சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 கல் வடக்கே *சூவன்சவ்* என்னும் துறைமுக நகர் உள்ளது.
பண்டை காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கியது!
பண்டைய காலத்தில் தமிழ் வணிகர்கள் ஏராளமானோர் இந்த துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிக கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன்
மேற்கு கரையோரமாக
உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு,
வியட்நாம் சென்று அங்கிருந்து
*சீன நாட்டை* அடைந்துள்ளன!
சீனாவில் தமிழ் வணிகர்கள் காண்டன் நகரில் மட்டுமின்றி மேலும் சில இடங்களிலும் குடியேற்றங்களை அமைத்திருந்தனர்.
பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்ப்பெற்ற வணிகக் குழாமான
*திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்* எனும் குழுவினர், சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான *செங்கீஸ்கானின் பேரன்களில் ஒருவன் குப்லாய்கான்!*
இவன் கி.பி.1260இல் சீனா சக்கரவர்த்தியாக பொறுப்பேற்றான் !
இவனது ஆட்சியின் கீழ் சீனா இருந்த போது,
பெய்சிங்க் என்னும் புதிய நகரை உருவாக்கி அதனை தனது பேரரசின் தலைநகராக்கினான்! புகழ்ப்பெற்ற *யுவான் அரச மரபை* இவனே தொடங்கினான்.
*தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில்,*
அப்போதிருந்த
*பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியன் சீனா மன்னனுடன் நல்லுறவைப் பேணினான்.!*
*பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர்.!*
*இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது!*
*இந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு சான்றாக*
* சீன நாட்டில் குவன் சவ் துறைமுக நகரில் பழமைவாய்ந்த. சிவ ஆலயம் ஒன்றில்
*தமிழ் கல்வெட்டு* *ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது*.
*பண்டைய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டில்* கடைசி வரிகள்
*சீன எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளன*.
தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ் கல்வெட்டாக இது கருதப்படுகிறது.
---------------*
நன்றி;
தமிழர் தகவல் தளத்தில்
படித்ததில் பிடித்தது
https://m.facebook.com/story.php?story_fbid=726446251153103&id=100013632037906
MGR TV ஹமீது
@
MGR TV NEWS
இந்தியன் ஜர்னலிஸ்டு சர்வீஸ் IJS அகடாமி
99410 86586
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக