீபகற்பம் முழுவதும் தமிழர்கள் சிறந்த வாழ்வியல் முறையை மேற்கொண்டனர். நீரின்றியாது என்றார் வள்ளுவர் மேதை.

காப்பியங்கள்

மதி நிறைந்த மாந்தப் பெருமக்களைக் கொண்டு முச்சங்கம் அமைத்து தமிழ் மொழிக்கு வளமையும், வடிவமும் கொடுத் தனர். இலக்கண, இலக்கியங்கள் பலநூறு மொழிஞாயிறு ஒருங்கிணைந்து ஒன்றுகூடி தோற்றுவித்தனர். நீதி நூல்களும் அய்ம் பெரும் காப்பியங்களும் பாயிரங்களும் தமிழுக்கு அருங்கொடையாக கிடைக்கப் பெற்றன. தொன்மையின் பிறப்பிடமாய் இலக்கண இலக்கியங்களின் நீதி நூலாய் தொல்காப்பியம் சிறந்து விளங்கி செந் தமிழின் புகழ் உலக அளவில் ஒளிவிட்டு இளமைக்குன்றாய் செழித்து வருகிறது. உலக மொழிகளில் எவற்றிற்கும் இல்லாதத் தனிச்சிறப்பாகும். 1632 மொழிகள் பெறாத கிரீடம் தமிழுக்கு சூட்டப்பட்டுள்ளது. மறுக்க வியலாத தகவல்.

நீதி நூல் திருக்குறள்

இரு ஆயிரத்து அய்ந்து நூறு ஆண்டு களுக்கு முன்பு உலக நீதியை இரு வரிகளில் யாத்தளித்த திருவள்ளுவர் “திருக்குறள்” அறநெறிக்கு நிகர் ஏதும் இதுநாள் வரை பிறமொழியில் காணப்படவில்லை. “வள்ளு வன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பெருமைப் பாராட்டினான் மீசையை முறுக்கிய முண் டாசுக் கவிஞன் பாரதி.

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று வாய் மணக்க வைர வரிகளால் பாராட்டினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். நீதி நூலாம் திருக்குறளுக்கு இதுநாள் வரை நூற்று மூன்று மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்த “பெருமை” திருக்குறளைத் தவிர்த்து வேறு நூல்கள் ஏதும் இல்லை. இத்தனை இமயச் சிறப்பும் தண்டமிழ் “தமிழ்மொழி” அணிகலனாய் பெற்றுள்ளது.

தமிழ் இலக்கண இலக்கியங்கள்

“புராணங்கள், நீதி இலக்கியங்கள், சாத்திரங்கள், தத்துவ நூல்கள், இலக்கண, இலக்கியங்கள் என வடமொழியில் பல் வகையான நூல்கள் உள்ளன. ஆனால் வடமொழியில் உள்ள இவற்றைக் காட்டி லும் அழகியலும், கவியழகும், ஆழ் பொருள் தத்துவச் சிறப்பும் கொண்ட தமிழ் நூல்கள் வடமொழி நூல்களுக்கு முன்பே எழுந்த முதல் நூல்கள், தமிழ்மொழியில் முன்பே இருந்தன என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண் டும்” என மேலை நாட்டு ஆய்வியல் அறிஞர் ஜி.யு.போப் அவர்கள் பல்வேறு நூல்களை இந்தியாவில் பயின்று ஆய்ந்து கூறியுள்ளார்.

ஓலைச்சுவடி ஆய்வு

தமிழ் தாத்தா எனப்போற்றப்பட்ட உ.வே.சாமிநாதர் ஊர் ஊராய், கோவில் கோவிலாய் சுற்றித்திரிந்து செல்லுக்கும், கரையானுக்கும் இரையானது போக ஓலைச்சுவடிகளை புதுப்பித்து அச்சேற் றினார். அப்போது ஒரு நிகழ்வினை சொல் லுகிறார் கேளுங்கள்.

“கரிவலம் வந்த நல்லூருக்குச் சென்ற பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் எழுதிய ஓலைச் சுவடிகளை தேடினாராம். வரகுண பாண்டியன் மறைவுக்குப் பிறகு அவரது சொத்தெல்லாம் கோவிலுக்கு வந்தனவாம். அந்த வரிசையில் அவர் வைத்திருந்த ஏட்டுச்சுவடிகளும் கோவி லுக்கு வந்தனவாம். அவ்வேடுகளை பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது - கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது அங்கிருந்த அன்பர் கூறினாராம். “அந்த ஏடுகளையெல்லாம் ஆகம சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறபடி செய்து விட்டார்கள். அதாவது குழி வெட்டி அக்கினி வார்த்து, நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்”.

இது குறித்த அறிஞர் உ.வே.சா எழுது கிறபோது “இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா?” அப்படி சொல்லி இருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்தல் வேண்டும்” என வேத னையை வெளிப்படுத்தியுள்ளார்.

எத்தனை காப்பியங்கள் ஆகமத்தின் பேரால் அழித்தொழிக்கப்பட்டனவோ அறியோம்!

மன்னனின் சொத்து கோவிலுக்கு வந்ததும் அதனை தின்று கொழுத்த கோவில் மேதாவிப் பெருச்சாளிகளின் “தமிழ் காப்பியங்கள்” அழித்தொழிக்கும் அரும்(!) செயலைப் பாருங்கள் - இது சான்றுக்கு ஒன்று.

சிந்துவெளிக்கு முந்தைய நாகரிகம்

கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வில் பல்வேறு குடியிருப்புகளும் அவைகளின் இன்றைய நாகரிகத்திற்கு ஒப்பாக அமைப்பு களுடன் விளங்குகின்றன. குறிப்பாக கழி வறைகளும், வெளியே செல்லும் கழிவுப் பாதை அமைப்புகள், மண்பாண்டங்கள் சிவப்பு கருப்பு வண்ண ஓடுகள், தரையில் விழுந்தால் உலோகங்களின் ஓசை எழும் - முதுமக்கள் தாழிகள், மனித பயன்பாட்டுக் கருவிகள் முதலியன கிடைக்கப்பெற்று உள்ளன.

தொல்லியல் துவக்கம்

இந்திய அரசால் 1861இல் தொல்லியல் துறையை நிறுவி பல்வேறு ஆய்வுகளை சிந்து சமவெளியில் தான் பெரும்பாலும் ஆய்வை மேற்கொண்டனர். இதனால் உலகின் கவனம் ஈர்க்கப்பட்டது.

தமிழகத்தில் ஆய்வுப்பணி

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்ச நல்லூர், நாகை மாவட்டம் பூம்புகார் போன்ற இடங்களில் அகழ்வாய்வுப்  பணியை மேற்கொண்டதில் சிந்து சமவெளியை ஒத்தப் பல தரவுகள் கிடைத்தன. இவைகள் அனைத்தும் தொல்தமிழர்களின் கல்வி யறிவு தொழில்நுட்ப அறிவை பகிர்வதாய் இருந்தன. ஆனால் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு ஆய்வுகள் தொடராமல் நிறுத்தப்பட்டன.

கீழடி ஆய்வுப் பணி

மதுரை மாவட்டம் கீழடி என்னும் வைகை நதிக்கரையில் 2013ஆம் ஆண்டு அகழ்வாய்வுப் பணி தொடங்கப் பட்டது. நான்கு இடங்களில் நிகழ்ந்த ஆய்வுகளில் 13,658 பொருள்கள் காணப்பட்டுள்ளன. சிந்துவெளி கண்டுபிடிப்புகளை விட கீழடி ஆய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் அதிகமானதென ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.

ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகள் சிந்துவெளியை விட அளவில் பெரிய வைகள்.

ஆய்வின் பரப்பு

இதுவரை ஆய்வுக்காக 138 ஏக்கர் நிலப்பரப்பில் பணி மேற்கொள்ள திட்ட மிடப்பட்டதில் கீழடியில் ஒரு ஏக்கர் நிலம் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

காலம் கூறும் கீழடி

கீழடி வைகை நதிக்கரை நாகரிகம் கி.மு. 300 முதல் 200 வரை நிலவுகிறது என கணித்துள்ளனர்.

அகழ்வில் கிடைத்த பொருள்கள்

ஆதிச்சநல்லூர், பூம்புகார், கீழடி இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் சுண்ணாம்பு காரைகளால் ஆன கட்டடங் கள், குடியிருப்புகள், கழிவறைகள், நகைகள், பானைகள், கண்ணாடிகள், வளையல்கள், பொம்மைகள், முத்திரைகள், கிணறுகள், தமிழ்மொழி பதித்த கல்வெட்டுக் குறிப்பு கள், தாழிகள், உலோகப் பொருட்கள்.

காணக்கிடைக்காத பொருட்கள்

பல்வேறு ஆய்வுப்பணிகள் இந்தியா வின் நதிக்கரைகளில் ஆய்வு செய்யப் பட்டதில் 13,608 பயன்பாட்டுப் பொருட் களை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள், இதுவரை யாதொரு சாமி சிலைகளோ, பூசைப்பொருட்களோ, மதக்குறியீட்டு பொருள்களோ எதுவும் கண்டறியவில்லை.

சிறிய பெரிய கோவில்களோ, அதைச் சார்ந்த உருவபொம்மைகளோ, படையல் பொருள்களோ கிடைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. இதிலிருந்து தொல்தமிழர் களின் வாழ்வியல் முறையில் எப்படி மதம், ஜாதிகள், கடவுள்கள், கீழ்மேல் ஜாதி அடக்கு முறைகள் அற்ற வாழ்வை மேற் கொண்டனர் என்பது தெரிய வருகிறது.

ஆரியப் படையெடுப்பு

தெற்கு ஆசிய நிலப்பரப்பிலிருந்து வாழ்வியல் வசதிக்காக புலம் பெயர்ந்த ஆரிய பார்ப்பனர்கள் இந்தியாவில் நதிக் கரைகளின் செழிப்பை புலம் பெயர்ந்து வாழ்விடமாக மாற்றிக் கொண்டு, மெல்ல மெல்ல தென் தமிழகம் முழுவதும் பரவினர்.

அரசர்களின் ஆட்சிமுறை

சிறந்து விளங்கிய குறு, பெரும் அரசர் களிடம் வேதங்கள், உபநிசத்துகள், கடவுள் கள், மதங்கள் ஜாதி முறைகளைக் கூறி அரசர்களின் ஆலோசகர்களாய் இருந்து உழைக்காமல் சோம்பேறி நிலையில் வெகுசன மக்களை ஆட்சி முறைகளால் அடிமையாக்கி வாழத்தலைப்பட்டனர் ஆரிய பார்ப்பனர்கள். மொழி, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை, உழைப்பு, உணவு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் கைவைத்து மக்களிடையே வேற்றுமை எண்ணங்களை விதைகளாய்த்தூவி, கல்வி யறிவு மறுத்து துரோக செயலில் வாழ வழிவகைக் கண்டனர்.

வைகை நாகரிகமே முதல்

தமிழக வரலாற்றை - இந்தியாவின் வரலாற்றையே மாற்றி இனி எழுத வேண் டும். வைகை நதிக்கரையில் இருந்ததுதான் வரலாற்றை அறிந்து ஆய்ந்து ஆராய்ந்து எழுத வேண்டும். இதற்குச் சான்றாய். நாம் வாழும் காலத்திலேயே காணக்கிடைத் துள்ள கீழடி அகழ்வாய்வுச் சான்றுகளே முதன்மையாய் ஏற்கலாம்.
- விடுதலை ஞாயிறு மலர் 18. 5 .2019