பக்கங்கள்

திங்கள், 16 நவம்பர், 2015

தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!


சோழநாட்டு எல்லை
கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.
சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக!
வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் ஆறு. இதனைத் தென் வெள்ளாறு எனலாம்; குடதிசை _ மேற்குத் திசை; கோட்டைக்கரை குழித்தலைப் பகுதியாக இருக்கலாம். (திருச்சி மாவட்ட கெசட்டியர் ப.28); ஏணாடு _ நடுநாடு (திருக்கோவலூர் வட்டம்); காதம் _ பத்து மைல்கள்.
பாண்டிநாட்டு எல்லை
வெள்ளாறு அதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்;
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.
பாண்டிய நாட்டின் எல்லையாவது, வெள்ளாறு வடக்கு எல்லையாகும்; மேற்குத் திசையில் உள்ள பெருவழி (Highway) அத்திக்கில் உள்ள எல்லையாகும்; தெளிந்த நீரையுடைய குமரி ஆறு தெற்கு எல்லையாகும்; மனமார ஆட்சிக்குரிய கடல் கிழக்கு எல்லையாகும். இந்நான்கு எல்லைகளுக்கு உள்ளடக்கிய அய்ம்பத்தாறு காததூரம் உள்ள இடம் பாண்டிய நாடாகும்.
கன்னி ஆறு _ மிகப் பழங்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு இருந்தது; அங்கே குமரிமலை என்றொரு மலை இருந்தது; அம்மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்குக் குமரி ஆறு என்று பெயர். அவ்வாறு, பாண்டிய நாட்டின் தென் எல்லையாகத் தலைச் சங்க காலத்தில் இருந்தது. கடல் கொந்தளிப்பால் அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கி மறைந்தது. பிறகு இன்றைய குமரிமுனை பாண்டிய நாட்டின் தென் எல்லையாக இருந்து வருகிறது. கன்னி _ குமரி.
சேரநாட்டு எல்லை
வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.
வடதிசையில் பழனியையும், பெருமை உடைய தென்காசியைக் கீழ்த் திசையிலும், மேற்குத் திசையில் கோழிக் கோட்டையும் (கள்ளிக்கோட்டை), தெற்கில் கடற்கரையையும் எல்லையாக உடையது சேரநாடு. அதன் பரப்பு எண்பது காத தூரமாகும் என்று கூறுக!
தொண்டைநாட்டு எல்லை
மேற்குப் பவளமலை; வேங்கட நேர்வடக்காம்;
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.
மேற்குத் திசையில் பவளமலையும், நேரே வடதிசையில் திருவேங்கட மலையும், அழகிய கிழக்குத் திசையில் ஒலிக்கின்ற கடலையும், தென்திசையில் உலகில் சிறந்த பெண்ணை ஆற்றையும் எல்லையாக உடையது சிறந்த தொண்டைநாடு. அதன் அமைப்பு இருபது காத தூரம் என்று உறுதியாகச் சொல்லுக.
வேங்கடம் _ திருப்பதி; ஆர்க்கும் _ ஒலிக்கும்; உவரி _ கடல்; பார் _ உலகு; பினாகினி _ பெண்ணையாறு, தென்பெண்ணை.
உண்மை இதழ்,1-15.6.15

இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்

புதையல்

இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்
ஆந்திராவில் - 29 ஊர்கள்
அருணாசலப் பிரதேசத்தில் - 11 ஊர்கள்
அசாமில் - 39 ஊர்கள்
பீகாரில் - 53 ஊர்கள்
குஜராத்தில் - 5 ஊர்கள்
கோவாவில் - 5 ஊர்கள்
அரியானாவில் - 3 ஊர்கள்
இமாசலப்பிரதேசத்தில் - 34 ஊர்கள்
கர்நாடகாவில் - 24 ஊர்கள்
மகாராட்டிரத்தில் - 120 ஊர்கள்
மேகாலயாவில் - 5 ஊர்கள்
மணிப்பூரில் - 14 ஊர்கள்
மத்தியப்பிரதேசத்தில் - 60 ஊர்கள்
தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, தேனி, போடி என மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்கள் உள்ளன.
நாகாலாந்தல் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசஸ்தானில் 26, தமிழ்நாட்டில் 10, உத்திரபிரதேசத்தில் 64, மேற்கு வங்கத்தில் 24 உள்ளன.
இந்தியா முழுமையிலும் தமிழ் என்று தொடங்கும் ஊர்கள் 612 உள்ளன.

சிந்துவிலும் காவிரியிலும் ஒரே நாகரிகம்!
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் 2006 பிப்ரவரியில் இரு புதிய கற்காலக் கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்றில் கி.மு.2000 கி.மு.1500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அரப்பா மொகஞ்சதாரோ கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தெரிவிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகமும் தொல்தமிழர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டுப் புதிய கற்கால மக்கள் அரப்பா மக்களின் திராவிட மொழியைப் பயன்படுத்தினர் என்பது இதன்வழி தெரிகிறது. இது தமிழ்நாட்டில் புதிய கற்கால மக்கள் தமிழ்ப் பேசியதற்கான முதல் சான்று.
ஆதாரம்: (உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் - ப.சண்முகசுந்தரம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)
குறிப்பு: இந்த இரண்டு சான்றுகளும் இந்தியா தமிழர் (திராவிடர்) மண் என்பதை உறுதி செய்கின்றன.
-உண்மை,1-15.6.15

செவ்வாய், 10 நவம்பர், 2015

லண்டன் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர்

லண்டன் உலக தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் லண்டன் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மணிமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநாட்டு ஏற்பாட்டாளர் செல்வ செல்வராஜ் உடன் உள்ளார்.
ஆதலால் ஒரு திரைப்பட பாடலில் கவி. கா.மு. ஷெரிப் சொன்னது போல அன்னையைப்போல் ஒரு தெய்வமு மில்லை -_ அவள் அடிதொழ மறுப் பவர் மனிதரில்லை என்பதற்கு இணங்க கேட்காமலேயே தேவையைப் பூர்த்தி செய்யும் தாய்மையைப் போற்ற வேண்டுமா இல்லையா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால் மகாபாரத பாஞ்சாலி கேட்டவுடன் ஆறு மீட்டருக்கு அறுநூறு மீட்டர் சேலையைத் தந்திருக்கிறான் கிருஷ் ணன்; அதை நாம்  மறுக்கவில்லை. அதைப் பார்த்து கவியரசு கண்ண தாசனும் கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா எனப் பாடியி ருக்கிறார்;  அதையும் நாம் மறுக்க வில்லை. ஆனால் நமது கேள்வி இது தான் கேட்காமல் கொடுக்கும் தாய்மை உயர்ந்ததா? கேட்டுக் கேட்டுத் தரு கின்ற கடவுளின் குணம் உயர்ந்ததா? சொல்வதை உள் வாங்கும் திறன் இருந்தால் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். எது உயர்ந்தது என்று? இதற்காகப் பேராசிரியர் சாலமன் பாப் பையாவையோ, திண்டுக்கல் லியோனி யையோ சந்திக்கத் தேவையில்லை. ஒரு நிமிடம் யோசித்தால் முடிவு உங்களுக்கே தெரிந்துவிடும். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
தொகுப்பு: ம.சு. மோதிலால்
லண்டன் உலக தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் லண்டன் அய்கேட் கல்லறையில் உள்ள பொதுவுடைமை சிற்பி காரல் மார்க்ஸ் நினைவிடத்தில் மலர் கொத்து வைத்து மரியாதை செலுத்தினார்.
-விடுதலை ஞா.ம.,28.9.13

கிரேக்க மொழியில் தமிழ்ச் சொற்கள்!









கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிகத்தில் இறங்கியது கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாணிகத்தின்மூலம் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம் பெற்றுள்ளன.
சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞரின் நூல்களில் இவற்றைக் காணலாம். அரிசி என்ற தமிழ்ச்சொல் கிரேக்க மொழியில் நுழைந்து அரிசா என்று உருக்குலைந்தது. அம்மொழியில் கருவா (இலவங்கம்) என்ற தமிழ்ச் சொல் காப்பியன் என்றும், இஞ்சி வேர் சின்ஞிபேராஸ் என்றும், பப்பாலி பெர்பபெரியாகவும் உருமாற்றம் அடைந்தன.
- டாக்டர் கே.கே. பிள்ளை,
தமிழக வரலாறு -_ மக்களும் பண்பாடு - பக்.53
- விடுதலை ஞா.ம.23.3.13

FRIDAY, JULY 31, 2015

கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்

கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்

உலகின் பல நாடுகள் தமிழர்க்கு உரியவை!

கிரேக்க நாட்டில் கிரேக்கர்களுக்கு முன்
வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!

பல நாடுகளின் பழங்குடி தமிழ்க்குடியே!



பழைய ஏதென்ஸ் நகரமக்களின் தலைவன் பெயர் “பாண்டியேன்” என்பதாகும்.

கிரேக்க மொழி தமிழை கடன்பெற்று வந்தது வளர்ந்தது.

“Tamil loan words inGreat"  - Legrand F. என்ற நூல் இதை உறுதிசெய்கிறது.

“இத்தாலியில்  வாழ்ந்த எத்ருஸ்கர்கள் என்பார் திராவிடர்களேயாவர்.
:-- வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் கருத்து.

அதே போல்,

பிரான்ஸ், ஸ்பெயின்  நாடுகளில் கிராமப் புரங்களில் வாழும் பாஸ்கு இன பழங்குடிகள் திராவிடர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏடன் நகரத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள் (தமிழ் வணிகர்கள்)

ஆதாரம் : பெரிபுலுஸ் என்னும் நூல்



FOLLOW :

 https://www.facebook.com/manjaivasanthan 

திங்கள், 9 நவம்பர், 2015

திருக்குறள் தொடர்பான செய்திகள் 41


1. திருவள்ளுவர்  ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.
2.    திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்
3.    திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.
4.    திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.
5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
6.    திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.
7.    திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.
8.    திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.
9.    திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.
10.    திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.
11.    திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.
12.    குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.
13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.
14.    நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.
15.    சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.
16.    திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.
17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.
18.    திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.
19.    திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
20.    திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.
21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு
சிரோன்மணி.
22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.
23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.
24.    திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.
25.    வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.
26.    வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.
27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.
28.    திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.
29.    திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.
30.    திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.
31.    திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ
32.    திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.
33.    திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.
34.    திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை
35.    திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.
36.    காலமும் இடமும் கருதிச் செய லாற்றினால் உலகை வெல்லலாம்.
37.    திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.
38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.
39.    திருவள்ளுவமாலை திருக்குற ளுக்கு எழுந்த புகழ்மாலை
40.    திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப் படுகிறது.
41.    திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.
- ஆய்வுக்களஞ்சியம் 2013 ஆகஸ்ட்
-விடுதலை ஞா.ம.24.8.13