திருவள்ளுவர் மக்களுடைய நடப்புக்கு ஆன கொள்கைகளை விளக்கினார். புத்தர் மக்களின் எண்ணத்துக்கு உள்ளத்துக்கு கொள்கைகளையும் முறைகளையும் வகுத்துத் தந்தார். (7.2.1954)
அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள் ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியன வும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங் குகிறது வள்ளுவர் குறள். (குடிஅரசு 13.11.1948)
குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத் தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல் திருக் குறள். (விடுதலை 1.12.1955)
குறள் ஒரு இலக்கியம் அல்ல. அது காலத்துக்கு ஏற்ற அறிவு அல்லது ஒழுக்க நூல் என்று சொல்லலாம். (விடுதலை 1.10.1957)
நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக் காட்ட முடியும். (விடுதலை 3.10.1958)
நமது இலக்கியக் கர்த்தாக்களில் எவரும் குறளாசிரியரைத் தவிர மற்றவர் எவரும் மனிதச் சமுதாய வளர்ச்சியை முன் வைத்து இலக்கியம் செய்யவே இல்லை. (விடுதலை 7.1.1965)
திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச் சியாளர் அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும்? விடுதலை 30.5.50 புத்த ருக்கு அடுத்தபடி வள்ளுவர் தோன்றி, பிறப் பினால் பேதம் கிடையாது; எதையும் அறி வைக் கொண்டு சிந்தித்து அதன்படி நட என அருமையான கருத்துகளை எல்லாம் தமது நூலாகிய திருக்குறளில் கூறிச் சென்றார். ஆனால் அவற்றைப் பார்ப்பனர்கள் குப்பைத் தொட்டியில் போகும்படி செய்துவிட்டார்கள். (விடுதலை, 6.4.1959)
விதி என்பதையும் நன்றாக விளக்கிக் காட்டியிருக்கிறார். உன் அறிவைக் கொண்டு உன் முயற்சியின்படி நட! மக்களுக்கு நன்மை செய்! அறத்தை வளர்க்க! என்று கூறியிருக்கிறாரேயன்றி, உன் விதிப்படி - கடவுள் இஷ்டப்படி நீ நட ! என்பதாக எந்த இடத் திலும் கூறவே இல்லை. குறளில் ஊழ் என்ற தலைப்புக்கு பொருள் கூறவந்த புலவர்கள் அவரின் கருத்துக்கு மாறுபாடாகவே கூறியிருக்கிறார்கள். மனிதனுடைய சரீர அமைப் பின் பயனாய் ஏற்படும் சில தனிப்பட்ட குணங்களுக்குத்தான். ஊழ் என்ற பெயரை அவர் கொடுத்திருக்கிறார். ஊழ் என்பது பிற விக்குணம், இயற்கைக்குணம், மனித சுபாவத் தின் தனிப்பட்ட குணம் என்கிற கருத்துக்களே யாகும். குடிஅரசு 7.5.1949 திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முத லில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத் திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள் ளுவரைப்பற்றி பேசத் துவங்கவேண்டும். (குடிஅரசு, 13.11. 1948)
திருவள்ளுவருடைய கொள்கைகளை யும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக் கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன். (குடிஅரசு 13.11. 1948)
திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப் பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில் கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறி ஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக் கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனா கவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை. (குடிஅரசு 13.11.1948)
வள்ளுவர் தமது குறளில் எங்கேயாவது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? ஆனால் சில நற்பண்பு கொண்ட மகனை வழிபடுக என்று கூறியிருக்கிறார். வழிபடு என்றால் பின்பற்றிநடஎன்பதுதானே? மோட் சம் என்கிற கருத்தைக் தரக்கூடிய ஒரு சொல்லே, தமிழில் கிடையாது. அப்படியிருக்க அதை அவர் எப்படி குறிப்பிட முடியும்? வீடு என்கிற சொல்தான் மோட்சத் தைக் குறிக்கிறது தென்றால் தமிழ் மக்கள் வீடு இல்லாமலா இருக்கின்றார்கள்? ஒவ்வொரு வருக்கும் ஒரு வீடு உண்டு. (குடிஅரசு 7.5.1949)
வள்ளுவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்ம வாதியாவார் என்று கூடக் கூறலாம். ஏனென்றால் பொதுவுடைமை யின் அடிப்படையை நாம் குறளில் காண முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக