லண்டன் உலக தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் லண்டன் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மணிமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநாட்டு ஏற்பாட்டாளர் செல்வ செல்வராஜ் உடன் உள்ளார்.
ஆதலால் ஒரு திரைப்பட பாடலில் கவி. கா.மு. ஷெரிப் சொன்னது போல அன்னையைப்போல் ஒரு தெய்வமு மில்லை -_ அவள் அடிதொழ மறுப் பவர் மனிதரில்லை என்பதற்கு இணங்க கேட்காமலேயே தேவையைப் பூர்த்தி செய்யும் தாய்மையைப் போற்ற வேண்டுமா இல்லையா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால் மகாபாரத பாஞ்சாலி கேட்டவுடன் ஆறு மீட்டருக்கு அறுநூறு மீட்டர் சேலையைத் தந்திருக்கிறான் கிருஷ் ணன்; அதை நாம் மறுக்கவில்லை. அதைப் பார்த்து கவியரசு கண்ண தாசனும் கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா எனப் பாடியி ருக்கிறார்; அதையும் நாம் மறுக்க வில்லை. ஆனால் நமது கேள்வி இது தான் கேட்காமல் கொடுக்கும் தாய்மை உயர்ந்ததா? கேட்டுக் கேட்டுத் தரு கின்ற கடவுளின் குணம் உயர்ந்ததா? சொல்வதை உள் வாங்கும் திறன் இருந்தால் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். எது உயர்ந்தது என்று? இதற்காகப் பேராசிரியர் சாலமன் பாப் பையாவையோ, திண்டுக்கல் லியோனி யையோ சந்திக்கத் தேவையில்லை. ஒரு நிமிடம் யோசித்தால் முடிவு உங்களுக்கே தெரிந்துவிடும். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
தொகுப்பு: ம.சு. மோதிலால்
லண்டன் உலக தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் லண்டன் அய்கேட் கல்லறையில் உள்ள பொதுவுடைமை சிற்பி காரல் மார்க்ஸ் நினைவிடத்தில் மலர் கொத்து வைத்து மரியாதை செலுத்தினார்.
-விடுதலை ஞா.ம.,28.9.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக