பொங்கல் நாள் ஒன்றுதான் தமிழர் நாள்; மற்ற பண்டிகைகளெல்லாம் பெரிதும் தமிழ ருக்கு அவமானம், கேடு, தமிழர்களைக் கொலை செய்த, செய்யும் நாள்.
- விடுதலை 18.01.51
பொங்கல் தான் அறிவுக்கு ஒத்தது, தமி ழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத்தான் தங்களின் விழாவாகக் கொண் டாட வேண்டும். மூடநம்பிக்கை, முட்டாள் தனமற்ற அறிவிற்குப் பொருத்தமான விழா வாகும்.
- விடுதலை 23.1.1968
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக் கதை ஆதாரம் முதலி யவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண் டதாகும்.
- விடுதலை 13.1.1970
பொங்கல் பண்டிகையின் தத்துவம் என்னவென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும்.
- விடுதலை, 13.1.1970
தமிழ் மக்களுக்குப் பாராட்டத் தகுந்த ஒரு உண்மையான திருநாள் உண்டு என் றால் அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான்.
- விடுதலை, 15.1.1973
பாடுபடும் பாட்டாளிகளின் மனம் பொங்கிப் பூரிப்புக் கொள்ளும் புது நாள் பொங்கல் நாள். பொங்கல் நாள் புதுமை வீறு பெறும் நாள். உணவில், உடையில், உறை யும் மனையில், உள்ளத்தில் செயலில் இவ் வாறு அகமும் புறமும் புதுமை பார்க்கு மிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் புதுமை. புதுமை நிலையானதல்ல; புதுமை பழமையாகும்; மீண்டும் புதுமை தோன்றும். அப்புதுமையும் மகிழ்ச்சியோடு வரவேற்கப் படும். ஆண்டு தவறாமல் வந்து சென்ற பொங்கலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் பொங்கலும் இதைத்தானே நமக்கு பாடமாக உணர்த்த முடியும்?
- குடிஅரசு, 10.1.1948
ஆரியமும் - திராவிடமும் கலந்தது. ஆனால் பாலும் நீரும் போல அல்ல. எண்ணெய்யும், தண்ணீரும் போல, இதோ எண்ணெய்! இதோ நீர்! சுயமரியாதையும் இயக்கம், . இதோ ஆரியம்! இதோ திரா விடம்! என உலகமறியப் பிரித்துதெடுத்து உணர்த்தினும், இந்திக் கட்டாய எதிர்ப் புணர்ச்சி அது உண்மைதான் என உலகை அறிந்து கொள்ளச் செய்தது. அன்று தொட்டுத்தான் பூஜா மனோபாவத்துடன், சங்கராந்திப் பண்டிகையாக இருந்த பொங் கல் நாள். தமிழ் நாளாக, தமிழர் நன்னாளாக திராவிடர் திருநாளாக பொங்கல் புதுநாளாக மலர்ந்தது. விரிந்தது என்ற உண்மையைத் திராவிடம் நன்கறியும்.
- குடிஅரசு, 10.1.1948
உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! (பொங்கல்) உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெய்யில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் - எதிர் பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டி னையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வை யாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டை களுக்கும், பாம்புகளுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன். நெறியும் நெற்குலை கண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகக் சொல்ல முடியும்?
- குடிஅரசு, 15.1.1949
இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய தாய், பின் ஈன்ற போது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக் கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்ல முடியாது. ஆம்! தாய்மை உணர்ச்சி யில் ஒரு தனிப் பெரும் இன்பம் உண் டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சியின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே அல்லவா?
- குடிஅரசு, 15.1.1949
ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் - ஏமா றப் பிறந்தவன் தமிழன் என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துக் கொண்டிருப்பதை நடை முறையில் வற்புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவைகள். அதாவது தமிழனுக்கு உரியது, பெருமை தரக்கூடியது எதெது உண்டோ, அதெல்லா வற்றையும் உருவைமாற்றி பெயரை மாற்றிச் சமஸ்கிருதக் கலப்பை - ஆரியக் கலப்பை யுடையது போல ஆக்கிவிட்டார்கள் பார்ப் பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக் கொண்டது. பொங்கல் சங்கராந்தியாக ஆனது.
- குடிஅரசு 22.1.1949
தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதை விட இப்படி தமிழ்த் திருநாள் (பொங்கல்) என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்ப வேண்டும்.
- குடிஅரசு 26.1.1946