பக்கங்கள்

சனி, 27 ஜனவரி, 2018

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்



11-1-1942 ஞாயிற்றுக்கிழமை 


திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 

செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

தலைவர் அவர்களே! தோழர்களே!

இன்று இங்குத் “தமிழர்”  என்பது பற்றிப் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நன்னெறிக் கழகத்தில் வகுப்பு சம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை இருப்பதாகத் தலைவரும், காரியதரிசியும் தெரிவித்தார்கள். வகுப்புப் பேச்சும், அரசியல் பேச்சும் அவ்வளவு கெட்டுப்போச்சு என்று அவர்கள் கருதி இருக்கிறார்களோ அல்லது இது இரண்டும் நன்னெறிக்குச் சம்பந்தமில்லாதது என்று கருதி இருக்கின்றார்களோ தெரியவில்லை. அன்றியும், வகுப்புப்பேச்சும், அரசியல் பேச்சும் இல்லாததால்தான் இந்த நன்னெறிக் கழகம் இந்தப் பதினோரு வருஷங்களாக உயிர் வைத்துக்கொண்டு இருக்கிறதோ என்றும் தெரியவில்லை.

ஆனால், இன்று நாட்டில் எங்குப் பார்த்தாலும் வகுப்புப் பேச்சாகவும் அரசியல் பேச்சாகவும்தான் இருக்கிறது. அதிலும் சமீபகாலம் தொட்டு அரசியலைவிட வகுப்புப் பேச்சே எங்கும் தீவிரமாய் நடைபெறுகிறது. நானோ வகுப்புப் பேச்சிலும், அரசியல் பேச்சிலும் பெரிதும் ஈடுபட்டிருப்பவன். இந்நிலையில் நான் இந்த நிபந்தனையில் சொற்பொழிவாற்றுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றாலும், நான் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்ட விஷயமும், நான் ஒப்புக்கொண்ட விஷயமும் “தமிழர்கள்” என்பதுபற்றி ஆதலால், அந்தத் தலைப்பே வகுப்புச் சம்பந்தமான தாயிருக்கிறது என்பதோடு, இப்போது ஆண்டு விழாத் துவக்கத்தில், தமிழர் வணக்கம் கூறிய தோழர், “ஆரியம்போல், உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறம் வியந்து” என்று கூறினார்.

அன்றியும், காரியதரிசி அவர்கள் படித்த வருடாந்திர அறிக்கையில், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் கலை, தமிழ் இசை, தமிழ் வாழ்க்கை முதலியவைகளைப் பற்றி இச்சங்கத்தில் சுமார் பத்து, இருபது சொற்பொழிவு இந்த ஒரு வருஷத்தில் பல அறிஞர்களால் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிந்தது.

தலைவர் அவர்களும், நான் “தமிழர்கள்” என்பதுபற்றிப் பேசுவேன் என்று சொன்னார். ஆகவே இவற்றிலிருந்து தமிழர், ஆரியர், மற்றவர் அவர்களது தன்மை என்று பேசுவது வகுப்புச் சம்பந்தமான பேச்சு அல்ல என்பதாகத் தெரிகிறது.

குறிப்பிட்ட விஷயத்தைப்ற்றி எனக்குப்பட்டதைச் சில சொல்லுகிறேன்.

“திரு இடம்” - “திராவிட”மாக மாறியது!

தோழர்களே! நான் “தமிழர்கள்” என்பதுபற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியேயாகும். திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும். எப்படி எனில், திரு இடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம்.

வடவர்கள் எப்படி ஸ்ரீ என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல் தென்னவர்கள் திரு என்பதை உபயோகிக்கிறார்கள். திருப்பதியைத் திருமலை என்கிறோம். ஆரூரைத் திருவாரூர் என்கிறோம்; ஐயாறை திருவையாறு என்கிறோம். அதுபோல் தமிழர் வாழ் இடம் முழுமையும் திருஇடம் - திருவிடம் என்கிறோம். இது வடமொழி உச்சரிப்பால் திராவிடமாகிவிட்டது. தமிழ் என்றால் இனிமை; இனிமைக்கு மேன்மை தருவது இயற்கையல்லவா! ஆதலால், நான் யோசித்தவரை இதைத்தவிர திராவிடம் என்கின்ற வார்த்தைக்குக் காரணம் எனக்குத் தோன்றவில்லை.

நமது பண்டிதர்கள், “தமிழ் என்பது த்ரமிளமாகி, திரமிழமாகி, திராவிடமாகி விட்டது” என்று சொல்லுவதுண்டு. ஆனால், ஒரு வார்த்தையானது 4, 5 தடவை மாறி இருக்கும் என்பதைவிட, சொல்கிறபடி ஒரே மாற்றம் தான் ஆகியிருக்கலாம் என்பது மிகப் பொருத்தமாக இல்லையா? அது எப்படி இருந்தாலும் சரி திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பவற்றைத் தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகிறார்கள். ஆதலால், திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். அதனாலேயே திராவிடர்கள் என்று பேசுகிறேன்.

திராவிட நாட்டின் எல்லை - சரித்திரம் கூறும் உண்மை

திராவிடர் என்பது நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும் மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது. மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது. இந்த முறையில் பார்த்தோமானால், திராவிட நாடு, தமிழ்நாடு என்பது மேன்மையையும், இனிமையையும் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஆனால், நம் திராவிட நாடானது நாம் இன்று கூறும் எல்லையை மாத்திரம் கொண்டதல்ல! இட்லர் சொல்லுகிறபடி நாட்டு எல்லை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல, மக்களால் சிருஷ்டிக்கப்படுவது, திராவிட மக்கள் ஒரு காலத்தில், திராவிட நாட்டு விஸ்தீரணமாக இன்றைய இந்தியா முழுவதையும் கொண்டு இருந்தார்கள். திராவிட நாட்டுக்கு வட எல்லை இமயமலை! மற்ற மூன்று புறத்து எல்லை பெரிதும் சமுத்திரம்!! இப்படி இருந்ததற்கு ஆதாரம், *இதோ பாருங்கள், இந்த இந்திய சரித்திர பூகோள படப்புத்தகத்தில்!! இன்றுள்ள இந்தியா படத்தைப் போட்டு இதற்குத் திராவிடம் என்ற பெயர் கொடுத்திருக்கிறார்கள்!! இது கிறிஸ்து பிறப்பதற்கு 2,500 வருஷங்களுக்கு முன் வரையில் இருந்து வந்த பெயராகும்.

சரித்திரக்காரர்கள் இன்றைக்கு 8,000 வருடத்துக் காலம்வரைதான் சரித்திரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 வருடத்துக்கு முன் முதல் கி.மு. 6000 வருடம்வரை கண்டுபிடித்த சரித்திரப்படி, “இந்தியா” திராவிட நாடாக இருந்திருக்கிறது. இதில் இருந்த மக்கள் திராவிடர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதே ஆராச்சியாளர் குறிப்புப் பாருங்கள், மற்றும் ஹரப்பா மகஞ்சோதாரோ முதலிய இடங்களில் ஏற்பட்ட, புதிய கண்டு பிடிப்புகள் மூலமும், இந்தியா முழுவதும் திராவிட எல்லைக்கு உள்பட்ட விஸ்தீரணம் என்பது கல்லுப்போல் உறுதியாகிவிட்டது.

“திராவிடம்” அழிந்த அநீதி

இப்படிப்பட்ட இந்தத் திராவிடம் அன்னியர்கள் பிரவேசத்தால், சிறிது சிறிதாக மாற்றமடைந்து குறுகி வந்திருக்கிறது. அதுவும் இதோ இந்தச் சரித்திரம் பார்த்தால் தெரியும்.

முதலில் திராவிட நாட்டில் புகுந்த அன்னியர் ஆரியர்களே ஆவார்கள். இதை நான் என் உத்தேசப்படிச் சொல்லவில்லை. இன்று எல்லோராலும் ஒப்புக் கொண்டதும், ஆரியர்களாலேயே எழுதப்பட்டதுமான அனேக ஆதாரங்களைக் கொண்டே சொல்லுகிறேன்.

சரித்திரம்

நீங்கள், இன்று உலக சரித்திரம் அல்லது இந்திய தேச சரித்திரம் என்கின்ற எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது அய்ரோப்பியன் எழுதியிருந்தாலும் சரி, இந்தியன் எழுதியிருந்தாலும் சரி, அல்லது ஆரியன் எழுதியிருந்தாலும் சரி, திராவிடன் எழுதியிருந்தாலும் சரி, *இதோ உங்கள் முன் இந்த 5, 6 சரித்திர புத்தகங்களை வைக்கிறேன்; இவை  அய்ரோப்பாவிலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பிரசுரிக்கப்பட்ட வைகளாகும். இவற்றுள் பாதிக்குமேல் ஆரியர்களே எழுதி, சர்க்கார் ஒப்புக்கொண்டு, ஆரியர்கள் பெரிதும் கொண்ட “டெக்ஸ்ட்புக் கமிட்டி” யினரால் அனுமதிக்கப்பட்டு 1-ஆவது வகுப்பு முதல் எம்.ஏ. வகுப்புவரை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாட புத்தகங்களாக வைக்கப்பட்டவை களாகும்.

இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் சரி, இந்தியா என்றால், முதல் பக்கத்தில் அல்லது முதல் பாகத்தில் “திராவிடர்” என்றும், 2-ஆவது பக்கத்தில் அல்லது 2-ஆவது பாகத்தில் “ஆரியர்” என்றும் எழுதியிருப்பதைப் பாருங்கள். இது எதற்காக எழுதப்படுகிறது? ஒரு நாட்டுச் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பூர்வ குடிகள்தான் முதலில் குறிக்கப்படுவார்கள்.

எனவே, இந்தியா என்பது முதலில் திராவிடமாய் இருந்தது. அதில் பூர்வ குடிகள் என்பவர்கள் திராவிடர்களாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.

இந்தியா என்கின்ற பெயர்

பிறகு இதற்கு இந்தியா என்றும், இந்தியர்கள் என்றும் பெயர் எப்படி வந்தது? என்பதைப் பாருங்கள்.

இந்தச் சரித்திரத்தின் அடுத்த பக்கத்தில் பாருங்கள்; “ஆரியர்களும் அன்னியர்களும் திராவிடத்திற்கு ஆப்கானிஸ்தானத்தின் வழியாகவும், பிரம்மபுத்திரா நதியைக் கடந்தும் வந்தார்கள்” என்றும், அதனால் அவர்கள் சிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுப் பிறகு, அது இந்தியர்கள் என்று ஆகிவிட்டதென்றும், அதிலிருந்து அவர்கள் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்பட்டு விட்டதென்றும், இந்தப் பெயர்கள் ஆரியரல்லாதவர்களால் கொடுக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

“பிறகு ஆரியர்கள், திராவிடர்களைப் பலவிதத்தில் தொல்லை கொடுத்து, அவர்களை வடக்கே இருந்து, தெற்குப் பக்கமாகத் துரத்தினார்கள்” என்றும், திராவிடத்தின் வடபாகம் எல்லாம் ஆரியர்கள் குடியேறிவிட்டார்கள் என்றும், அங்கு எஞ்சியிருந்த திராவிடர்களையும், ஆரியர்களுக்குக் கட்டுப்படும்படி செய்து விட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிதும் இந்திய சரித்திரமாக கலாசாலைப் பாடப் புத்தகமாக இருக்கின்ற புத்தகங்களேயாகும்.

சைவக் கடவுள்வெற்றி கொண்டதாம்!!

இதோ, இந்த இந்திய சரித்திரப் புத்தகத்தைப் பாருங்கள், “முதல் போர்” என்ற தலைப்பில், “கந்தபுராணம் ஆரியர் திராவிடர் சண்டையைச் சித்தரித்து எழுதிய கதையாகும்” என்றும், “ஆரியர் திராவிடர் முதல் போரானது” சிவனார் என்கின்ற இமயமலையில் இருந்த ஒருவர், தனது மகன் சுப்பிரமணியன் என்பவனை இலங்கைக்கு நெடுந்தூரத்தில் இருந்த ஒரு தீவில் இருந்த ஒரு சூரன் என்பவனுடனும், அவன் தம்பி தாரகன் என்பவனோடும் சண்டை செய்யச் செய்தார் என்றும், “சுப்பிரமணியன் வேல் முதலிய ஆயுதங்களால் வெற்றிபெற்றான்” என்றும் எழுதி இருப்பதைப் பாருங்கள்.

வைணவக் கடவுள் வெற்றி கொண்டதாம்!

அதற்கு அடுத்தாற்போல் இராமாயணப் போரைப்பற்றியும் இதே மாதிரி எழுதியிருக்கிறது. ராமன் என்பவன் ராவணன் என்பவனை வெற்றி கொண்டானாம். இவற்றால் கடைசியாகத் தென்பாகந்தான் மீதியாகித் தாங்கள் திராவிடரென்றும், “”தமிழரென்றும் தங்கள் நாடு திராவிட நாடென்றும் அறிந்த மக்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள்; இந்தச் சிறுபாகம்தான் இன்று திராவிட நாட்டையும்,  திராவிட மக்களையும் நினைவூட்ட அடையாளமாக இருக்கிறது. ஆனால், நாம்தான், நம்மைப் பற்றிய சரித்திரமும், யோக்கியதையும் அறியாமல் நாம் எதிரிகளைக் குருமார்களாகவும், தலைவர்களாகவும், கடவுள்களாகவும் கருதிக் கொண்டு, நமக்கும் நம் நாட்டுக்கும் எதிரிகளாயிருந்தவர்கள் இருப்பவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஈனத்தனமாய் நடந்துகொண்டு வருகிறோம். அதாவது நம்நாட்டுக்குப் பெயர் பாரதநாடு என்றும், நமக்குப் பெயர் பாரத மக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். இது நம் எதிரிகள் வைத்துக்கொண்ட பெயராகும்.

இப்படிப்பட்ட மூடமக்கள், உலகில் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள். இன்று கூட இவைகளையெல்லாம் படித்தும் தெரிந்தும் உள்ள மக்கள் ஆகிய தமிழர்கள் தங்கள் நாட்டைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ மொழியைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ போதிய கவலை இல்லாமல் பெரிய தேசாபிமானிகள் போல் நடக்கிறார்கள்.

மனிதர்களுக்கு முன்னேற்ற உணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி வேண்டுமானால், அவர்களுக்குத் தங்கள் நாடு, சமுதாயம், மொழி, கலை முதலிய உணர்ச்சி இருந்தால்தான் ஏற்படும். அவை ஒன்றும் தமிழனுக்கு இல்லை. தமிழனது நாடு இன்று தமிழ்நாடு ஆகும். தமிழனது சமுதாயம், தமிழர் சமுதாயமாகும். தமிழனது மொழி தமிழாகும். அப்படி இருக்கத் தமிழ்நாடு என்பது இன்று சித்திரத்தில் இல்லாமல் செய்யப்பட்டாய் விட்டது. தமிழ் நாளுக்கு நாள் மறைந்துகொண்டே வருகிறது. தமிழர் சமுதாயமோ அடியோடு ஆரியமயமாகி வருகிறது.

“பாரதநாடு” என்றோம்!

“மரபு” சிறப்பை மறந்தோம்!!

இந்நிலையில் தமிழர் கதி எப்படி இருக்கிறது? என்று பாருங்கள், சமுதாயத்தில் தமிழன் சூத்திரனாக, வேசி மகனாக ஆகிவிட்டான். அது மாத்திரமல்லாமல் தமிழன் ஆரியனால் தீண்டப்படாதவனாக, நடத்தப்பட்டு வருகிறான்.

கோவில்களில், ஓட்டல்களில் தமிழனுக்கு சம உரிமை இல்லை. பல தமிழர்களுக்குப் பிரவேசமே இல்லை. இது எந்தத் தமிழனுக்குத் தெரியாது? எந்தத் தமிழனாவது இதைப்பற்றிக் கவனிக்கிறானா? என்று பாருங்கள். “பாரத நாடு சுயராஜ்யம் பெறவேண்டும். பாரத மக்கள் விடுதலை பெறவேண்டும்” என்று கூப்பாடு போடுகிறானே ஒழிய, தமிழன் மனிதனாக வாழ வேண்டாமா? மானத்தோடு வாழ வேண்டாமா? என்கின்ற கவலை இல்லவே இல்லை. தமிழ் மொழியை ஆரியர் தாழ்த்தி அழுத்திவிட்டார்கள். ஆனால் தமிழ்மொழி வல்லுநர்களில் பலர் ஆரியக் கூலிகளாக இருக்கிறார்கள்.

பாரதநாடு, பாரத மக்கள், பாரத பாஷை என்பதற்கும் தமிழருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? எங்காவது சம்பந்த ஆதாரமிருக்கிறதா? தன்னைப்பற்றியோ தனது மரபைப்பற்றியோ, தனது மொழியைப் பற்றியோ, மானாபிமானத்தைப் பற்றியோ கவலை இல்லாத சமுதாயம் எப்படி முன்னுக்கு வரும்?

ஐரோப்பியனைப் பாருங்கள்!

ஆற்றல் உணர்ச்சி கொள்ளுங்கள்!

இந்தியா என்று பேசுகிறோம், இந்தியர் என்று பாடுபடுகிறோம். அய்ரோப்பியனைப் பாருங்கள். அய்ரோப்பாவைப் பற்றி எந்த ஐரோப்பியனுக்காவது கவலை இருக்கிறதா? ஜெர்மனியைப் பாருங்கள், ஆங்கிலேயரைப் பாருங்கள், மற்றும் ஐரோப்பிய சிறிய நாட்டாரையும் பாருங்கள். அவர்களில், எவன் வாயிலாவது ஐரோப்பா, ஐரோப்பியன் என்கின்ற பேச்சோ, உணர்ச்சியோ வந்ததாகக் காட்டுங்கள் பார்ப்போம்! ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு என்றுதான் நாட்டுப் பேச்சும், மொழிப் பேச்சும், மக்கள்பேச்சும் பேசுவார்கள். அந்த மாதிரி உணர்ச்சிதான் கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் அந்த நாடுகள் இவ்வளவு பிரசித்தமாகவும், இவ்வளவு மேன்மையாகவும் இருந்து வருகின்றன. அவர்கள் தங்கள் நாட்டில் சுதந்தரத்தோடு இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்ள ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு மடிகிறார்கள். அப்படிப்பட்ட உணர்ச்சி இல்லாமல் இருந்தால், அவர்கள் நம்மைப்போல் மற்ற நாடுகளுக்குள் ஐக்கியப்பட்டு படத்தில்கூட உருவில்லாமல் போய்விட்டிருப்பார்கள்.

இன்று நடக்கும் பெரிய போர், எதற்காக நடக்கின்றது? தன் தன் நாட்டையும், சமுதாயத்தையும், மொழியையும் காப்பாற்றுவதற்கும் விஸ்தரிப்பதற்குமே ஒழிய வேறென்ன? ஐரோப்பாவைக் காப்பாற்றவா?

எனவே ஒரே மதம், ஒரே பழக்க வழக்க, நடை, உடை, பாவனை, உணவு உள்ள ஐரோப்பிய மக்கள், இன்று தங்கள் தங்கள் நாட்டின் மொழியின் பேரால், அடியோடு ஒழிந்து போனாலும் சரி என்று போராடித் தங்கள் நாட்டை சமுதாயத்தைக் காப்பாற்றவும், மேன்மைப்படுத்தவும் தங்களைச்  சுரண்டுகிறவர்களையும், தங்களை அடக்கி ஒடுக்கி இழிவுபடுத்துகிறவர்களையும் ஒழிப்பதற்குப் போராடுகிறார்களே ஒழிய ஐரோப்பியனாயிற்றே, கிறிஸ்தவனாயிற்றே என்று ஐரோப்பியர் எந்த ஐரோப்பிய நாட்டாரிடமாவது இணங்கி இருக்கிறார்களா?

ஜெர்மனியர்களின் வீரத்துக்குக் காரணம், ஜெர்மனி என்கின்ற தேசிய மொழி உணர்ச்சியும், ஜெர்மனியர் என்கின்ற சமுதாய உணர்ச்சியும்தானே? தமிழனுக்கு எங்காவது அந்த உணர்ச்சி இருக்கின்றதா?

ஜெர்மனி என்றால் - ஜெர்மனி பாஷையைத் தவிர

வேறு என்ன அடையாளம்?

தமிழன் என்ன செய்கிறான்?

தமிழர் தமது ஆரிய எதிரிகளையும் தங்கள் சமுதாயத்தை அழித்து ஒழித்து ஈனப்படுத்தியவர்களையும் கோவில் கட்டிக் கடவுளாக வணங்குகிறார்கள்.

ஜெர்மனியன் தனது சமுதாயத்தை அடக்கி ஒடுக்கியவனை, உலகத்தில் இல்லாமல் செய்வது, அல்லது அடிமை கொள்ளுவது அல்லது தானாவது ஒழிந்துபோவது என்று போராட்டம் செய்கிறான். தமிழனை அன்னியன் செய்ததுபோல் ஜெர்மனியரை, ஐரோப்பியரில் யாரும் அப்படிச் செய்யவில்லை. ஆனால், அவனுக்கு வேண்டிய சவுகரியமில்லை என்றும், ஐரோப்பியரில், மற்றவர்களுக்கு உள்ள சுதந்தரம் தனக்கு இல்லை என்றும் கருதிக்கொண்டு அதற்காக இவ்வளவு செய்கிறான். ஆனால், தமிழன் தன் நாட்டிலே வந்து குடியேறின அன்னியனுக்கு உள்ள உரிமையும், சவுகரியமும் தனக்கு இல்லையே என்கின்ற ரோஷமும், மானமும் கூட இல்லாமல், எதிரிக்கு “அனுமாராக” இருக்கிறான்.

அன்னியன் சுரண்டிச் செல்லும் நாடு

“தற்குறி” தன்மை வாய்ந்த நாடு தமிழ்நாடு!

தமிழன், ஏன் சமுதாயத்தில் 4-ஆவது 5-ஆவது ஜாதியாக இருக்க வேண்டும்? தமிழ் மகள் ஏன் சூத்திரச்சியாய், தாசியாய், அன்னியனுக்கு வைப்பாட்டியாய் இருக்கவேண்டும்? தமிழன் ஏன் 100-க்கு 90 பேர் தற்குறிகளாக இருக்கவேண்டும்? தமிழன் ஏன் பியூன் உத்தியோகத்திலும்,  தெருக்கூட்டும் வேலையிலும், கக்கூசு எடுக்கும் வேலையிலும் 100-க்கு 100 பேர் தமிழர்களாகவே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் எல்லாச் செல்வங்களும் இருந்தும் தமிழன், ஏன் இந்தநாட்டில் பிழைப்பு இல்லாமல் வெளிநாட்டுக்குக் கூலிகளாகப் போகவேண்டும்? தமிழ்நாடு ஏன் மற்ற எல்லா நாட்டாலும் வந்து சுரண்டிக் கொண்டு போகும் கேள்வி கேட்பாரற்ற மடமக்கள் நாடாக இருக்கவேண்டும்?

இந்த நிலை உள்ள நாடு உலகத்தில் எங்காவது இருக்கிறதா? இந்தியாவில் எங்காவது இருக்கிறதா? தமிழர்களுக்கு இது தெரியவில்லை என்றால், தமிழ்த் “தேசிய” வாதிகளுக்கும் இது தெரியவில்லை என்றால், தமிழனுக்கு மானம், அறிவு, தேசாபிமானம் சமூகாபிமானம், மொழி அபிமானம் இருப்பதாக எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?

கடவுள், மதம் என்று கருத்தை இழந்தோம்!!

எல்லாவற்றையும்விடக் கேவலமானது, தமிழனுடைய சமய அபிமானமும், கடவுள் அபிமானமுமேயாகும். தமிழனின் சமய அபிமானம், தமிழனை இழிவுபடுத்திய கதைகளே சமய வேதங்களாகும். தமிழ்ப் பண்டிதர்கள் வெட்கமில்லாமல் நாலாயிரப் பிரபந்தம், தேவாரம், கந்தபுராணம், ராமாயணம் முதலிய ஆரியர் - திராவிடர் போர்க் கதைகளைத் தமிழர் வேதங்கள், தமிழர் சமய ஆதாரங்கள் என்கிறார்கள். ஜெர்மனி யுத்தங்களையும், ஜெர்மனியன் இங்கிலாந்தை வெடிகுண்டு போட்டுச் சின்னாபின்னப்படுத்தியதையும், ஆங்கிலேயரையும் ஆங்கிலேயர் தலைவர்களையும் வைததையும் சரித்திரமாக எழுதி வைத்ததை, ஆங்கிலேயர் வேதமாகக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஹிட்லருக்குக் கோவில் கட்டி வணங்குவார்களா, நாயன்மார்களாகக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆனால், தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? இன்று தமிழனுக்கு அப்படிப்பட்ட கதைகள், சரித்திரங்கள்தானே மத ஆதாரங்களாக இருக்கின்றன. அவற்றில் வந்தவர்கள்தானே கடவுள்களாக இருக்கின்றனர்? அல்லது ஒற்றர்கள் - அடிமைகள்தானே ஆழ்வார்களாக நாயன்மார்களாக இருக்கின்றார்கள்? இதுவா தமிழர் சமயப்பற்று - கடவுள்பற்று - இனப்பற்று - மொழிப்பற்று? மானப்பற்று?

இப்டிப்பட்ட கடவுள்களுக்குக் கோவில் கட்டினவர்கள் யார்? எல்லாம், தமிழர்கள்! அக்கோவில்கள், அதன் சித்திரங்கள், சிற்பங்கள், அதன் பூசை உற்சவங்கள் எல்லாம் ஆரியர்களுடைய கதைகளும், ஆரியர்களின் மேன்மைக்கு ஏற்றவைகளுமாய் இருப்பதல்லாமல் வேறு என்ன இருக்கிறது? இதற்காகச் செய்ப்பட்ட செலவுகளும், செய்யப்படுகிற செலவுகளும், தமிழனுடையதல்லாமல் வேறு யாருடையதாவது ஒரு காசு இருக்கிறதா? தமிழனை ஆரியன் குத்துகிறதும், வெட்டுகிறதும், காலில் மிதிக்கிறதுமான அந்தச் சித்திர உருவங்கள் தமிழ்க் கடவுள் உருவமாக வீரமாக வணங்கப்படுகின்றன.

தமிழர்

தமிழர் மதமானது, தமிழன் ஈன ஜாதி, தொடக்கூடாதவன் என்று செய்திருப்பதல்லாமல், வேறு என்ன செய்திருக்கிறது? தமிழன் இன்று வணங்கும் கடவுள்கள், தமிழனிடத்திலிருந்தே எல்லாச் செலவுகளையும், சவுகரியங்களையும் பெற்றுக்கொண்டு, தமிழன் உள்ளே வரக்கூடாது, கிட்ட வரக்கூடாது, பூசை செய்யக்கூடாது.

தமிழ்மொழியில் தோத்திரம் கூடாது என்று செய்திருக்கிறதல் லாமல் வேறு என்ன செய்திருக்கிறது? இவைகளை எல்லாம் தமிழ்மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டாமா? தமிழர் என்ற தலைப்பில் இதைத்தவிர வேறு என்ன பேசுவது, முந்தைய பெருமையை நினைக்காதே; இன்றைய இழிவைப்பார், என்ற முதுமொழியைக் கவனியுங்கள்.

தமிழனைத் தமிழனே இழிவுபடுத்துகிறான்!

சமுதாயத்தில் தமிழன் ஒரு வகுப்பாக இல்லையே, இதற்கு என்ன காரணம்? தமிழனே, தமிழனை இழிவுபடுத்துகிறான்; ஒருவர் தொட்டதை ஒருவர் சாப்பிடுவதில்லை; ஆசாரி வீட்டில் செட்டியார் சாப்பிடுவதில்லை; செட்டியார் வீட்டில் ஆசாரி  சாப்பிடுவதில்லை, வாணியச் செட்டியார் வீட்டில் மேல்கண்ட மூவரும் சாப்பிடுவதில்லை. இவர்கள் நால்வர்களும் முதலியார், பிள்ளை, நாயக்கர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அவர்களும் இந்த நால்வர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அன்றியும் இவர்கள் இத்தனை பேரும் ஒருவருக்கொருவர் கீழ் ஜாதி - மேல் ஜாதி என்று பேசிக் கொள்ளப்படுகிறார்கள். தமிழர்களில் பாடுபடும் மக்கள் எல்லாம் கீழ் ஜாதியாக மதிக்கப்படுகிறார்கள்.  பழந்தமிழர்கள் பறையர், பள்ளர், சக்கிலியர், சண்டாளர்களாக இருக்கிறார்கள்.

இப்படி நூற்றுக்கணக்கான ஜாதியாய்த் தமிழர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஐரோப்பியனுக்கோ - ஆரியனுக்கோ - முஸ்லிமுக்கோ இருக்கும் சமுதாயப்பற்றும், ஒற்றுமையும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை. இதை எல்லாம் தமிழர்கள் இன்று சிந்திக்க வேண்டாமா?

இழிநிலை போகவேண்டும்!

சிந்தனா சக்தி அடையவேண்டும்!!

உலக சரித்திரத்தில் முதன்மை ஸ்தானம் பெற்ற திராவிடமும், திராவிடர்களும், திராவிட மொழியும், திராவிட மானமும் இன்று எக்கதியில் இருக்கின்றன? இதற்கு என்ன காரணம்? என்பதை யோசிக்காவிட்டால் என்றைக்காவது திராவிடர் இன்றைய இழிநிலையில் இருந்து மாற்றமடைய முடியுமா? அதற்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டாமா? என்பவனவாகியவைகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொண்டு, காலம் அதிகமானபடியால், எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: ஸ்டார் போட்டுள்ள இடங்களில் ‘இதோ பாருங்கள் என்று சொன்னதானது அநேக அறிஞர்களால் எழுதப்பட்ட பூகோளப் பாடப் புத்தகங்களையும், இந்துதேச சரித்திரப் பாடப் புத்தகங்களையும் ஆதாரங்களாக எடுத்து நேரில் காட்டிப் பேசினார் என்பது கருத்தாகும்.’

நூல் : 
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு

ஆசிரியர் : தந்தை பெரியார்

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்


தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.

ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும், முயற்சித்தும் வந்து இருக்கின்றேன்.

அக்காலத்திலெல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100-க்கு சுமார் 5 முதல் 10 பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்கவழக்கப் பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அதுபோன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது; வருகிறது.

தமிழ்ப் புலவர்கள் நிலை

அதிலும் தமிழ்ப் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100-க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

புலவர்களின் மூடநம்பிக்கையும் பிடிவாதமும்

மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப்பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவுமே இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

பகுத்தறியும் தத்துவ விசாரணை

அறவே இல்லாதவர்கள்

அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்வான்கள் என்றால் 100-க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழிலுடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ ஏதேதோபேசி பணம் பெறுவதிலேயே கவலை யுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100-க்கு 90 பேர்கள் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்ப தற்கல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற் கில்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.

ஆசிரியர், மாணவர் நிலையும்  பகுத்தறிவைத் தரவில்லை

புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100-க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும் படியாக நம்நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலைதான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.

விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பா° பெற்ற மாணவனும்கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். “என்னையா அக்கிரமம் நீ சயன்சு படிக்கிறாய்; தத்துவ சா°திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே” என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் “அதற்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா?” என்று கேட்பான்.

இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும் குறிப்பாக புலவர், வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றி அறிவு எவ்வளவு இருக்க முடியும்?

மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை

“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞன் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தமிழ் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வம்பு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக் காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன்.

அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனா கட்டும், அக°தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன்தானாகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

(Primitive)  பிரிமிட்டிவ் என்றால் அதன் தத்துவமென்ன? (Barbarian) பார்பேரியன்,

(Barbarism) பார்பேரிசம் என்றால் அதன் பொருள் என்ன?

3000.... 4000... ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பேரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?

பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?

இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதைக் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் பரப்பினவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழைக்  காட்டுமிராண்டி மொழி என்றால் கோபப்படுகிறார்கள். இவனுக்கு என்ன பெயர் இடுவது என்பதே நமக்கு புரியவில்லை.

தமிழைச் சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?

தமிழை, தமிழ் எழுத்துக்களைத் திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.

பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல்) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டு மிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?

இங்கிலீஷினால் சிறுமை என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

நமது நாட்டுக்கு கமால் பாட்சா போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவனும் இல்லை என்பதால் பலமுண்டங்கள் பலவிதமாய் பேச முடிகிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.

நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?

நம் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?

புலவர்களுக்கு (தமிழ் படித்து, தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கின்ற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?

இத்தனை காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும் தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழர் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால், இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

முக்கியப் புலவர்களும் மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!

இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் இரண்டு, மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1) தொல்காப்பியன், (2) திருவள்ளுவன், (3) கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச  பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னை பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!

சாதியை, சாதித் தொழிலை ஆதரித்தவர்கள்

இம்மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் களே ஆவார்கள்.

சந்தர்ப்பம் நேரும்போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்கக் காத்திருக்கிறேன். இவர்களை விட்டுவிட்டு தமிழர்கள் இனி எந்தப் புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

கம்பனுக்கு சிலை வைத்து மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது, சாதியில் சமதர்மம், செல்வத்தில்; பொருளில் சமதர்மம் என்பது மாத்திரமல்லாமல், குணத்திலும் சமதர்மம் என்பதாகக் கருதப்படுகிறது.

பார்ப்பானும், “பறையனும்” சமம்; முதலாளியும், பிச்சைக் காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம்; தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும் - கேடு செய்து கூலி வாங்கிப் பிழைப்பவனும் சமம்; சாணியும் சவ்வாதும் சமம்  என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகின்றது.

மக்களிடம் சமத்துவம் ஏற்படுத்துவதற்கு

முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒரு புறமிருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழி நிலையில் இருத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற, மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழ வேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிறபோது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாக்கப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ்மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத்தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?

பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சா°திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்குப் பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.

தமிழ்ப் படித்தவன் பலன் இதுதான்

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொரு வனையும் பார்த்து, “நீ யாருக்குப் பிறந்தவன்” என்று கேட்கும் படி செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சா°திரம் எழுதி வைத்து, ‘கீதை’ வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்னையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

மனிதனுக்கு மானமே தேவை

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.

ஈன சாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்ற வர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனை சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்!

சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!

“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போகபோக்கியங்களிலும் “இரு வருக்கும் சமஉரிமை உண்டு என்றும் குறிப்பிட்டசமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல்அவசியமா இல்லையா என்பதை நீங்களேயோசித்துப் பாருங்கள். உங்கள்மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண்குழந்தைகளையும், அன்புச்சகோதரிகளையும் மனதில் கொண்டுயோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார்சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள்எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும்யோசித்துப் பாருங்கள். இன்று உலகில்கீழ்சாதியார் என்பவர்களுக்கு சமசுதந்திரம் வேண்டும் என்றுபோராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலைபெற்று சுதந்தரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதேபோராட்டத்தை நமது தாய்மார்கள்விஷயத்திலும், நமது சகோதரிகள்விஷயத்திலும், நம் பெண் குழந்தைகள்விஷயத் திலும் கவனிக்க வேண்டாமா?

- தந்தை பெரியார்

நூல் : தமிழ் காட்டுமிராண்டி மொழி  ஏன்? எப்படி?

ஆசிரியர்  -தந்தை பெரியார்


தமிழ்த் தேசியம் சில விளக்கங்கள் சில வினாக்கள்




தமிழன் பரந்து விரிந்த நிலத்திற்குச்சொந்தக்காரன் என்றாலும் தற்போதுஅவன் எல்லை குமரிக்கும் திருத்தணிக்கும்குறுகிவிட்டது. அப்பகுதியைத் தமிழ்த்தேசியமாக நாம் வென்றெடுக்க வேண்டும்என்ற எண்ணம் பரவலாக எழுகிறது. அதுநியாயமான உணர்வு என்பதில் யாருக்கும்மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தேசியஒருமைப்பாடு என்ற உணர்வில் வளர்ந்தகாங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள்இதில் முரண்படலாம்.


சரி. அப்படிப்பட்ட தமிழ்த் தேசியம்எப்படிப்பட்டது? இதற்கு முதலில்வரையறை வேண்டும்.

தமிழ்த் தேசியத்தில் வாழும் தமிழர்கள் யார்என்பதற்கு என்ன வரையறை? ஆரியப்பார்ப்பனர்கள் தமிழ் பேசுவதால்அவர்களைத் தமிழர்கள் என்று தமிழ்த்தேசியம் ஏற்றுக் கொள்கின்றதா?

தமிழ்த் தேசியத்தில்மதநம்பிக்கையாளர்களுக்கு இடம் உண்டுஎன்பதை மறுக்க முடியாது. ஆனால்,அவர்கள் இந்துத்வா வாதிகளாய் இருந்து,தமிழர்களையே இஸ்லாமியர், கிறித்தவர்என்று பிரித்து, வெறுத்தால் அதற்குத் தீர்வுஎன்ன? அப்படிப்பட்ட இந்துத்வா தமிழர்கள்தமிழ்த் தேசியத்தில் ஏற்கப்படுவார்களா?விரட்டப்படுவார்களா? விரட்டவாய்ப்புள்ளதா?

மதம், கடவுள் என்பதை தனிப்பட்டநம்பிக்கையாகக் கொண்டு அதற்குச் சட்டசலுகையோ, பொது ஏற்பளிப்போ இல்லைஎன்பதை உறுதி செய்து,நடைமுறைப்படுத்த தமிழர்கள்ஒட்டுமொத்தமாக ஏற்க அவர்கள்பண்பாட்டு ரீதியாக, உளவியல் ரீதியாகப்பக்குவப்படுத்தப்பட்டுள்ளார்களா?பக்குவப்படுத்த திட்டங்கள் யாவை?

ஜாதி உணர்வுள்ள தமிழர்களைக்கொண்டு தமிழ்த் தேசியம் அமைக்கமுற்படும்போது, அந்த உணர்வுகள் அதைக்குலைத்து அழித்துவிடாதா? ஜாதியைஒழித்த பின்தான் தமிழ்த் தேசியம்என்பதும் சாத்தியம் இல்லைஎன்னும்போது, ஜாதி உணர்வாளர்குறித்துத் தமிழ்த் தேசியத்தின்நிலைப்பாடு என்ன?

பெண்ணுரிமை, பெண் விடுதலைகுறித்துத் தமிழ்த் தேசியவாதிகளுக்குத்தெளிவான கருத்தும், பார்வையும்,பக்குவமும் உண்டு என்பது அனைவரும்அறிந்ததுதான். ஆனால், தமிழ்த் தேசியம்அமைக்கும் முயற்சியில் இதைப் பற்றியதிட்டமிட்ட, தெளிவான கொள்கை முடிவுவகுக்கப்பட்டுள்ளதா? இதைச்செயல்படுத்த மக்கள்பக்குவப்படுத்தப்பட்டுள்ளனரா?

பெண்ணுரிமையில், பெண் விடுதலையில்மதம் குறுக்கிடும்போது, மதவிதிகளைமறுத்து மனிதநேய உரிமைகளைச்செயல்படுத்த, மதவாதிகளுடனானஅணுகுமுறை, தீர்வுகள் குறித்த தெளிவுஉள்ளதா? திட்டங்கள் எவை?

பொருளாதார அடிப்படையில் சமதர்மநோக்கில் பொதுவுடைமையா? கலப்புப்பொருளாதாரமா? முதலாளித்துவஅணுகுமுறையில் உலகமயமாதலில்கலந்துவிடுவதா? இதில் தமிழ்த்தேசியத்தின் கொள்கைகள் எவை?நிலைப்பாடுகள் யாவை?

மொழிக் கொள்கையில் தமிழ்த்தேசியத்தின் நிலை என்ன? குறிப்பாகத்தொடர்பு மொழி பற்றிய தெளிவு என்ன?

இந்தியாவிலிருந்து தமிழ்த் தேசியம்பிரிக்கப்படுமா? அல்லது. மத்திய அரசின்கட்டுக்குள் முழுச் சுதந்திரம் பெற்றபகுதியாகச் செயல்படுமா?

இந்தியாவிலிருந்து பிரித்துத் தமிழ்த்தேசியம் அமைக்கப்படும் எனின் அதைஅமைக்க என்ன செயல்திட்டம்! மக்களைத்திரட்டி, வாக்கெடுப்பின் அடிப்படையில்அய்.நா. மன்ற அங்கீகாரத்துடன் தமிழ்த்தேசியம் அமைப்பதா?

அல்லது தமிழ் மக்களை ஒன்று திரட்டி,போராடி, மத்திய அரசின் ஒப்புதலோடுபிரிந்து செல்வதா?

அல்லது ஆயுதப் போராட்டம் நடத்தி,இராவத்தை எதிர்கொண்டு உயிர்களைப்பலி கொடுத்து வெற்றியோ தோல்வியோமுயன்று பார்ப்பது என்ற செயல் திட்டமா?

உலகமயமாதலின் விளைவால் தனித்தேசியங்கள் அமைத்தல் என்னும்உளநிலை, உணர்வு நிலையில் பெருமளவுமாற்றங்கள் மக்களிடையே வந்துவிட்டநிலையில் தனித் தமிழ்த் தேசியம் என்றமுயற்சி நடைமுறைச் சாத்தியமா?

அல்லது உலக ஓட்டத்திற்கு ஏற்ப உலகேஒருநாடு, ஒரே ஆட்சி என்று உலகமக்களையே உடன்பிறப்பாகக் கொண்டுஉறவாகக் கொண்டு, உலக மக்கள்அனைவரும் ஒரே ஜோதியில் கலந்துவிடுவதா?

அப்படிப்பட்ட நோக்கில் இன்றைக்குக்கிராமப்புறங்களில் கூட, வேறு நாடு, வேறுஇனம், வேறு மொழியினரோடு மண உறவுகொள்ளும் மனபக்குவம், ஏற்பு நிலைஎளிதாகிவிட்ட நிலையில் அதற்கேற்பயாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நிலைஏற்பதா? உவகை ஒரு நாடாகப் பார்ப்பதா?

இது உன் பண்பாடு, இது என் பண்பாடுஎன்று பரம்பரைப் பண்பாட்டைப்பாதுகாக்க, செயல்படுத்த முனைவதைவிடஉலக மக்கள் முழுமைக்குமானகாலத்திற்கேற்ற கலாச்சாரங்களைக் கைக்கொள்வது அறிவுக்கு உகந்த செயலாகஇருக்குமா?

தமிழர் பண்பாடு, ஆரியர் பண்பாடு,அய்ரோப்பியர் பண்பாடு, சீனர் பண்பாடுஎன்பதெல்லாம், உலகு ஒரு நாடு என்றுசுருங்கி வரும் நிலையில் எதிர்காலத்தில்தாக்குப் பிடிக்குமா? நிலைக்குமா?

1500, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் மதத்தலைவர்கள் உருவாக்கிய மார்க்கங்கள்எக்காலத்திற்கும் கட்டாயம்கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மதவழிநின்று வாழ நினைக்கும் மக்களுக்கு,மொழித் தேசியமும், உலக மயமாதலில்ஒரே கலாச்சாரம் அல்லது விரும்பியகலாச்சாரம் என்பது ஏற்புடையதல்லஎன்னும் நிலையில், எதிர்காலவாழ்வியலை, தேசியத்தை காலந்தான்தீர்மானிக்குமேயன்றி, நாம் கட்டமைக்கஅல்லது கட்டிக் காக்க நினைப்பவைசாத்தியப்படாது என்று நம் உள்ளத்தில்எழும் உணர்வை, கேள்வியை, யதார்த்தசூழலை ஒதுக்கித் தள்ளிவிட்டு,உணர்வுவயப்பட்ட நிலையில் தேசியப்பார்வையிலோ மதப் பார்வையிலோசெல்ல நினைப்பது அறிவுக்குஉகந்ததாகுமா?

எதிர்காலத்தில் மோதப் போகும் முடிவுகள்மூன்று. ஒன்று, மதக் கோட்பாடுகள்படியானவாழ்வு முறையைக் கட்டமைக்கமுயலுவோர்; இரண்டு, மொழிவழிதேசியத்தை உருவாக்க முயலுவோர்,மூன்று உலக மக்கள் எல்லாம் ஒன்று,மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி,மணவுறவும் இருப்பிடமும் உலகில் எங்கும்,எப்பகுதியிலும் நிகழலாம். உலகே ஒரேஆளுகையில் ஒரே நாடாக மாற வேண்டும்என்ற விருப்பம் உடையோர். இம்மூன்றும்போட்டியிடுவதை யாரும் தடுக்கவும்முடியாது, தவிர்க்கவும் முடியாது.இப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த உலகில்,உணர்வு சார்ந்த அடையாளங்களுக்காகஅவற்றைக் காக்க மனிதனைக் கட்டுக்குள்வைக்க முடியுமா? மனித உணர்வுகளைமரபு மற்றும் மத அடையாளங்களுக்கு,கோட்பாடுகளுக்குப் பலி கொடுக்கமுடியுமா? என்ற நடைமுறை சார்ந்தவினாக்களுக்கு விடை காணாமல்ஆளுக்கு ஒரு கொள்கையை எடுத்துக்கொண்டு மக்களை வதைப்பது, வளைப்பதுசரியா?

இன்றைய உலகில் எந்த ஒரு இனமும் தூயஇனம் அன்று. எல்லாம் கலவைஇனங்களே. அப்படிப்பட்ட நிலையில்மனிதன் என்ற பார்வையில் உலகோர்அனைவரையும் நோக்கினால் அதுதானேசரியாகும்? நடைமுறைக்கும்பகுத்தறிவிற்கும் காலத்திற்கும் ஏற்றகொள்கையை ஏற்பது, மற்றதை மறுப்பது,மறப்பது என்பதுதானே சரியாகும்?

உலக மக்களை ஆதிக்கம் செலுத்துவோர்செலுத்தப்படுவோர் என்று பிரித்துப்போரிடுவது, ஆதிக்கம் அழிப்பது, சமஉரிமை பெறுவது, தன்மானம் காப்பதுஎன்பது தானே சரியாகும்?

அப்படியாயின் ஆதிக்கம் இனவழியோ,மொழி வழியோ, மதவழியோ, சாத்திரவழியோ, பால்வழியோ, பொருளாதாரவழியோ, இராணுவ வழியோவரின்,அவற்றைத் தகர்ப்பதுதானேபுரட்சியாளர்களுக்கு அடையாளம்?

ஆக, இவற்றையெல்லாம் சிந்தித்து ஒருமுடிவுக்கு வராமல், இன ஆதிக்கத்தினின்றுதமிழர்களை மீட்ட ஒரு இயக்கத்தை, ஒருதலைவரைக் கொச்சைப்படுத்திக் குழப்பம்உண்டாக்குவதை, நன்றி மறப்பதைஎல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்அல்லவா? எனவே, ஆரியத்திடம்விழிப்போடிருந்து, ஆக்கபூர்வமாய், அறிவுப்பூர்வமாய் சிந்திப்போம், செயல்படுவோம்!காலத்திற்கேற்ப களம் காண்போம்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்