பக்கங்கள்

வியாழன், 30 மே, 2019

மூலமொழி - முதன்மொழி தமிழ்



இரா.முல்லைக்கோ பெங்களூரு


சமுதாய அமைப்பு

மேன்மை மிகு மானுட சமுதாயம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட தாக வரலாற்று ஆய்வாளப் பெருமக்கள் ஆய்ந்து அறிந்து பதிவு செய்துள்ளனர். இவற்றின் மூத்த குடியாக தமிழினத்தைக் கூறுகின்றனர். தெற்கே இலெமூரியா கண் டம் முதல் வடக்கே சிந்து கங்கை சமவெளி வரை விரிந்து பரந்து வாழ்ந்துள்ளனர்.

சிதைந்த தமிழகம்

கடல் கோள் வினையால் பஃருளியாறு உள்ளிட்ட வளமை வாய்ந்த நிலப்பரப்பு கடல் கொண்டு கன்னியாகுமரி வரை சுருங்கி காணமுடிகிறது. இதுவே இன்றைய நிலை!

நதிக்கரை

நதிக் கரையோரங்களில் தமிழர்கள் வாழ்க்கை நிலை அமையப்பெற்றதை நம்மால் இன்றளவில் கிடைக்கப்பெறும் சான்றுகள் பகருகின்றன. நதிச் சமவெளி களே நாகரிகத்தின் தொட்டில் என்பர் அறிஞர் பெருமக்கள். இன்று இந்தியா என்று அழைக்கப்படுகின்ற தீபகற்பம் முழுவதும் தமிழர்கள் சிறந்த வாழ்வியல் முறையை மேற்கொண்டனர். நீரின்றியாது என்றார் வள்ளுவர் மேதை.

காப்பியங்கள்

மதி நிறைந்த மாந்தப் பெருமக்களைக் கொண்டு முச்சங்கம் அமைத்து தமிழ் மொழிக்கு வளமையும், வடிவமும் கொடுத் தனர். இலக்கண, இலக்கியங்கள் பலநூறு மொழிஞாயிறு ஒருங்கிணைந்து ஒன்றுகூடி தோற்றுவித்தனர். நீதி நூல்களும் அய்ம் பெரும் காப்பியங்களும் பாயிரங்களும் தமிழுக்கு அருங்கொடையாக கிடைக்கப் பெற்றன. தொன்மையின் பிறப்பிடமாய் இலக்கண இலக்கியங்களின் நீதி நூலாய் தொல்காப்பியம் சிறந்து விளங்கி செந் தமிழின் புகழ் உலக அளவில் ஒளிவிட்டு இளமைக்குன்றாய் செழித்து வருகிறது. உலக மொழிகளில் எவற்றிற்கும் இல்லாதத் தனிச்சிறப்பாகும். 1632 மொழிகள் பெறாத கிரீடம் தமிழுக்கு சூட்டப்பட்டுள்ளது. மறுக்க வியலாத தகவல்.

நீதி நூல் திருக்குறள்

இரு ஆயிரத்து அய்ந்து நூறு ஆண்டு களுக்கு முன்பு உலக நீதியை இரு வரிகளில் யாத்தளித்த திருவள்ளுவர் “திருக்குறள்” அறநெறிக்கு நிகர் ஏதும் இதுநாள் வரை பிறமொழியில் காணப்படவில்லை. “வள்ளு வன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பெருமைப் பாராட்டினான் மீசையை முறுக்கிய முண் டாசுக் கவிஞன் பாரதி.

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று வாய் மணக்க வைர வரிகளால் பாராட்டினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். நீதி நூலாம் திருக்குறளுக்கு இதுநாள் வரை நூற்று மூன்று மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்த “பெருமை” திருக்குறளைத் தவிர்த்து வேறு நூல்கள் ஏதும் இல்லை. இத்தனை இமயச் சிறப்பும் தண்டமிழ் “தமிழ்மொழி” அணிகலனாய் பெற்றுள்ளது.

தமிழ் இலக்கண இலக்கியங்கள்

“புராணங்கள், நீதி இலக்கியங்கள், சாத்திரங்கள், தத்துவ நூல்கள், இலக்கண, இலக்கியங்கள் என வடமொழியில் பல் வகையான நூல்கள் உள்ளன. ஆனால் வடமொழியில் உள்ள இவற்றைக் காட்டி லும் அழகியலும், கவியழகும், ஆழ் பொருள் தத்துவச் சிறப்பும் கொண்ட தமிழ் நூல்கள் வடமொழி நூல்களுக்கு முன்பே எழுந்த முதல் நூல்கள், தமிழ்மொழியில் முன்பே இருந்தன என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண் டும்” என மேலை நாட்டு ஆய்வியல் அறிஞர் ஜி.யு.போப் அவர்கள் பல்வேறு நூல்களை இந்தியாவில் பயின்று ஆய்ந்து கூறியுள்ளார்.

ஓலைச்சுவடி ஆய்வு

தமிழ் தாத்தா எனப்போற்றப்பட்ட உ.வே.சாமிநாதர் ஊர் ஊராய், கோவில் கோவிலாய் சுற்றித்திரிந்து செல்லுக்கும், கரையானுக்கும் இரையானது போக ஓலைச்சுவடிகளை புதுப்பித்து அச்சேற் றினார். அப்போது ஒரு நிகழ்வினை சொல் லுகிறார் கேளுங்கள்.

“கரிவலம் வந்த நல்லூருக்குச் சென்ற பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் எழுதிய ஓலைச் சுவடிகளை தேடினாராம். வரகுண பாண்டியன் மறைவுக்குப் பிறகு அவரது சொத்தெல்லாம் கோவிலுக்கு வந்தனவாம். அந்த வரிசையில் அவர் வைத்திருந்த ஏட்டுச்சுவடிகளும் கோவி லுக்கு வந்தனவாம். அவ்வேடுகளை பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது - கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது அங்கிருந்த அன்பர் கூறினாராம். “அந்த ஏடுகளையெல்லாம் ஆகம சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறபடி செய்து விட்டார்கள். அதாவது குழி வெட்டி அக்கினி வார்த்து, நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்”.

இது குறித்த அறிஞர் உ.வே.சா எழுது கிறபோது “இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா?” அப்படி சொல்லி இருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்தல் வேண்டும்” என வேத னையை வெளிப்படுத்தியுள்ளார்.

எத்தனை காப்பியங்கள் ஆகமத்தின் பேரால் அழித்தொழிக்கப்பட்டனவோ அறியோம்!

மன்னனின் சொத்து கோவிலுக்கு வந்ததும் அதனை தின்று கொழுத்த கோவில் மேதாவிப் பெருச்சாளிகளின் “தமிழ் காப்பியங்கள்” அழித்தொழிக்கும் அரும்(!) செயலைப் பாருங்கள் - இது சான்றுக்கு ஒன்று.

சிந்துவெளிக்கு முந்தைய நாகரிகம்

கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வில் பல்வேறு குடியிருப்புகளும் அவைகளின் இன்றைய நாகரிகத்திற்கு ஒப்பாக அமைப்பு களுடன் விளங்குகின்றன. குறிப்பாக கழி வறைகளும், வெளியே செல்லும் கழிவுப் பாதை அமைப்புகள், மண்பாண்டங்கள் சிவப்பு கருப்பு வண்ண ஓடுகள், தரையில் விழுந்தால் உலோகங்களின் ஓசை எழும் - முதுமக்கள் தாழிகள், மனித பயன்பாட்டுக் கருவிகள் முதலியன கிடைக்கப்பெற்று உள்ளன.

தொல்லியல் துவக்கம்

இந்திய அரசால் 1861இல் தொல்லியல் துறையை நிறுவி பல்வேறு ஆய்வுகளை சிந்து சமவெளியில் தான் பெரும்பாலும் ஆய்வை மேற்கொண்டனர். இதனால் உலகின் கவனம் ஈர்க்கப்பட்டது.

தமிழகத்தில் ஆய்வுப்பணி

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்ச நல்லூர், நாகை மாவட்டம் பூம்புகார் போன்ற இடங்களில் அகழ்வாய்வுப்  பணியை மேற்கொண்டதில் சிந்து சமவெளியை ஒத்தப் பல தரவுகள் கிடைத்தன. இவைகள் அனைத்தும் தொல்தமிழர்களின் கல்வி யறிவு தொழில்நுட்ப அறிவை பகிர்வதாய் இருந்தன. ஆனால் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு ஆய்வுகள் தொடராமல் நிறுத்தப்பட்டன.

கீழடி ஆய்வுப் பணி

மதுரை மாவட்டம் கீழடி என்னும் வைகை நதிக்கரையில் 2013ஆம் ஆண்டு அகழ்வாய்வுப் பணி தொடங்கப் பட்டது. நான்கு இடங்களில் நிகழ்ந்த ஆய்வுகளில் 13,658 பொருள்கள் காணப்பட்டுள்ளன. சிந்துவெளி கண்டுபிடிப்புகளை விட கீழடி ஆய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் அதிகமானதென ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.

ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகள் சிந்துவெளியை விட அளவில் பெரிய வைகள்.

ஆய்வின் பரப்பு

இதுவரை ஆய்வுக்காக 138 ஏக்கர் நிலப்பரப்பில் பணி மேற்கொள்ள திட்ட மிடப்பட்டதில் கீழடியில் ஒரு ஏக்கர் நிலம் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

காலம் கூறும் கீழடி

கீழடி வைகை நதிக்கரை நாகரிகம் கி.மு. 300 முதல் 200 வரை நிலவுகிறது என கணித்துள்ளனர்.

அகழ்வில் கிடைத்த பொருள்கள்

ஆதிச்சநல்லூர், பூம்புகார், கீழடி இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் சுண்ணாம்பு காரைகளால் ஆன கட்டடங் கள், குடியிருப்புகள், கழிவறைகள், நகைகள், பானைகள், கண்ணாடிகள், வளையல்கள், பொம்மைகள், முத்திரைகள், கிணறுகள், தமிழ்மொழி பதித்த கல்வெட்டுக் குறிப்பு கள், தாழிகள், உலோகப் பொருட்கள்.

காணக்கிடைக்காத பொருட்கள்

பல்வேறு ஆய்வுப்பணிகள் இந்தியா வின் நதிக்கரைகளில் ஆய்வு செய்யப் பட்டதில் 13,608 பயன்பாட்டுப் பொருட் களை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள், இதுவரை யாதொரு சாமி சிலைகளோ, பூசைப்பொருட்களோ, மதக்குறியீட்டு பொருள்களோ எதுவும் கண்டறியவில்லை.

சிறிய பெரிய கோவில்களோ, அதைச் சார்ந்த உருவபொம்மைகளோ, படையல் பொருள்களோ கிடைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. இதிலிருந்து தொல்தமிழர் களின் வாழ்வியல் முறையில் எப்படி மதம், ஜாதிகள், கடவுள்கள், கீழ்மேல் ஜாதி அடக்கு முறைகள் அற்ற வாழ்வை மேற் கொண்டனர் என்பது தெரிய வருகிறது.

ஆரியப் படையெடுப்பு

தெற்கு ஆசிய நிலப்பரப்பிலிருந்து வாழ்வியல் வசதிக்காக புலம் பெயர்ந்த ஆரிய பார்ப்பனர்கள் இந்தியாவில் நதிக் கரைகளின் செழிப்பை புலம் பெயர்ந்து வாழ்விடமாக மாற்றிக் கொண்டு, மெல்ல மெல்ல தென் தமிழகம் முழுவதும் பரவினர்.

அரசர்களின் ஆட்சிமுறை

சிறந்து விளங்கிய குறு, பெரும் அரசர் களிடம் வேதங்கள், உபநிசத்துகள், கடவுள் கள், மதங்கள் ஜாதி முறைகளைக் கூறி அரசர்களின் ஆலோசகர்களாய் இருந்து உழைக்காமல் சோம்பேறி நிலையில் வெகுசன மக்களை ஆட்சி முறைகளால் அடிமையாக்கி வாழத்தலைப்பட்டனர் ஆரிய பார்ப்பனர்கள். மொழி, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை, உழைப்பு, உணவு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் கைவைத்து மக்களிடையே வேற்றுமை எண்ணங்களை விதைகளாய்த்தூவி, கல்வி யறிவு மறுத்து துரோக செயலில் வாழ வழிவகைக் கண்டனர்.

வைகை நாகரிகமே முதல்

தமிழக வரலாற்றை - இந்தியாவின் வரலாற்றையே மாற்றி இனி எழுத வேண் டும். வைகை நதிக்கரையில் இருந்ததுதான் வரலாற்றை அறிந்து ஆய்ந்து ஆராய்ந்து எழுத வேண்டும். இதற்குச் சான்றாய். நாம் வாழும் காலத்திலேயே காணக்கிடைத் துள்ள கீழடி அகழ்வாய்வுச் சான்றுகளே முதன்மையாய் ஏற்கலாம்.
- விடுதலை ஞாயிறு மலர் 18. 5 .2019
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக